உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 54

தொகுதி 54 · கடிதம் 4030

மெட்ரோ ரெயில் வந்தாச்சு: மோனோ ரயில் என்னாச்சு?

உடன்பிறப்பே,

சென்னையிலிருந்து 29 வீரர்களுடன் அந்தமான் சென்ற விமானம் மாயமாகியுள்ளது. அந்த 29 வீரர்களில் 12 பேர், தமிழர்கள். அந்த 29 பேருடைய குடும்பமும், மற்றும் அவர்களின் உற்றார் உறவினர்களும் அழுது புலம்பிக்கிடக்கிறார்கள். அந்த விமானத்தைத் தேடும் பணியிலே 17 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. அந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திர மாநிலத்தைச் சோந்தவர்களின் குடும்பத்தினரை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது புகைப்படமாகவே நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. ஆனால், நேற்றையதினம் நம்முடைய முதல் அமைச்சர் ஜெயலலிதா, வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்-விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ ரெயிலின் முதல் கட்ட நீட்டிப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளார். அந்த விழாவிலே பேசும்போதுதான், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வித்திட்டது அ.தி.மு.க. அரசுதான் என்ற பழைய பொய்யையே அவர் அங்கே மீண்டும் கூறியுள்ளார். ஒரு பொய்யையே திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் எனற கோயபலஸ் தத்துவத்தைப் பின்பற்றுகிறார். மெட்ரோ ரெயில் திட்டத்தைச் செயலுக்குக் கொண்டு வந்தது யார் என்று இங்கேயுள்ள சிறு பிள்ளைகளைக் கேட்டால் கூட, மெட்ரோ என்றால் தி.மு.க. ஆட்சி என்றும், மோனோ என்றால் அ.தி.மு.க. ஆட்சி என்றும் கூறுவார்கள். பல முறை நாம் இது பற்றி விளக்கியும்கூட, ஜெயலலிதா, மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வித்திட்டது அ.தி.மு.க. அரசுதான் என்ற பொய்யை எப்படியாவது பல முறை கூறினால் அது உண்மையாகி விடும் என்றே நினைத்துக் கொண்டு பேசுகிறார்.

சென்னையில் “மெட்ரோ ரெயில்” சோதனை ஓட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். 14,600 கோடி ரூபாய்க்கான திட்டம் அது. அந்தத் திட்டத்தைத் தொடங்கி © வைத்த முதலமைச்சர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அன்றாடம் தலைமைச் செயலகத்திலிருந்து “ காணொலிக் காட்சிகள்” மூலமாகப் பல திட்டங்களைத் தொடங்கிவைப்பதைப் போல இலலாமல், இந்தத் திட்டத்திற்கு நேரிலே வந்து தொடங்கிவைத்தாா. அந்தத் திட்டத்தைப் பற்றி அதனைத் தொடங்கிவைக்கும் விழாவிலே பேசிட வேண்டுமென்றால், அந்தத் திட்டம் எந்த ஆட்சியில், எந்த ஆண்டு தொடங்கப்பட்டது எனபதைப் பற்றியெலலாம் கூற வேண்டுமல்லவா? அதனால் அங்கே விழாப் பேருரை எதுவும் இல்லாமல் கொடி அசைத்து, மெட்ரோ ரெயிலின் சோதனையோட்டத்தைத் தொடங்கிவைத்து விட்டார். அவர் அங்கே உரையாற்றாவிட்டாலும், அந்தத் திட்டத்தைப் பற்றிய குறிப்பு தமிழக அரசினால் தரப்பட்டது. அதிலே அந்தத் திட்டத்தைப் பற்றிய குறிப்புகள் விவரிக்கப்பட்ட போதிலும், கவனமாக அது எந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதை விட்டு விட்டார்கள். அந்தத் திட்டம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், நான் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்ட திட்டம்.

