உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

திராவிட சம்பத்து

பகுதி 2 · 2 / 2

விஷமம் செய்ய எண்ணிய ஆரிய ஆஞ்சநேயர் முன்னுக்குப்பின் முரணில்லாமலாவது எழுதினாரா என்றால் அதுவுமில்லை.

ஆப்பசைத்த குரங்கு

முதலில் திராவிடக் கதையில் புராணம் புகுந்தது என்று நமது குரலில் பேசினார்.

பிறகு இனவெறிக் கொள்கை கூடாது என்று அவர் மொழியில் கர்ச்சித்தார்.

இறுதியில் அதற்கு ஆக்கந்தேடுவதற்காகப் புறப்பட்டு ஆப்பசைத்த குரங்காகிறார், பாபம்! "திராவிட

சம்பத்து என்றா

ழி வழங்கும் பிரதேசத் தில் போற்றிப் பாது

தக்க பெருஞ்செல்வம் என்றுதான் பொருள்."

விகடரின் விளக்கம் போகும் போக்கு இப்படி! திராவிட இனத்தை மறுத்தவர்—அப்படி ஒரு இனம் இருந்ததில்லை என்றவர்—திராவிட மொழியை ஒத்துக்கொண்டு அது வழங்கிய பிரதேசத்தையும் ஒத்துக்கொண்டிருக்கிறார்.

குப்பை மேட்டுக் குயில்கள்

ஆங்கில மொழி வழங்கிய இடம் ஆங்கிலநாடு, பிரஞ்சு மொழி வழங்கிய நாடு பிரான்சு நாடு. திராவிட மொழி வழங்கிய நாடு திராவிட நாடு என்பது ஏனோ தெரியவில்லை ஆனந்தவிகடருக்கு? தெரியாமலில்லை. தெரிந்தும் அதை மறைக்கும் தைரியம் இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கிறது அவருக்கு!

பிரதேசம், நாடு, இவற்றை விட்டுவிடுவோம். திராவிட மொழி பேசியவர்கள் திராவிடராய்த்தானே இருக்கவேண்டும் விகடரே, கிரேக்க மொழி பேசியவர்கள் கிரேக்கர் என்பது போல விகடரே! விஷமத்தனத்தால் உண்மைகளை விஷமாக்குவது உமது பரம்பரை வேலை. இப்போது நான் தந்த விளக்கத்தால் நீர் நாளைக்கே மரத்தைவிட்டு இறங்கிவிடுவீர் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. திராவிடம், திராவிட

மொழி. திராவிட

லலாம் கற்பனைக் கோட்டை என்று கத்

கள; அந்த குப்பை மேட்டு குயில்களின் பேச்சுல பொதுமக்கள் ஏமாந்து விடக் கூடாதே என்பதற்குத்தான் இதைச் சொல்ல நேரிட்டது. நீங்கள் போகலாம் வாலைச் சுருட்டிக் கொண்டு!

சென்னைக் கடற்கரையிலே நின்று கொண்டிருக்கிறார் அந்த ஐயர் போவார். வருவாரெல்லாம் அவரைப் பார்த்துப் போகிறார்கள். பூணூல் அணிந்தவர்தான். போட்டிருக்கும் சட்டைக்குள்ளே நூல் மறைந்திருக்கிறது அவ்வளவுதான், கடற்கரைப்பக்கம் வருகிறவர்களைப் பார்த்து, அவர், "நாட்டினரே; நாட்டினரே ஒரு சேதி என்கிறார். அதோடு விடுவதில்லை அவர். "திராவிடம் என்றொரு சொல் உண்டு; அது தித்திக்கும் தேன் மொழி கற்கண்டு" என்று பாடுகிறார்.

ஆச்சரியப் படுவீர்கள் நீங்கள்.

அய்யராவது திராவிடத்தை ஒத்துக் கொள்வதாவது என்று திடுக்கிடுவீர்கள். உண்மை நண்பர்களே உண்மை! அன்றைக்கு ஒரு நாள் நானும் என் நண்பர்களும் கடற்கரையில் அந்த அய்யரைச் சந்தித்தோம். மேலே சொன்ன பாடலை அவர் பாடினார் 'திராவிடம் திராவிடம்' என்று கூவினார் திராவிடம் என்றாலே தீயை மிதித்ததுபோலத் துள்ளும் "ஏனோதானோ" கட்சிக்காரர் ஒருவரும் அந்த அய்யரின் முழக்கத்தைக் கேட்டு விட்டுத் தலைகுனிந்துபோய் விட்டார்.

நீங்கள் உடனே சென்னைக் கடற்கரைக்குச் செல்லுங்கள். பிரசிடென்சி கல்லூரி வாயிலிலே நின்று

கொண்டிருக்கிறார் அந்த அயம் நான் சொன்னது உண்மையா அல்லவா என்பது தெரியும். தெரிந்த

பிறகு அந்த ஏனோதானோக்கள்--எங்கேயோ கிடந்தது கள்—இடந்தேடிகள் ஆகியவர்களிடம் சொல்லுங்கள் போய்ப்பார்க்கும்படி - அதோடு கீழுள்ளவற்றையும் கவனமாய்ப் படியுங்கள்.

சென்னைக் கடற்கரையில் பிரசிடென்சி கல்லுரி வாயிலில் இருக்கும் டாக்டர் உ. வே சாமிநாதய்யர் சிலையின் கீழே எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள்.

"மகா மகோபாத்யாய திராவிட வித்ய பூஷண டாக்டர் சாமிநாத அய்யர்" என்பவை!