உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 53

தொகுதி 53 · கடிதம் 4010

உத்தரவிடுங்கள் உங்களுக்காக உழைத்திட!

2016-04-22

உடன்பிறப்பே,

பதினைந்தாவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (22-4-2016) முதல் தொடங்குகிறது. கழகத்தின் சார்பில் விருப்ப மனுதாக்கல் செய்து, எனது தலைமையில் அமைக்கப்பட்ட நேர்காணலுக்கு வந்து, குழுவினர் ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்கள். கழகத்தின் சார்பில் ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் ஒருசிலர் மாற்றப்பட்டுள்ளார்கள். அப்படி மாற்றங்கள் செய்யப்பட்ட காரணத்தால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகியிருக்கலாம். மாற்றத்திற்கான அடிப்படையும் அவர்கள் அறியாததல்ல. எனினும் முதலில் அறிவிக்காமல் இருந்திருக்கலாம்; அறிவித்துவிட்டுப் பின்னர் வாய்ப்பு நழுவி விட்டதே என்ற மனக்குறை அவர்களுக்கெல்லாம் இருக்கலாம். அவர்கள் எல்லாம் வேறுவழியின்றி செய்யப்பட்ட மாற்றத்தினைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று முதலிலேயே கேட்டுக்கொள்கிறேன். வேட்பாளர் மாற்றப்படுவதைக் கூடத் தவிர்க்க நினைத்து, எப்படியாவது கழகம் ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தமிழக மக்கள் காப்பாற்றப்பட இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்ற எண்ணத்தோடுதான் மாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை மனதிலே கொள்ளவேண்டும். நான் முன்பே தெரிவித்தவாறு, இந்தத் தேர்தலில் தி.மு. கழகம்தான் அண்ணா தந்த உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது, வேட்பாளராக ஒவ்வொரு தொகுதியிலும் நிற்பது மு. கருணாநிதி தான் என்ற எண்ணத்தை மனதிலே நீ செதுக்கி வைத்துக் கொள்வாயானால், பொதுவான நோக்கத்திற்காக மாற்றத்திற்கு ஆளான வேட்பாளர்கள் எவ்வித வருத்தத்திற்கும் ஆளாகத் தேவையிருக்காது!

வாய்ப்பு கிடைக்காதவர்கள், வாய்ப்பு கிடைத்து பின்னர் மாற்றப்பட்டவர்கள் ஆகியோர் கழகம் வெற்றி பெற்றால், அதுவே தங்கள் வெற்றி, அந்த வெற்றியில்

நமது பங்களிப்பும் வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு பணியாற்றிட வேண்டுமென்று உங்கள் அண்ணன் என்ற

முறையில் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்து, இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்னை நேரில் சந்தித்து, தாங்கள் செய்த குற்றம் என்ன என்றும், தாங்கள் கழகத்திற்காக உழைக்கவில்லையா என்றும், தங்களை ஏன் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கவில்லை என்றும் கேள்விக்கணைகளைத் தொடுத்த நேரத்தில் என்னால் அவர்களுக்குப் பதில் சொல்லி அமைதிப்படுத்த முடியவில்லை. அவர்கள் பேசுவதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு முன்பு ஒரு சிலர் என்னிடம் வலியுறுத்த வந்தவர்கள், பின்னர் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும் என்னைச் சந்திக்கவே வரவில்லை. உதாரணம் கூற வேண்டுமேயானால், கழகத்திற்காக நீண்ட நெடுங்காலம் உழைத்தவர் ஆற்காடு வீராசாமி. ஏன் கழகத்தின் பொருளாளராகவே இருந்து சிறப்பாகப் பணிபுரிந்தவர். சிறைக்குச் சென்று செவிப்புலனை இழந்திடும் அளவுக்குக் கடுமையாக அடிபட்டவர். அவருடைய மகனுக்காக இந்த முறை வாய்ப்பு கேட்டார்; அளிக்க முடியவில்லை. அதுபோலவே தஞ்சையில் எல். கணேசன். கழகத்தில் மாணவர் இயக்கம் தோன்றவும், மாணவர்களை மொழிப் போராளிகளாக மாற்றவும் காரணமாக இருந்தவர். அவரும் தன் மகனுக்காக வாய்ப்பு கேட்டார்; அளிக்க முடியவில்லை. அந்தத் தொகுதியில் வேறு யாருக்கோ வாய்ப்பு அளிக்கப்பட்டு விடவில்லை. கழகத்திற்காகவே தொடர்ந்து உழைத்து மறைந்து விட்ட தம்பி பூபதியின் மகளான டாக்டர் அஞ்சுகம் பூபதிக்குத்தான் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கந்தர்வக்கோட்டை தொகுதியில் கழகத்தின் கவிச்சுடர், வரகவி எனப் போற்றப்படுபவர், இன்று கூட என்னைப் பாராட்டி “முரசொலியில் கவிதை எழுதியிருப்பவர், கழகமே தன் மூச்சும் பேச்சும் என்று பாடுபடும் நம்முடைய கவிதைப்பித்தன் வாய்ப்பு

