உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 54

தொகுதி 54 · கடிதம் 4021

சொத்துக் குவிப்பு வழக்கில் - சில குறிப்புகள்

2016-06-28

உடன்பிறப்பே,

ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைவரும், மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, “பணபலமும், செல்வாக்கும் இருந்தால் எவரும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பித்து விடலாம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். அது தனக்கு உடன்பாடான கருத்து தான்” என்று கூறியிருக்கின்ற செய்தி ஒரு சில நாளேடுகளில் வெளிவந்துள்ளது.

14 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உடனடியாக ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதோடு மட்டுமன்றி, மேல்முறையீட்டு வழக்கையே மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு, உயர்நீதி மன்றத்திற்கு உத்தரவிட்ட நிகழ்வு, நீதித் துறைக்கு அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்திருப்பது, உச்சநீதி மன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள “எச்சரிக்கை” என்றே நான் கருதுகிறேன்.

இதேபோன்று, நிதானமின்றிக் காரை ஒட்டிச் சென்றதால் சாலையோரவாசி மரணமடைந்த வழக்கில், நடிகர் சல்மான்கானை விடுவித்ததும், நீதித்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடியது என்றும், குறிப்பாக இரண்டு வழக்குகளிலும், ஓய்வுபெறும்

நிலையில் இருந்த நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதையும் திரு. சந்தோஷ் ஹெக்டே சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பொதுவாக நீதிபதிகள் ஏதாவது ஒரு கருததைச சொன்னால், அதனை மறுத்துக் கருத்துச் சொல்வது சரியல்ல. ஆனால் அவர்கள் வெளியிடும் சில கருத்துகள், எண்ணங்கள் சமுதாயத்தை அதிர வைக்கும்போது, ஐனநாயக ரீதியாக எதிர்வினை எண்ணங்களைப் பகிந்து கொள்வது தவறல்ல. சுமார் பதினான்கு ஆண்டுகளாகப் பல்வேறு கட்டங்களிலும் திட்டமிட்டு வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டு, மிகவும் காலம் கடத்தப்பட்டு வந்த இந்த வழக்கில், தற்போது திடீரென்று விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்ற அவசரம் ஏன் ஏற்பட்டது?

பல்வேறு வழக்குகளில் ஜாமீன் கிடைக்காமல் நூற்றுக் கணக்கானோர் 4 முதல் 5 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், பணக்காராகள், செல்வாக்கு மிக்கவர்கள் என்பதாலேயே ஜெயலலிதா, சல்மான்கான் ஆகிய இருவரின் மனுக்களும் அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டதாகவும் நீதிபதி சந்தோஷ்ஹெக்டே கூறியுள்ளார்.

குறிப்பாக வழக்கத்திற்கு மாறான வகையில் அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு, இவர்கள் என்ன தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருந்தவர்களா? அல்லது பரிட்சை எழுத ஹால டிக்கெட் கிடைக்காமல் பரிதவித்தவர்களா என்றும் நீதிபதி ஹெக்டே கேட்டுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றி மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டதாகவும், இதுபோன்ற வழக்குகள் மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தையே ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு திடீரென்று தெரிவிக்க என்ன

காரணம்?

கர்நாடக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிடும்போது, “விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றுவதற்கு உரிய காரணங்களை ஐகோர்ட் நீதிபதி குறிப்பிடவில்லை. ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்யாவிட்டால், ஊழலை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் நோக்கமே பயனற்றதாகிவிடும். அதேபோல, ஊழல் வழக்கில்

