உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 54

தொகுதி 54 · கடிதம் 4019

சட்டமன்றம் நடந்தது; ஜனநாயகம் இருந்ததா?

2016-06-24

உடன்பிறப்பே,

தற்போது தமிழகச் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் முடிந்து பதவியேற்றுள்ள அ.தி.மு.க. அரசின் சார்பில் ஆளுநரின் முதல் உரையை 16-6-2016 அன்று பேரவையில் ஆளுநர் ரோசைய்யா அவர்கள் படித்துள்ளார். 2006ஆம் ஆண்டிலும், திராவிட முன்னேற்றக் கழகம் பொதுத் தேர்தல் முடிந்து பதவியேற்றவுடன், தி.மு. கழக அரசின் சார்பில் ஆளுநர் உரை திரு. எஸ்.எஸ். பர்னாலா அவர்களால் படிக்கப்பட்டது. அந்த உரையின் தமிழாக்கத்தைப் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் படித்தார். ஆனால் 2006ஆம் ஆண்டுக்கு முனபு இருந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநர் ஆற்றிய ஆங்கில உரையை, தமிழில் படிக்கும் பழக்கம் நிறுத்தப்பட்டிருந்தது. 2006ஆம் ஆண்டில், தி.மு.கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப் புக்கு வந்த பிறகு, ஆளுநர் உரையைத் தமிழில் பேரவையில் ஆற்றும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. நல்ல வேளையாக 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.தி.மு.க. அந்த நல்ல பழக்கத்தை இப்போதும் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

ஆளுநர் உரையாற்றி அவை கலைந்தவுடன், பேரவைத் தலைவர் அறையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் எப்போதும் நடைபெறும். அந்தக் கூட்டத்தில்தான் கூடடத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றியும், உறுப்பினர்களின் பலவேறு பிரச்சினைகள் பற்றியும் பேசப்படும். அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். கழக ஆட்சிக் காலத்தில் பெரும்பாலும் ஒவ்வொரு அலுவல் ஆயவுக்குழுக் கூட்டத்திலும், நான் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இன்றைய முதலமைச்சர்

ஜெயலலிதா, எந்தவொரு அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திலும் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை அவருடைய தகுதிக்கு அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது சரியாக இருக்காது என்று நினைப்பாரோ என்னவோ? அந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை வந்தால், அ.தி.மு.க. சார்பில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அமைச்சர்கள், முதல் அமைச்சர் அறைக்கு நேரில் சென்று முதல்வரின் கருத்தை அறிந்து வந்து, அதனை முடிவாகத் தெரிவிப்பார்கள். அதுவரை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திலே உள்ளவர்கள் அதற்காகக் காத்துக்கிடப்பார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவையில் எப்படி ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டதற்கு என்பதற்கு இது ஒரு சானறு.

ஆளுநர் உரைக்கு முதல் அமைச்சரா பதில் கூறும் நாளில், கடைசியாக எதிர்க்கட்சித் தலைவர் பேசிய பிறகுதான் முதலமைச்சர் ஆளுநர் உரைக்குப் பதிலளித்துப் பேசுவது வழக்கம், மரபு. எத்தனையோ ஆண்டுக் காலமாக இந்த மரபுதான் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு அந்த மரபை மாற்றி, எதிரக்கடசித தலைவரை முதல் நாள் பேசவிட்டு, மறுநாள் முதலமைச்சர் மட்டும் பதில் கூறுகின்ற பழக்கம் இதுவரை இலலாத, சட்டமன்றம் பின்பற்றாத ஒரு புதிய ஏற்பாடு. இதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயக மரபுகளைப் பாதுகாக்கும் இலட்சணம்.

30-5-2006 அன்று நான் முதலமைச்சர் என்ற முறையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்தேன். அன்றையதினம் பா.ம.க. சார்பில் ஜி.கே. மணி அவர்களும், காங்கிரஸ் கட்சியின் சார்பாக சுதர்சனம் அவர்களும் பேசிய பிறகு நான் பேசினேனே தவிர, அன்றைய தினம் முதலமைச்சராக இருந்த நான் மட்டுமே பேச வேண்டுமென்று வலியுறுத்தவும் இலலை, அவ்வாறு பேசவும் இலலை.

