உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 54

தொகுதி 54 · கடிதம் 4034

மின்வாரியம் குட்டிச்சுவரானது அ.தி.மு.க. ஆட்சியில்தான்

உடன்பிறப்பே,

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மின்சார வாரியத்தையே தி.மு. கழக ஆட்சிதான் குட்டிச்சுவராக்கியது என்று ஆவேச முழக்கமிட்டிருக்கிறார். தமிழக மின்சார வாரியத்தை எந்த ஆட்சி கெடுத்துக் குட்டிச் சுவராக்கியது என்று பட்டிமன்றம் நடத்தித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா என்ன? சாதாரண பாமர மக்களைக் கேட்டால்கூட, அ.தி.மு.க. ஆட்சியிலேதான் தமிழக மின் வாரியம் குட்டிச்சுவரானது என்று அடுக்கடுக்கான காரணங்களை எடுத்துக் கூறுவார்கள். கழக ஆட்சியில் எப்படி மின்வாரியம் குட்டிச்சுவரானது என்று ஜெயலலிதா எந்த விவரமும் கூறவில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் எப்படியெல்லாம் மின்வாரியம் குட்டிச்சுவராக மாறியது என்பதை ஆதாரபூர்வமாகவும், சாட்சியங்களோடும் விளக்குகிறேன்.

31-12-2015 தேதிய “தி இந்து” ஆங்கில நாளிதழில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தனது நிதிச்சுமை குறித்து அதிகக் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. ஆம்; குறைந்த விலைக்கு மின்சாரம் கிடைக்கும் போதும், அதிக விலை கொடுத்து அக்கழகம் மின்சாரத்தை வாங்குகிறது” என்று அந்த விவரத்தையெல்லாம் எழுதியுள்ளது. இது அ.தி.மு.க. மின்வாரியத்தைக் குட்டிச் சுவராக்கியதற்கான உதாரணம் ஒன்று.

தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் ஓய்வுபெற்ற உறுப்பினர் திரு. எஸ். நாகல்சாமி அவர்களே. “மின்சாரத்தைக் குறைந்த விலைக்கு வாங்க வேண்டும் என்கிற ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவை முறையாகக்

கடைப்பிடிப்பதில்லை” என்று குற்றஞ்சாட்டியிருக்கிறாரே, அது அ.தி.மு.க. மின்வாரியத்தைக் குட்டிச்சுவராக்கியதற்கான உதாரணம் இரண்டு.

29-3-2012 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விதி 110இன்கீழ்ச் சட்டப்பேரவையில் படித்த அறிக்கையில், “660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த எனது தலைமையிலான அரசு தற்போது முடிவுசெய்துள்ளது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுமா 3,960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும் இந்த அனல் மின் திட்டம், 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்” என்று அறிவித்தார். 2015ஆம் ஆண்டும் முடிந்துவிட்டது. எனன ஆயிற்று இந்தத் திட்டம்? ஏன் உற்பத்தியைத் தொடங்கவில்லை?

“ஆனந்த விகடன்” வார இதழில், தமிழ்நாடு மின் துறை பொறியாளர் சங்கத் தலைவர், சா. காந்தி கூறும்போது, “தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் வீறுகொண்டு அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், மின் வெட்டின் கொடுமை இந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்தது. தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கூடுதல் விலை கொடுத்து வாங்கியதால், மின்சார வாரியத்தின் இழப்பு 94,400 கோடி ரூபாயை எட்டிவிட்டது. வருடம்தோறும் பெரும் இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே மின்சார வாரியம், இந்தியாவிலேயே தமிழக மின் வாரியம் மட்டும்தான். மின் உற்பத்திக்கான கட்டமைப்பை மேம்படுத்தாமல, கொள்முதல் செய்வதை மட்டுமே அரசு விரும்புகிறது. கொள்முதல் என்றால், ஊழல் என்றே பொருள். மூன்றாண்டுகளுக்கு முனபு 8,800 கோடி ரூபாய் செலவில் உடன்குடி மின் திட்டத்தை அறிவித்தார் ஜெயலலிதா. இந்தத் திட்டம் 1,600 மெகாவாட் மின்சாரத்துக்கானது. இப்போதுவரை இது தொடங்கப்படவிலலை” என்றெல்லாம் கூறியிருந்தாரே, அது அ.தி.மு.க. மின்வாரியத்தைக்

குட்டிச்சுவராக்கியதற்கான உதாரணம் மூன்று.