இருந்து தப்பிவிடலாம் என்ற சமிக்ஞையை அரசு ஊழியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அளித்துவிடும்” என்று வாதிட்டபோது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறுக்கிட்டு, “எங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, ஜெயலலிதாவை விடுதலை செய்து ௬ கோர்ட் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்யலாம்; இரண்டு, அந்தத் தீர்ப்பை ரத்துசெய்து, தண்டனையை உறுதி செய்யலாம்; வழக்கை மீண்டும் ஐகோர்ட்டுக்கு திருப்பி அனுப்புவது அலலது விசாரணை நீதிமன்றத் தீர்ப்பு தவறு எனத் தெரியவந்தால், அந்தத் தீர்ப்பை ரத்து செய்து, மறு விசாரணைக்கு உத்தரவிடலாம். வருமானத் துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்ப்பது குற்றமல்ல; சொத்துக்கள் சட்டப்பூர்வமான வருமானத்தில் வாங்கப்படவில்லை என, அரசுத் தரப்பு நிரூபிக்க முடியும் என்றால் மட்டுமே அது குற்றம் ஆகிறது” என்று இதுவரை இல்லாத புதுமையான கருத்துத் தெரிவித்ததால் தான் அதாவது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்கள் சேர்ப்பது குற்றமல்ல என்றும்; அது குற்றம் என்பதை அரசுத் தரப்பு நிரூபிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வெளிப்படையாக அறிவித்ததால்தான காரநாடக நீதிபதி திரு. ஹெக்டே அவர்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்தி (hSSS கூடுமோ என்ற அய்யம்கூட நமக்கு ஏற்படுகின்றது. சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் தரப்பிலான வாதங்களைக் கேட்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டதாக 1-4-2016 தேதிய நாளேடுகளில் ஒரு செய்தி வந்துளளது. இந்த வழக்கில் ஏற்கனவே பெங்களூரு சிறப்புந்தி மன்றத்திலும், கர்நாடக உயர் நீதி மன்றத்திலும் தெரிவிக்கப்படாத விஷயங்கள் இருந்தால், அதை மட்டும் பேராசிரியர் தரப்பு எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்தால் போதுமானது என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். அதற்குக் காரணமாக நீதிபதிகள் சொன்னது எனன? வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டியிருப்பதால ஏற்கனவே கேட்ட வாதங்களையே திரும்பக்கேட்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.

பொதுவாக நீதிபதிகள் ஏதாவது ஒரு கருத்தைச் சொன்னால், அதனை மறுத்துக் கருத்துச் சொல்வது சரியல்ல. ஆனால் அவர்கள் வெளியிடும் சில கருத்துகள், எண்ணங்கள் சமுதாயத்தை அதிர வைக்கும்போது, ஜனநாயக ரீதியாக எதிர்வினை எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வது தவறல்ல. சுமார் பதினான்கு ஆண்டுகளாகப் பல்வேறு கட்டங்களிலும் திட்டமிட்டு வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டு, மிகவும் காலம் கடத்தப்பட்டு வந்த இந்த வழக்கில், தற்போது திடீரென்று விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்ற அவசரம் ஏன் ஏற்பட்டது?

ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான வழக்கில், கர்நாடக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த்தவே, பி.வி.ஆச்சாயா ஆகியோரின் இறுதி வாதமும், சுப்பிரமணிய சாமியின் இறுதி வாதமும் முடிவடைந்துவிட்ட நிலையில், இந்த வழக்கில் மற்றொரு மனுதாரரான தி.மு.கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா தனது வாதத்தை முன்வைக்க மனு செய்திருந்த நிலையில், “அன்பழகன் தரப்பில் வாதங்களை முன்வைக்க எந்த முகாந்திரமும் இலலை” என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபணை தெரிவித்ததை ஏற்று, நீதிபதிகள் இந்த வழக்கில் பேராசிரியர் அன்பழகன் தரப்பை மூன்றாம் தரப்பாகச் சேர்க்க என்ன

முகாந்திரம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

அதற்குப் பதிலளித்த, பேராசிரியரின் வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா, “கடந்த 2004ஆம் ஆண்டு எங்களது கோரிக்கையை ஏற்றுத்தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது அதன்படியேதான் வழக்கு கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் வழக்கில் நாங்கள் மூன்றாம் தரப்பாகச் சேர்க்கப்பட்டோம். பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்திலும், கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் நாங்கள் மூன்றாம் தரப்பாக ஆஜராகி எழுத்துப் பூவமாக வாதங்களை முன்வைக்கவும், வாய்மொழியாக வாதிடவும் அனுமதிக்கப்பட்டோம். பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, எங்கள் வாதங்களை ஏற்றுத் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அதன் பின்னரும் இந்த வழக்கில் கர்நாடக தரப்பு வழக்கறிஞர், பவானிசிங்கின் செயல்பாடுகள் சரியில்லை என்றும், அவரை மாற்ற வேண்டும் என்றும் நாங்கள் உச்சநீதிமன்றத்தில்