சென்னையில் “மெட்ரோ ரெயில்” திட்டத்தைச் செயல்படுத்த தி.மு. கழகம் 2006ஆம் ஆண்டு எனது தலைமையில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தமிழக அமைச்சரவையில் அப்போதுதான் முடிவெடுக்கப்பட்டது. விரைவான, நம்பத்தக்க, வசதியான, திறன்மிக்க, நவீன மற்றும் சிக்கனமான பொதுப்போக்குவரத்து அமைப்பாகவும், பெருகிவரும் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஒரு நீண்டகாலத் தீர்வாகவும் அமைந்த இத்திட்டம் குறித்து, ஒரு விரிவான திட்ட அறிக்கையினைத் தயாரிக்கக் கழக அரசு ஆணையிட்டதைத் தொடர்ந்து, இந்தப் பணி டெல்லி மெட்ரோ இரயில் கழகத்திடம் அளிக்கப்பட்டது. இத்திட்டம் என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் “சிறப்பு முயற்சித்” திட்டமாக அறி விக்கப்பட்டது. அதன் பின்னர் இத்திட்டம் துணை முதலமைச்சராக இருந்த தம்பி ஸ்டாலின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டது. விரிவான திட்ட அறிக்கை 1-11-2007இல் கிடைக்கப்பெற்று 7-11-2007

தி.மு. கழக ஆட்சியிலேதான். மத்திய அரசு திட்டச் செலவில் 15 சதவீதத்தை பங்குத் தொகையாகவும், 5 சதவீதத்தைக் கடனாகவும் வழங்கும். மாநில அரசின் பங்கு 15 சதவிகிதம் மற்றும் 5.£8 சதவிகித சார்நிலைக் கடனாகவும் வழங்கும். பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, 28-1-2009 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதுவும் தி.மு. கழக ஆட்சியிலேதான். இந்த மெட்ரோ ரெயில் திட்டம் 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித் தடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடமும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரெயிலானது 2 வழித் தடங்களிலும், செல்வதற்கு ஒன்றும், வருவதற்கு ஒன்றுமாக இரண்டு பாதைகள் நவீன முறையில் அமைக்கப்படுகின்றன. இதையெல்லாம் அப்படியே மூடி மறைத்துவிட்டு, அ.தி.மு.க. ஆட்சியிலேதான் மெட்ரோ திட்டத்திற்கு வித்திடப்பட்டது

என்றால் யார் அதனை நம்புவார்கள்?

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இவ்வாறு முனைப்போடு முயற்சித்துத் தொடங்கப்பட்ட திட்டம்தான் “மெட்ரோ ரயில்” திட்டம். ஆனால் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் இதைப் பற்றி என்னவெல்லாம் பேசினார் தெரியுமா?

2011 ஆம் ஆண்டில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அ.தி.மு.க. அரசு 3-6-2011 அன்று படித்த ஆளுநர் அறிக்கையிலேயே, “சென்னை மாநகருக்குத் தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட மோனோ இரயில் திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக 111 கிலோ மீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக 300 கிலோ மீட்டர் வரை விரிவுபடுத்தப்படும். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க “மோனோ ரெயில்” திட்டம் செயலபடுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்களே

தவிர, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்கப்போவதாகக் கூறவில்லை.

அதற்குப் பிறகு 4-8-2011 அன்று படித்த நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “மோனோ ரெயில்” திட்டத்தை விரைவில் தொடங்குவதற்குத் தேவையான நிதி ஆதாரம் இந்த ஆண்டிலேயே கண்டறியப்படும் என்றார்.

கண்டறிந்தார்களா?

மீண்டும் 30-1-2012 அன்று ஆளுநர் உரையில், “மோனோ ரெயில் திட்டத்தைச்” செயல்படுத்த ஒப்பந்தப் புள்ளி கோரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவது குறித்து

மகிழ்சசியடைகிறேன்” என்று சொன்னார்கள்.

அதன் பிறகு 26-3-2012 அன்று படித்த நிதிநிலை அறிக்கையில், மோனோ ரெயில் 4 வழித் தடங்களில் இயங்கும் எனறும், எந்தெந்த வழித் தடங்கள் என்றும் விரிவாகப் படித்தார்கள்.

அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா பேரவையில் ஒரு முறை பேசும்போது, “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மெட்ரோ ரெயில் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக அறிவித் திருக்கிறார்கள். சென்னை மாநகருக்கு எந்த வகையிலும் ஒத்துவராத, பொருந்தாத மெட்ரோ ரெயில் திட்டத்தைக் கொண்டு வரப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மக்கள் பணத்தை ஏன் இப்படி வீணடிக்கிறீர்கள். மெட்ரோ ரெயில் போன்ற உருப்படாத திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாமென்று தி.மு.க. அரசுக்கு வலியுறுத்தக் கேட்டுக் கொள்கிறேன்” என்றே குறிப்பிட்டதாக “முகநூலில்” ஒரு செய்திவந்துள்ளது.

