தொகுதி 54 · கடிதம் 4018
கச்சத் தீவு பற்றி ஜெயலலிதாவின் கருத்துக்கு மறுப்பு
2016-06-22
உடன்பிறப்பே,
“கச்சத் தீவு” பற்றித் தமிழகச் சட்டப்பேரவை யில் நேற்றையதினம் (20-6-2016) பிரச்சினை ஏற்பட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சத் தீவு பற்றிப் பேச கருணாநிதிக்கு அருகதை இல்லை என்று ஆவேசமாக முழங்கியிருக்கிறார். 1991ஆம் ஆண்டிலிருந்து அவர் இதே கதையைத் தொடர்ந்து பேரவையிலும், வெளியிலும் பல முறை கூறி, அதற்கு நான் அவ்வப்போது விளக்கமும் அளித்து விட்டேன். தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்? இருந்தாலும் இப்போது அவர் “கச்சத் தீவு” பற்றியும், என்னைப் பற்றியும் பேசியிருப்பதால், மீண்டும் அது பற்றிய விளக்கத்தை ஒரு முறை அளிக்கிறேன்.
உதாரணமாக, 22-83-2009 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், “கச்சத் தீவை இந்தியா இலங்கைக்குத் தாரை வார்த்தபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் கைகட்டி, வாய் பொத்திக் கொண்டிருந்தவர்தான் தற்போது தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கிறார்” என்றார். உடனடியாக நான், “கச்சத் தீவை இந்தியா தாரை வார்த்தபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் நான் இருந்ததாகச் சொல்கிறாரே, நான் தெரிவித்த எதிர்ப்பை ஆதாரபூர்வமாக எடுத்துச்சொன்னால் - எழுதியது தவறு என்று மன்னிப்புக் கேட்க ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா?” என்று எனது அறிக்கையில் கேட்டேன்.
15-86-1991 அன்று ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து கோட்டையிலே சுதந்திர தின விழாவினைக் கொண்டாடிய போது ஆற்றிய உரைக்கு அனைத்து ஏடுகளும் கொடுத்த தலைப்பே,
“கச்சத் தீவை மீட்க ஜெயலலிதா சபதம்” என்பதுதான். “கச்சத் தீவைத் திரும்பப் பெற மத்திய அரசுடன் வாதாடவும், தேவை ஏற்பட்டால் போராடவும் இந்த அரசு தயாராக உள்ளது. இது எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட ஒரு வாக்குறுதியாகும். இந்த மண்ணின் ஒரு பகுதியைத் திரும்ப மீட்கும் சூளுரையாக இதனைத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று 1991ஆம் ஆண்டு முழங்கிய ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரையிலும் - பிறகு 2001 முதல் 2006ஆம் ஆண்டுவரையிலும், 2011 முதல் இதுவரையில் பதினைந்து ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்தபோது கச்சத் தீவை ஏன் மீட்கவில்லை? 1991ஆம் ஆண்டு அவர் செய்த சபதம் என்னவாயிற்று? அதற்காக அவா மத்திய அரசை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் எத்தனை? அவ்வப்போது மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியதைத் தவிர, வேறு என்ன கிழித்தார்? இதைத்தான் பேரவையில் நேற்று, கழக உறுப்பினர் தம்பி பொன்முடி கேட்டிருக்கிறார். உடனே முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து நின்று, கச்சத் தீவு பற்றிப் பேசக் கருணாநிதிக்கு அருகதை இல்லை என்று ஆவேசமாகச்
சொன்னாராம்!
