மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 49 · 49 / 57
அரண்மனை.
சேனா : அக்ஷயா! பாதாள சிறையில் கிடக்கும் விஜயா குழந்தை பெற்றிருக்கிறாளாம்.
மனோ : ஆ!
சேனா : என்ன அக்ஷயா?
மனோ : ஒன்றுமில்ல......ஒன்றுமில்ல. அழியப்போகும் நேரத்தில் அரும்பு முளைத்திருக்கிறது!
சேனா : ஆமாம். அதைத்தான் கிள்ளி எறிய வேண்டும் நீ!
மனோ : ஆ! என்ன, நானு?
சேனா : உன்னைவிட யார் இருக்கிறார்கள்—இந்தக் காரியத்தை செய்ய! இந்தா! இப்பொழுதே போ!
[முத்திரை மோதிரத்தைக் கொடுக்கிறாள்]
மனோ : என் செல்வத்தை நான் கொல்ல வேண்டும்.
இல்ல...இல்ல...
[வாளை உருவுகிறான்]
மனக்குரல் : மனோகரா நில். ஆத்திரப்படாதே, அவசரத்திற்கு அடிமையாகாதே! அரண்மனைமுழுதும் எதிரிகள். அன்னையோ சிறையில்-தந்தையோ தவிக்கிறார். வாளை நீட்டிப் பாய்கிறாயே... உன் வாடாமலர்களை யார் காப்பாற்றுவது? உன் வண்ணக் கிளிகளை யார் காப்பாற்றுவது?
[திரும்பி சிறைச்சாலைக்குப் போகிறான்]
