உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

சிந்தனையும் செயலும்

கட்டுரைகள் 33 · 33 / 50

பிரியா நட்பின் பெருமையை

உணர்த்துகிறார் என்றே எடுத்துக் கொண்டு

பிரியாமல் இருந்திட உறுதி மேற்கொள்ள

வேண்டுமே தவிர;

உடனே தீக்குச்சி மண் எண்ணெயைத்

தேடி அலையக் கூடாது.

* * *

“பறைநன்று பண்ணமையா யாழின் –

நிறைநின்ற

பெண்நன்று பீடிலா மாந்தரின் – பண்

அழிந்து

ஆர்தலின் நன்று பசித்தல் – பசைந்தாரின்

தீர்தலின் தீப்புகுதல் நன்று”

(பாடல் 15 – “நான்மணிக்கடிகை”)

பசைந்தார் = நண்பர்

27 - 9 - 2005

★★★

ஆசைகளைக் துறந்திட வேண்டும்; அவற்றில் மண்ணாசை பொன்னாசையைவிட வெகுவாக பெண்ணாசையை வெறுக்க வேண்டும் என்று வலியுறுத்திடத்தான்; பெண்ணைப் பெருமளவுக்கு அங்கம் அங்கமாக இழிவுபடுத்துகிற பாடல்களை, பற்றற்ற துறவிகள் இயற்றியுள்ளனர். குறிப்பாக நாலடியார் பாடல்களை வழங்கியிருப்பவர்களின் பட்டியலில் சமண சமயப் புலவர்கள் பெருமளவும் இடம் பெறுகின்றனர். அழியும் உடலின் அழகில் மயங்கி அறநெறி தவறிவிடக் கூடாது என்பதை வற்புறுத்தவே அவர்கள் அவ்வழி மேற்கொண்டுள்ளனர் என்பதை அப்பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

நானூறு புலவர்கள் பாடியதும் நானூறு வெண்பாக்களைக் கொண்டதுமான நாலடியார் தொகுப்பில்; இந்த என் கூற்றுக்குச் சான்றாக, இதோ இரண்டு பாடல்கள்.

“குடருங் கொழுவும் குருதியும் என்பும்

தொடருந் நரம்பொடு தோலும் – இடையிடையே

வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்

எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்”

குடல், கொழுப்பு, குருதி, எலும்பு; அவற்றுடன் தோலும் நரம்புகளும் இவற்றுக்கிடையே தசையும் நிணமும் கொண்டவளைப் பார்த்து; “குளிர்ந்த மாலையணிந்த குமரியே” என்று கொஞ்சுவதில் என்ன ரசிகபுத் தன்மை இருந்து

தொலைக்கிறது? எனக் கடுப்பாகக் கேட்கிற கருத்தமைந்த பாடலிது!

மற்றுமொரு பாடல் வருமாறு :-

“ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புண்ணும்

கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தை – பேதை