29-3-2012 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விதி 110இன் கீழ்ச் சட்டப்பேரவையில் படித்த அறிக்கையில், “660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனலை மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த எனது தலைமையிலான அரசு தற்போது முடிவு செய்துள்ளது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுமா 3,960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும் இந்த அனல் மின் திட்டம், 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்” என்று அறிவித்தார். 2015ஆம்

ஏன் உற்பத்தியைத் தொடங்கவில்லை? என்பதுதான் அ.தி.மு.க. ஆட்சிக்கே உரிய பெருமை. (!) சென்னை எண்ணார் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 யூனிட்டுகளுடன் கூடிய புதிய அனல் மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதில் திருச்சியில் உள்ள பாய்லர் ஆலை மற்றும் சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகிய இரண்டும் பங்கேற்றன. இறுதியாக ரூ. 7,788 கோடியில் பாய்லர் ஆலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துச் சீன நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஐகோர்ட் அந்த மனுவினைத் தள்ளுபடி செய்தது. இதை எதித்துச் சீன நிறுவனம் சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்து, அந்த அமர்வு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தர விட்டது. இது, மின்வாரியத்தை அ.தி.மு.க. ஆட்சி குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் நான்கு.

“ஆனந்த விகடன்” இந்த ஆண்டு ஜனவரியில் எழுதிய தலையங்கத்தில், “கடந்த ஐந்தாண்டுகளில் தன் சொந்த மின் உற்பத்தித் திறனை ஒரு யூனிட் அளவுக்குக்கூட மேம்படுத்தாத மின்சார வாரியம், புதிய புதிய வகைகளில் ஊழல் செய்வதற்கு மட்டும் திட்டங்களை வகுக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழலின் வேட்டைக் காடாக மாற்றப்பட்டிருக்கிறது” என்று பகிரங்கமாகக் கூறியது, தமிழக மின்வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் ஐந்து.

மொத்தம் 3,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ தமிழ்நாடு மின்

உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரியது. ஒப்பந்தப்புள்ளியின் தேதி 5-12-2012 முதல் 2-1-2013வரை என்று முடிவு செய்தார்கள். ஒப்பந்தப் புள்ளி பெறுவதற்கும், அதனைத் திறப்பதற்கும் கடைசி தேதி 4-1-2013 என்று முடிவு செய்யப்பட்டது. பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் 52 ஒப்பந் தப்புள்ளிகளை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தேர்ந்தெடுத்து, அந்த 52 ஒப்பந்ததாரர்களுக்கும் 708 மெகாவாட் மின்சாரத்தை, ஒரு யூனிட் ரூ. 6.48 என்ற விலைக்கு உற்பத்தி செய்து வழங்குவதற்கும், அவ்வாறு வழங்கும் விலையில 1-4- 2014 முதல் பத்து ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு வருடத்திற்கும் 5 சதவிகிதம் விலையை அதிகப்படுத்தவும் ஒப்புக்கொண்டு அவர்களுக்கெல்லாம் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இத்தனை நடவடிக்கைகளும் முடிந்த பிறகு இதன் மீது, ஏதோ உள்நோக் கத்தினால், எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடக்கப்பட்டுவிட்டது. இது தமிழக மின்வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் ஆறு.

சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களிடமிருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மின்சாரம் வாங்குவதற்கான ஒட்டுமொத்த விலை மற்றும் நடைமுறைகள் சம்பந்தமாக 12-9-2014 அன்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஓர் ஆணையைப் பிறப்பிக்கிறது. முதலில் அணுகும் சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களுக்கு முன் உரிமை வழங்கப்படுவதோடு, நிர்ணயிக்கும் விலை முன்னுரிமை கட்டண விலை என்று அழைக்கப்பட்டு, அதன் விலை ரூ. 7.01 எனவும், இது 31-3-2015 வரையில் நிலுவையில் இருக்கும் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட சூரிய மின் உற்பத்தியாளர்களுடன் செய்து கொள்ளப்பட்ட மின் கொள்முதல் ஒப்பந் தங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கோரியபோது, அந்த ஒப்பந்தங்கள், மத்திய அரசின் வழிகாட்டுதலின் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து செய்யப்படவில்லை என்ற காரணத்தால் 15-9-2014 நாளிட்ட ஆணையில் நிராகரிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு யூனிட் ரூ. 7.01 என்ற விலை விகிதத்தில், அதே ஒப்பந்ததாரர்களுடன் தொடர்வது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முடிவுசெய்து,