2007ஆம் ஆண்டு, 20-1-2007 அன்று ஆளுநர் பேரவையில்

உரையாற்றினார். அப்போது எதிர்க் கட்சியிலே இருந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலே எழுந்து அநாகரிகமாகக் கூச்சலிட்டு

இருந்தபோதிலும், எதிரிக் கட்சியாக நடந்துகொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தம்பி மு.க. ஸ்டாலின் கூறியதோடு, சில கோரிக்கைகளையும் வைத்தார். அதில் முதல் கோரிக்கை, என்னுடைய உடல் நிலை கருதி, நான் அமருவதற்கேற்ற இட வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதாகும். என்ன செய்தார்கள் தெரியுமா? ஸ்டாலினும் துரைமுருகனும் அமர்ந்திருக்கும் இடத்திற்குப் பின் வரிசையில், அதாவது இரண்டாவது வரிசையில், சக்கரநாற்காலி போக முடியாத இடத்தில், இட வசதி செய்து அல்ல, இடம் ஒதுக்கி அறிவித்தார்கள். இரண்டாவது கோரிக்கையாக ஆளுநர் உரையில் தி.மு. கழகத்தின் சார்பாக 89 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு வந்திருப்பதாலும், அதிக எதிர்க்கட்சிகள் இலலாததாலும், தற்போது கேள்வி நேரத்திற்காக அன்றாடம் ஒதுக்கப்படும் ஒன்றரை மணி நேரம் செலவாகாத காரணத்தினாலும், ஒவ்வொரு நாளும் மூன்று தி.மு.கழக உறுப்பினர்கள் பேசுவதற்கு வாயப்புத தரவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையும் ஏற்றுக்கொள்வதற்கான பெருந்தன்மை ஆளுங்கட்சிக்கோ, பேரவைத் தலைவருக்கோ வரவில்லை. நாள் ஒன்றுக்கு இரண்டு பேர் பேசுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதுவும் அ.தி.மு.க. வின் இறுக்கமான ஒரு வழிப்பாதை ஜனநாயகம்தான.

அடுத்த கோரிக்கைதான், முதலமைச்சர் ஆளுநர் உரைக்குப் பதில் பேசுவதற்கு முன், அதே நாளில் எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும் என்பது. பல ஆண்டுக் காலமாகப் பேரவையில் இருந்த இந்த மரபு தொடரப்பட வேண்டுமென்ற ஆர்வத்தில் கேட்டுக்கொண்டோம். ஆனால், அந்த ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டது.

ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளிக்க வேண்டியவர் முதல் அமைச்சர். உடல் நிலை காரணமாக முதலமைச்சர் பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டால், முதலமைச்சருக்குப் பதிலாக அவருக்கு அடுத்துள்ள அமைச்சர் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு பதிலளிக்கப் போகிறவர், ஆளுநர் உரை மீதான விவாதம் அவையில் நடக்கின்றபோது, அதுவும் குறிப்பாக எதிர்வரிசையிலே உள்ள உறுப்பினர்கள் பேசும் போது அவையிலே இருந்து, என்ன பேசுகிறார்கள் என்பதைத் தாங்களே குறிப்பெடுத்து, அதற்குப் பதில் தயாரித்துக்கொண்டு

வந்து பேச வேண்டும். முடிந்தால் எதிர் வரிசையிலே உள்ளவர்கள் பேசும்போது அவர்களின் கருத்துக்கு முதலமைச்சர் பதில் கூற வேண்டும். ஆனால் இப்போது என்ன நிலைமை? ஆளுநர் உரை மீ தான விவாதம் நடைபெற்றபோது, முதல்அமைச்சர் ஜெயலலிதா அவையிலே எத்தனை மணி நேரம் இருந்தார்? ஒரே ஒரு நாள் மட்டும், அதுவும் ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ மட்டும் அவையிலே இருந்து, அப்போதும் கச்சத் தீவுப் பிரச்சினை மீது பேசுவதற்குத் தி.மு. கழகத்திற்கு, குறிப்பாக எனக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது என்று ஆவேசமாகச் சண்டமாருதம் செய்துவிட்டு, அவையைவிட்டுப் போனவர்தான், பிறகு விவாதத்திற்குப் பதில் சொல்கின்ற இறுதி நாள் அன்றுதான் சட்டப்பேரவைக்கே வந்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர், தம்பி ஸ்டாலினோ, மற்ற எதிர்க்கட்சி வரிசையிலே உள்ளவர்களோ பேசும்போது, பேரவைக்கே வரவில்லை. இதிலிருந்தே முதல் அமைச்சர் பேரவையை எந்த அளவுக்கு மதிக்கிறார், எதிர்க்கட்சி உறுப்பினர்களை எந்த அளவுக்குப் போற்றுகிறார் என்பது தெளிவாகிறது என்பதைவிட, எந்த அளவுக்குக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய ஜனநாயகத்தைக் காலடியில் போட்டு மிதிக்கிறார் என்பதுதான் தெளிவாகிறது.

சட்டப்பேரவையைப் பொறுத்தவரை பேரவைத் தலைவாதான் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும் எல்லா உறுப்பினர்களுக்கும் சோத்துத் தலைவர். அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர். பேரவைத் தலைவர் யாராக இருந்தாலும், அவருக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும், எதிரக்கட்சியைச் சேர்ந்தவர்களும் உயரிய மதிப்பு அளித்தாக வேண்டும். ஆனால் தமிழகத்திலே சட்டப்பேரவையிலே என்ன நிலைமை? பேரவைத்தலைவரே ஒரு பூங்கொத்தைத் தூக்கிக்கொண்டு, இடுப்பொடியக் குனிந்து, அந்தப் பூங்கொத்தை முதல் அமைச்சரிடம் கொடுத்து வரவேற்கின்ற ஜனநாயகக் கொடுமையை இங்கேதான் பாக்க முடியும்.

