தொகுதி 54 · கடிதம் 4027
மத்திய - மாநில உறவுகளில்
உடன்பிறப்பே,
மாநிலங்களிடை மன்றத்தின் (Inter-State Council) கூட்டம், சுமா பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் வரவேற்கத்தக்க சில கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். நீதிபதி எம்.எம். புன்சி தலைமையிலான ஆணையமும், மத்திய-மாநில உறவுகள் குறித்து 2010இல் பல பரிந்துரைகளை வழங்கியது. நீதிபதி சர்க்காரியா கமிஷன் அளித்த பரிந்துரைப்படிதான் மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கடந்த 1990இல் சமூக நீதிக் காவலர் திரு. வி.பி. சிங், தி.மு. கழகமும் பங்கெடுத்துக்கொண்ட தேசிய முன்னணியின் பிரதமராக இருந்த போது உருவாக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறையேனும் இந்தக் கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு மாநிலங்களின் பிரச்சினைகளை விவாதித்திருக்க வேண்டும். ஆனால், 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் முதல் முறையாக மாநிலக் கவுன்சில் கூடடம் நடத்தப்பட்டுள்ளது.
மிக முக்கியமான இந்தக் கூட்டத்திற்குத்தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அவருக்குள்ள அதிகப் பணிகளின் காரணமாகச் செல்லாமல். நிதியமைச்சரிடம் தயாரிக்கப்பட்ட தனது உரையைக் கொடுத்தனுப்பி, அங்கே படிக்கச் செய்திருக்கிறார். ஒருவேளை தனக்குத் தெரியாததையா அங்கே பேசிவிடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் இருந்திருக்கலாம். அதுபற்றிக்கூட, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அவர்கள், “டெல்லியில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்ட மிக முக்கியக் கூட்டம் நடந்தது. இதில் பெரும்பாலான மாநில முதலவர்கள் கலந்துகொண்டனர். பல முக்கியப் பிரச்சினைகள்
பற்றி விவாதிக்கப்பட்டன. காஷ்மீர் தீவிரவாதம், மாநில கவானர்கள் நியமனம் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டது. சில மாநில முதல்வர்கள், கவர்னர்களே தேவையில்லை, அந்தப் பதவிகளை எடுத்து விடலாம் என வலியுறுத்தினர். பிரதமர் தலைமையில் நடந்த மாநில முதல்வர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் முதல்அமைச்சர் ஜெயலலிதா நிச்சயமாகக் கலந்துகொள்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. அவர் கலந்துகொண்டு பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிப் பேசியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந் திருக்கும்” என்றெலலாம் சொல்லியிருக்கிறார்.
உத்தரகாண்ட் மாநிலத்திலும், அருணாசலப் பிரதேச மாநிலத்திலும் மத்திய அரசு, தனது அதிகாரப் பசியின் காரணமாக, அதிகாரத்தை விரிவாக்கிக்கொள்ள, ஆக்கிரமிப்பு மனப்பான்மையோடு நடத்திய அரசியல் சட்ட அத்துமீறல்களை இந்திய உச்ச நீதிமன்றமே கண்டித்து, இந்திய ஜனநாயகத்தை நல்வழிப்படுத்திட முயனறுளளது. எனினும் மத்திய பா.ஜ.க. அரசின் கோணல் நாடகங்கள் அரசியல் சட்டப் பிழைகளாகப் பதிவாகி இருக்கின்றன. இவற்றின் எதிரொலியாக, மாநிலங்களிடை மன்றக் கூட்டத்திலும், மாநில அரசுகளில் மத்திய அரசின் தலையீடு கூடவே கூடாதென்றும், மாநில அரசுகளுக்குக் கூடுதல் அதிகாரங்களுடன்கூடிய சுயாட்சி தேவையென்றும் அழுத்தமாகக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. இது தி.மு.கழகம் நீண்ட காலமாக எதிரொலித்து வரும் மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கும், “மாநிலத்தில் சுயாட்சி;, மத்தியில் கூட்டாட்சி” என்ற முழக்கத்திற்கும் கிடைத்த தேசிய அங்கீகாரமாகும்.
