தொகுதி 54 · கடிதம் 4033
நிதி அமைச்சரின் பதிலுரை: நீர்த்துப் போன உரை
உடன்பிறப்பே,
நிதிநிலை அறிக்கை விவாதத்துக்கு 29-7-2016 அன்று பதிலளித்த நிதி அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் பேரவையில், ஜெயலலிதா பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி என்று சொல்லியிருக்கிறார். சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி அல்ல. 1. 1 சதவிகித வெற்றி. அதாவது தி.மு.க. அணிக்கும் - அ.தி.மு.க. அணிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் அவ்வளவுதான். அ.தி.மு.க.வினர் உட்பட யாரும் எதிர்பாராத வெற்றி என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.
பதில் உரையில் பாதி, “அம்மா” பாராட்டுப் புராணம் தான்! மொத்தம் 52 பக்க பதில் உரையில், பாதி பதில் உரையில் எண்ணிப் பார்க்கத்தக்கது என்று ஒன்றுமே இல்லை. தமிழக அரசின் 22 துறைகளுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலே ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரங்களைத் தெதரிவித்திருக்கிறார். அதையாவது நிதியமைச்சர் ஒழுங்காகத் தெரிவித்திருக்கிறாரா என்றால் இல்லை. அமைச்சர் தனது பதிலில், “இந்த நிதி ஆண்டில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைக்காக மாண்புமிகு அம்மா அவர்கள் ஒதுக்கீடு செய்த தொகை ரூபாய் 121 கோடியே 69 லட்சம்” என்று 29-7-2016 அன்று படித்திருக்கிறார். ஆனால் உண்மை என்ன? அதே அமைச்சர் 21-/7-2016 அன்று நிதிநிலை அறிக்கையிலே படித்த புள்ளி விவரம் என்ன தெரியுமா? கால்நடை பராமரிப்புத் துறைக்காக மட்டும் 1,188.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பத்தி 43இல் படித்திருக்கிறார். அதைத்தவிர பால்வளத்
துறை, மீன்வளத் துறை ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் வேறு இருக்கின்றன. அமைச்சரின் பதில் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணமே போதும் என்று கருதுகிறேன். ஏற்கனவே நிதிநிலை அறிக்கையிலேயே ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் கூறிய பிறகு, அதே தகவலை, அம்மையாரைப் பற்றி 26 பக்கப் பாராட்டுரைகளோடு இணைத்து, மீண்டும் அவையிலே ஒரு நிதியமைச்சர் படித்திருக்கிறார் என்றால், இதற்குப் பெயர்தான் பட்ஜெட் விவாதத்திற்கான பதில் உரையா? பதில் சொலலப் பெரிதாகவோ, புதியதாகவோ எதுவும் இல்லை என்பதால், ஏற்கனவே கொடுத்த புள்ளி விபரங்களையே மீண்டும் புரட்டிப் படித்து நேரத்தைப் போக்கியிருக்கிறார். இதனால்தானோ என்னவோ, நிதியமைச்சரின் முதல் 26 பக்க பதிலுரையை அரசின் சார்பில் அதிகாரபூர்வ “இணையதளத்தில்” அனுப்பியிருப்பதில, ஒரு வரிகூட இடம்பெறவில்லை என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். அமைச்சரின் பதிலுரையில் இந்த 26 பக்க முதல் பகுதியின் துவக்கத்தை உதாரணத்திறகாகக் கூறட்டுமா?
“மரங்கள் சொல்லி காற்று வருவதில்லை
தேனீக்கள் சொல்லி பூக்கள் மலர்வதில்லை
வானம் சொல்லி நிலவு வருவதில்லை
மேகம் சொல்லி மழையும் வருவதில்லை
கடல் சொல்லி மீன்கள் வருவதில்லை
கண்கள் சொல்லி காட்சிகள் வருவதில்லை
இவை யாவம்
ஆண்டவன் சொல்லி அதுவாகவே நடப்பவை!
அது போலவே
தமிழ் நாட்டை வளப்படுத்தும்
நலத் திட்டங்கள் எல்லாம்
அம்மா சொல்லி அரசு செயல்படுத்துபவை! இத்திட்டங்கள் யாவும்
மாண்புமிகு அம்மா அவர்களின் சிந்தனையில் பூத்து மக்களுக்காகவே அம்மா அவர்கள் அள்ளித் தந்தவை!