முறையிட்டோம். எங்கள் வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம் பவானி சிங்கை நீக்கியது” என்றெல்லாம் பேராசிரியர் அன்பழகன் தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டிய முக்கியத்துவம் பற்றிக் குறிப் பிட்டிருக்கிறாா.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் திரு. ஆச்சார்யா அவர்களின் வாதம் பாராட்டுக்குரியது; வழக்கிற்கு ஒளியூட்டக கூடியது. பல்வேறு கருத்துகளை உறுதியான ஆதாரத்தோடு எடுத்துவைத்து, நீதியும் நியாயமும் பாதுகாப்பாக நிலைத் திட வேண்டும் என்பதற்காகப் பெரும்பாடுபட்டிருக்கிறா.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, “இந்த வழக்கில் கர்நாடக அரசும், சுப்பிரமணிய சாமி தரப்பும் பல்வேறு வாதங்களை முன்வைத்துள்ள நிலையில், நீங்கள் புதிதாக என்ன சொல்லப் போகிறீர்கள்” என்று கேட்டிருக்கிறார்கள். பேராசிரியர் தரப்பில் என்ன வாதங்களை வைக்கப்போகிறார்கள் என்பதைக் கேட்காம லேயே நீதிபதிகளாகவே இவ்வாறு ஒரு முக்கிய வழக்கில் அனுமதியை மறுத்தது ஏன் என்பதற்கான பின்னணி எதுவாக இருக்கமுடியும் என்ற எண்ணம் நடுநிலையாளர்களுக்குத் தோன்றாமல் போய்விடுமா?

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை எதாத்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைக் கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்ததே தவறு என உத்தரவிடக் கோரி மூத்த வழக்கறிஞர் பர்மானந்த் கட்டாரா உச்ச நீதிமன்றத்திலே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருக்கிறார். அவ்வாறு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மனுவையும் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவாராய் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

10-3-2016 அன்று உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பர்மானந்த் கட்டாரா உச்ச நீதிமன்றத்தில் ஓர் இடை மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 374 (29ன்படி, ஓர் வழக்கில் 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை

தண்டனை வழங்கினால்தான், அந்த வழக்கில் மேல் முறையீடு

கூடாது. எனவே இந்த எழுத்தில் தவறாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இதற்கும் என்ன பதில் என்று இதுவரை தெரியவில்லை; எனினும் சொத்துக் குவிப்பு வழக்கு, தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருக்கிற து.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தரப்பு கட்டட

மீண்டும் இண்றைடுத்த விரும்புகிறேன்.

ஆஞ்சனேயா பிரிண்டர்சின் மதிப்பு 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் நிலையில், உயர் நீதிமன்றத்தில் 66 இலட்சம் ரூபாய் என்றும், உச்ச நீதிமன்றத்தில் அந்த மதிப்பீட்டை மேலும் குறைத்து 13 இலட்சம் ரூபாய் என்றும் ஜெயலலிதா தரப்பு தகவல் அளித்திருப்பதை திரு.ஆச்சார்யா எடுத்துக்காட்டியிருக்கிறார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜெயலலிதாவுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பில், “கணக்குப் பிழை இருந்த போதிலும், ஜெயலலிதா ஊழல் செய்யவில்லை என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவிலலை” என்பதை எடுத்துக்காட்டிய ஆச்சார்யா, “ஊழல் நடைபெற்றிருப்பது உறுதியாகியிருக்கும்போது, தண்டனையைக் கொடுத்தாக

வேண்டும்” என்றும் வாதிட்டா£.

ஆச்சார்யா எடுத்துவைத்த மற்றொரு வாதம், “வழக்கில் சோக்கப்பட்டுள்ள சொத்துக்கள் அனைத்தும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் மாறி மாறிக் கடனாகப் பெற்ற தொகையில் வாங்கியதாகக் கணக்கு

காட்டுகின்றனர். ஜெயலலிதாவிடமிருந்து சசிகலாவும்,

சசிகலாவிடமிருந்து ஜெயலலிதாவும் கடனாகப் பல கோடிகள் பெற்று, அதன் மூலமாகச் சொத்துக்கள் வாங்கியதாகக் கூறியுள்ளனர். ஆனால் கடன் கொடுப்பவருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்பதை அவர்கள் நிரூபிக்க வில்லை” என்பதாகும்.

