உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 52

தொகுதி 52 · கடிதம் 3943

பன்னிருக்கு அழகு, மௌனம் காத்தல்!

2014-11-30

உடன்பிறப்பே,

நம்முடைய தமிழக முதல்வர், ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு, நாட்டை ஆளும் முதல்வர் என்பது மறந்து போய், ஏதோ கல்லூரியின் முதல்வர் போல, “பினாமி” ஆட்சி என்றால் என்ன, “மைனாரிட்டி ஆட்சி” என்றால் என்ன, “ஆலோசகர்” என்றால் என்ன, “துணை முதல்வர்” என்றால் என்ன என்றெல்லாம் பாடம் சொல்லித் தர முயன்று, ஓர் அறிக்கை தந்திருக்கிறார். எப்படியோ, அவர் அன்றாடம் தமிழக அரசின் பொறுப்புகளைக் கவனிக்கிறாரோ, இல்லையோ, “அம்மா”வின் வழியில், “அம்மா”வின் பாணியில், “அம்மா”வின் ஒப்புதலோடு அறிக்கை விடத் தவறுவதில்லை. உறுப்பினர்களின் உரிமையைப் பறிக்கும் வகையிலும், பேரவைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் தி.மு.க.வினர் நடந்து கொண்டால், அதற்குரிய பலனைத்தான் அவர்கள் பெறுவர் என்றும் மிரட்டியிருக்கிறார். தி.மு.கழகம் பன்னீர்செல்வத்தின் வெற்றுச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது, தன் கடமையைச் சட்டப்படி முறையாக நிறைவேற்றும். ஆனால் உறுப்பினர்களின் உரிமையைப் பறிக்கும் வகையிலும், பேரவைக்கு இழுக்கு ஏற்படும் வகையிலும் அ.தி.மு.க.வினர் நடந்து கொண்ட பல்வேறு நிகழ்வுகளைப் பற்றி நான் விரிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.

“புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணித்தரமான வாதங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் கோப்புகளுக்குப் பின்னால் கருணாநிதி ஒளிந்து கொண்டதை நாடே அறியும். தைரியம் இருந்தால் வருகிற 4ஆம் தேதி சட்டப்பேரவையில் பங்கேற்று கருணாநிதி பேசத் தயாரா?” என்றும் பன்னீர்செல்வம் சவால் விடுத்திருக்கிறார். பன்னீர்செல்வம் அவர்களே, நான் 4ஆம் தேதி சட்டப்பேரவையில் பங்கேற்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. அதற்கு எந்தத் தைரியமும் தேவையில்லை. ஆனால் உங்கள் “அம்மா”? இந்தக் கேள்வியைக்

கேட்கும்படி வைத்தது நீங்கள்தானே? “கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல் எறிய முற்படலாமா?”

மேலும் பன்னீர்செல்வம் தனது அறிக்கையில், “சட்டமன்றத்தில் தமிழக அரசை விமர்சிப்பதற்கு ஏதேனும் பொருள் இருக்கிறது என்று கருணாநிதி கருதுவாரேயானால்” என்றெல்லாம் கேட்டிருப்பதால், சட்டமன்றத்தில் அல்ல, இதோ மக்கள் மன்றத்தின் முன்னாலேயே அ.தி.மு.க. அரசைப் பற்றிய பிரச்சினைகள் இந்த மூன்றரை ஆண்டுக் காலத்தில் அடுக்கடுக்காக மலை போல் குவிந்து கிடக்கின்றன; ஆனால் அனைத்தையும் குறிப்பிட இங்கே இடம் இல்லாததால், கடந்த வாரத்தில் மட்டும் நாளேடுகளில் வந்தவற்றை தொகுத்துத் தருகிறேன்.

சகாயம் நீதிமன்றத்தில் மனு (முரசொலி, 22-11-2014)

கோவை மாநகராட்சியில் 3 மாதங்களில் 3 ஆணையர்கள் மாற்றம் (முரசொலி, 22-11-2014)

மேயர் துரைசாமிக்கு மா. சுப்ரமணியன் கேள்வி. (முரசொலி, 22-11-2014)

மோனோ ரெயில் திட்டம் (தி. இந்து, 22-11-2014)

புதிய அணை - டெல்டா மாவட்டத்தில் முழு அடைப்பு (தினகரன், 22-11-2014)

ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தயாரா? (தினகரன், 22-11-2014)

மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு மாதம் 3.75 கோடி ரூபாய் நட்டம். (தினகரன், 22-11-2014)

டாக்டர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு (தினகரன், 22-11-2014)

நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பெண்ணுக்குப் பாதுகாப்பு தராத டி.எஸ்.பி., எஸ்.ஐ.க்கு அபராதம். (தினகரன், 22-11-2014)

69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு - விசாரணை டிசம்பர் 1க்கு ஒத்தி வைப்பு. (தினத்தந்தி 22-11-2014)

பள்ளி ஆசிரியரைத் தாக்கிய வழக்கு - ஆறு பேர் கைது (தினகரன், 23-11-2014)

3 ஆண்டுகளில் 5வது எஸ்.பி.யைக் காண்கிறது வேலூர்

(தினமலர் 23-11-2014) சைதை துரைசாமி ராஜினாமாவா? (தினமலர் 23-11-2014)

பொதுப்பணித் துறை கொர்...... பாசனத் திட்டங்கள் முடக்கம்.

(தினமலர் 23-11-2014)

விஜய் பிங்ளே பணி மாற்றத்தினால் முரண்பாடான கருத்துகள் (தினமலர் 23-11-2014)

தாலிக்குத் தங்கம் - ஏழைகள் அதிருப்தி (தினகரன் 23-11-2014)

நெடுஞ்சாலைத் துறையில் ஆளும் கட்சித் தலையீடு (தினகரன் 23-11-2014)

செம்பாக்கம் தி.மு.க. கவுன்சிலர் மீது தாக்குதல். (தினத்தந்தி, 23-11-2014)

7 days, 9 Murders; is the City Safe? (The Hindu, 23-11-2014)

Rumours of Mayor’s quitting spark flurry of Calls (The Hindu, 23-11-2014)

DMK AIADMK workers clash near Tambaram (The Hindu, 23- 11-2014)

24-11-2014

தாது மணல் குறித்து அறிக்கை (முரசொலி)

மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை (முரசொலி) தமிழக மீனவர்கள் 14 பேர் சிறை பிடிப்பு. (தினமணி)

அரசுப் பேருந்துகளில் கட்டணச் சலுகை - மாற்றுத் திறனாளிகள் புகார். (தினமணி)

கொலைக்களங்களாக மாறும் நெல்லை, தூத்துக்குடி

(தினமலர்) சாம்பல் விற்பனையில் கொள்ளை (தினமலர்) சென்னை குடிநீர் ஏரிகள் நீர் மட்டம் கவலைக்கிடம் (தினமலர்)

சுதாகரனின் நண்பர் மோசடி வழக்கில் கைது (தினகரன்)

சென்னையில் தொடர் மழை பெய்தும் குடிநீர் ஏரிகளில் நீர் மட்டம் உயரவில்லை. (தினகரன்)

போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்கள் - விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி. (தினகரன்)

பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கும் போக்குவரத்துக் கழகம் (தினகரன்)

ஆவின் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எப்போது? (தினகரன்)

தமிழக நீர் வளத் துறையில் முதன்மைத் தலைமைப் பொறியாளர் பதவி யாருக்கு? (தினகரன்)

மேகதாது அணை - பிரதமரைச் சந்திக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் (தினகரன்)

25-11-2014

அரசு அலுவலகங்களில் ஜெ. படம் பற்றி ஐகோர்ட். (தினமலர்)

637 கோடியைத் தராத மத்திய அரசு - மின்வாரிய அதிகாரிகள் பயணம் (தினமலர்)

அங்கன்வாடிப் பணியாளர் நேர்முகத் தேர்வு திடீர் ரத்து - சாலை மறியல் (தினமலர்)

தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு (தினமலர்) திறப்பு விழா இல்லாத ஓ.பி.எஸ். (தினமலர்)

மெட்ரோ ரெயில் திட்டம் - 10 கோடி பதிவுக் கட்டணத்தை எதிர்த்து மெட்ரோ நிறுவனம் வழக்கு (தினத்தந்தி)

ஆபத்தான 132 கட்டடங்கள் - மாநகராட்சி (தினமலர்)

அருங்காட்சியகத்தில் நவீன கையேடு வழங்குவது நிறுத்தம் (தினமணி)

காண்ட்ராக்டரிடம் 1.29 கோடி ரூபாய் மோசடி - முன்னாள் அமைச்சர் பச்சைமால் மீது புகார் (தினமணி)

நடவடிக்கை எடுக்காத போலீசைக் கண்டித்து பெண் திடீர்

தீக்குளிப்பு. (தினமணி)

மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்த கிராம மக்கள் மீது போலீசார் தடியடி (தினமணி) 26-11-2014

110வது விதியின் கீழ் அறிக்கைகளின் கதி என்ன? கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி. (முரசொலி)