கேட்டிருந்தார். அதே தொகுதியில் கழகத்திற்காக உழைத்து மறைந்துவிட்ட கீரைத் தமிழ்ச் செல்வனின் அன்பு மகன் தமிழ் ராஜாவும் வாய்ப்பு கேட்டிருந்தார். இவர்கள் இருவருக்குமே வாய்ப்பு தரப்படாமல், புதிய வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனாலும் இவர்களும், இவர்களைப் போன்ற வேறு சிலரும் வாய்ப்பு கிடைத்தாலும், இல்லை என்றாலும் கழகத்திற்காகவே தங்களை அர்ப்பணித்துக்கொண்டு அண்ணா தந்த இலட்சியங் களுக்காகவே வாழ்பவர்கள், வாழ்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்னை மிக நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உண்டு.

எனவே வாய்ப்பு கிடைக்காதவர்கள், வாய்ப்பு கிடைத்து பின்னர் மாற்றப்பட்டவர்கள் ஆகியோர் கழகம் வெற்றி பெற்றால், அதுவே தங்கள் வெற்றி, அந்த வெற்றியில் நமது பங்களிப்பும் வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு பணியாற்றிட வேண்டுமென்று உங்கள் அண்ணன் என்ற முறையில் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

2016ஆம் ஆண்டு மே திங்கள் 16ஆம் தேதி நடைபெறுகின்ற தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் பேரியக்கத்தோடும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மக்கள் தே.மு.தி.க., சமூக சமத்துவப் படைக் கட்சி ஆகியோர் இணைந்து போட்டியிடுகிறோம். இந்தக் கட்சிகளை அன்றி தேர்தலில் போட்டியிடாமல், நமது கூட்டணிக்கு ஆதரவாகப் பல்வேறு சமூக - பொது நல இயக்கங்கள், அவ்வளவையும் இங்கே பட்டியலிட முடியாது; அவர்கள் அனைவரும் நம்முடைய அணியின் வெற்றிக்காகத் தீவிரமாக உழைக்கின்றார்கள். வேறு சில கட்சிகளும் நம்முடைய அணியோடு இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அவர்கள் நிற்காமல் போனதற்கு நாம் காரணமல்ல என்பதை நீ நன்றாகவே அறிவாய்!

நம்முடைய கூட்டணியிலே இடம் பெற்றிருப்பவர்கள் பதவிகள் மக்கள் பணியாற்றுவதற்குப் பயன்பட வேண்டிய ஒரு வாய்ப்பு - பொறுப்பு என்று அந்தப் பதவிகளைக் கருதுகிறவர்கள். ஆனால், அந்தப் பதவிச்சுகமே பெரும் சுகம், பன்னீர்க் குளியல், பழரசபானம், பிறவிப்பயன் என்று பதவியை ஒரு சிலர் அனுபவிப்பதைப் போன்றதென்று அதை நாங்கள் கருதவில்லை.

