உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 54

தொகுதி 54 · கடிதம் 4031

காவல் துறையினரைய் பாதுகாக்க ஜெயா கண்ணசைப்பாரா?

உடன்பிறப்பே,

சட்டம், ஒழுங்கு, அமைதியைப் பாதுகாப்பதில் அ.தி.மு.க. அரசு அக்கறையோடு இருக்கிறது என்றும், தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது என்றும், முதலமைச்சர் ஜெயலலிதாவும், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டாலும், தி.மு. கழக ஆட்சிக் காலத்திலதான் சட்டம் ஒழுங்கை இடையறாது பேணிக்காப்பதிலும், சமுதாய நல்லிணக்கம் மற்றும் நல்லுறவு போற்றி நலிந்த பிரிவினர், மகளிர் ஆகியோரின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், தமிழகக் காவல் துறை புகழ்பெற்று விளங்கியது என்று சொன்னால் அது மிகையல்ல; நடுநிலையாளர்களும் ஏற்றுக்கொள்வா. மக்கள் பணிக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு கடமையாற்றி வரும் காவல் துறை அலுவலர்களுக்காக, அவர்கள் சலிப்பின்றி உற்சாகத்துடன் உழைத்திட வேண்டுமெனும் நோக்கில், தி.மு. கழக அரசு காலத்தில் நிறைவேற்றிய நலத் திட்டங்களும், அளித்துள்ள சலுகைகளும் பலப் பல.

காவல் துறையினரின் கஷ்ட நஷ்டங்களை எதிர்க்கட்சியாக இருந்தபோதே, நான் எழுதிய நாடகத்தில் இடம்பெறச் செயது, பொறுப்புக்கு வந்தவுடனேயே அதாவது 1969ஆம் ஆண்டில் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன், தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற திரு.ஆர்.ஏ. கோபாலசாமி, ஐ.சி.எஸ். அவர்கள் தலைமையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, காவல் துறையினரின் நிலைமைகளை ஆராயந்து பரிந்துரைக்க ஒரு கமிஷனை நியமித்தேன் என்பதைக் காவல் துறை நண்பர்களே நன்கறிவார்கள். அந்தக் கமிஷன் ஆய்வு செய்து

133 பரிந்துரைகளை செய்தபோது, அதில் 115 பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தியவனும் நான் தான.

1976 முதல் 1989வரை திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியாக இல்லை; அப்போது காவல் துறையினரின் சிரமங்களைப் பரிசீலிக்க எந்தக் கமிஷனும் போடப்படவில்லை. 1989ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகத் தி.மு. கழகம் ஆட்சி அமைத்த பிறகுதான், முன்னாள் தலைமைச் செயலாளர், பி. சபாநாயகம், ஐ.ஏ.எஸ்., அவர்களுடைய தலைமையில் இரண்டாவது போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு, அவர்கள் தந்த 112 பரிந்துரைகளில் 102 பரிந்துரைகள் மீது முடிவெடுத்து 1991ஆம் ஆண்டு ஜனவரியில் ஆட்சி கலைக்கப்படுவதற்கு முன்பு TI பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினேன் என்பது வரலாறு.

மீண்டும் 2006ஆம் ஆண்டு கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகுதான், ஓய்வு பெற்ற உள்துறைச் செயலாளர் பூரணலிங்கம், ஐ.ஏ.எஸ்., அவர்கள் தலைமையில் மூன்றாவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் பரிந்துரைத்த 444 பரிந்துரைகளில் 278 பரிந்துரைகள் அரசினால் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1969ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு முதல்வரின் காவல் பதக்கம் - அண்ணா பதக்கம், பாராட்டத்தக்க வகையில் பணியின்பால் ஈடுபாடுகொண்ட காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கள்ளச் சாராயத்தை மிகச் சீரிய முறையில் தடுத்துச் சாதனை புரியும் ஆயவாளா மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு 1996ஆம் ஆண்டு முதல் உத்தமர் காந்தி பதக்கமும் (காந்தியடிகள் காவல் விருது) பண முடிப்பும் கொடுக்கப்படுகிறது.

தி.மு. கழக ஆட்சியில் காவல் துறையினருக்குச் செய்யப்பட்ட சாதனைகளில் ஒரு சிலதான் இவை. ஆனால் இப்போது காவலாகளின் நிலை என்ன? 27-7-2016 தேதிய “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு “Tamil Nadu Police Lowest Paid in South, Telangana Tops List -- Many Cops Forced to Work 7 Days a Week” என்ற தலைப்பில் ஒரு நீண்ட செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் சில முக்கியமான பகுதிகள் வருமாறு:-

“Doubts about morale of the TN Police being low may not be unfounded. From Constables to Deputy Superintendents of Police, they are among the lowest paid in the country. Bureau of Police Research and Development statistics show ITN Police are the most poorly paid among the Southern States” (தமிழகக் காவல் துறையினரின் நோக்கும் போக்கும் தாழ்ந்து போய் விட்டதோ என்ற சந்தேகத்திற்கு அடிப்படை இல்லாமல் இல்லை. காவலர் முதல் துணைக் கண்காணிப்பாளாவரை நாட்டிலேயே மிகக் குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர். தென்னகத்தில், தமிழ்நாட்டில் தான் காவல் துறையினர் மிகக் குறைந்த ஊதியம் பெறுகின்றனர் என்று அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன)

