தொகுதி 54 · கடிதம் 4028
தமிழக அரசின் நிதிநிலை ௮றிக்கை காகிதப் பூ: கானல் நீர்
2016-07-23
உடன்பிறப்பே,
நிதிநிலை அறிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும், பேரவையில் வைக்கப்பட்டவுடன் அதைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் கருத்துச் சொல்வது என்பது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம். இந்த ஆண்டும் அந்தப் பழக்கத்தையொட்டிப் பலரும் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் தப்பித் தவறிக் கூட யாரும் பாராட்டியதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பேரவைத் தலைவரை விளித்து விட்டு, நிதி நிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்குவார்கள். தேவையான ஒருசில இடங்களில் ஆங்காங்கு முதல்வரைப் பாராட்டியும் ஒருசில வார்த்தைகள் இடம் பெறும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக, நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்கு வதற்கு முன்பு, முதலமைச்சரைப் புகழ்ந்து பாராட்டுரை அல்ல, பாராட்டுப் புராணமே பாடினார் என்றால் மிகையாகாது. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பது பழமொழி. பன்னீரின் பாராட்டுப் புராணமும் அவையடக்கமின்றி எலலை மீறியதாகும். நிதிநிலை அறிக்கையிலேயே இடம் பெறாத ஒன்றைத் தயாரிக்கச் செய்து எழுதி எடுத்துக்கொண்டு வந்து, அவையிலே படித்தது உண்மையிலேயே உள்ளத்துக்குள்ளிலிருந்து பாராட்டியதாகத் தெரியவில்லை.
நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரையில், 2014- 2015ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த போது வருவாய்க் கணக்கில் வரவு 1,27,389 கோடி ரூபாய் எனறும்; வருவாயக் கணக்கில் செலவு 1,27,100 ரூபாய் எனறும்,
எனவே 289 கோடி ரூபாய் வருவாய்க் கணக்கிலே உபரி என்றும் சொன்னார்கள். ஆனால் இப்போது என்ன நிலை?
இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக, நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்பு, முதலமைச்சரைப் புகழ்ந்து பாராட்டுரை அல்ல, பாராட்டுப் புராணமே பாடினார் என்றால் மிகையாகாது. “ அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பது பழமொழி. பன்னீரின் பாராட்டுப் புராணமும் அவையடக்க மின்றி எல்லை மீறியதாகும். நிதிநிலை அறிக்கையிலேயே இடம் பெறாத ஒன்றைத் தயாரிக்கச் செய்து எழுதி எடுத்துக் கொண்டு வந்து, அவையிலே படித்தது உண்மையிலேயே உளளத்துக்குள்ளிலிருந்து பாராட்டியதாகத தெரியவில்லை.
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 9,154.78 கோடி ரூபாயாக இருக்கும் என்று இந்த ஆண்டு பிப்ரவரி திங்களில் சொன்னார்கள். இந்த வருவாய்ப் பற்றாக்குறை, இந்த சில மாதங்களில் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது தெரியுமா? 2016-2017ஆம் ஆண்டு திருத்தவரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வருவாய்ப் பற்றாக் குறை 15,854.47 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு சில மாதங்களிலேயே இந்த வருவாய்ப் பற்றாக் குறை 6,699.69 கோடி ரூபாய் அதிகமாகியுள்ளது.