இன்னும் சொல்ல வேண்டுமேயானால். அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா பேரவையில் ஒரு முறை பேசும்போது, “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மெட்ரோ ரெயில் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக அறிவித் திருக்கிறார்கள். சென்னை மாநகருக்கு எந்த வகையிலும் ஒத்து வராத, பொருந்தாத மெட்ரோ ரெயில் திட்டத்தைக் கொண்டுவரப்

போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மக்கள் பணத்தை ஏன் இப்படி வீணடிக்கிறீர்கள். மெட்ரோ ரெயில் போன்ற உருப்படாத திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாமென்று தி.மு.க. அரசுக்கு வலியுறுத்தக் கேட்டுக்கொள்கிறேன்” என்றே குறிப்பிட்டதாக “முகநூலில்” ஒரு செய்தி வந்துள்ளது.

16-6-2012 தேதிய “தினமணி”யில் 34 இடங்களில் மோனோ ரயில் நிலையங்கள் என்றும், அமைச்சர் தலைமையில் 2 மணி நேரத்திற்குமேல் ஆலோசனை என்றும் செய்தி வந்தது. மொத்தத்தில் “மோனோ” ரெயில் திட்டமே, தி.மு. கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட “மெட்ரோ” ரெயில் திட்டத்தினை ஏற்கக் கூடாது என்ற ஜெயலலிதாவின் வழக்கமான காழப்புணாச்சி காரணமாக அறிவிக்கப்பட்ட போட்டித் திட்டம்.

“மோனோ” ரெயில் திட்டத்தைவிட “மெட்ரோ” திட்டம்தான் சிறந்தது என்று ஆதாரங்களோடு மத்திய அதிகாரி ஸ்ரீதரன் போன்றவர்கள், வல்லுநர்கள் எல்லாம், இரண்டு திட்டங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிக்கையாக விடுத்தார்களே, அது கூட உண்மை இல்லையா?

சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்தையே இடையிலே அ.தி.மு.க. அரசு நிறுத்திவைத்தது. அப்போதுதான் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முதன்மை ஆலோசகரான திரு. இ.ஸரீதரன் 11-4-2012 அன்று சென்னையில் அளித்த பேட்டியில், “சென்னை மெட்ரோரயில திட்டத்தின் இரண்டாவது கட்டடத்தைக் கைவிட்டதன் மூலம் தமிழக அரசு மிக மோசமான தவறைச் செய்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு நான் இது குறித்துத் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை அரசிடமிருந்து எந்தப்பதிலும் வரவில்லை. மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்தைக் கைவிடும் தமிழக அரசின் முடிவு வருத்தம் அளிக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் பணிகளைத் தொழில் ரீதியில் சிறப்பாகச் செய்து வருகிறது. விரிவாக்கத்தின் மதிப்பை அவர்கள் உணாந்துள்ளதால இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் நடைபெற வேண்டுமென்றால், அது குறித்த ஆய்வுகள் இப்போதே

மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த ஆய்வுப் பணி 18 மாதங்களை எடுத்துக்கொள்ளும். மத்திய அரசு, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழக அரசு ஆகியவற்றின் அனுமதிகளைப் பெற மேலும் 18 மாதங்கள் ஆகும். இப்படி மூன்றாண்டுகளுக்கு மேலாகும். முதல்கட்டத்துக்கும், இரண்டாவது கட்டத்துக்கும் இடையில் இந்த அளவிற்கு இடைவெளி விழுவது நல்லதல்ல” என்றெல்லாம் கூறியது, இன்றைக்கும் பழைய நாளேடுகளில் இருக்கிறதா இல்லையா? இதுதான் மெட்ரோ திட்டத்திற்கு வித்திட்டதின் அடையாளமா?

இந்த “மோனோ?” திட்டம் பற்றி 3-6-2014 அன்று “டைம்ஸ் ஆப் இந்தியா” இதழ், “ஜெயலலிதா மிகவும் ஆர்வத்தோடு செயல்படுத்த விரும்பும் “மோனோ?” ரெயில் திட்டம் நகர மறுக்கிறது, இதற்காக ஒப்பந்தப் புள்ளி அளிப்பதற்காகக் குறிக்கப்பட்டிருந்த காலம் மே மாதம் இறுதியாகும். அதற்குப் பின்னரும்கூட ஒப்பந்ததாரர்கள் அந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை” என்றெல்லாம் எழுதியிருக்கிற து.