இன்னும் சொல்லப்போனால், சட்டப்பேரவையைப் பொறுத்தவரை பேரவைத் தலைவர்தான் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எல்லா உறுப்பினர்களுக்கும் சேர்த்துத் தலைவர். அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர். பேரவைத் தலைவர் யாராக இருந தாலும், அவருக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் உயரிய மதிப்பு அளித்தாக வேண்டும். ஆனால் தமிழகத்திலே சட்டப்பேரவையிலே என்ன நிலைமை? பேரவைத் தலைவரே ஒரு பூங்கொத்தைத் தூக்கிக் கொண்டு, இடுப்பொடியக் குனிந்து, அந்தப் பூங்கொத்தை முதல் அமைச்சரிடம் கொடுத்து வரவேற்கின்ற ஜனநாயகக் கொடுமையை இங்கேதான் பார்க்க முடியும்.

அடுத்து, தமிழகச் சட்டமன்றத்திலே கடந்த முறையும் சரி, இப்போதும் சரி, எதிர்க்கட்சி சார்பில் உறுப்பினர்கள் எந்தக் கருத்தைச் சொல்ல ஆரம் பித்தாலும், உடனே ஏதோ ஒரு அமைச்சர் எழுந்து குறுக்கிட்டு அதற்கு விளக்கம் சொல்ல முயலுவதும், பேச வந்த உறுப்பினரின் நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி, பேரவைத் தலைவர் உட்காரவைப்பதும் கொடுமையிலும் கொடுமை. அமைச சர்கள் அவ்வாறு எழுந்து விளக்கம் அளிப்பது எப்படி என்றால், அதிலே பெரும் பகுதி “அம்மா” புராணம்தான்! அவர்களால் பதில் சொல்ல முடியாத கேள்வி என்றால், உடனே பேரவைத் தலைவர் எழுந்து, உறுப்பினர் வேறு பொருள் பற்றிப் பேசலாம் என்று கூறி, பேசத் தொடங்கியதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிடுவார். இதுதான் அ.தி.மு.க. பின்பற்றும் சட்டமன்ற ஜனநாயகம்.

குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர், தம்பி மு.க. ஸ்டாலின் பேசத் தொடங்கியதிலிருந்து ஏராளமான குறுக்கீடுகள். குறுக்கீடுகளால சிறிதும் குலைந்துவிடாமல்தான் அவர் தமிழகத்தின் பல பிரச்சினைகளை எடுத்துரைத்தார். அதற்கிடையே தமிழகத்திலே நடைபெற்ற, கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் கடத்தல் - கரூருக்குப் பக்கத்திலே அமைச்சர்களுக்கு நெருங்கிய அன்புநாதன் என்பவர் வீட்டில் நடைபெற்ற சோதனை - நிதியமைச்சர் தம்பி மீதே பல ஆண்டு காலமாக நடைபெற்றுவரும் வழக்கில், அரசு வழக்கறிஞரே, தான் அந்த வழக்கிலிருந்து காவல் துறை ஒத்துழைக்காததால் விடுவித்துக்கொள்வதாக நீதிபதிக்கு எழுதிக் கொடுத்துள்ள கடிதம் ஆகியவை பற்றிப் பேச முனைந்த

நேரத்தில், அவரைப் பேசுவதற்கே அனுமதிக்கவில்லை. “இந்தப் பிரச்சினைகள் பற்றிப் பேச வேண்டாம்” என்றால், இதிலே எந்த வாரத்தை அவையிலே பேசக் கூடாத, கண்ணியக் குறைவான, அநாகரீ கமான வார்த்தை? இந்த அரசாங்கத்தைக் குறை கூறிக்கூட அலல, நாட்டு மக்களுக்கு விளக்கம் தாருங்கள் என்று கேட்கக் கூடப் பேரவையிலே ஜனநாயகம் அனுமதிக்கவில்லையா? ஆளுங்கட்சியினர் பக்கம் நேர்மை - நியாயம் இருந்தால் விளக்கம் அளிக்க முன்வர வேண்டியதுதானே? எதற்காக ஜனநாயக ரீதியான அணுகுமுறையைக் கண்டு, ஓட்டம் பிடிக்கிறார்கள்? இதுதான் தமிழகச் சட்டப் பேரவையா? ஐனநாயகத்திற்குப் புறம்பான இப்படிப்பட்ட காட்சிகள்தான் இங்கே தொடர்ந்து அரங்கேறுமா? ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாகப் போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயகம் புத்துயிர் பெற வழியேதும் உண்டா?

அன்புள்ள, மு.க. 24-6-20168

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 54 PDF ↗