நாங்கள் பதவியை உங்களுக்கு வேலை செய்ய, உங்களுக்கு ஊழியம் புரிய, உங்களுக்காகப் பாடுபட, உங்களுக்காகத் தொண்டறம் ஆற்றிட ஜனநாயக ரீதியாக வழங்கப்படும் ஒரு கருவியாகத்தான் அதைப் பயன்படுத்துகிறோமேயல்லாமல் வேறு அல்ல. ஒரு முறை சென்னையிலே தேர்தல் பிரச்சாரத்திற்காக நானும் ஆர்க்காடு வீராசாமியும், மாவட்டச் செயலாளர் அன்பழகனும் புறப்பட்ட போது, நிருபர்கள் என்னைச் சுற்றி நின்று கேட்டார்கள், “ஜெயலலிதா, இலவசங்களாக அறிவித்துக் கொண்டிருக்கிறாரே, நேற்றைக்குக் கூட ஒரு இலவசத்தை அறிவித்தார். இன்றைக்குக் கூட ஒரு இலவசத்தை அறிவித்திருக்கின்றார். நீங்கள் என்ன இலவசம் அறிவிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான் சொன்னேன். “இலவசமாக அறிவிக்க என்னிடத்திலே எதுவும் இல்லை. நான்தான் இருக்கிறேன். என்னைத்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசமாக அறிவிக்கிறேன்” என்று சொன்னேன். இந்த இலவசத்தை, என்னைத் தவிர, என்னோடு போட்டிபோட்டுக் கொண்டு யாரும் அளிக்க முன்வர முடியாது என்ற தைரியத்தில்

நான் சொன்னேன்.

தற்போதுகூட ஆளுங் கட்சியின் சார்பில் இதுவரை தேர்தல் அறிக்கை அளிக்கப்படவில்லை. ஒரு சில அதிகாரிகளைக் கொண்டு, மற்றக் கட்சியினர் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்களையெல்லாம் பார்த்து, அதைவிட அதிகமாகச் சேர்க்க வேண்டியதை யெல்லாம் சேர்த்து மக்களை மயக்கவும் - மாயாஜாலம் காட்டவும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறதாம். ஆனால் மக்கள் அவர்களையும் அவர்களுடைய வெற்று ஆரவார அறிவிப்புகளையும் நம்புவதற்குத் தயாராக இல்லை. யார் அளிக்கும் அறிக்கை, நடைமுறைக்கு வரும், சொன்னபடி செய்வார்கள் என்பதை அனுபவ ரீதியாக நமது மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் எந்தத் தரப்பினராவது நிம்மதியாக இருந்திருக்கிறார்களா? ஏன் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், கோடிக்கணக்கில் குவித்துக் கொண்டார்களே தவிர, அவர்கள்கூட நிம்மதியாக இருக்க அனுமதிக்கப்பட்டார்களா? ஏன், அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருக்கின்ற, முதலமைச்சராகவே இரண்டு முறை பொறுப்பு வகித்தவர் இந்த ஆட்சியில் அச்சமின்றி இருக்கிறாரா?

மூன்றாவது இடத்திலே அமைச்சரவையிலே இருந்தவரின் கதி என்ன? மின் துறைக்கும் பொறுப்பு அவர்தான், மதுவிலக்குத் துறைக்கும் அவர்தான் அமைச்சர், எத்தனைக் கோடி இங்கும், வெளிநாட்டிலும் என்று கணக்கிடவே முடியாத அளவிற்கு அவர் சொத்து சேர்த்திருக்கிறார். அவர் சொந்தத் தொகுதியிலே போட்டியிட அனுமதி கிடைக்கவில்லை. ஏன், அமைச்சர்களிலே சிலருக்கே வாய்ப்பு அளிக்கப்படாமல், மூன்று பேர் மாற்றப்பட்ட பட்டியலிலே இடம்பெறவில்லையா? அமைச்சர்கள் கதியே இது என்றால் மற்றவர்களைப் பற்றிக் கூறவா வேண்டும்? “பிடித்து வைத்தால் பிள்ளையார், இல்லாவிட்டால் களிமண்” என்பார்களே, அந்தப் பழமொழிக் கொப்பானது தான் அந்தக் கட்சி!