இப்படியே 26 பக்கங்கள்! வேறு யாரும் பொறுமையாக இதையெல்லாம் படிக்க முடியுமா? இதுதான் நிதிநிலை
அறிக்கைக்குப் பதிலா? முதலமைச்சருக்கு “ஐஸ்” வைத்து அவரது அகங்குளிரச் செய்ய இதுதான் நேரமா? நேர்வழியா? எத்தனையோ ஆண்டு காலமாக நிதிநிலை அறிக்கை, ஆளுநர் உரை, அதற்குப் பதிலுரை என்றெல்லாம் பேரவையில் பார்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட வேடிக்கையை இதற்கு முன்பு எப்போதாவது யாரும் பார்த்தது உண்டா? இந்தப் பொழுதுபோக்கு வேடிக்கை விரநோதங்களையெல்லாம் கட்சிக் கூட்டங்களில், கட்சித் தலைவியைப் பாராட்டும் நிகழ்ச்சிகளில் வைத்துக்கொண்டு அகவல் - தாலாட்டு - பதவி விடு தூது பாட வேண்டியதுதானே? சட்டப் பேரவை ஒரு ஜனநாயக மன்றம் அல்லவா? அங்கே இப்படிப்பட்ட குலவைக் கூத்துக்களையெலலாம் நடத்தலாமா? நாட்டிலே இருக்கும் நல்ல நாளேடுகளும், நடுநிலையாளர்களும் இதைப் பற்றி என்னதான் நினைப்பார்கள்? இந்த மேடையில் அந்த நாடகம் இன்னும் எத்தனை நாட்களுக்கோ?
ஏற்கனவே நிதிநிலை அறிக்கையிலேயே ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்கூறிய பிறகு, அதே தகவலை, அம்மையாரைப் பற்றி 26 பக்கப் பாராட்டுரைகளோடு இணைத்து, மீண்டும் அவையிலே ஒரு நிதியமைச்சர் Lig Sh HSA MT என்றால், இதற்குப் பெயர்தான் பட்ஜெட் விவாதத்திற்கான பதில் உரையா? பதில் சொலலப பெரிதாகவோ, புதியதாகவோ எதுவும் இல்லை என்பதால், ஏற்கனவே கொடுத்த புள்ளி விபரங்களையே மீண்டும் புரட்டிப் படித்து நேரத்தைப் போக்கியிருக்கிறார்.
அமைச்சரின் பதிலுரையின் இரண்டாவது பகுதி 26 பக்கம். அந்தப் பகுதியை அவர்களுடைய கட்சியின் அதிகாரப்பூர்வமான ஏடே வெளியிடவில்லை. அதிலிருந்தே அந்தப் பேச்சின் தன்மையைப் பற்றிப் புரிந்துகொள்ளலாம்.
“கடந்த இரண்டாண்டுகளில் நமது கணிப்புகளுக்கும், கணக்குக்கும் ஏற்பட்ட வேறுபாடு, இத்தகைய நிகழ்வுகளால்தான் ஏற்பட்டதே தவிர, இதில் execution problem எதுவும் இல்லை” என்று அமைச்சரே தனது பதில் உரையில் ஒப்புதல் வாக்கு மூலமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வருவாயப பற்றாக்குறை ரூ. 9,154.78 கோடி ரூபாயாக இருக்கும் என்று இந்த ஆண்டு பிப்ரவரி திங்களில் சொன்னார்கள். 2016-2017ஆம் ஆண்டு திருத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வருவாய்ப் பற்றாக்குறை 15,854.47 கோடி ரூபாயாக உயாந்துள்ளது. ஐந்து மாதங்களிலேயே இந்த வருவாய்ப் பற்றாக்குறை 6,699.69 கோடி ரூபாய் அதிகமாகி உள்ளது என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.
இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், “வருவாய்ப் பற்றாக்குறை குறைய வேண்டுமெனில், ஒன்று வருவாய் வரவு உயர வேண்டும் அல்லது வருவாய்ச் செலவினம் குறைக்கப்பட வேண்டும்” என்ற “ஐன்ஸ்டின் கண்டு பிடிப்பை (1)” இவர் கண்டுபிடித்துப் பேரவையில் சொல்லி நகைச்சுவை விருந்து அளித்திருக்கிறார். வருவாய் 12 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாகக் கிடைத்திருந்து, மாநிலக் கூடுதல் செலவு 2,600 கோடி ரூபாய் குறைந்திருந்தால், 2015-2016ஆம் ஆண்டில் வருவாயப் பற்றாக்குறைக்குப் பதில், வருவாய் உபரியாக இருந்திருக்கும் என்று விளக்கமளிக்கிறார். “அத்தைக்கு மீசை முளைத்தால்தானே சித்தப்பா?” வருவாயை ஏன் பெருக்கவில்லை? செலவை ஏன் கட்டுக்குள் கொண்டுவரவில்லை? வருவாய்ப் பறறாக்குறை அதிகமானது ஏன்? என்பதுதான் கேள்வி. அதைச் செய்யாததுதான் அ.தி.மு.க. அரசின் நிதி மேலாண்மைக் குறைபாடு.
நிதிப் பற்றாக்குறை பற்றியும் அமைச்சர் பதிலளித் திருக்கிறார். வருவாய்ப் பற்றாக்குறை உயரும்போது, நிதிப் பற்றாக்குறையும் உயரும். ஆனால் அது மூன்று சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் தனக்குத்தானே நொண்டிச் சமாதானம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார்.
மூன்று சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றால் எவ்வளவு? ஏன் அதை நிதியமைச்சர் கூறவிலலை? எனது “உடன்பிறப்பு மடலில்” அதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். 2016-2017ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ. 36,740.11 கோடி ரூபாயாக இருக்குமென்று மதிப்பிடப்பட்டது, தற்போது இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 40,533.84 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்
2.92 சதவிகிதமாக இருந்தது, தற்போது 2.96 சதவிகிதமாக உயாந்துள்ளது.
நமது மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையின் அளவு 2.96 சதவிகிதம் என்றால், வரையறுக்கப்பட்ட அளவை விட 0.04 சதவிகிதம்தான் இப்போது குறைவு. இதைத் தான் நிதியமைச்சர், கடடுப்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லிக்கொள்கிறார். இந்த அளவுதான அடுத்த ஆண்டு 3.34 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுவிட்டு, அதையும் நிதிநிலை அறிக்கையிலே தெரிவித்துவிட்டு, தற்போது நிதித் துறை அமைச்சர், கழுத்தை நெரித்திடப் போகும் அந்த சதவிகிதம் - வெறும் கணிப்புதான்
என்று சமாளிக்கப்பார்க்கிறார்.
அடுத்த ஆண்டு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரார்களின் ஊதியங்களை உயர்த்திக் கொடுக்க வேண்டும். இந்த நிலையில் செலவினம் அதிகமாகும்போது நிதி மேலாண்மைக்காக வரையறுக்கப்பட்ட 3 சதவிகிதம் என்பது நிச்சயமாக 3.34 சதவிகிதத்தை எட்டும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. எனவே நிதித் துறை அதிகாரிகள் 3.34 சதவிகிதம் என்று மதிப்பிட்டிருப்பதை, வெறும் கணிப்பு என்று சொல்லி, இப்போது யாரையும் ஏமாற்ற முயல வேண்டாம். சிலரைப் பல நாள் ஏமாற்றலாம்; பலரைச் சில நாள் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.
நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “தற்போது உள்ள கடன் அளவு இன்றுள்ள சூழலில் இயல்பான ஒன்றுதான் என்றும், அளவுகோல்படி அதிகமாக இல்லை என்றும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நமது மாநிலத்தின் கடன் அளவு கட்டுக்குள்தான் உளளது” எனறும் 25-7-2016 அன்றும் 29-7-2016 அன்றும் பேரவையில் எடுத்து விளக்கினார். ஆனால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், அதறகு முன்பு திரண்ட கடனாக, 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை இருந்தபோது, ஆளுநர் உரையில் பேசிய ஜெயலலிதா, “தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாய்; ஒவ்வொரு குழந்தை தமிழ்நாட்டில் பிறக்கும் போதும் தலா 15 ஆயிரம் ரூபாய் கடனுடன் பிறக்கிறது” என்று தி.மு.க. அரசைக் குற்றஞ்சாட்டினாரே, 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தபோதே அந்த நிலை எனறால், இப்போது
2.52 இலட்சம் கோடி கடன் இருக் கிறதே, அது மட்டும் கட்டுக்குள் அடங்கியிருக்கின்ற கடனா? அல்லது தமிழக மக்களைக் கசக்கிப் பிழிந்து காவு கேட்கும் கடனா?
