உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 28
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 28 · 28 / 57

மாளிகையின் ஒரு பகுதி.

வைத்தியன் வசந்தனுக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறான்......

வைத்தியன் : உம்... சாப்பிடணும்......

வசந்தன் : ஏய்—வைத்தியா! இந்த மருந்துக்குப் பெயர் என்ன?

வைத்தியன் : சுயபுத்தி சூரணம்......

வசந்தன் : இது எதிலே தயாரிக்கப்பட்டது—

வைத்தியன் : திராட்சை, தேன், கற்கண்டு, சக்கரை இவைகளால் தயாரிக்கப்பட்டது.

வசந்தன் : அப்ப கசக்குமோ...

வைத் : “ஊஹூம்...கொஞ்சம் புளிக்கும், என்னு ரெண்டு? மிளகாயும் சேர்த்திருக்கேன்.

வச : வைத்தியா!...எனக்கு என்ன வியாதிடா—

வைத் : தீராத வியாதி...

வசந் : உம்—அதானே பாத்தேன்—எல்லாரும் பைத்தியம் பைத்தியங்கிறாங்களே— விகடா! கேட்டியா—எனக்கு பைத்தியம் ஒண்ணும் கிடையாது! தீராத வியாதி!