காவல் துறையினரின் கஷ்ட நஷ்டங்களை எதிக் கட்சியாக இருந்தபோதே, நான் எழுதிய நாடகத்தில் இடம் பெறச் செய்து, பொறுப்புக்கு வந்தவுடனேயே அதாவது 1969ஆம் ஆண்டில் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன், தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற திரு. ஆர.ஏ. கோபாலசாமி, ஐ.சி.எஸ்., அவர்கள் தலைமையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, காவல் துறையினரின் நிலைமைகளை ஆராயந்து பரிந்துரைக்க ஒரு கமிஷனை நியமிததேன் என்பதைக் காவல் துறை

நண்பர்களே நன்கறிவாரகள்.

காவலர் ஒருவரின் மாத ஊதியத்தை எடுத்துக்கொண்டால், தெலுங்கானா மாநிலத்தில் காவலர் ஒருவரின் தொடக்க ஊதியம் 16,400 ரூபாய். கர்நாடகாவில் தொடக்க ஊதியம் 11,600 ரூபாய். கேரளாவில் 10,480 ரூபாய். ஆந்திராவில் 8,440 ரூபாய். ஆனால் தமிழ்நாட்டிலோ காவலர் ஒருவரின் தொடக்க ஊதியம் 5,200 ரூபாய்தான். தெலுங்கானா மாநிலத்தில் காவலர் ஒருவர் வாங்கும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே தமிழகத்திலே ஊதியமாகக் கிடைக்கிறது.

சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மாத ஊதியத்தை எடுத்துக்கொண்டால் தெலுங்கானா மாநிலத்தில் 28,940 ரூபாய் - கர்நாடகாவில் 20,000 ரூபாய் - கேரளாவில் 18,980 ரூபாய் - ஆந்திராவில் 14,860 ரூபாய் - தமிழ்நாட்டில் 9,300 ரூபாய்தான்.

இன்ஸ்பெக்டர் ஒருவரின் மாத ஊதியத்தை எடுத்துக் கொண்டால், தெலுங்கானா மாநிலத்தில் 31,460 ரூபாய் - கர்நாடகாவில் 21,600 ரூபாய் - கேரளாவில் 20,740 ரூபாய் - ஆந்திராவில் 16,150 ரூபாய் - தமிழ்நாட்டில் 9,300 ரூபாய்தான்.

டி.எஸ்.பி. ஒருவரின் மாத ஊதியத்தை எடுத்துக் கொண்டால், தெலுங்கானா மாநிலத்தில் 40,270 ரூபாய் - கர்நாடகாவில் 28,100 ரூபாய் - கேரளாவில் 24,040 ரூபாய் - ஆந்திராவில் 20,680 ரூபாய் - தமிழ்நாட்டில் 15,600 ரூபாய்தான்.

தமிழக காவலர் ஒருவரிடம் வேலைப்பளு பற்றி கேட்டபோது, “காவலர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றக் கூடாது என்று விதிகள் இருந்தபோதிலும், காவலாகளில் பலா வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரம் பணியாற்றுகிறார்கள். முதல் நாள் இரவு நீண்ட நேரத்திற்குப் பிறகு வீடு திரும்பினாலும், மறுநாள் காலை 7 மணி அணிவகுப்புக்கு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். காவல் துறையில் இளைஞர் படையில் கடந்த ஆண்டு பணியிலே சேர்ந்த 11,000 பேரில், 2674 பேர் விலகி விட்டார்கள், 8,326 பேர்தான் காவலர் பயிற்சி பெறுகிறார்கள்” ( ஆயிரக்கணக்கானோர் விலகியதற்குக் காரணம் இடையறாத பணியும், குறைவான சம்பளமும்தான்) என்றெலலாம் பதிலளித்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறும்போது, காவல் துறையினருக்கு இந்த அளவுக்குக் குறைந்த ஊதியம் அளிப்பதால்தான் அவர்கள் லஞ்சம் வாங்கத் தள்ளப்படுகிறார்கள். காவலர் ஒருவரின் வீட்டு வாடகைப் படி 840 ரூபாய்தான் என்கிறபோது, சென்னையில் வாடகைக்கு எப்படி ஒரு வீட்டை அவரால் பிடிக்க முடியும் என்றும் கேட்டிருக்கிறார்.

மகளி காவலர் ஒருவர் கூறும்போது 2009ஆம் ஆண்டு பணியிலே சேோந்தபோது காவல் துறையில் இணைந்தது பற்றி மனத்தளவில் ஒரு பெருமை இருந்ததாகவும், அது தற்போது அழிந்து விட்டது என்றும் வருத்தப்பட்டிருக்கிறார். இதுதான் தமிழகக் காவல் துறையினரின் நிலைமை.