“கச்சத் தீவைத் திரும்பப் பெற மத்திய அரசுடன் வாதாடவும், தேவை ஏற்பட்டால் போராடவும் இந்த அரசு தயாராக உள்ளது. இது எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட ஒரு வாக்குறுதியாகும். இந்த மண்ணின் ஒரு பகுதியைத் திரும்ப மீட்கும் சூீளுரையாக இதனைத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று 1991ஆம் ஆண்டு முழங்கிய ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரையிலும் - பிறகு 2001 முதல் 2006ஆம் ஆண்டுவரையிலும், 2011 முதல் இதுவரையில் பதினைந்து ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்தபோது கச்சத் தீவை ஏன் மீட்கவில்லை? 1991ஆம் ஆண்டு அவர் செய்த சபதம் என்னவாயிற்று? அதற்காக அவர் மத்திய அரசை எதாத்து நடத்திய போராட்டங்கள் எத்தனை? அவ்வப்போது மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியதைத் தவிர வேறு எனன கிழித்தா£?
சரி. ஆனால் நான் ஏதோ ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருந்ததாக, தற்போது எப்படியோ தப்பித் தவறிக் கரையேறி விட்டோம் என்ற இறுமாப்பில் வாய் நீளம் காட்டியிருக்கிறார்.
முதலில், மத்திய அரசால் கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்ட போது தி.மு.க. எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது உண்மையா?
“இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத் தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி, இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத் தீவின்மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்திஅமைக்க முயற்சி எடுத்து, தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது”
- எனவே தி.மு.க. அப்போது வாயைப் பொத்திக்கொண்டு சும்மா இருக்கவில்லை. மேலும் அந்தத் தீர்மானத்தில் நான பேசும்போது,
“கச்சத் தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது, தமிழ் மக்கள் அதை விரும்பமாட்டார்கள் என்பதைப் பற்றிப் பல நேரங்களில் மத்தியப் பேரரசுக்குத் தமிழக அரசு எடுத்துச்சொல்லி இருக்கிறது. நடைபெற்ற ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் இந்தியா கச்சத் தீவை விட்டுத் தருவது கூடாது என்ற கருத்து, தமிழக தி.மு.க. அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது”.............
“கச்சத் தீவுப் பிரச்சினையை முடிந்து விட்ட பிரச்சினையாகக் கருதாமல் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்கின்ற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதில் தமிழ்நாட்டு மக்கள் யாருக்கும் அலலது அந்த மக்களுக்குப் பிரதிநிதிகளாக இருக்கின்ற எந்தக் கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதற்கு எந்தவகையான நியாயமும் இல்லை என்பதை நான் கூற
விரும்புகிறேன்.
தமிழக அரசிடம் இது போன்ற பெரிய பிரச்சினைகளில் மத்திய அரசு தன்னுடைய ஒப்புதலைக் கேட்கவில்லை; ஆக்கபூர்வமான முறையில் பிரதமர் - முதல் அமைச்சர் இது பற்றி ஆலோசனை நடத்துவதற்கு வாயப்புக் கூறுகள் வழங்கப்படவிலலை என்று நாம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
அனைத்துக் கட்சிகளினுடைய தலைவர்கள் அடங்கிய கூட்டத்திலேகூட - எத்தனை முறை இது பற்றிப் பிரதமரிடத்தில் தமிழக அரசின் சா£பிலே ஒரு முறையீடாக, இந்த அரசு கச்சத் தீவுப் பிரச்சினையில் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியது, பிரதமருக்குத் தமிழக அரசின் சா£ாபில எழுதப்பட்ட கடிதத்திலே எவ்வளவு ஏராளமான ஆதாரங்களை - கச்சத் தீவு தமிழ்நாட்டுக்கு, இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்பதை வலியுறுத்தும் வகையில் வழங்கியது,
அதைப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது என்பதையும் அனைத்துக்கட்சித் தலைவர்கள்
கூட்டத்திலேயே எடுத்துக்காட்டியிருக்கிறேன்.