ஆளுங்கட்சியின் சார்பில் இதுவரை தேர்தல் அறிக்கை அளிக்கப்படவில்லை. ஒரு சில அதிகாரிகளைக் கொண்டு, மற்றக் கட்சியினர் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்களையெல்லாம் பார்த்து, அதைவிட அதிகமாகச் சேர்க்க வேண்டியதையெல்லாம் சேர்த்து மக்களை மயக்கவும் - மாயாஜாலம் காட்டவும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறதாம். ஆனால் மக்கள் அவர்களையும் அவர்களுடைய வெற்று ஆரவார அறிவிப்புகளையும் நம்புவதற்குத் தயாராக இல்லை. யார் அளிக்கும் அறிக்கை, நடைமுறைக்கு வரும், சொன்னபடி செய்வார்கள் என்பதை அனுபவ ரீதியாக நமது மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

மக்கள் நலப் பணியாளர்கள், 13 ஆயிரம் பேர், தி.மு. கழக ஆட்சியிலே நியமனம் செய்யப்பட்டார்கள் என்பதற்காக, நீதிமன்றம் அனுமதித்தும், இந்த ஆட்சியினர் மனம் இளகவில்லையே? அவர்களில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்? அந்தக் குடும்பங்களில் உள்ள பெண்கள் வடிக்கும் கண்ணீருக்கு ஜெயலலிதாவினால் என்ன சமாதானம் சொல்ல முடியும்?

நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு இந்த ஆட்சியினர் ஆளான அளவுக்கு இதற்கு முன்பு இந்தியாவில் ஒரு ஆட்சி எங்கேயாவது நடந்தது உண்டா? எத்தனை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது? அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட உணர்ச்சியுள்ள அரசாங்கமா இங்கே இருக்கிறது?

கழக அமைச்சரவையிலே இருந்தார்கள் என்பதற்காக எத்தனை பேர் மீது இந்த அரசு செயற்கையாக, பழி தீர்க்கும் நோக்கில் வழக்குகளைத் தொடுத்தது? சொத்து வழக்கு எத்தனை பேர் மீது? ஐந்தாண்டுகள் அவர்கள் எல்லாம் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளை ஏறி இறங்கிய பிறகு, தற்போது தான் அவர்கள் மீதான வழக்குகளில் இந்த அரசுக்கு எதிராக தீர்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

காவல் துறையை எடுத்துக்கொள்ளுங்கள்! தி.மு. கழக அரசில் சில முக்கியமான பொறுப்புகளிலே இருந்தார்கள் என்பதற்காகக் கடந்த ஐந்தாண்டுகளில் எவ்வளவு கொடுமைகள்? ஏ.டி.ஜி.பி. ஜாபர்சேட், புலனாய்வுத் துறையில் கழக ஆட்சியில் முக்கிய பொறுப்பிலே இருந்தவர். ஆட்சி மாறியதும், 2011இல் மண்டபம் அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டார். வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்றதாக இவர் மீது குற்றஞ்சாட்டி, இவருடைய மனைவி மற்றும் மகள் வீடுகள் உட்பட 8 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினார்கள். அதன் பின்னர் 1-8-2011 முதல் சஸ்பென்ட் செய்யப்பட்டார். அதனை ரத்து செய்யக் கோரி, சென்னை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவினை விசாரித்த நீதிபதி ஏ. ஆறுமுகசாமி, நிர்வாக உறுப்பினர் ஆர். ராமானுஜம் அடங்கிய அமர்வு, ஜாபர்சேட்டை சஸ்பென்ட் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நேற்று ரத்து செய்ததுடன், அவருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது.