டெல்லி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகளின் ஒற்றுமை குறித்து வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக “மத்திய-மாநில அரசுகள் உளவுத் தகவல்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளாமல் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்திட முடியாது. மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நாட்டை வளர்ச்சியடையச் செய்ய முடியும்; ஒரு சில சந்தர்ப்பங்களில்
மட்டுமே மத்திய-மாநில அரசுகள் ஒன்றாக இணைகின்றன; இந்தக் கூட்டத்தின் மூலம், கூட்டாட்சி முறையையும், மத்திய-மாநில உறவுகளையும் வலுப்படுத்துவதோடு, நமது குடி மக்களின் சிறந்த எதிர்காலத்தையும் நாம் பாதுகாக்கிறோம். பதினான்காவது நிதிக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுள்ளதன் காரணமாக, மத்திய வரிகளில் மாநில அரசுகளின் பங்கு 32 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக உயாந்துள்ளது. இந்தியாவின் 30 கோடி குழந்தைகளே, இந்தியாவின் மாபெரும் செல்வம். எனவே மத்திய - மாநில அரசுகள் இணைந்து அந்தக் குழந்தைகளின் திறன் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உகந்த சூழலை உருவாக் கிட வேண்டும். பள்ளிக்குச் செல்வது மட்டும் கல்வியாகி விடாது; கல்வி என்பது குழந்தைகளிடையே ஊக்கத்தையும், ஆர்வத்தையும் உருவாக்குவதாக அமைந்திட வேண்டும்; மேலும் வாழ்நாள் முழுவதும் கற்கும் ஆவலைக் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். மாநில அரசுகளின் கருத்துகளைச் சுதந்திரமாகவும், வெளிப்படையான முறையிலும் தெரிவிக்கும் வாய்ப்பு இந்தக் கவுன்சிலில் அளிக்கப்படுகிறது. அனைத்துத் திட்டங்களிலும், உங்களது கருத்துகளும், ஆலோசனைகளும் வரவேற்கப்படும்” என்றெல்லாம் பேசியிருப்பது; திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட பல ஆண்டுகாலமாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்ற மாநில சுயாட்சிக் கொள்கைக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் ஊக்கமளிக்கும் வகையிலே உள்ளது என்று சொன்னால் மிகையல்ல.
தமிழக முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகச் சட்டப்பேரவையில் 11-6-1967 அனறு ஆற்றிய உரையில் குறிப்பிட்ட, “நமது கூட்டாட்சி அமைப்பில் எத்தகைய வரம்புகளுக்கு உட்பட்டு மாநில அரசுகள் இயங்க வேண்டியுள்ளன என்பதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். அரசியலமைப்பின் விதி முறைகள் மத்திய அரசுக்கு ஊட்டம் கொடுக்கும் முறையிலே அமைந்திருப்பது ஒருபுறமிருக்க, கடந்த 15 ஆண்டுகளாகத் திட்டமிட்ட பொருளாதார அமைப்பின்கீழ் எழுந்த நெறிமுறைகளும், வளர்ந்த மரபுகளும் மாநிலங்களை மெலியச் செய்து, மத்திய அரசினை மேலும் வலுவூட்டும் போக்கில் அமைந்துள்ளன” எனும் அந்தக் கருத்துகள்தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நாட்டின் தலைநகரில் இந்தக் கூட்டத்தில் எதிரொலித்திருக்கின்றன.