அனைத்து ஒப்பந்ததாரர்களையும் முன்னுரிமை கட்டண விலைக்கு (ரூ. 7.01) மாறுமாறு தெரிவித்துக் கடிதம் அனுப்பியது. தமிழக மின்வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் ஏழு இது.

பொதுவாக ஒரு மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்வதற்கு ஐந்து ஏக்கர் நிலம் தேவை. அதன்படி அதானி நிறுவனம் 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய 3,240 gaan நிலம் வைத்திருக்க வேண்டும். 7-10-2014 தேதிய, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரமானக் கழக நடவடிக்கைபடி, 1,080 Flow Study (மின்னோட்டப் பகுப்பாய்வு) செய்த பின்பும், பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்தப்பட்ட பின்பும், நிலத் தேவையைப் பூர்த்தி செய்த பிறகுமே முதுநிலை முடிவு செய்யப்படும். இந்தத் தேவைகளையெலலாம் அதானி குழுமம் நிறைவேற்றியுள்ளதா என்றால் கிடையாது. தேவையான நிலங்களை அதானி குழுமம் பெற்றுள்ளது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிமானக் கழகம் சான்றளித்துள்ளதா? அந்தத் தேவைகளை நிவர்த்தி செய்யாத நிலையில், 4- 7-2015 அன்று முதலமைச்சரா ஜெயலலிதா முன்னிலையில் அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தம் செய்துகொண்டது சரியா? தமிழக மின்வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் எட்டு இது.

மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சூரிய ஒளி மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.5.05 என்றிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அதிக விலை நிரணயிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீட்டு ஆணையத்திடம் மேல் முறையீடோ அல்லது அந்த விலையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கலோ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏன் செய்யவில்லை? தமிழக மின்வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் பதினேழு.

4-7-2015 அன்று தமிழக அரசு அதானி குழுமத்துடன் 4536 கோடி ரூபாய் செலவில், ஒரு யூனிட் ரூபாய் 7.01 என்ற விகிதத்தில் 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம்

முடிந்த இரண்டே வாரங்களில், மத்தியப் பிரதேச அரசு சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்த போதுதான் குற்றச் சாட்டுகள் கிளம்பின. மத்தியப் பிரதேச அரசுக்கு ஒரு யூனிட் ரூபாய் 6.04 என்ற விலையில் சூரிய ஒளி மின்சாரம் வழங்க இதே அதானி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் அதானி நிறுவனத்தின் இந்த விலைப் புள்ளியை நிராகரித்த மத்தியப் பிரதேச அரசு, மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்கை பவர் சவுத் ஈஸ்ட் ஏஷியா என்ற நிறுவனத்தோடு, ஒரு யூனிட் 5.05 என்ற விலையில, 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்க ஒப்புதல் அளித்தது உண்மையா இல்லையா? தமிழக மின் வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் ஒன்பது இது.

அதானி நிறுவனம், 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் மின்சாரப் பூங்காவை ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்க நிலங்களை வாங்கத் தொடங்கியது. இவ்வாறு நிலம் வாங்குவதில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இடைத் தரகர்கள் இடையில் புகுந்து குறைந்த விலைக்கு நிலத்தை விவசாயிகளிடமிருந்து வாங்கி, அதானி நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் புகார்கள் கூறப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அதானி நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கு ஒன்று, இந்தக் குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது. தமிழக மின்வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் பத்து.