தனது ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவைத் திரும்பப் பெறுவதற்காகப் பலவேறு முயற்சிகளை மேற்கொண்டேன் என்று அறிக்கைவிடும் ஜெயலவிதா, பதினைந்து ஆண்டுக் காலம் ஆட்சியிலே இருந்தபோது - கச்சத்தீவை மீட்கும் பிரச்சினையிலே தனது சபதத்தை நிறைவேற்ற உண்மை யிலேயே அதில் உறுதியாக இருந்தால், அ.தி.மு.க. ஆட்சி ராஜினாமா செய்யும் என்று எப்போதாவது அறிவித்தது உண்டா? விடுதலை நாள் விழாவிலே கோட்டைக் கொத்தளத்திலே இருந்துகொண்டு வாய்ச்சவடாலாக முழங்கிவிட்டு - அந்தப் பேச்சு ஏடுகளில் எல்லாம் கொட்டை எழுத்துக்களில் வெளிவந்ததே தவிர - வேறு என்ன செய்தா£? உச்ச நீதிமன்றத்திலே வழக்கைப் போட்டு விட்டு, என் கடமை முடிந்துவிட்டது என்று இருந்தாரே தவிர வேறு என்ன செய்தா£?
அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதியன்று கோட்டையிலே கூடி எடுத்த முடிவினை உடனடியாக நான் தலைமை அமைச்சருக்கு எழுதியிருக்கிறேன். அலு பருவம்.
Dear Prime Minister,
On behalf of the Government of Tamil Nadu and on behalf of the people of Tamil Nadu, I am constrained to express our deep sense of disappointment over the recent Indo-Sri-Lanka agreement, according to which, Sri Lanka’s claim to Kachativu has been conceded by the Government of India.
May I express the hope that you will take into consideration the unanimous decision contained in the Resolution and take appropriate action?
(அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு, கச்சத் தீவின்மீது இலங்கை கொண்டாடிவரும்
உரிமையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு இரு நாடுகளுக்குமிடையே சமீபத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தமிழக அரசின் சார்பாகவும் தமிழக மக்களின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தைக் கருத்திலே எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்வீகள்
என்று நான் நம்புகிறேன்.) மேலும் அப்போது நான் ஆற்றிய உரையில்,
“1974ஆம் ஆண்டு ஜூன் 27ம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இது பற்றி எந்தவிதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்கவில்லை. 2[ம்தேதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப்போய் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன். சில பேருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தேன். சில தலைவர்களுக்கு அதிகாரிகளையே அனுப்பினேன். அவ்வளவு அக்கறையோடு இந்தக் காரியத்தில் நாங்கள் செயல்பட்டிருக்கிறோமே அல்லாமல், இதில் தமிழக அரசு கச்சத் தீவை இலங்கைக்கு அளிப்பதில் எந்த விதத்திலும் உடந்தையாக இல்லை என்பதை நான் மனப்பூரவமாகச் சொல்லிக்கொள்கிறேன்.”
அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு, 24.1.1914 அன்று தி.மு.கழகத்தின் சா£ாபில் தமிழக மெங்கும் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டு, தஞ்சை, பாபநாசம் ஆகிய இடங்களில் நானே கண்டனக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறேன்.
பின்னர் ஒரு முறை செய்தியாளர்கள் “கச்சத் தீவு” பற்றி என்னைக் கேட்டபோதுகூட, கச்சத் தீவை விட்டுக் கொடுக்கும்போது, தமிழ்நாடு தி.மு.க. அரசு அதனை வன்மையாக மறுத்திருக்கிறது. அப்போது இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்தார். அவர்கள் சமாதானம் செய்து - கச்சத் தீவிலே நமக்குள்ள உரிமைகளுக்கெல்லாம் வழிவகுத்து விதிகள் செய்யப்பட்டன. அந்த உரிமைகள் - தேவாலயத்திற்கும், கிறித்தவ ஆலயத்திற்கும்
இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட, கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகு முன்னர் இதைப்பற்றித் தமிழக மக்களிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை” என்று அப்போதே தினமணி எழுதியிருந்தது. அதே தலையங்கத்தில், “1976இல் இந்திய நாட்டில் அமலில் இருந்த நெருக்கடி காலத்தில், மக்களைக் கலந்தாலோ சிக்காமல் இலங்கை அரசுடன் செய்து கொண்ட மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம், இந்திய மீனவாகளுக்கு கச்சத் தீவின் அருகில் மீன் பிடிக்கும் பரம்பரை உரிமையும் விட்டுக் கொடுக்கப்பட்டது” என்று எழுதப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு பற்றியும் “டெசோ” கூட்டத்தில் நான் பேசியது பற்றியும் நேற்றையதினம் ஜெயலலிதா பேரவையில் பேசியிருக்கிறார்.