மேலும் ஆச்சார்யா, “வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட ஒன்றரை கோடி ரூபாயை எவ்வாறு வருமானமாக உயர் நீதிமன்றம் கருதியது; தீர்ப்பு எவ்வாறு வழங்கியது என்பதைவிட, வழக்கில் ஆதாரங்கள், சாட்சிகளை எவ்வாறு கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியது எனத் தெரியவில்லை” என்றும் கேட்டுள்ளாரா.

அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, மூத்த வழக்கறிஞர் சித்தார்த்லூத்ரா ஆகியோர் எடுத்து வைத்த வேறு சில வாதங்கள் வருமாறு:-

“சாட்சியங்களின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் விசாரணை நீதிமன்றம் ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கியது. போயஸ் காடனிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டது. அதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் உள்ளிட்ட வற்றை விசாரணை நீதிமன்றம் தெளிவாக ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் அவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், 24 கோடி ரூபாய் கடனாகப் பெற்றுள்ளனர் என உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது மிகப்பெரிய தவறு. ஒரு கோடிக்கும் அதிகமாகப் பரிசுப் பொருள்கள் உள்ளதாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளதற்கு எந்த ஆதாரமும் இல்லை.”

“வழக்கில் விசாரணை நீதிமன்றம் எடுத்துக்கொண்ட அக்கறையில், பாதி அளவுகூட உயர் நீதிமன்றம் எடுத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் கூட்டல் கணக்கில் கூடப் பிழைகள் உள்ளன. உயா நீதிமன்றத் தீர்ப்பில், பக்கம் 997 மற்றும் 998இல் கணக்குப் பிழை உள்ளது தெளிவாகத் தெரிய வருகிறது”

நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினர் பல்வேறு வங்கிகளில வாங்கிய கடன்களை யெல்லாம், ஜெயலலிதாவின் வருமானமாகச் சேோத்துக்கொள்ள வேண்டுமென்று கூறி, இந்தியன் வங்கியிலிருந்து ஜெயலலிதா தரப்பினர் கடன்களைப் பெற்றார்கள் என்ற பட்டியலையும், அதன் கூட்டுத் தொகையையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பட்டியலை நீதிபதி குறிப்பிட்டவாறு சற்று விரிவாகச் சொல்ல வேண்டுமேயானால்,

ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெற்ற கடன் 1,50,00,000 குணபூசனியிடமிருந்து மாற்றப்பட்ட கடன 3,75,00,000 ஜெயலலிதா பெற்ற கடன் 90,00,000 ஜெ ரியல் எஸ்டேட் பெற்ற கடன் 25,00,000 ளெ.எஸ். ஹவுசிங் பெற்ற கடன் 12,46,000 ஜெ. பார்ம் ஹவுஸ் பெற்ற கடன் 50,00,000 சசிகலா பெற்ற கடன் 25,00,000 வி.என். சுதாகரன் பெற்ற கடன் 1,57,00,000 ராமராஜ் அக்ரோ மில்ஸ் பெற்ற கடன் 1,65,00,000

மகாலட்சுமி திருமண மண்டபத்திற்காக பெற்ற கடன் 17,85,274

ஆக மொத்தம் ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி அவர்கள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் மேலே கண்ட பட்டியலில் உள்ள பத்து கடன்தொகையையும் கூட்டல் கணக்குத் தெரிந்த யார் ஒருவரை விட்டுக் கூட்டச் சொன்னாலும், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய்தான் வரும். ஆனால் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் என்ன சொல்லியிருக்கிறா£ என்றால், இதன் கூட்டுத் தொகை 24,17,31,274 ரூபாய் என்றும், இந்தக் கூட்டுத்தொகையின் அடிப்படையில்தான் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு 66 கோடி ரூபாய்க்குத் தொடுத்தது தவறு என்றும் வியாக்யானம் செய்து, அவரை விடுதலை செய்திருக்கிறார்.

கடனாகப் பெற்றதை வருமானமாக எடுத்துக்கொண்டுதான், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு அவருடைய உண்மையான வருமானத்தில் 8 சதவிகிதமே என்றும், அவ்வாறு பத்து சதவிகிதத்திற்குக் குறைவாக வருவாய்க்கு அதிகமாகச் சொத்து சேர்க்கப்பட்டிருந்தால், அதனைக் குற்றமாகக் கருதித் தண்டனை வழங்கத் தேவையில்லை என்றும் எழுதித்தான்

இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா தரப்பினரை விடுதலை செய்திருந்தார்.