6-1-2009 அன்று நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில், தமிழக முதல்வராக இருந்த நான் உரையாற்றும்போதும், தற்போது மோடி அவர்கள் வெளியிட்டிருக்கும் கருத்துகள போன்றவற்றைத்தான், முக்கியமாக எடுத்துச் சொன்னேன். குறிப்பாக, “மத்திய, மாநில அரசுகளிடையே தீர்மானகரமான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. உளவுத் தகவலகள் சேகரிப்பதன் தரத்தை மேம்படுத்த, அடிக்கடி தொடர்ந்து உளவுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள மத்திய மற்றும் மாநில உளவு அமைப்புகளிடையே நீடித்த ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது” என்றெல்லாம் பேசினேன். அதைத்தான் பிரதமர் மோடி அவர்கள், “Internal security could not be strengthened unless the States and the Centre focussed on sharing intelligence. With close cooperation, we will not only strengthen the Centre-State relations but also make a better future for the citizens” என்று 16-7-2016 அன்றைய கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
மேலும் 13-10-2008 அன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் கூட்டத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த நான் பேசும்போதும், “மாநிலங்களுக்கு இடையிலான குழுக்களை அமைத்து நிலுவையில் உள்ள சிக்கல்களுக்குச சுமூகமான தீர்வு காணுதல், மாநிலங்களுக்கிடையிலான நதிகளை நாட்டுடைமையாக்குதல், தேசிய நதி HT ஆணையத்தை அமைத்து மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை இணைத்தல ஆகியவை, மாநிலங்களுக்கு இடையில் நல்ல உறவைப் பராமரிக்க தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவினால் ஆலோசிக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகளாகும்” என்று பேசினேன். நான் அப்போது சுட்டிக்காட்டிய நாட்டு நலனுக்கான இவை அனைத்தும், தற்போது பிரதமர் எடுத்துரைத்தபடி, மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகி, இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்துகொள்ள முடியும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.
அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும், அருணாசலப் பிரதேச மாநிலத்திலும் மத்திய அரசு, தனது அதிகாரப்பசியின் காரணமாக, அதிகாரத்தை விரிவாக்கிக்கொள்ள, ஆக்கிரமிப்பு மனப்பான்மையோடு நடத்திய அரசியல் சட்ட அத்துமீறல்களை இந்திய உச்ச நீதிமன்றமே கண்டித்து, இந்திய ஜனநாயகத்தை
நலவழிப்படுத்திட முயன்றுள்ளது. எனினும் மத்திய பா.ஜ.க. அரசின் கோணல் நாடகங்கள் அரசியல் சட்டப் பிழைகளாகப் பதிவாகி இருக்கின்றன. இவற்றின் எதிரொலியாக, மாநிலங்களிடை மனறக் கூட்டத்திலும், மாநில அரசுகளில் மத்திய அரசின் தலையீடு கூடவே கூடாதென்றும், மாநில அரசுகளுக்குக் கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சி தேவையென்றும் அழுத்தமாகக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. இது தி.மு. கழகம் நீண்ட காலமாக எதிரொலித்து வரும் மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கும், “மாநிலத்தில் சுயாட்சி;, மத்தியில் கூட்டாட் சி” என்ற முழக்கத் திற்கும் கிடைத்த தேசிய அங்கீகாரமாகும்.
மாநாட்டில் பீகார் முதலமைச்சர், நண்பர் நிதீஷ் குமார், ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்த கருத்து கவர்னர் பதவியைப் பற்றி அண்ணா சொன்ன கருத்தை நினைஷூட்டியது. “ஆட்டுக்குத்தாடி, நாட்டுக்குக் கவர்னர்” என்று அண்ணா கூறினார் அல்லவா? அறிஞர் அண்ணா அவர்களின் அந்தக் கருத்தை வலியுறுத்தும் eusneuled, “Existing federal democratic structure does not warrant continuance of the gubernatorial post. However, if it is not possible to do away with it, then our opinion is that provisions relating to the appointment of Governor must be Clearly defined and made transparant” (ஆளுநர் என்ற பதவி நீடிக்க, கூட்டாட்சி ஜனநாயகக் கட்டமைப்பு உதரவாதம் அளிக்கவில்லை. எனவே அந்தப் பதவியை ஒழிக்க வேண்டும். இந்தப் பதவியை ஒழிப்பது சாத்தியமில்லை என்றால், ஆளுநர் நியமனம் தொடர்பான விதிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு, வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும்) என்று அந்தக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் எதிரொலித்திருக்கிறார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால் பேசும்போது, “Delhi Chief Minister Arvind Kejriwal suggested that the Council pass a Resolution that President’s Rule should not be imposed in any State unless the Government fails to prove its majority on the floor of the Assembly” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதே நேரத்தில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆளுநா்களை எல்லாம் எவ்வாறு நடத்தினார், ஆளுநராக இருந்த மேதகு டாக்டர் சென்னாரெட்டி மீது எப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சடடப்பேரவையிலேயே சுமத்தினார் என்பதெல்லாம் நினைவுக்கு வரத் தவறவில்லை.
ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உரையில் ஆளுநர்கள் நியமன விஷயத்தில் மாநிலங்களின் ஆலோசனைகளை மத்திய அரசு கேட்க வேண்டுமென்றும், அவசரப்படக் கூடாது என்றும்
கூறியிருக்கிறார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, உரையைப் படித்துப் பார்த்தாலும், கழக ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட உரையைப் போலவே, “மாநில சுயாட்சி” என்ற வார்த்தையைக் குறிப்பிட்டால், தி.மு.க.விற்குப் புகழ் வந்துவிடும் என்று கருதி, அந்த வாத்தையை மட்டும் தவிர்த்துவிட்டு, தயாரிக்கப்பட்ட உரையாகவே இருப்பதைக் காணலாம். இந்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படும் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றும், மாநில அரசுகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டறிந்து செயல்படுத்த அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா உரையிலே கூறப்பட்டுள்ளது.
இதைத்தான் கழக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாநில சுயாட்சிக் கொள்கை என்ற பெயரால் கூறி வந்தோம். மத்திய - மாநில உறவுகள் எப்படி அமைந்திட வேண்டும் என விவாதித்து, மாநில சுயாட்சிக்கான ஆக்கபூர்வமான தனித் தீர்மானம் ஒன்றை இந்தியாவிலேயே முதன் முதலாகச் சட்டப்பேரவையிலே நிறைவேற்றிய சிறப்பு தி.மு. கழக ஆட்சிக்கே உரியது. 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான் முன்மொழிந்த அந்தத் தீர்மானத்தின் வாசகங்களை நினைவுகூர வேண்டுமேயானால், “மாநில சுயாட்சி பற்றியும், இராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் பற்றியும் தமிழ்நாடு அரசின் கருத்துரைகளையும், இராஜமன்னார் குழுவின் அறிக்கையையும் இப்பேரவை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, பல்வேறு மொழி, நாகரீகம், பண்பாடு ஆகியவைகளைக் கொண்ட இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், மக்களுடன் நெருங்கிய தொடர்புகொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றிச் செயல்படவும், மாநில சுயாட்சி பற்றியும், இராஜமன்னார குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துக்களை மத்திய அரசு ஏற்று - மத்தியில் கூட்டாட்சி மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி
முறையை உருவாக்கும் அடிப்படையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்று இப்பேரவை முடிவு செய்திருக்கிறது” என்று அமைந்திருந்த நமது தீர்மானம், இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி மலரும் வரை, பொருந்திவரக் கூடியதாகும்.
அப்போது தமிழகச் சட்டப்பேரவையில் எதிர்வரிசையில் அமர்ந்திருந்த அ.தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் ராஜமன்னார் குழு அறிக்கையை எவ்வளவு கேவலமாக விமர்சித்தனர் என்பது என் நினைவிலே உள்ளது. மாநில சுயாட்சித் தத்துவம் தேவையான ஒன்று என திட்டவட்டமாகத் தெரிவித்த அண்ணா அவர்களின் பெயரால் கட்சியை வைத்துக் கொண்டிருப்பவர்கள், “ராஜமன்னார் குழுவின் அறிக்கை சட்டமன்ற உறுப்பினர்கள் படிப்பதற்குத் தகுதியுடைய புத்தகமல்ல - பள்ளி மாணவனகூடப் பயன்படுத்த இதில் எவ்விதக் கருத்தும் இல்லை, இது குப்பைக் கூடையில் தாக்கி எறியப்பட வேண்டிய அறிக்கை” என்று அவையிலேயே
17-7-1997 அன்று டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான குழுக் கூட்டத்தில், “மாநில அரசுகளைக் கலைக்க வகைசெய்யும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356வது விதியை மத்திய அரசு தன்னிச்சையாகப் பயன்படுத்துவதற்கான எந்த விதியையும் நாங்கள் அனுமதிக்கத் தயாராக இல்லை” என்றும், அதில் உள்ள “அல்லது பிற காரணங்களுக்காக” (Otherwise) என்ற சொற்றொடர் அடியோடு நீக்கப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்திப் பேசினேன். 1991 ஆம்
தனிப் பெரும்பான்மையோடு தமிழகத்தில் நடைபெற்று வந்த தி.மு.கழக ஆட்சியை அப்போது குடியரசுத் தலைவராக இருந்த திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்கள் கலைகக உத்தரவிட்டார் என்பதையும், அதுதான் அந்த வார்த்தையை முதல் முறையாகவும், கடைசி முறையாகவும் பயனபடுத்தி ஒரு மாநில அரசைக் கலைத்திட மத்திய அரசு உத்தரவிட்டது என்பதையும் மறக்கத்தான் முடியுமா?