அதுபோலவே, கடந்த பெப்ரவரி மாதத்தில், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 2016-2017ஆம் ஆண்டில் நிதிப் பறறாக்குறை ரூ. 36, [40.11 கோடியாக இருக்குமென்று மதிப்பிடப் பட்டது. ஆனால் திருத்தப்பட்ட இன்றைய நிதிநிலை அறிக்கையில் 2016-2017ஆம் ஆண்டிலஐ நிதிப் பற்றாக்குறை 40,533.84 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.92 சதவிகிதமாக இருந்தது தற்போது 2.96 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை அளவு 3 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டுமென்று வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது நமது மாநிலத்தின்
நிதிப்பற்றாக்குறையின் அளவு 2.96 சதவிகிதம் என்றால் வரையறுக்கப்பட்ட அளவை விட 0.04 சதவிகிதம்தான் குறைவு. இந்த அளவு அடுத்த ஆண்டு, அதாவது 2017-2018 ஆம் ஆண்டில் 3.34 சதவீதமாக இருக்குமென்றும் இந்த நிதிநிலை அறிக்கையில் மதிப்பிட்டிருக்கிறார்கள் என்றால், எந்த அளவுக்கு நிதிநிலை உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். தமிழக அரசின் நிதித் துறைச் செயலாளர் திரு. சண்முகம், ஐ.ஏ.எஸ்., அளித்த பேட்டியிலே கூட, நிதிப் பற்றாக்குறையின் அளவு 3 சதவிகிதம் என்பதற்குள் இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறாா. ஆனால் நிதிப் பற்றாக்குறையை வரையறுக்கப்பட்ட மூன்று சதவீதத்திற்குள் கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு என்ன செய்யப் போகிறது என்பதற்கான எந்த விளக்கமும் இந்த நிதிநிலை அறிக்கையிலே கூறப்படவில்லை என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. உண்மையில் அ.தி.மு.க. ஆட்சியின் நிதிநிலை கையறு நிலையிலதான் உள்ளது. புறநானூற்றுப் பாடலில் வரும் “மழை பொழியும் இரவில், கவிழ்ந்த மரக்கலத்திலிருந்து கடலில் விழுந்த கண்ணில்லாத ஊமையனின் பெருந்துயரத்தை” ஒத்தது தான் தமிழக அரசின் இந்த நிதிநிலை அறிக்கை.
31-3-2017 அன்று நிலுவையில் உள்ள கடன் 2,47,031 கோடி ரூபாயாக இருக்குமென்று கடந்த பெப்ரவரி மாதத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது திருத்தப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கையில் 31-3-2017 அன்று நிலுவையில் உள்ள கடன் 2,52,431 கோடி ரூபாயாக இருக்குமென்று சொல்லியிருக்கிறார்கள். இந்த ஒரு சில மாதங்களி லேயே கடனின் அளவு 5,400 கோடி ரூபாய் உயர்ந் திருக்கிறது. மத்திய அரசின் நிதிஉதவி உள்ளிட்ட மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் 2016-2017ஆம் ஆண்டில் 1,48,175 கோடி ரூபாயாக இருக்குமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஓராண்டுக்கான தமிழக அரசின் வருவாய் வரவுகள். ஆனால் நம் மாநிலம் பெற்றுள்ள கடனின் அளவோ 2,52,431 கோடி ரூபாய். வருவாய் வரவுடன் ஒப்பிட்டால், கடனின் அளவு எந்த அளவுக்கு அதிகம் என்பதை உணர்ந்தால் அது சிறந்த நிதி மேலாண்மைக்கு அடையாளமாகாது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். கடன் பெற்றார் நெஞ்சம் போலக் கலக்கத்தில் இருந்திட வேண்டிய பன்ன்செல்வம் களிப்பின் உச்சியில் நின்றுகொண்டு, பாராட்டுப் புராணம் படித்ததுதான் பெரிய முரண்!
கடந்த பெப்ரவரி மாதத்தில் படித்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில், மூலதனக் கணக்கில் 'செலவுகள்' என்ற தலைப்பில், “2016-2017ஆம் ஆண்டில் மூலதனம் குறித்த செலவுகளைப் பெருமளவு உயர்த்த மாநில அரசு கருதியுள்ளது. அதன் விளைவாக மூலதனம் குறித்த செலவுகளுக்கு, 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டில் செய்யப்பட்ட ஒதுக்கீடான ரூ. 22,878.45 கோடி, 2016-2017 ஆம் ஆண்டு இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ. 27,585.33 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று பெருமையோடு நிதியமைச்சர் படித்து, ஆளுங்கட்சி
உறுப்பினர்கள் எல்லாம் மேஜையைத் தட்டி வரவேற்றார்கள்.
