குறளோவியம்
பகுதி 2 · 2 / 300
‘வாலறிவன்’ என்றால் தூய்மையான அறிவு வடிவாக விளங்கக்கூடியவன் எனக் கூறி, அவன் திருவடிகளைத் தொழாவிட்டால் - கற்றும் பயனில்லை என்று சுட்டிக்காட்டினார்.
‘வேண்டுதல் வேண்டாமை இலான்’ - அதாவது விருப்பு வெறுப்பு இல்லாதவனுடைய நிழலை நாடுபவர்க்குத் துன்பம் இல்லையென்று குறிப்பிட்டார்.
“தனக்குவமை இல்லாதான்”
“அறவாழி அந்தணன்”
இவ்வாறெல்லாம் கடவுள் எனப்படும் சொல்லுக்கு இலக்கணம் வகுத்தார்.
இறைவனுக்குரிய இத்தனை பெருமையும் கொண்டு ஒருவன் வையத்தில் வாழவேண்டுமென்று வள்ளுவர் கருதினார்.
அதனால்தான் அவர், திட்டவட்டமாக ஒரு கருத்தை உலகிற்கு அறிவித்தார்.
“தெய்வத்திற்கென எத்தனையோ அருங்குணங்கள் சொல்லப்படுகின்றன! உலகில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.”
அதற்கு இதோ குறள் :
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
அதிகாரம் 5 இல்வாழ்க்கை; பாடல்: 50
(குறிப்பு: ‘கடவுள் வாழ்த்து’ அதிகார விளக்கமும் இணைந்துள்ளது)
Small Thiruvalluvar statue illustration centred in the lower half of the page.
Colour illustration of a pensive woman among flowers with a flute-playing man behind her against a warm sunset backdrop.
மாலை நேரத்திலே - சோலை ஓரத்திலே - வேலை நிறுத்த விழியினர் காதல் பயில்வர். அதுபோல் ஆலையிட்ட கரும்பென அவதிப்பட்டு உழல்வர் ஆளன் அருகிலா மாதர். அந்திவானத்தில் அழகு காண்பார் - அதனோடு தன் இதழை ஒப்பிடும் அழகன் அங்கு வரவில்லையே என அயர்வார். தென்றல் அவர்தம் ஆடை நகர்த்தும். அதற்கு வாழ்த்துக் கூறித் தம்மைக் கேலி செய்யும் இன்பலோக ஏந்தல் இன்னும் வரக் காணோமே என விம்முவார். பூங்கொம்பு மலரிதழைத் திறப்பதற்கு முன்பே தேன்வண்டு பறந்து வரும் தன்மை காண்பார்.
“வண்டு தழுவும் மலர் பார் கற்கண்டே! என இன்பம் மொண்டு தரும் என் துரையை இன்னும் காணோமே?” என ஏங்குவர். மனம் வீங்குவர். மாலைப் பொழுது, அவர்தம் நெஞ்சில் படை
கொண்டு தாக்குவது போல் தோன்றும் - இன்பம் தரவல்ல காதலையே நோயென்று கூறுவர். அந்த மனோநிலையைத்தான் வள்ளுவர் அழகாகக் கூறுகிறார்.