சைதை துரைசாமி பற்றி “டேப்” (முரசொலி) உத்தரவை மதிக்காத மாநகராட்சி - உயர் நீதிமன்றம் (தினகரன்)

பாதி வழியில் பழுதாகி நிற்கும் மாநகரப் பேருந்துகள் (தினமணி)

மழை நீர் சேமிக்கும் திட்டங்கள் வீண் (தினமலர்) வீடுகளின் வழிகாட்டி மதிப்பீடு அதிகரிப்பு. (தினமலர்) தலைமைச் செயலகத்தில் சீட்டு மோசடி (தினமலர்)

ஆறு மாதமாக பயிற்சி ஊதியம் இல்லை - மருத்துவ

மாணவர்கள் திணறல். (தினமலர்)

11 ஆயிரம் வணிகர்களின் பதிவு எண் ரத்து (தினமலர்)

நோட்டீஸ் அனுப்பியும் கட்டுமானம் தொடர்கிறதா? ஐகோர்ட் (தினமலர்)

ஊராட்சிப் பணம் கையாடல் - இரு செயலாளர்கள் சஸ்பென்ட் (தினமலர்)

தாது மணல் விசாரணை அறிக்கை என்ன ஆனது? (தினமலர்)

தமிழக அரசின் விலையில்லா மெகா சைஸ் செருப்பு. (தினமலர்)

27-11-2014 சத்துணவு முட்டை கொள்முதல் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் - சி.பி.எம். (தினகரன்)

அடி, உதை தாங்காமல் போலீஸ் நிலையத்தில் ரத்த வாந்தி (தினகரன்)

இலக்கை எட்டாததால் கடந்த ஆண்டு பத்திரப் பதிவுத் துறையில் 1166 கோடி ரூபாய் வருவாய் இழப்பு. (தினகரன்)

மாநகராட்சி சாலைகள் (தினகரன்)

புதுக்கோட்டையில் இலங்கை அகதிகள் மீது தடியடி. (தினகரன்)

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பணிகள் சுணக்கம். (தினகரன்)

அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.உடன் மோதல். (தினகரன்)

மேடவாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமி கற்பழிப்பு. (மாலைமலர்)

நாகையில் போலீஸ்காரர் சாவு - சி.பி., சி.ஐ.டி. விசாரணைக் கேட்டு மனைவி வழக்கு. (மாலைமலர்)

திருவொற்றியூரில் நள்ளிரவில் 25 குடிசை வீடுகள் எரிந்து நாசம் (மாலைமலர்)

அமைச்சர் ரமணா உறவினர் கொலை - ஊராட்சி மன்றத் தலைவர் குண்டா சட்டத்தில் கைது. (மாலைமலர்)

சத்தியமங்கலம் அருகே சீனிவாசன் என்ற இளைஞரை அடித்துக் கொன்று இழுத்துச் சென்ற சிறுத்தை. (மாலைமலர்)

சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில் 27-11-2014 அன்று தி.மு.க. கவுன்சிலருக்கு அடி (தமிழ் முரசு)

பவானியில் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற அதிகாரிகளைத் திட்டிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. (தமிழ் முரசு)

விருதுநகரில் பாலியல் புகார் மீது 3 ஆசிரியர்கள் மாற்றம். (தமிழ் முரசு)

திண்டுக்கல்லில் ஒரு கோடி ரூபாய் நகைகள் கொள்ளை. (20-11-2014)

ஆரணி அருகே இஞ்சினியர் சிவச்சந்திரன் கழுத்தை அறுத்துக் கொலை (20-11-2014)

சென்னைக் கல்லூரி பேராசிரியையிடம் சங்கிலிப் பறிப்பு. (20-11-2014)

வேப்பேரியில் நகைக்காகப் பெண் கொலை. (22-11-2014)

திருவேற்காட்டில் 30 சவரன் நகை கொள்ளை. (22-11-2014)

சென்னையில் ஆட்டோவை மறித்து வியாபாரிகளைத் தாக்கி வழிப்பறி (23-11-2014)

அம்பத்தூரில் 4 பவுன் சங்கிலி பறிப்பு (23-11-2014) புளியந்தோப்பில் 60 சவரன் திருட்டு. (23-11-2014)

விமான நிலையம் அருகே ஆட்டோவை மடக்கி 80 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொள்ளை. (23-11-2014)

கோவை நிதி நிறுவனத்தில் 2 கோடி ரூபாய் நகை கொள்ளை (24-11-2014)

சென்னையில் பூட்டை உடைத்து எட்டு இலட்சம் கம்ப்யூட்டர்கள் கொள்ளை. (25-11-2014)