இப்போது திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அந்த மூலதனக கணக்கில் 27,585.33 கோடி ரூபாய் என்பதை எவ்வளவு உயர்த்தியிருக்கிறார்கள் தெரியுமா? “2016-2017 ஆம் ஆண்டு திருத்த வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் 24,679.38 கோடி ரூபாயாகக் கணிக்கப்பட்டுள்ளது” என்று நிதியமைச்சர் நேற்றையதினம் படித்தார் என்றால், மூலதனக் கணக்கில் தொகை அதிகரிக்கவில்லை. மாறாக ஏற்கனவே ஒதுக்கியதிலும் 2,905.95 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் வேடிக்கை, ஆளுங்கட் சி உறுப்பினர்கள், இதற்கும் மேஜையைத் தட்டி வரவேற்றுப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள்! தமிழகச் சட்டப்பேரவையில் மேஜையைத் தட்டுவதென்பது அனிச்சைச் செயலாக ஆகி வருவது கண்கூடு.
மத்திய வரிகளின் மாநில அரசின் பங்கு 23,688.11 கோடி ரூபாயாக இருக்குமென்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்கள். மத்திய அரசின் வரிகள் மற்றும் தீர்வைகள் உயாத்தப்படுவதால், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப் புள்ளது. ஏனென்றால் அண்மையில் டெல்லியில் மாநிலங்களிடை மன்றக் கூட்டம் 16-7-2016 அன்று நடைபெற்ற போது, அதிலே பேசிய பிரதமர், பதினான்காவது நிதிக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுள்ளதன் காரணமாக மத்திய வரிகளில் மாநில அரசுகளின் பங்கு 32 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அதன் காரணமாக நமக்கு கூடுதல் நிதி ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று கருதுகிறேன். ஆனால் இந்தத் திருத்த நிதிநிலை அறிக்கையில் மத்திய வரிகளில் மாநில அரசின் பங்காக 23,018.12
கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவித்ததைவிட மேலும் 670 கோடி ரூபாய் குறைத்து மதிப்பிட்டுள்ளாகள். என்ன காரணம் என்பதை நிதியமைச்சர் தனது பதிலில் கூறுவார் என்று எதிரபாரக்கிறேன்.
2011-12ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலே இருந்து பேரவையில் வைத்தபோது; நிதிப்பற்றாக்குறை 17,607.71 கோடி ரூபாய். அதனைச் சுட்டிக்காட்டிய ஜெயலலிதா, “இதுதான் கருணாநிதியின் ஐந்தாண்டுக் காலச் சாதனையா?” என்று அறிக்கை விடுத்தாரா.
அதற்குப் பிறகு, ஐந்தாண்டு காலம் ஜெயலலிதா ஆட்சி நடத்தி, தற்போது அவர் சா£பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், நிதிப் பற்றாக்குறை 40,533.84 கோடி ரூபாய். “இதுதான் ஜெயலலிதாவின் ஐந்தாண்டுக் காலச் சாதனையா?” என்று அவருடைய பாணியிலே திருப்பிக் கேட்க நான் விரும்பவில்லை.
இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவுகள் 1,52,004.23 கோடி ரூபாய். ஆனால் தற்போது 2016-2017ஆம் ஆண்டு திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் மதிப்பிடப்பட்டுள்ள மொத்த வருவாய் வரவுகள் 1,48,175,09 கோடி ரூபாய். இதிலிருந்து இடைக்கால திட்ட மதிப்பீடுகளை விட, இந்தத் திருத்த மதிப்பீட்டில் மொத்த வருவாய் வரவுகள் 3,829.14 கோடி ரூபாய் குறைந்துள்ளது.
இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பக்கம் 80இல், 2012- 2013ஆம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பு 3.39 சதவிகிதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வைக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் பக்கம் 88இல் 201 2- 2013ஆம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பு 4.85 சதவிகிதம் என்று கூறப்பட்டுள்ளது. இதிலே எது சரியானது?
அதுபோலவே, இடைக்கால நிதிநிலை அறிக்கையில், 2012-2013ஆம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பு 3.39 சதவிகிதமாக இருந்தது, 2014-2015இல் 7.25 சதவீதமாக உயாந்துள்ளது என்று பக்கம் 73இல் உள்ளது. ஆனால் இந்த திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பக்கம் 80இல், 2012-
2013ஆம் ஆண்டில் 4.85 சதவீதமாக இருந்த மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சியானது 2014-2015 ஆம் ஆண்டில் 6.94 சதவீதமாக உயாந்துள்ளது என்று எழுதப்பட்டுள்ளது. ஏன் இந்த முரண்பாடு?
இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பக்கம் 80இல், 2012-2013ஆம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பு 3.39 சதவிகிதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வைக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் பக்கம் 88இல் 2012-2013 ஆம் ஆண்டில் மாநில மொத்த
| உற்பத்தி மதிப்பு 4.85 சதவிகிதம் என்று கூறப்பட்டுள்ளது. இதிலே எது சரியானது?
அதுபோலவே, இடைக்கால நிதிநிலை அறிக்கையில், 2012-2013ஆம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பு 3.39 சதவிகிதமாக இருந்தது, 2014-2015இல் 7.25 சதவீதமாக உயாந்துள்ளது என்று பக்கம் [3இல் உள்ளது. ஆனால் இந்த திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பக்கம் 80இல், 2012-2013 ஆம் ஆண்டில் 4.85 சதவீதமாக இருந்த மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் வளாச்சியானது 2014-2015 ஆம் ஆண்டில் 6.94 சதவீதமாக உயாந்துள்ளது என்று எழுதப்பட்டுள்ளது. ஏன் இந்த முரண்பாடு?
இடைக்கால நிதிநிலை அறிக்கையை முடிக்கும்போது, “2017-2018ஆம் ஆண்டைத் தவிர்த்து ஏனைய ஆண்டுகளில், ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை, நிகரக் கடன், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் ஆகியவை வருவாய் வரவுகளில் சுணக்கம் உள்ள நிலையிலும், அனுமதிக்கப்பட்ட அளவிற்குக் கட்டுப்படுத்தப்படும். மாநிலப் பொருளாதாரத்தை மீணடும் வளாச்சிப் பாதையில் கொண்டுசெல்ல அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” என்று உள்ள வரிகள்தான்; இப்போதைய திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும், “2017-2018ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையைத் தவிர்த்து ஏனைய ஆண்டுகளில், ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை, நிகரக் கடன், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் ஆகியவை வருவாய்
வரவுகளில் சுணக்கம் உள்ள நிலையிலும், அனுமதிக்கப்பட்ட அளவிற்குக் கட்டுப்படுத்தப்படும். மாநிலப் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” என்று மீண்டும் அப்படியே எடுத்து எழுதப்பட்டுள்ளது.
இடைக்கால நிதி நிலை அறிக்கையில், 31-3-2015 அன்று உள்ளபடி, நிலுவையில் உள்ள அரசு உத்தரவாதங்களின் அளவு, மாநிலங்களின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 5.70 சதவீதமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது படித்த நிதிநிலை அறிக்கையில் இது 4.91 சதவீதமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதில் எது சரி?
முக்கியமான பல்வேறு துறைகளுக்கு இடைக்கால நிதி நிலை அறிக்கையிலே கடந்த பெப்ரவரி மாதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையின் அளவு கூட, தற்போது இரண்டொரு மாதங்களுக்குப் பிறகு வைக்கப்பட்ட திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கையிலே நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. உதாரணமாக, வருவாய்த் துறைக்கு கடந்த பெப்ரவரி மாதம் 5,974 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு மாறாக, தற்போது 5,686 கோடி ரூபாய்தான் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. நீர்வளங்கள் ஆதாரத் துறைக்குக் கடந்த பெப்ரவரி மாதம் 3,673.91 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 3,406.69 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறைக்கு இடைக்கால நிதி ஒதுக்கீட்டில் 1,590 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதற்கு மாறாகத் தற்போது 1,295.08 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சி நாவாகத் துறைக்கு 12,194.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதற்கு மாறாக, தற்போது 11,820 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கியமான மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஏற்கனவே செய்த நிதி ஒதுக்கீடு 9,350.66 கோடி ரூபாய். தற்போது ஒதுக்கியிருப்பது 9,073 கோடி ரூபாய்தான். உயா கலவித் துறைக்கு ஏற்கனவே செய்த நிதி ஒதுக்கீடு 3,821 கோடி ரூபாய். தற்போது இந்த அறிக்கையில் ஒதுக்கியிருப்பது 3,679 கோடி ரூபாய்தான். பள்ளிக் கல்வித் துறைக்கு பெப்ரவரி மாதம் செய்த ஒதுக்கீடு 24,820.17 கோடி ரூபாய். தற்போது இந்த அறிக்கையில் ஒதுக்கியிருப்பது 24,129.86 கோடி ரூபாய். பாசனம் (பொதுப்பணித் துறை) இடைக்கால நிதி
நிலை அறிக்கையில் செய்த ஒதுக்கீடு 3,673.91 கோடி ரூபாய். தற்போது ஒதுக்கியிருப்பது 3,406.69 கோடி ரூபாய். இவ்வாறு மிக முக்கியமான துறைகளுக்கெலலாம் இடைக்கால நிதிநிலை அறிக்கையிலே ஒதுக்கிய தொகை அளவுக்குக்கூட திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையிலே நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை; செய்ய இயலவில்லை, நிதி நிலைமை அப்படி!