சேது சமுத்திரத் திட்டத்தையும், மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தையும், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் முடக்கி வைத்திருப்பதைப்போல, இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தின் விரிவாக்கத்தையும் முடக்கி வைத்தார்கள். அவர்கள்தான் தற்போது மெட்ரோ ரெயில் திடடத்தின சோதனை ஓட்டத்தைத் தொடங்கிவைத்தும், தற்போது விரிவாக்கத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், தாங்களதான அந்தத் திட்டத்திற்கே காரணகர்த்தா என்பதைப் போலப் பெருமை தேடிக்கொள்ள முயன்றிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் யாருடைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்ற உண்மை நன்றாகவே தெரியும்!

உண்மையில் திருவொற்றியூருக்கு மெட்ரோ ரெயில் திட்டம் எந்த ஆட்சியிலே அறிவிக்கப்பட்டது தெரியுமா? 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.

கழக ஆட்சியில் ஆளுநர் உரை 7-1-2011 அன்று திரு. சாஜித் சிங்பர்னாலா அவர்களால் பேரவையிலே படிக்கப்பட்டது.

அந்த உரையில் பத்தி 21 இல, “சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு வழி செய்ய ரூபாய் 14,600 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜப்பான் நாட்டு நிதி உதவியுடனும், மத்திய அரசு நிதி உதவியுடனும் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் அனுமதிக்கப்பட்டு மிக விரைவாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த மெட்ரோ ரயில் இணைப்பு ரூபாய் 3001 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூர்வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தே

உண்மையைத் தெரிந்துகொள்ளலாம்.

உண்மையில் திருவொற்றியூருக்கு மெட்ரோ ரெயில் திட்டம் எந்த ஆட்சியிலே அறிவிக்கப்பட்டது தெரியுமா? 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக தி.மு. கழக ஆட்சியில் ஆளுநர் உரை 7-1-2011 அன்று திரு. சாஜித் சிங் பர்னாலா அவர்களால் பேரவையிலே படிக் கப்பட்டது. அந்த உரையில் பத்தி 21இல, “சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துப் பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு வழி செய்ய ரூபாய் 14,600 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐப்பான நாட்டு நிதி உதவியுடனும், மத்திய அரசு நிதி உதவியுடனும் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் அனுமதிக்கப்பட்டு மிக விரைவாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த மெட்ரோ ரயில் இணைப்பு ரூபாய் 3001 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூர் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருப்பதிவிருந்தே உண்மையைத் தெரிந்து

கொள்ளலாம்.

முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே மெட்ரோ ரெயில் திட்டம் கூடாது என்றும், மோனோ ரெயில் திட்டத்தைத்தான் நடைமுறைப்படுத்தப் போவதாகவும் கூறியது உண்மைதான். ஆனால் பின்னர் நிலைமையை உணாந்துகொண்டு,

ஆளுநார உரையிலேயே, வண்ணாரப்பேட்டையிலிருநது

திருவொற்றியூருக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார்கள்.

“மெட்ரோ” திட்டத்தைத் தொடக்கத்தில் வரவேற்காத ஜெயலலிதா பின்னர் பிரதமரைச் சந்தித்த நேரத்தில், மெட்ரோ ரெயிலின் 76 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரண்டாம்பாகப் பணிகளை நிறைவேற்ற 36 ஆயிரத்து 100 கோடி தேவைப்படும் நிலையில், மத்திய அரசின் முழு உதவி நாடப்படுகிறது என்று தெரிவித்தது உண்மைதான். அதை நான் மறுக்கவே இலலை. தி.மு. கழக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுத் தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில்தான் வித்திடப்பட்டது என்று கூறுவது, யாரோ பெற்ற பிள்ளைக்கு உரிமை கொண்டாடுவதைப் போல என்பதுதான் உண்மை. முதலில் மெட்ரோ திட்டத்தை ஏற்காத ஜெயலலிதா, பின்னர் வேறு வழியின்றி அதனை ஏற்றுக் கொண்டார் என்பதும் உண்மை.

அன்புள்ள, மு.க. 29-/-2016

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 54 PDF ↗