ஆனால் ஜெயலலிதா தரப்பினர் இந்தியன் வங்கியிலிருந்து பெற்ற கடன்கள் என்று வரிசையாகப் பட்டியலிட்டு, அதன் கூட்டுத் தொகை 24 கோடி ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பிலே தெரிவித்திருப்பது முற்றிலும் தவறான கூட்டல கணக்கு ஆகும்.

உண்மையான கூட்டுத் தொகையான 10 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் பார்த்தால், ஜெயலலிதா அவருடைய வருவாயைவிட 76 சதவிகிதம் கூடுதலாகச் சொத்துக் குவித்திருக்கிறார். அதன்படி அவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அது மாத்திரமல்ல; வருவாய்க்கு மேல் சொத்துக் குவிப்பு பத்து சதவிகித அளவுக்குள் இருந்தால், அதற்குத் தண்டனை இல்லை என்ற சட்டவிதி, தற்போதுள்ள சட்டத்திலே இடம் பெறவில்லை என்றும், 1988ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோதே இந்தச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தில இடம் பெறவில்லை என்றும் விரிவாகவும், விளக்கமாகப் பலராலும் எடுத்துக்கூறப்பட்டது. இந்த விவரங்களையெல்லாம் பலரும் எடுத்துக்காட்டி, தீர்ப்பலே இவ்வாறு இமாலயத் தவறு உள்ளது, எனவே இந்தத் தீர்ப்பை மாற்ற வேண்டும், அதற்கு உதவியாக இந்த வழக்கில் கர்நாடக அரசு தானே உச்சநீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்யவேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறாரகள்.

“போயஸ் கார்டன் மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட 17 கட்டிடங்களின் மதிப்பு 27 கோடி ரூபாய் எனத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருந்தது. ஆனால் உயர் நீதிமன்றம் இந்த மொத்தக் கட்டிடங்களின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய் என்று கணக்கிட்டுள்ளது. குற்றவாளிகள் தரப்பே, கட்டிடங்களின் மதிப்பை எட்டு கோடி ரூபாய் என்று பதிவு செய்துள்ள நிலையில், அதை ஐந்து கோடி ரூபாயாக உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது”

“இந்த வழக்கில் சட்டத்திற்கு மாறாக, பினாமி நிறுவனங்கள் மூலம் பெற்ற வருமானத்தைத் தனது வருமானமாக ஜெயலலிதா தரப்பில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. பினாமி சொத்துக்கள் மூலம் பெறப்பட்ட வருமானத்தை வாதத்திற்காகக் கணக்கில்

எடுத்துக்கொண்டாலும், அதன் மொத்த வருமானமே பத்து கோடியே 65 இலட்சம் ரூபாய்தான். ஆனால் உயர்நீதிமன்றம், இந்தத் தொகையை 24 கோடியே 17 இலட்சம் என்று அதிகரித்துக் கணக்கிட்டுள்ளது”.

“ஜெயலலிதா முதல்வராகப் பதவி வகித்த 1991-94 ஆம் ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை 1998இல் தான் தாக்கல் செய்துள்ளார். அதேபோல 1994-97ஆம் ஆண்டுகளுக்கான வருமானவரிக் கணக்கை 1999ஆம் ஆண்டில் தான தாக்கல் செய்துள்ளார். அதாவது வழக்குத் தொடரப்பட்டு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான், வருமான வரிக் கணக்கே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.”

“ஜெயா பப்ளிகேஷன்கீழ் இயங்கிய நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் தொழில் முறை வருமானம் 4 கோடியே 18 லட்சம் ரூபாய் என்று ஜெயலலிதாதரப்பில் கூறப்பட்டுள்ளது. அதை உயர் நீதிமன்றமும் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் ஆடிட்டர் கொடுத்த சாட்சியத்தில், நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் தொழில் முறை வருமானம் வெறும் 1 கோடியே 15 லட்சத்து 98 ஆயிரத்து 480 ரூபாய் தான் என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்”.

“ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர் பிரைசஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள 14 கோடி ரூபாய் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் சந்தா மூலமாகக் கிடைத்தது என குற்றவாளிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கால கட்டத்தில் நமது எம்.ஜி. ஆர். நாளிதழை சநதா கட்டி வாங்கும் திட்டமே நடைமுறையில் இல்லை. சந்தா தொடர்பாக எந்த விளம்பரமும் அந்த நாளிதழில் அப்போது வெளியிடப்படவில்லை. மேலும் 1999ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரிக் கணக்கில் இதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை. வழக்குத் தொடரப்பட்ட பின்புதான் இந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன”

“திருமணத்திற்காக 6 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டதாக அரசு தரப்பில் முனவைக்கப்பட்டது. அதை விசாரணை நீதிபதி 3 கோடி ரூபாய் என்று கணக்கிட்டார். ஆனால் அந்தத் தொகையை உயர் நீதிமன்றம் வெறும் 28 இலட்சம் ரூபாய் என்று கணக்கிட்டுள்ளது.”

இந்த வழக்கிலிருந்து 6 தனியார் நிறுவனங்களை விடுவித்ததற்கான காரணத்தை உயா நீதிமன்றம் விளக்கவில்லை. வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 6 நிறுவனங்களுக்கு இடையில் நடந்த பணப் பரிமாற்றம் அனைத்தும் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்குச் சொந்தமானதாகும். ஆனால் அந்தத் தொகை மற்றவர்கள் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. எந்த வணிக நடவடிக்கையும் நடைபெறாமல் வெறும் பினாமிகளாக மட்டுமே இந்த நிறுவனங்கள் இருந்துள்ளன. இவற்றை கர்நாடக உயர்நீதிமன்றம் கணக்கில் எடுக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெற்றக் கடனை திருப்பிச் செலுத்தியிருப்பது மற்றும் வங்கிகள் தந்ததாகக் கூறப்படும் கடன்தொகை ஆகியவற்றைக் கர்நாடக உயர் நீதிமன்றம் “வருமானம்” என்று தவறாகக் கணக்கிட்டுள்ளது.

அரசியல் சாசன அமர்வுக்குக் காரணமான இந்த வழக்கிலே, உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகுர் அவர்கள், “ஒரு கிரிமினல் வழக்கை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு இந்த மேல் முறையீடு வழக்கு ஒரு சான்று. மேலும் அதிகாரமும், செல்வாக்கும் மிக்கவர்கள் எப்படி நீதி வழங்கும் முறையில் தலையிட்டுத் தங்கள் விருப்பத்திற்கேற்ப அதை வளைத்திட முடியும் என்பதற்கும் இந்த வழக்கே சான்றாகும். கிரிமினல் வழக்குகளில் நீதி வழங்கும் முறை தோற்றுவிட்டது. இதைச் சீர்படுத்த வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்திருந்தார். (In a strongly-worded Judgement, Justice Lokur separately observed that Bhavani Singh’s continuation as prosecutor in the appeals was a sign of the “failure of criminal justice delivery system” and entire appeals proceedings stands vitiated. Justice Lokur observed that it indicated how persons in power with influence could “manipulate” the criminal justice delivery system.

Justice Lokur said the fact that the trial went on for 15 years is itself unfortunate proof that justice delivery system has become a tool in the hands of the influential and powerful.

He said the time to correct this malaise is now as this case 15 a “classic illustration” of what is wrong with justice dispensation in the country. )

உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகுர் அவர்கள் சொன்னபடி, நீதி வழங்கும் முறை தோற்றுவிட்டதா அல்லது அதனைச் சீர்படுத்தும் நேரம் வந்து அதற்கான முன்னுரை எழுதப்பட்டு விட்டதா என்பதைச் சில நாட்கள் பொறுத்திருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகுர் அவர்களும், மற்றொரு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அவர்களும் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி இவ்வாறெல்லாம் கருத்துத் தெரிவிக்க என்ன காரணம், அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டுள்ளதா என்று நமக்கெல்லாம் அய்யம் ஏற்படுவது நியாயம்தானே? மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமையப்போகிறது என்பதை இந்தியாவில் உள்ள சட்ட நிபுணர்களும், அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும் எல்லாவற்றுக்கும் மேலாகப் பொதுமக்களும் கூர்ந்து கவனித்துக்

கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை! அன்புள்ள, மு.க. 28-6-2016

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 54 PDF ↗