இப்போது அதே கட்சியைச் சோந்தவாகள், அந்த ராஜமன்னார் குழுவின் அறிக்கையிலே சொல்லப்பட்ட வார்த்தைகளைத்தான் முதலமைச்சரின் உரையாகத் தயாரித்துக் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். எப்படியோ ஏற்பட்டுள்ள மன மாற்றம், ஏற்கத்தக்க மாற்றம் என்ற வகையிலே அமைந்துள்ளது.
17-66-1997 அன்று டெல்லியில் நடைபெபற்ற மாநிலங்களுக்கிடையிலான குழுவின் கூட்டத்திலேயே சில மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் பேசும்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவினை நீக்க வேண்டுமென்ற கருத்தினைத் தெரிவித்தார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்தும், 356வது பிரிவு குறித்து தி.மு. கழகத்தின் கருத்தினைத் தெளிவாக்கியும், நான் அந்த முதல் அமைச்சர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினேன். இவ்வாறு நான் கடிதம் எழுதியதின் தொடர்ச்சியாக 17-7-1997 அன்று டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான குழுக் கூட்டத்தில், “மாநில அரசுகளைக் கலைக்க வகைசெசய்யும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356வது விதியை மத்திய அரசு தன்னிச்சையாகப் பயன்படுத்துவதற்கான எந்த விதியையும் நாங்கள் அனுமதிக்கத் தயாராக இல்லை” என்றும், “அதில் உள்ள “அல்லது பிற காரணங்களுக்காக” (Otherwise) என்ற சொற்றொடர் அடியோடு நீக்கப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்திப் பேசினேன். 1991ஆம் ஆண்டு இந்த வார்த்தையைப் பயன்படுத்தித்தான் தனிப் பெரும்பான்மையோடு தமிழகத்தில் நடைபெற்று வந்த தி.மு. கழக ஆட்சியை அப்போது குடியரசுத் தலைவராக இருந்த திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்கள் கலைக்க உத்தரவிட்டார் என்பதையும், அதுதான் அந்த வார்த்தையை முதல் முறையாகவும், கடைசி முறையாகவும் பயன்படுத்தி ஒரு மாநில அரசைக் கலைத்திட மத்திய அரசு உத்தரவிட்டது என்பதையும் மறக்கத்தான் முடியுமா?
ஆனால் அந்தக் கருத்துக்கள் குறித்து இதுவரை மத்திய அரசு அளவில் எந்த வகையான தீ£வும் காணப்படாமல் உள்ளது என்பது என் மனதில் பெரும்குறையாக இருந்து வந்தது. அதனைப் போக்கும் வகையில்தான், 1970ஆம் ஆண்டுகளில் நமது திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துவைத்த மாநில சுயாட்சிக் கொள்கைகள், தற்போது டெல்லியிலே நடைபெற்ற
மாநிலங்களுக்கு இடையேயான குழுக் கூட்டத்தில் பிரதமர் அவர்களால் பேசப்பட்டு, பல மாநில முதலமைச்சர்களும் ஏன் அ.தி.மு.க. முதலமைச்சர் உட்பட அதே கருத்துக்களை எடுத்துவைக்கும் அளவிற்கு, மாறிவிட்ட நிலைமைகளைப் பார்க்கும்போது, அறிஞர் அண்ணா அவர்களின் வழியில், தொடக்கத்திலிருந்து மாநில சுயாட்சிக் கொள்கைக்காகக் குரல் கொடுத்துவரும் நமக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படும் அல்லவா? அன்புள்ள, மு.க. 20-/-2016
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 54 PDF ↗