“கச்சத் தீவு” பற்றிய வழக்கில் மத்திய அரசின் சா£ாபில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், “கச்சத் தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா - இலங்கை இடையே நீடித்து வந்தது; அதைத் தொடர்ந்து இந்திய -இலங்கைக் கடல பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்தபோது,
கச்சத் தீவு இலங்கை வரம்புக்குள் சென்றுவிட்டது. அதன் பிறகு 1974ஆம் ஆண்டில் இந்தியா - இலங்கை இடையே கச்சத் தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1976ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும், கச்சத்தீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய எல்லைக்கோட்டுக்குள் இருந்த கச்சத் தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததாக மாயை ஏற்படுத்துவது தவறானது” என்றெல்லாம் தெரிவித்தது.
கச்சத் தீவைப் பொறுத்தவரையில், அதனைத் தாரைவார்க்க நான் எந்தக் காலத்திலும் ஒப்புக்கொண்டதும் இல்லை; உடன்பட்டதும் இல்லை. தமிழகத்தின் முதல் அமைச்சர் என்ற முறையில் என்னுடைய எதிர்ப்பை நான் அப்போதே தெரிவித்திருக்கிறேன். உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து அவர்களிடம் கருத்தறிந்திருக்கிறேன். ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரே ஒரு முறையாவது தமிழ்நாட்டிலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து கச்சத் தீவை மீட்பது பற்றிக் கலந்தாலோசனை நடத்தியது உண்டா?
பேரவையில் பேசும்போது, “1974இல் கலைஞர் கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன், பதறிப் போனேன் என்கிறாரா; ஆனால் 2013இல், ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே இவர் சொல்லித்தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப் பட்டன என்கிறார். இது என்ன வேறுபாடு?” என்று கேட்டுள்ளார்.
15-4-2013 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, குறைந்தபட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலாத்திக் கொள்வதற்கான உரிமையும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில்
செழியன் நாடாளுமன்றத்தில் கூறினார். பார்வர்டு பிளாக் கட்சியின் உறுப்பினராக இருந்த அருமை நண்பர் மூக்கையா தேவா, “எனது இராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றார். “இலங்கையின் நட்பைப் பெறுவதற்காகவே ரகசிய பேரம் நடத்திக் கச்சத் தீவைத் தானமாக வழங்கியுள்ளது” என்று வாஜ்பாய் பேசினார். இப்படிப்பட்ட கருத்துக்களை மாநிலங்களவையில் கழகத்தின் சார்பில் எஸ்.எஸ். மாரிசாமி, சோஷலிஸ்ட் கட்சி சார்பில் ராஜ்நாராயண், முஸ்லீம் லீக் சார்பில் நண்பா அப்துல் சமது ஆகியோர் தெரிவித்தனர்.
20-4-1992 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேசும்போது, “கச்சத் தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி னோம். ஆனால் கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக்கூடிய, நடை பெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்று கூறினாரா? இல்லையா?
எந்தப் பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடும் ஜெயலலிதா, கச்சத்தீவுப் பிரச்சினையில், “கச்சத் தீவை மீட்பது விரைவில் நடக்கக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்றும், “கச்சத் தீவைப் பிரித்துக் கொடுத்தது, இரு நாடுகளுக்குமிடையே நலலுறவு வேண்டும் என்பதற்காகத்தான்” என்றும்; “கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏறறுக கொள்ளலாம்” என்றும் சொன்னவர் என்பது பதிவாகி இருக்கிறது. எனவே ஜெயலலிதா அவ்வப்போது நினைத்துக்கொண்டு என் மீது வசைபுராணம் பாடுவதை
இனியாவது நிறுத்திக்கொள்வது நலலது!