அதானி நிறுவனத்துக்கு அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் கபிலன் எழுதிய கடிதத்தில்,

“சூரிய ஒளி மின் பூங்கா அமைப்பதற்காக நிலம் வாங்கியதில் பல்வேறு சட்டவிரோதமான நடவடிக்கைகள் நடந்துள்ளன. மின்சாரம் வாங்குவதற்காக தமிழக மின் வாரியத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பலவேறு சட்ட விரோதமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோதமான ஆவணங்களின் அடிப்படையிலேயே ஒரு யூனிட் ரூபாய் 7.01 என்ற விலைக்கு அதானி நிறுவனத்தோடு மின்சாரம் வாங்கத் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே “இந்தஸ் இந்த்” வங்கியிலிருந்து 2303.98 கோடி, “ஸ்டேட் பாங்க்

ஆப் இந்தியா”விலிருந்து 1000 கோடி, “யெஸ்” பேங்கிலிருந்து 500 கோடி மற்றும் ஸ்டான்டர்ட் சார்டா்ட் வங்கியிலிருந்து 803.98 கோடி கடன் பெற்றுள்ளது அதானி நிறுவனம். இவ்வாறு கடன் பெறப்பட்டதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. செபி விதிகள், ஒப்பந்த விதிகள் போன்ற பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளன. இந்த விதி மீறல்கள் ஒரு துளி மட்டுமே. தமிழக மின் வாரியம், இதர அரசுத் துறைகள், பொது நல வழக்கு தொடுக்கும் சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் போன்றவற்றிற்கு இத்தகவல் தெரிந்தால், அதானி நிறுவனம் தமிழக அரசோடு செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்யும் நிலை ஏற்படும். பூர்வாங்க விசாரணை நடத்தினாலே, தமிழக மின் வாரியத்தை அதானி நிறுவனம் எப்படி ஏமாற்றியிருக்கிறது என்பது தெரிந்துவிடும்” என்று கபிலன் அதானி நிறுவனத்துக்கு அப்போது எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். இது தமிழக மின் வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் பதினொன்று.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக இருந்த நாகல்சாமி, இந்த ஒப்பந்தம் நடந்தபோதே, இந்த ஒப்பந்தத்தினால் அடுத்த 25 ஆண்டுகளில் தமிழக அரசு 25 ஆயிரம் கோடி இழப்பைச் சந்திக்கும் என்று கூறினார். ஆனால் எதிர்க்கட் சிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்ப்புகளையும் அலட்சியப்படுத்திவிட்டு ஒபபந்தத்தைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. தமிழக மின்வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் பன்னிரண்டு.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட நான் “அ.தி.மு.க. அரசு அதானி குழுமத்தோடு அவசர அவசரமாக இந்த ஒபபந்தத்தைச் செய்துகொண்டு அந்தக் குழுமத்திற்கு சட்ட விதிகளுக்குப் புறம்பாக, சட்ட விரோதமாக, மோசடியாக இந்த மின் திட்டத்தை எந்தவிதமான ஒப்பந்தப்புள்ளிகளும் கோராமல் அளித்திருக்கிறது என்பதை இந்த வழக்கிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே இந்தத் திட்டத்தை அ.தி.மு.க. அரசு அளித்தது பற்றிச் சட்டப்படியான குற்ற விசாரணை நடைபெற்று, மறைககப்பட்டிருக்கும் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு அரசு எந்தப் பதிலும் கூறவில்லை.

தமிழக மின்வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் பதின்மூன்று, இது.

“அரசுடன் அதானி குழுமம், சூரிய மின்சக்தி நிலையம் ஒன்று 1400 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டிருக்கிறதாமே?” என்ற ஒரு கேள்விக்கு, 16-6-2015 அன்று நான் பதில் கூறும்போது, “தமிழகத்தில் 1400 கோடி ரூபாய் மதிப்பில் 200 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளிவந்துள்ளது. இந்த 200 மெகாவாட்டையும் ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் அ.தி.மு.க. அரசுடன் நடைபெற்று வருகிறதாம். வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கு மேல் முறையீட்டில் ஜெயலலிதா பெற்றிருக்கும் தற்காலிக நிவாரணத்திற்கும், அதானியின் இந்தச் சூரிய மின் சக்தி நிலைய ஒப்பந்தத்திற்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதாக யாரோ சிலர் கூறினால், அதில் உண்மை என்ன என்பது நமக்குத் தெரியாது!” என்று தெரிவித்திருந்தேன். இதற்கும் எந்தப் பதிலும் இல்லை. தமிழக மின் வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச் சுவராக்கியதற்கான ஆதாரம் பதினான்கு, இது.