கடந்த ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கைகளிலும், முதலமைச்சர் அன்றாடம் 110வது விதியின்கீழ் படித்த அறிக்கைகளிலும் வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளுக்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்படாமல் உள்ளது. ஆரவாரத்திற்கிடையே செய்யப்பட்ட அந்த அறிவிப்புகளெல்லாம், அச்சியற்றப்பட்ட எழுத்துக்களிலேயே உறைந்து விட்டன!
நிதிநிலை அறிக்கையிலே “இந்த அரசு” என்று இருந்த இடங்களைப் படிக்கும்போதெலலாம், நிதியமைச்சர் பன்னீர் செல்வம், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா தலைமையிலான இந்த அரசு” என்றே மாற்றி மாறறி படித்துவந்தார். அவருக்கு ஒரு யோசனை. இனிமேல் ஆண்டுதோறும் அவா படிக்கும் நிதிநிலை அறிக்கைகளை தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை என்று படிக்காமல், அ.தி.மு.க. என்பதையே “அம்மா தி.மு.க.” என்று மாற்ற முயற்சிப்பதைப் போல, “அம்மா நிதி நிலை அறிக்கை” என்றே பெயாசூட்டி அழைக்கலாம், அதையும் அவர் தனது பதிலிலே அறிவிக்கலாம். நிதி அமைச்சர் பதவியிலும் நீடிக்கலாம்.
நிதிநிலை அறிக்கை பற்றி “இந்து” - “டைம்ஸ் ஆப் இந்தியா” வெளியிட்ட செய்திகளை மாத்திரம் குறிப்பிடுகிறேன்.
“இந்து” இதழ், “Growing fiscal and revenue deficits a concern, say experts - Economic slowdown and its impact on sectors such as cement, steel and automobiles have cast a shadow on State’s finances” (“அதிகரித்து வரும் நிதி மற்றும் வருவாய்பற்றாக் குறைகள் கவலைக்குரியது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். பொருளாதார வீழ்ச்சியும், சிமெண்ட் எஸ்கு மற்றும் ஆட்டோ மொபைல்ஸ் போன்ற துறைகளில் அதன் தாக்கமும் மாநில நிதி நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன”) என்ற தலைப்பில்,
“Several economists have expressed concern over the ballooning revenue and fiscal deficits in Tamil Nadu and said that the situation would give little room for spending on key thrust-areas. The lower revenue and higher expenditure forecast relative to the interim budget 15 a cause for concern as It 1s estimated to widen the State’s revenue deficit” (“தமிழகத்தில் வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே இருப்பது கவலை அளிப்பதாகப் பல பொருளாதார வலலுநர்கள் கூறியுள்ளனர். இத்தகைய சூழ்நிலை முக்கியத்துவம் அளித்துச் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்குச் செலவிடுவதற்கு வழியில்லாமல் செய்துவிடும். இடைக்கால நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிடும்போது குறைவான வருவாயும், அதிகமான செலவும் முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகும். ஏனெனில் இது மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக் குறையை மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதே காரணமாகும்”) என்று விரிவாக எழுதியுள்ளது.
“டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேடோ, “The State Government introduced an amendment to the Tamil Nadu Fiscal Responsibility Act 2003 to get legal sanction to maintain a deficit in the revenue account for the second successive year. As per Finance Commission stipulations, States should not have deficit in the revenue account and should learn to spend within their means. While fiscal deficit can be explained away saying some of the expenses are investments for the future and would bring in returns, revenue deficit is an indication of whether the government has borrowed to meet its current expenditure. A revenue deficit would indicate a government living beyond its means. Revenue dificit to the tune of Rs. 15,000 crore as indicated by the budget papers would certainly indicate a worrying turn, say economists.” (“தொடர்ந்து இரண்டாவது ஆண்டில் வருவாய்க் கணக்கில் பற்றாக்குறையைப் பராமரிப்பதற்குச் சட்ட அனுமதி பெறுவதற்காக, மாநில அரசு தமிழ்நாடு நிதி பொறுப்புணர்வுச் சட்டம் 2003-ல் திருத்தம் ஒன்றை அறிமுகம் செய்தது. நிதி ஆணையத்தின் உடன்டாட்டின் கட்டுப்பாடுகளின்படி வருவாய்க் கணக்கில் மாநிலங்கள் பற்றாக்குறை வைத்திருக்கக் கூடாது. அதன எல்லைக்குள்ளேயே செலவழிக்க அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் சில செலவுகள் எதிர்கால முதலீட்டுக்கானவை என்று கூறி நிதி பற்றாக்குறைக்கு விளக்க மளிக்க முடியும். அதற்கான
விபரத்தைக் கொடுக்கமுடியும், வருவாய்ப் பற்றாக்குறை, தற்போதைய செலவுகளைச் செய்வதற்காக அரசு கடன் வாங்கப் போகிறதா என்பதற்கான அடையாளம். வருவாய்ப்பற்றாக்குறை ஒரு அரசாங்கம் வழி வகைகளுக்கு அப்பால் வாழ்கிறது என்பதைக் காட்டும். வருவாய்ப்பற்றாக்குறை ரூ. 15,000 கோடி அளவுக்கு இருப்பதாக நிதிநிலை அறிக்கையில் காட்டப்பட்டிருப்பது நிச்சயமாக வேதனையளிக்கும் திருப்பம் என்று பொருளாளதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.) என்று எழுதியுள்ளது.
தமிழ் நாளேடுகள் எலலாம் இந்த உண்மைகளை மறைத்த போதிலும், ஆங்கில நாளேடுகள் உண்மை நிலையை ஓரளவுக்குத் தெளிவபடுத்தியிருக்கின்றன. இதுதான் அ.தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கை. காலிப்பாத்திரத்தைக் கையிலே வைத்துக் கொண்டு, அதை அட்சய பாத்திரமென்று அ.தி.மு.க.வினரை நம்பவைத்து, அள்ளி அள்ளிக்கொடுப்பதைப் போலப் பாவனை செய்யும் பன்னாசெல்வத்தின் திறமை கண்டு பாராட்டுவதா அலலது பரிதாபப்படுவதா?
கடைசியாக ஒன்று. நிதி நிலை அறிக்கையிலே “இந்த அரசு” என்று இருந்த இடங்களைப் படிக்கும் போதெல்லாம், நிதியமைச்சர் பன்னீாரசெல்வம், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா தலைமையிலான இந்த அரசு” என்றே மாற்றி மாற்றிப் படித்து வந்தார். அவருக்கு ஒரு யோசனை. இனிமேல் ஆண்டுதோறும் அவர் படிக்கும் நிதி நிலை அறிக்கைகளை தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை என்று படிக்காமல், அ.தி.மு.க. என்பதையே “அம்மா தி.மு.க.” என்று மாற்ற முயற்சிப்பதைப் போல, “அம்மா நிதி நிலை அறிக்கை” என்றே பெயர் சூட்டி அழைக்கலாம். அதையும் அவர் தனது பதிலிலே அறிவிக்கலாம். நிதி அமைச்சர் பதவியிலும் நீடிக்கலாம். மொத்தத்தில் நிதியமைச்சர் பன்னீரின் “பட்ஜெட்” ஏழை எளிய நடுத்தர மக்களின் கண்ணீரைத் துடைப்பதாக இல்லை. இந்த நிதிநிலை அறிக்கை மணமில்லாத வெறும் காகிதப் பூ; தாகத்திற்கு உதவாத கர்னல் நீர! அன்புள்ள, மு.க. 23-7-2016
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 54 PDF ↗