உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 29
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 29 · 29 / 57

குகை

பெரியவர் மருந்து முறை கண்டு பிடிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்...

பெரியவர் : இந்த அரூப மருந்து தீர்வதற்குள் வெற்றி நிச்சயம்......

கேசரிவர்மன் : அரூப மருந்து... குறைந்து விட்டதே. இன்னும் கொஞ்சம்...

பெரியவர் : தேவையில்லை......இதோ......இன்றைக்கே சாகாத சஞ்சீவி...கண்டு பிடித்து விடுவேன்...

கேசரிவர்மன் : (வசந்தசேனை சிலையைக் காட்டி)...வசந்த சேனா...அவள் இருதயத்தை எடுத்துப் பிழிந்து இந்த சிலைக்கு சிகப்பு வர்ணம் பூசவேண்டும்...அவள் கண் களை...

[ஒரு வெடிச் சப்தம்......குருநாதர் புகை சூழ்ந்து கீழே விழுகிறார். தூக்கிக் கொண்டு வெளியே வருகிறான்...குருநாதர் உயிர் ஊசலாடுகிறது...]

பெரியவர் : கேசரி வர்மா...என் கடைசி...வாழ்த்து....அவசரப்படாதே...உன் லட்சியத்திற்கு...மனோகரனை துணையாக்கிக் கொள்!...நான்...நான் சாகிறேன்......

கேசரிவர்மன் : ஓய்வின்றி உழைத்தீர், உலகிற்கு ஒரு அதிசயத்தைச் சொல்ல! அரூப மருந்து. அந்த முறையைக்கூட எனக்குக் காட்ட வில்லையே...ஸ்வாமி! புதுமையைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், மற்றவருக்கு வெளியிடாமலே மறைந்து விட்டார்கள்... அந்த வழியில் நீங்களும் நடந்து விட்டீர்கள்...இந்த நாட்டுக்கே இப்படி ஒரு சாபமா?...