இன்னும் சொல்லப் போனால், 30-9-1994 இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த திரு. நரசிம்மராவ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், “The Ceding of this tiny Island to the Island Nation had been done by the Government of India in the interest of better bilateral relations”
அதாவது “தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ்சிறிய
தீவினை (கச்சத் தீவினை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான்” என்று தெரிவித்தது உண்டா இல்லையா?
மீண்டும் 23-7-2003 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா, அன்றைய பிரதமர் வாஜ்பய் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நலலுறவு பேணப்படவும், தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் உரிமைகள் காப்பாற்றப்படவும் உள்ள ஒரே வழி என்று குறிப்பிட்டு மேலும் எழுதும்போது, “The best possible solution 15 to get the island of Katcha Theevu and adjacent seas on lease in perpetuity solely for fishing, drying of nets and pilgrimage. Sri Lanka’s Sovereignty over Katcha Theeve could be upheld at the same time” அதாவது கச்சத் தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காயவைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தரக் குத்தகைக்குப் பெறலாம்; அதே நேரத்தில் கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக்கொள்ளலாம் என்று அன்றைக்கு எழுதியவர்தான் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா.
மீண்டும் ஒரு முறை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், “கச்சத் தீவுப் பிரச்சினை என்பது மற்றொரு நாட்டுடனான பிரச்சினை. அதை மீட்கக்கூடிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது. மாநில முதல் அமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்திருந்தால் அன்றைக்கே கச்சத்தீவு மீட்கப்பட்டிருக்கும்” என்றார். அதையெலலாம் மறந்துவிட்டு அல்லது மறைத்து விட்டுத்தான் இப்போது, கச்சத் தீவை நான் தான் தாரைவார்த்தேன் என்று பேரவையில் பேசுகிறார்.
கச்சத் தீவைப் பொறுத்தவரையில், அதனைத் தாரை வார்க்க நான் எந்தக் காலத்திலும் ஒப்புக்கொண்டதும் இலலை; உடன்பட்டதும் இல்லை. தமிழகத்தின் முதல் அமைச்சர் என்ற முறையில் என்னுடைய எதிர்ப்பை நான் அப்போதே தெரிவித்திருக் கிறேன். உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து அவர்களிடம் கருத்தறிந்திருக்கிறேன். ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரே ஒரு முறையாவது தமிழ்நாட்டிலே உள்ள அனைத்துக்
கட்சித் தலைவர்களை அழைத்து கச்சத்தீவை மீட்பது பற்றி கலந்தாலோசனை நடத்தியது உண்டா? நான் முதலமைச்சராக இருந்த காலத்தில், எந்த அளவுக்குக் கச்சத் தீவினை மீண்டும் பெறுவதற்காகப் போராட முடியுமோ, வாதாட முடியுமோ அந்த அளவுக்குப் போராடியிருக்கிறேன், வாதாடி இருக்கிறேன். ஆனால் எந்தப் பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடும் ஜெயலலிதா, கச்சத் தீவுப் பிரச்சினையில், “கச்சத் தீவை மீட்பது விரைவில் நடக்கக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்றும், “கச்சத் தீவைப் பிரித்துக் கொடுத்தது, இரு நாடுகளுக்குமிடையே நலலுறவு வேண்டும் என்பதற்காகத்தான்” என்றும்; “கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக்கொள்ளலாம்” எனறும் சொன்னவர் என்பது பதிவாகி இருக்கிறது. எனவே ஜெயலலிதா அவ்வப்போது நினைத்துக் கொண்டு என் மீது வசைபுராணம் பாடுவதை இனியாவது நிறுத்திக்கொள்வது நலலது! அன்புள்ள, மு.க. 22-6-2016
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 54 PDF ↗