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி திருச்சியில் கொலை. (25-11-2014)

கொளத்தூரில் பெண் கொலை. (25-11-2014) நெல்லை அருகே ஊனமுற்றவர் கொலை. (25-11-2014)

பெண் எஸ்.ஐ. வீட்டில் 110 பவுன் நகைகள் திருட்டு. (26- 11-2014)

சென்னையில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் கொள்ளை. (26-11-2014)

திருவல்லிக்கேணி தொழிலதிபர் வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகை, 20 ஆயிரம் ரூபாய் திருட்டு. (26-11-2014)

புது வண்ணாரப்பேட்டை தனியார் மருத்துவமனையில் பெண் ஊழியரைக் கட்டிப் போட்டு நகை கொள்ளை. (26-11-2014)

சேலத்தில் ஒரே நாளில் இரண்டு பெண்கள் கற்பழித்துக் கொலை. (26-11-2014)

கீரப்பாக்கத்தில் கால்-டாக்சி டிரைவர் கொலை. (26-11-2014)

சென்னையில் பேருந்துப் பயணியிடம் 2.60 லட்சம் ரூபாய் கொள்ளை. (26-11-2014)

தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் 3 இடங்களில் நகை பறிப்பு. (27-11-2014)

ஆவடியில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு. (27-11-2014)

ரேஷன் கடையில் விவசாயி குத்திக் கொலை. (27-11-2014)

28-11-2014

சென்னை மாநகராட்சி கழக உறுப்பினர்கள் மேயர் மீது உள்துறைச் செயலாளரிடம் புகார் மனு (முரசொலி)

ஆவடி அருகே கேண்டீனில் சாப்பிட்ட 50 பேர் வாந்தி, மயக்கம் (தினகரன்)

முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்ல தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு. (தினகரன்)

ஆயுதப்படைக்கு நிலம் கையகப்படுத்துதல் - 10.62 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க டி.ஜி.பி.க்கு ஐகோர்ட் உத்தரவு (தினகரன்)

ஆவின்பால் வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட 8 பேருக்கு ஜாமீன் மறுப்பு. (தினகரன்)

மின் உற்பத்தி குறைவு - மின் தடை நீடிப்பு (தினமலர்)

108 அவசர கால ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம் (தினமலர்)

நசியும் மண்பாண்டத் தொழில் - நடவடிக்கை எடுக்குமா அரசு? (தினமலர்)

அணைகள், ஏரிகள் நீர் இருப்புத் தகவல் மறைப்பு (தினமலர்)

உயிரோடு இருப்பவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் - பணம் கொடுத்தால் எல்லாம் கிடைக்கும். (தினமலர்)

இந்து முன்னணிப் பிரமுகர் மீது தாக்குதல். (தினமலர்)

வேலூர் மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் பலி (தினமலர்)

நாகை மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் கையாடல் (தினமலர்)

அயனாவரத்தில் வீடு புகுந்து 14 சவரன் கொள்ளை (தினமலர்) நிலக்கோட்டை அருகே விவசாயி காமாட்சி குத்திக் கொலை. (தினமலர்) பீட்டர்ஸ் காலனிகுடியிருப்பில் தலைமைச் செயலக அதிகாரிகள் பானுமதி, கீதா ஆகியோர் வீடுகளில் கொள்ளை. (தினமலர்) பன்னீர்செல்வம் அவர்களே, பேரவையில் பேசுவதற்கு ஏதாவது இந்த அரசின் மீது குறைபாடுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் என்று கேட்டதன் விளைவுதான் ஒரு வார காலத்தில்; இந்த ஆட்சியில் நடைபெற்ற இத்தனை முறைகேடுகளைத் தொகுத்துப் பட்டியலிட்டு எடுத்துக் காட்டியிருக்கிறேன். இந்தப் பட்டியல் போதுமா? இன்னும் மாத, ஆண்டு வாரியான விவரம் வேண்டுமா? அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களைப் பற்றி நாள் கணக்கில் பேசுவதற்கு ஏராளமான பொருள்கள் தாராளமாகவே இருக்கின்றன. ஏன் நீங்கள் வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிக் கட்டிக் கொள்கிறீர்கள்? முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு வரை இருந்து வந்ததைப் போல, அமைதியாக இருப்பதுதான் பன்னீருக்கு அழகு; நாட்டிற்கும் நல்லது! எனவே பன்னீருக்கு அழகு, மெளனம் காத்தல்!

மு.க. 30-11-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 52 PDF ↗