தமிழகத்திலேதான் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக மக்கள் போராட வேண்டிய நிலைமை இந்த ஆட்சியிலே உள்ளது. போராட்டங்களா? அ.தி.மு.க. ஆட்சியிலா?

இல்லவே இல்லை என்று முதலமைச்சர் இப்போது மறுக்கக கூடும். ஆனால் 22-9-2015 அன்று காவல்துறை மானிய விவாதத்திற்கு பதில் கூறிய முதலமைச்சர் ஜெயலலிதாவே, தன்னுடைய உரையில், “உண்மை நிலைமை என்ன? காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கூடத்தினர் மேற்கொண்ட ஆய்வின்படி தமிழ்நாட்டில்தான் அதிகப்படியான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன எனத் தெரிய வருகிறது. இது நாட்டின் ஒட்டுமொத்த எண்ணிக்கையிலே 25 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். அதாவது, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் 25 சதவிகிதம், தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்றுள்ளன” என்று

தாங்கவியலாப் பணிச்சுமை, மிகக் குறைவான சம்பளம், குடும்பத்தாரின் தேவைகள் - குழந்தைகளின் கலவி - நாளும் அதிகரித்துவரும் விலைவாசி போன்றவறறினால ஏற்படும் நெருக்கடி - மன அழுத்தம், மேலதிகாரிகள் நடத்தும் முறையால் உண்டாகும் தன்மானச் சிதைவு ஆகியவற்றால் தமிழகக் காவல் துறையினர் குறிப்பாக அடுத்தடுத்துச் சாதாரண நிலையில், காவலர் முதல் துணைக்கண்காணிப்பாளர் வரை பணியாற்றுவோ, ஒவ்வொருநாளும் கடக்க வேண்டிய பிரச்சினைகளும், அனுபவித்துத் தீர வேண்டிய அவலங்களும் எண்ணிலடங்காதவை. பாதிக்கப்படும் பொதுமக்கள், ஆதிக்கம் செலுத்தும் மேலதிகாரிகள், இனனலுறும் குடும்பத்தினர் என்ற முக்கோணத்திற்குள் சிக்கித் தவித்திடும் சாதாரண நிலைக் காவல் துறையினரை அரசு, காக்கும் கரங்களாக இருந்து அரவணைத்து, கடமையாற்றிட அனுமதித்திட வேண்டும்.

மேலும் இந்த ஆட்சியில் காவல் துறையில் உள்ள காலிப் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. காவல் துறையினரின் மொத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் 1 இலட்சத்து 21 ஆயிரத்து 14 பேர் என்றால், அதிலே 19 ஆயிரத்து 157 இடங்கள் காலியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் காலிப் பணி இடங்களை நிரப்பவேண்டுமென்று சென்னை

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியே உத்தரவிட்ட போதிலும் அந்த இடங்கள் நிரப்பப்படவில்லை. காவல் துறை அதிகாரிகள் வீடுகளிலும், ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளிலேகூட “ஆரடாலி” என்ற பெயரால் காவல் துறையினர் பணியாற்றும் போக்கு இன்னமும் தொடருகிறது.

இப்படி இரண்டு பேர் செய்ய வேண்டிய பணியை ஒருவரே ஏற்றிட வேண்டிய தாங்கவியலாப் பணிச்சுமை, மிகக்குறைவான சம்பளம், குடும்பத்தாரின் தேவைகள் - குழந்தைகளின் கல்வி - நாளும் அதிகரித்து வரும் விலைவாசி போன்றவற்றினால் ஏற்படும் நெருக்கடி - மன அழுத்தம், மேலதிகாரிகள் நடத்தும் முறையால் உண்டாகும் தன்மானச் சிதைவு ஆகியவற்றால் தமிழகக் காவல் துறையினர் குறிப்பாக அடுத்தடுத்துச் சாதாரண நிலையில், காவலர் முதல் துணைக் கண்காணிப்பாளர்வரை பணியாற்றுவோர், ஒவ்வொரு நாளும் கடக்க வேண்டிய பிரச்சினைகளும், அனுபவித்துத் தீர வேண்டிய அவலங்களும் எண்ணிலடங்காதவை. பாதிக்கப்படும் பொதுமக்கள், ஆதிக்கம் செலுத்தும் மேலதிகாரிகள், இன்னலுறும் குடும்பத்தினர் என்ற முக்கோணத்திற்குள் சிக்கித் தவித்திடும் சாதாரண நிலைக் காவல் துறையினரை அரசு, காக்கும் கரங்களாக இருந்து அரவணைத்து, கடமையாற்றிட அனுமதித்திட வேண்டும். தமிழகக் காவலதுறையைக் கையிலே வைத்திருக்கும் ஜெயலலிதா, பிரச்சினைகளிலிருந்து காவல் துறையினரை மீட்டு,

அவர்களைப் பாதுகாத்திட முன்வருவாரா? அனபளள, மு.க. 29-f-2016

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 54 PDF ↗