இவரைப் போலவே பணி ஓய்வு பெறும் நாளில் சஸ்பென்ட் செய்யப்பட்ட துக்கையாண்டி என்ற ஐ.பி.எஸ். அதிகாரி, துறவு பூண்டு இமயமலை அடிவாரத்திற்கே போய்விட்டார். மற்றொரு அதிகாரி ஜாங்கிட், ஐ.பி.எஸ்., ஏ.டி.ஜி.பி., தகுதியிலே இருந்தவரை ஐந்தாண்டுகளாக கன்யாகுமரி மாவட்டத்தில் ஒரு சிறிய பதவியிலே அமர்த்திச் சிறுமைப்படுத்தினார்கள். அவர் தன் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்று தலைமைச் செயலாளரிடமே முறையிட்டும் இந்த ஆட்சியினர் மனம் இறங்கவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதா தான் ஒரு தாய் என்று இப்போது கூறிக் கொள்கிறாரே? தாய்க்குலத்தைச் சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம் என்ன ஆனார்? ஏன்? சத்தியபிரியா என்ற ஐ.பி.எஸ். அதிகாரி இந்த ஆட்சியில் எந்த அளவுக்குத் துன்பப்பட்டார்?

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது சேலம் மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதில், குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்யவில்லை என்று கூறி, 15 ஆய்வாளர்கள், 16 உதவி ஆய்வாளர்கள், 23 தலைமைக் காவலர்கள் உட்பட 54 பேரைச் சேலத்திலிருந்து மதுரை, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மாற்றினார்கள். தம்பி வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைவதற்கும் காரணமாக இந்த ஆட்சியினர் இருந்தார்கள் என்பது மறந்தா போய்விட்டது.

இந்த சர்வாதிகாரக் கொடுமைகளிலிருந்து மக்களுக்கு விடுதலை வேண்டும். நீதிக்கு விடுதலை வேண்டும். நியாயத்திற்கும், நேர்மைக்கும் சுதந்திரம் வேண்டும். அதற்காகத்தான் நாம் இன்றைக்கு இரண்டாம் விடுதலைப் போர் நடத்திப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். இப்படிப் போராடி, பாடுபட்டுப் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நம்மைப் பார்த்து, இந்தத் தேர்தலிலே வெற்றி பெற்று நாம் ஆட்சிக்கு வந்துவிட்டால், பழிவாங்கி விடுவோம் என்று ஒரு சிலர் பயப்படுகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்றைக்கும் நீதி நியாயம்தான் நடைபெறும். எங்கள் விருப்பு வெறுப்புக்கு ஆட்சி வளையாது. சட்டத்தின் படியான ஆட்சிதான் நடைபெறும். யாரையும் பழிவாங்க வேண்டுமென்று வெறிபிடித்து அலைய மாட்டோம்.

நான் யாரையும் பழிவாங்க வேண்டுமென்று எண்ணுகின்ற பண்பு படைத்தவனல்ல; ஜெயலலிதாவைப் போல, பழிவாங்கும் குணம் படைத்தவனல்ல. அன்பும், மனிதப் பண்புமுடையவனாக என்னைச் செதுக்கியவர் தந்தை பெரியார். என்னைச் சமுதாயத்திலே தலை நிமிர்ந்து உலவவிட்டு, அரசியலிலே பட்டை தீட்டித் தயாரித்தவர் அறிஞர் அண்ணா. என்னை மேலும் கூர்மையுடையவனாகச் செழுமைப்படுத்தியவர்கள் தமிழ் மக்கள். எனக்கு வலுசேர்த்தது, நான் கற்ற தமிழ் மொழி!

இதற்கிடையில் தேர்தல் பிரச்சாரத்திற்காகவும், உங்களையெல்லாம் நேரில் கண்டு வாக்கு கேட்பதற்காகவும் நாளை முதல் எனது சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறேன். உன்னுடைய வயது தெரியாதா?

இந்தத் தேர்தலிலே வெற்றி பெற்று நாம் ஆட்சிக்கு வந்துவிட்டால், பழிவாங்கி விடுவோம் என்று ஒரு சிலர் பயப்படுகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்றைக்கும் நீதி நியாயம்தான் நடைபெறும். எங்கள் விருப்பு வெறுப்புக்கு ஆட்சி வளையாது. சட்டத்தின் படியான ஆட்சிதான் நடைபெறும். யாரையும் பழிவாங்க

வேண்டுமென்று வெறிபிடித்து அலைய மாட்டோம்.

