உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
துடிக்கும் இளமை/கட்டுரைகள் 1
கட்டுரைகள்

துடிக்கும் இளமை

கட்டுரைகள் 1 · 1 / 4

தலைவரே! தாய்மாரே! திராவிட மாணவ மணிகளே! வணக்கம். இந்த ஆண்டு விழாவிலே நான் பேசவேண்டியது துடிக்கும் இளமை! துடிப்பு எல்லைக் கோட்டைத் தாண்டி விடுவதும் உண்டு. அஃது என் குற்றமல்ல.

இந்தத் துடிப்பு திராவிடத்தில் ஏற்படக் காரணம் என்ன? அநீதியை அணைத்து வாழ்ந்த அரசியல், ரஷ்யாவிலே புரட்சிக்குக் காரணமாயிருந்தது. போப்பாண்டவரின் போலி வேடங்கள் மார்ட்டின் லூதரைக் கிளர்ச்சியில் இறங்க வைத்தன. கொடுமையும், குருமார்களின் கோணல் நடத்தையும், பதினாறாவது லூயியின் ஆட்சியும் பிரஞ்சிலே இரத்தப் புரட்சியை உண்டாக்கியது. இன்றைய திராவிடத்திலே மாணவ உள்ளங்கள் கொதிப்பேறுவதற்குக் காரணம் ஒன்றல்ல!

இரண்டல்ல!! ஓராயிரமுண்டு!!!

கண்ணில்லாதவனுக்குக் காதாவது கேட்க வேண்டும். அது போகட்டுமென்றால் பேசவாவது இயல்பிருக்க வேண்டும். அதுவுமில்லையென்றால் கால் கைகளாவது சரியாக இருக்க வேண்டும். அதுவுங் கிடையாது. இதே நிலைதான் திராவிடர் வாழ்விலும் அமைந்துள்ளது. வாழ்விலே சமத்துவ முண்டா? வள்ளுவரும், வடலூராரும், புத்தரும், சித்தரும் சமத்துவத்தைப் பரப்பியதிலிருந்தும், அதுவே நமக்குத் தேவையும் அவசியமும் அவசரமானதாகத் தெரிவதிலிருந்தும் சமத்துவ உணர்ச்சிக்கு சாவுமணி அடிப்பவர்களைக் கண்டு சீற்றமடையாதிருக்க முடியுமா?

அரிச்சுவடிப் புத்தகத்திலே ஆரியனை அய்யர் என்றும், அல்லும் பகலும் உழைத்து வாடும் திராவிடரை, உழவன், தட்டான், தச்சன் என்றும் எழுதப்படுகிற துணிவைக் கண்டு துள்ளுகிறான் மானமுள்ளவன்! இதைத் தடுக்க முடியுமா? சமத்துவத்தைப் பரப்பும் நோக்குடன் எத்தனை நூல்கள் திராவிடருக்கு வேதமாக்கப்பட்டுள்ளன? பிராமணனோடு சூத்திரன் உட்கார்ந்தால் சூத்திரனது பின்பாகத்தை அறுத்தெறிய வேண்டுமென்ற அறிவுரை புகலும் மனுநீதி!

சம்பூகன் என்பவன் தவம் செய்ததற்காக சூத்திரன் தவமியற்றுவதா? எனச் சினந்து அவன், தலையைக் கொய்த இராமனது கருணை வரலாறான இராமாயணம்! அக்கினியில்

மூழ்கி பிராமண வடிவம் பெற்றால்தான் பறையன் ஆலயத்தில் நுழையலாமென்பதை நிலைநாட்ட பெரிய புராண நந்தனார் கதை! ஆரியக் கொள்கைகளுக்கு அடிப்படை அமைக்க ரிக், யஜுஸ், சாம, அதர்வணம் போன்ற வேதங்கள்! இவைதான் திராவிடர் மறை நூலா? இவைதான் நெறியா? ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றே வாழ்ந்த திராவிடா! ஒழிந்து பட்டாயா என்று எண்ணும் போதுதான் இதயந் துடிக்கிறது. இந்துமதமென்ற சாக்கடை உனக்கு சட்டம் வகுப்பதா? எந்த நாட்டிலாவது இம்மாதிரி ஒருமதங் கண்டதுண்டா?

கடவுள் என்றால் முப்பத்து முக்கோடி! முனிவர் என்றால் நாற்பத்தெண்ணாயிரம்! மாயா உலகமிதே என உபதேசித்து ஓயா இன்பத்தில் திளைக்கும் மகாத்மாக்கள்! இத்தனை பேர் இருந்தும் இந்நாட்டிலே உருப்படுவதற்கான துறை ஒன்றையுங் காணோமே.

நாட்டிலே கல்வி உண்டா? அல்லது அறிவைப் பெருக்கும் சாதனங்கள் உண்டா? ஆராய்ச்சிக்கு வழி உண்டா? மலங்கழிக்கும் கக்கூஸ்களிலே ஆண் பெண் படத்தைப்போட்டு அறிவுறுத்த வேண்டிய

இந்து மத சீர்திருத்தத்தை எதிர்த்திடும் இழி செயலையும் இனப் பற்றையும் காண இளமை துடிக்கிறது. இந்தத் துடிப்பு இதுபோன்ற ஆண்டு விழாக்கள் கொண்டாடுவதோடு நின்றுவிடாது. இந்த ஆண்டு விழாக்களின் எதிரொலி திராவிடம் மீட்சிபெற்ற விழாவை—மடமை மடிந்தொழிந்த ‘மே’ தினத்தைக் கொண்டாடித்தான் தீரும். நடிக்கும் நச்சுக் கொள்கையினரே! துடிக்கும் இளமை வாளைப் பிடிக்கும் காலம் வந்துவிட்டது. இடிக்கும் இதயம் வெடிக்கும் எரிமலை என்பதை நெஞ்சில் நிறுத்துக!

என்ற எச்சரிக்கையோடு இளமையின் துடிப்புக்கு மடை கோலுமாறு இந்நாட்டினரை அழைக்கிறேன்!

வருக திராவிடம்! வணக்கம்!!

“ஓய்! நீல வர்ணம்! என்னிடம் காட்டாதே உன் பெருமையை! எங்கேயாவது ஆழ்வார் வர்க்கம் இருந்தால் அங்கே போய்க் காட்டும். சிருஷ்டி கர்த்தாவிடமா சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறாய். சபாஷ்!”

“ஓய்! பல தலை! வீண் ஜம்பம் அடிக்காதீர். உமது பெருமையை மற்ற தலைகளிடம் சொல்லிக் களிப்படையும். வைகுண்ட வாசனிடமா வீராப்பு! வெகு நன்று!”

“ஆத்திரப்பட்டு ஆடாதே தம்பீ! நீ மோகினி உருவம் எடுத்து சிவனோடு கலவி செய்த காரணத்திற்காக உனக்கு மதிப்புத் தர முடியாது!”