மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 26 · 26 / 57
அவைக்கூடம், “மனோகரன் வாழ்க!” என்ற முழக்கம், அரசர் வசந்தசேனையோடு நுழைகிறார்.
பிரதானி1 : வசந்தசேனைக்கு ராஜ விருதுகளா? மன்னர் மயங்கித்தான் விட்டார்,
பிரதானி2, மயக்கத்தால், இந்த மறவர் பூமியின் மானத்தையே வாங்கிவிட்டார்!
பிரதானி3 : அவமானச் சின்னம்—அவளோடு அரசர்... அதுவும் அவைக்களத்தில்
பிரதானி4 : சத்திய சீலரே...என்ன இது?
சத்தியசீலர் : விண்மீன் இருக்க வேண்டிய இடத்தில் மின்மினி......
[மனோகரன் வாழ்த்தொலிகளோடு நுழைகிறான். வசந்தசேனையை ரத்ன சிம்மாசனத்தில் பார்த்ததும் கொதிப்படைந்து “ஆ” வென அலறுகிறான்.]
ராஜப்பிரியன் : மனோகரா! தாயின் கட்டளை!
வசந்தசேனை : புதல்வா.........நினைவிருக்கிறதா........... போரில் ஜெயித்த பிறகே வெற்றிமாலை- அணிவேன் என்றாயே—இதோ என் கண்மணிக்கு நான் சூட்டும் வாகைமாலை
மனோ : சீ! வெற்றிமாலை!...உன் கையால்...வாள் (உருவுகிறான்)
சத்தியசீலர் : மனோகரா...தாயின் சொல் தட்டிவிடாதே...
ராஜப்பிரியன் : ஆமாம்...மனோகரா!
ஆத்திரமடைந்த மனோகரன் ராஜப்பிரியன் கன்னத்தில் அறைந்துவிட்டு வேகமாக வெளியேறுகிறான்]