2015-2016ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டப்படி, தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறை பற்றி துரைமுருகனும், எ.வ. வேலுவும் ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட ஒரு புள்ளிவிவரம் பற்றி இரண்டு ஆங்கில ஏடுகள் எழுதியிருந்ததைத் தாங்கள் பேசும்போது சுட்டிக்காட்டியிருந்தார்கள். அதற்குப் பதில் கூற முனைந்த நிதியமைச்சர், ஒரு ஆங்கில நாளேடு அந்தப் புள்ளி விவரத்தைத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டது. தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறையைவிட மராட்டிய மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை திருத்த மதிப்பீட்டில் உயர்த்தப்பட்டுவிட்டது. எனவே தமிழகத்தைவிட மராட்டிய மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை அதிகம் என்று பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை 31,830 கோடி ரூபாய், உத்தரப்பிரதேசத்தின் பற்றாக்குறை 31,560 கோடி ரூபாய், மூன்றாவதாகத்தான் மகாராஷ்டிரா, அங்கே 30,730 கோடி ரூபாய் பற்றாக்குறை. இதிலேதான் நிதியமைச்சர், திருத்த மதிப்பீட்டில் மகாராஷ்டிராவில் நிதிப் பற்றாக்குறை 37,949 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது, தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை திருத்த மதிப்பீட்டில 32,360 கோடி ரூபாய் மட்டுமே என்று பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார். அதாவது நிதியமைச்சர் நிதிப் பற்றாக்குறையில முதல் மாநிலம் மகாராஷ்டிரம்தான், அடுத்ததுதான் தமிழ்நாடு என்று பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார். ஆனால் நிதிப் பற்றாக்குறையில் மகாராஷ்டிரா மாநிலத்தைவிடக் குறைவு என்றாலும், மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச மாநிலத்தை விட அதிக நிதிப் பற்றாக்குறை உள்ள மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்று ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டிய புள்ளிவிவரத்தை அமைச்சரால் மறுக்க முடியாது அலலவா?
“இந்து” ஆங்கில நாளிதழ், “அதிகரித்து வரும் நிதி மற்றும் வருவாய்ப் பற்றாக்குறைகள் கவலைக்குரியது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்” என்று எழுதியிருக்கிறதே, அதற்கு அமைச்சரின் பதில் என்ன? “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேடு, “வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 15,000 கோடி அளவுக்கு இருப்பதாக நிதிநிலை
அறிக்கையில் காட்டப்பட்டிருப்பது நிச்சயமாக வேதனையளிக்கும் திருப்பம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்” என்று எழுதியதே, அதற்கு அமைச்சரின் பதில் என்ன? சங்கடமான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், சாதகமான ஒன்றிரண்டு
விபரங்களை வைத்துக்கொண்டு சமாதானம் அடைவதேன்?
Sant, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசால் அதிக அளவில் நிதி வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கூறுவது, ஒப்புதல் வாக்குமூலமாகவே உள்ளது. பீகார் ஆட்சியும், உ.பி. ஆட்சியும் மத்திய பா.ஜ.க.வுக்கு எதிரானவை; எதிரான ஆட்சிகள் அதிக நிதியைப் பெறமுடிகிறபோது, மத்திய பா.ஐ.க.வுக்கு நேசமான ஆட்சியினால் அதிக நிதியைப் பெறமுடியாமல் போனது ஏன்? மத்திய அரசுடன் கடுமையாக வாதாடி அதிக அளவில் நிதியைப் பெற முடியவில்லையா? அதிக நிதி கேட்டு, உங்கள் முதலமைச்சர் எத்தனை முறை டெலலிக்குப் படைஎடுத்தார்? சென்னையிலே உங்கள் முதல்வர் வீட்டிற்கே பிரதமர் வந்தாரே, நிதி அமைச்சர் வந்தாரே, பீகார், உத்தரப் பிரதேசம் மாநிலங்களைப் போல எங்களுக்கும் அதிக அளவில் நிதி வேண்டுமென்று நெருக்கடி கொடுக்கும் வகையில், கடுமையாகச் சொலலியிருக்கலாம் அல்லவா? மத்திய நிதி அமைச்சரை, தமிழக நிதியமைச்சர் எத்தனை முறை சென்று சந்தித்தார்? இதுதான் எதிரக்கட்சிகளின் கேள்வி.