சூரிய ஒளி மின் நிலையங்களை அமைப்பதற்கான செலவு குறைந்துவிட்டதால் நடப்பாண்டில் சூரிய ஒளி மின்சாரத்தின் கொள்முதல் விலை ரூ. 5.86 ஆக குறைந்துவிட்டது. அடுத்த ஆண்டில் இது யூனிட் ஐந்து ரூபாய் அளவுக்குக் குறைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் அதானி நிறுவனத்துடன் ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் கூடுதலாக ரூ. 7.01 என்ற விலைக்கு மின்சாரம் வாங்க அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்றெல்லாம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித் திருந்தார். அதற்கும் எந்தப் பதிலும் இல்லை. தமிழக மின்வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் பதினைந்து, இது.

31-3-2015வரை முன்னுரிமை விலையான ரூ./.01 நிலுவையில் இருக்கும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 12-9-2014 தேதியிட்ட ஆணையில் நிர்ணயம் செய்தபோது, அதனை எதிர்த்து, மேல் முறையீட்டு ஆணையத் திடமோ, உயர் நீதிமன்றத்திடமோ, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏன் மனு தாக்கல் செய்யவிலலை?

தமிழக மின்வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் பதினாறு.

உடன்குடி அனல் மின் நிலையம் அமைப்பது குறித்து அ.தி.மு.க. அரசு மறுடெண்டர் கோரியது. அதுபற்றி, சதான் சென்ட்ரல் சீனா பவர் எனாஜி டிசைனிங் இன்ஸ்டிடியூட் திரேசே கன்சார்டியம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தங்கள் நிறுவனம் குறைந்த தொகையைக் குறிப்பிட்டு ஒப்பந்தப் புள்ளியைத் தாக்கல் செய்தபோதிலும், தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே மறுடெண்டருக்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டபோது, உயர் நீதிமன்ற நீதிபதி திரு. சத்யநாராயணா அவர்கள் புதிய டெண்டாவிட இடைக்காலத் தடை விதித்தார். வழக்கு முடியும்வரை புதிய டெண்டர் விடக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்க இரண்டாவது முறையாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது சரியா? யாரை ஏமாற்ற இந்த இரண்டாவது ஒப்பந்தப் புள்ளி?

மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சூரிய ஒளி மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 5.05 என்றிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீட்டு ஆணையத்திடம் மேல் முறையீடோ அல்லது அந்த விலையை எதிர்த்து உயா நீதிமன்றத்தில் மனு தாக்கலோ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏன் செய்யவில்லை? தமிழக மின்வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் பதினேழு, இது.

அடுத்து, உடன்குடி அனல் மின் நிலையம் அமைப்பது குறித்து அ.தி.மு.க. அரசு மறுடெண்டர் கோரியது. அதுபற்றி, சதான் சென்ட்ரல் சீனா பவர் எனர்ஜி டிசைனிங் இன்ஸ்டிடியூட் திரேசே கன்சார்டியம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தங்கள் நிறுவனம் குறைந்த தொகையைக் குறிப்பிட்டு ஒப்பந்தப் புள்ளியைத் தாக்கல் செய்தபோதிலும், தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே மறு டெண்டருக்கு தடை விதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்ட போது, உயா

நீதிமன்ற நீதிபதி திரு. சத்யநாராயணா அவர்கள் புதிய டெண்டர் விட இடைக்காலத் தடை விதித்தார். வழக்கு முடியும்வரை புதிய டெண்டர் விடக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்க இரண்டாவது முறையாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது சரியா? யாரை ஏமாற்ற இந்த இரண்டாவது ஒப்பந்தப்புள்ளி? தமிழக மின் வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் பதினெட்டு, இது.