நான் யாரையும் பழிவாங்க வேண்டுமென்று எண்ணுகின்ற பண்பு படைத்தவனல்ல; ஜெயலலிதாவைப் போல, பழிவாங்கும் குணம் படைத்தவனல்ல. அன்பும், மனிதப் பண்புமுடையவனாக என்னைச் செதுக்கியவர் தந்தை பெரியார். என்னைச் சமுதாயத்திலே தலை நிமிர்ந்து உலவ விட்டு, அரசியலிலே பட்டை தீட்டித் தயாரித்தவர் அறிஞர் அண்ணா. என்னை மேலும் கூர்மையுடைய வனாகச் செழுமைப்படுத்தியவர்கள் தமிழ் மக்கள். எனக்கு

வலுசேர்த்தது நான் கற்ற தமிழ்மொழி!

உனது உடல் நிலை எங்களுக்குப் புரியாதா? சிரமப்பட்டு நேரில் வர வேண்டுமா? என்றெல்லாம் நீ கேட்பது எனக்குத் தெரிகிறது. இருந்தாலும் உங்களில் ஒரு சிலர், நம்முடைய அண்ணன் வரவில்லையே, எத்தனை தேர்தல்களில் நள்ளிரவிலும் வந்து ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் என்று உரையாற்றியிருக்கிறார்? ஏன், கிருஷ்ணகிரியில் ஒரு முறையும், தூத்துக்குடியில் ஒரு முறையும், காலையில் பொழுது விடிந்த பிறகும் சூரியன் உதிக்கும் வரை என்னுடைய பிரச்சாரம் நடந்திருக்கிறது. வழியில் வேனில் தயிர் சாதத்தைச் சாப்பிட்டு விட்டுப் பயணம் செய்திருக்கிறேன். இப்போது நான் விரும்புகின்ற அளவுக்கு என் மனதில் நிரம்பி வழியும் ஆர்வத்தின் அளவுக்கு, உடல் நிலை ஒத்துழைக்காவிட்டாலும், அது ஒத்துழைக்கின்ற அளவுக்குச் சுற்றுப்பயணம் வர நமது மக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்க முடிவுசெய்துள்ளேன். எனவே ஒவ்வொரு ஊரிலும் நான் மேடைக்கே வர வேண்டுமென்று நினைக்காமல், வேனில் இருந்தபடியே உரையாற்றுவதற்கு, அதுவும் குறைந்த நேரமே உரையாற்றுவதற்கு நீ அனுமதிக்க வேண்டும்; பொதுமக்களும் பொறுத்தருள வேண்டும்!

பெரும்பாலும் முதலமைச்சர் ஜெயலலிதா என்னை நோக்கி எழுப்புகின்ற கேள்விகளுக்கு உடன்பிறப்பு மடல்களின் மூலமும், கேள்வி-பதில் பகுதியிலும் விரிவாகப் பதில்களை “டிக்டேட்” செய்து விடுகிறேன். அவைகளை எல்லாம் திண்ணைப் பிரச்சாரங்களின் மூலம் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிடு! தேர்தலுக்கு மிகவும் குறைந்த நாட்களே உள்ளன. அதற்குள் வரமுடிந்த ஊர்களுக்கு வர முயற்சிக்கின்றேன். எனது பயணத்தை வெற்றிகரமாக்கிட வேண்டிய முழுப் பொறுப்பும் உனக்குத்தான் உள்ளது. என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, உங்களுக்காக உழைக்க, எனது ஊனில் கலந்திருக்கும் தமிழ் மக்களுக்காகத் தொடர்ந்து உழைக்க, உத்தரவிடுங்கள்! வெற்றி நமதே! ஆதரிப்பீர் உதய சூரியன்!

அன்புள்ள, மு.க. 22-4-2016

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 53 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 53 PDF ↗