மேலும் நிதியமைச்சர், “மூலதனப்பணிகளுக்கு நிதி போதுமானதாக இல்லாத காரணத்தால்தான், நாம் கடன் பெற வேண்டியுள்ளது. நமது மாநிலம் சந்திக்கின்ற இதுபோன்ற நிலை, பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு இல்லை. அவற்றுக்கு அதிக அளவில், மத்திய அரசால் நிதி வழங்கப்படுகிறது. இதனால் அந்த மாநிலங்களில் வருவாய் உபரியும் இருக்கிறது. அவை அதிக வரியையும் விதிப்பதில்லை” என்று சொல்லி யிருக்கிறார். பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசால் அதிக அளவில் நிதி வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கூறுவது, ஒப்புதல் வாக்குமூுலமாகவே உள்ளது. பீகார் ஆட்சியும், உ.பி. ஆட்சியும் மத்திய பா.ஜ.க.வுக்கு எதிரானவை;
எதிரான ஆட்சிகள் அதிக நிதியைப் பெற முடிகிறபோது, மத்திய பா.ஜ.க.வுக்கு நேசமான ஆட்சியினால் அதிக நிதியைப் பெற முடியாமல் போனது ஏன்? மத்திய அரசுடன் கடுமையாக வாதாடி அதிக அளவில் நிதியைப் பெற முடியவில்லையா? அதிக நிதி கேட்டு, உங்கள் முதலமைச்சர் எத்தனைமுறை டெல்லிக்குப் படை எடுத்தார்? சென்னையிலே உங்கள் முதல்வர் வீட்டிற்கே பிரதமர் வந்தாரே, நிதி அமைச்சர் வந்தாரே, பீகார், உத்தரப் பிரதேசம் மாநிலங்களைப் போல எங்களுக்கும் அதிக அளவில் நிதி வேண்டுமென்று நெருக்கடி கொடுக்கும் வகையில், கடுமையாகச் சொல்லியிருக்கலாம் அல்லவா? மத்திய நிதிஅமைச்சரை, தமிழக நிதியமைச்சர் எத்தனை முறை சென்று சந்தித்தார்? இதுதான் எதிர்க் கட்சிகளின் கேள்வி. இதற்குத்தான் நிதியமைச்சர் பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, பரிதாபமாக அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதற்காக அலல! “பலமுறை படை எடுத்தோம்; பாரதிரப் போராடினோம்; பலமாக வாதாடினோம்; நிதியைப் பெற்றோம்!” என்ற பதிலைத்தான் எதிர்க் கட்சிகள் எதிர்பாக்கின்றன. நிதியமைச்சரின் பதில் உரை, தி.மு. கழகத்தைச் சேர்ந்த தம்பி பி.டி.ஆர்.பி. தியாகராஜன் அவர்களின் விரிவான, ஆய்வு ரீதியான உரைக்கு அளிக்கப்பட்ட பதிலாகத்தான் தெரிந்தது. நிதிநிலை அறிக்கை பற்றி அனைத்துக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த குறைபாடுகள் பற்றியோ, குறிப்பாக “தி இந்து”, “டைம்ஸ் ஆப் இந்தியா” போன்ற ஆங்கில நாளேடுகளில் வந்த குறைபாடுகள் பற்றியோ எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. குறைபாடுகளுக்கு “உரிய பதில் தெரிந்தால் சொல்லியிருக்க மாட்டேனா? தெரியாத காரணத்தால் தானே, முதல் அமைச்சாதான் எல்லாம் என்று பேசினேன்” என்று அமைச்சர் பதிலாகக் கூறு வாரானால்; அது “சட்டியில் இருந்தால்தானே அகப்பையில வரும்” என்ற பழமொழியைப் போன்றதுதான!
மு.க. 4-8-2016
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 54 PDF ↗