மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 4 · 4 / 57
அரண்மனையின் மற்றொரு புறத்தில்
பத்மாவதி : (அரசர் படத்துக்கு முன்பு) சுவாமி! நாமிருவரும் இனிமேல் ஒன்று சேரும் நாளே வராதா...? என் வாழ்க்கையிலே நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்தது கிடையாதே! என் வாழ்க்கையைக் கெடுத்த வசந்த சேனையைக்கூட மன்னித்து இருக்கிறேன்.... அவளிடம் வாஞ்சை மிகுந்து உங்களுக்கு வருத்தம் வரக்கூடாது என்பதற்காக!... அப்படியே நான் யாருக்காவது தீமை செய்திருந்தாலும் அதற்கு பல ஆண்டு காலம் தங்களைப் பிரிந்து வாடுகிறேனே! இந்த தண்டனை போதாதா? சுவாமி! கண்மணி மனோகரனின் பிறந்த நாளும் வருகிறது. எழில் பூத்த நம் செல்வத்தை இருவரும் உச்சி மோந்து வாழ்த்து கூறுவோமே - அந்த இன்ப நாள் இனிமேல் வரவே முடியாதா சுவாமி!