முன்னாள் அமைச்சருக்கு வேண்டிய உறுப்பினர்களான அக்சயகுமார் மற்றும் ஜி. ராஜகோபால் ஆகியோரை உள்ளடக்கிய தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், முன்னுரிமை கட்டண விலையான ரூ. 7.01 என்பதன் கால வரம்பை 1-4-2015 முதல் 31-3-2016வரை என்று தன்னிச்சையாக நீட்டித்திருப்பது உண்மையா இல்லையா? அவ்வாறு காலத்தை நீடித்துத் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கச் சொன்னது யார்? இவ்வாறு பிறப்பித்த உத்தரவு, சட்டத்திற்குப் புறம்பானது என்றும், தேவையற்றது என்றும், அந்த உத்தரவு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாகப் பிறப்பிக்கப்பட்டது என்றும், இதனால் அரசுக் கருவூலத்திற்குப் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும் ஆணையத்தின் மற்றொரு உறுப்பினரான திரு. நாகல்சாமி அவர்கள் 1-4-2015 அன்று உத்தரவிட்டுள்ளாரா? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு தமிழ்நாட்டு விலையைவிட இரண்டு ரூபாய் குறைவாக வாங்கிய நிலையில், அதிக விலை கொடுத்து வாங்கக் காரணம் என்ன? தமிழக மின்வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச் சுவராக்கியதற்கான ஆதாரம் பத்தொன்பது, இது.

947 மெகாவாட் மின்சாரத்தை இந்த விலைக்குக் கொள்முதல் செய்தால் அரசு கஜானாவிற்கு, 7,576 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுமா? இல்லையா? தமிழக மின்வாரியத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவராக்கியதற்கான ஆதாரம் இருபது, இது.

அ.தி.மு.க. ஆட்சியில் நிலக்கரி இறக்குமதியில மட்டும், ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், இந்தப் பணம் இந்தோனேசியா வங்கிகளில் குவித்துச் சேமிக்கப்படுகிறது என்றும் ஒரு தகவலை

மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரகம் வெளி யிட்டுள்ளது. தமிழக மின்வாரியம், போலியான ஆவணங்கள் மூலம் இந்த நிலக்கரியை 87 டாலருக்கு வாங்குவதாகக் கணக்கு காட்டுகிறது. அதாவது டன் ஒன்று 3 ஆயிரத்து 360 ரூபாய் விலைக்கு வாங்கப்படும் நிலக்கரியை, 5 ஆயிரத்து 752 ரூபாய்க்கு வாங்குவதாக மோசடியான பொய்க் கணக்குக் காட்டப்படுகிறதாம். இந்தத் தகவல் “எகனாமிக் அண்ட் பொவிடிக்கல் வீக்லி” என்ற பிரபல ஆங்கில ஏட்டின் 9-4-2016 அன்று வெளியான பதிப்பில் இடம்பெற்றுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி கப்பலில் வரும் போது, “இன்வாய்ஸ்” எல்லாம் திருத்தி மாற்றப்பட்டு, புது ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு 87 டாலராக அதாவது 5 ஆயிரத்து 752 ரூபாயாக விலை உயார்த்தப்பட்டுப் பொய்க் கணக்கு பதிவு செய்யப்படுகிறது என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் மூலம் ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விலை உயாத்தப்பட்டுக் கூடுதலாக வரும் தொகை அ.தி.மு.க. அமைச்சர்களுக்காக இந்தோனேஷியா வங்கிகளில் சேமிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் நிறுவனமான வருவாய்ப் புலனாய்வுத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளதாக “எகனாமிக் அண்ட் பொலி டிக்கல் வீக்லி” கூறியுள்ளது. தமிழக மின்சார வாரியத்தை ஜெயலலிதா அரசு குட்டிச்சுவராக ஆக்கியதற்கான 21வது ஆதாரம் இது.

இவைகள் எல்லாம் நான் ஏற்கனவே பல முறை அ.தி.மு.க. அரசின் கவனத்திற்கு அவ்வப்போது எடுத்துச் சொல்லி வந்த விவரங்கள்தான். இன்னும் பல இருக்கின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் கழகத்தின்மீது குற்றம் சாட்டியதால் அவரை மதித்து, இந்தப் பதில்களைக் கூறியிருக்கிறேன். இதற்கெலலாம் அ.தி.மு.க. அரசு அளிக்கும் விளக்கம் என்ன?

அன்புள்ள, மு.க.

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 54 PDF ↗