மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 16 · 16 / 57
விஜயா அந்தப்புரம் “வாழ்வதே மாது நான்” பாட்டு.
விஜயா விஷம் அருந்த முயற்சிக்கிறாள்.
(உள்ளேவந்து) மனோகரன் : விஜயா! தற்கொலை கோழைத்தனம்!
விஜயா : இருட்டு வேளையில் பெண்களின் அந்தப்புரத்தில் நுழைவது அதைவிட கோழைத்தனம்...
மனோகரன் : பரவாயில்ல. மரணப் புயலிலிருந்து ஒரு மலர்க் கொடியைக் காப்பாற்றி யிருக்கிறேன்.
விஜயா : இந்த அடிமையின் சாவை யாரும் தடுக்க வேண்டாம்.
மனோகரன் : அடிமையார் அடிமை? அழகே உருவான ராஜகுமாரி நீ...
(ராஜப்பிரியன் நுழைந்தபடி)
ராஜ : அதனால் தான் சொல்லுகிறேன் அர்த்தராத்திரியில் அந்தப்புரத்தில் பிரவேசிக்கக் கூடாதென்று!
மனோ : ராஜப்பிரியா! தெரியுமா சேதி?
ராஜ : தெரிந்துதானே வந்தேன் உன் சேதி! மனோகரா! எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய நேரம். ஏமாந்து விடாதே! இளவரசி கொஞ்ச நேரத்துக்கு முன் உன்னைக் கொல்லவந்த எமன்!
விஜ : இருதயம் எனக்கும் இருக்கிறது. நல்ல இருதயம் படைத்தவர்கள் ஒரு முறைதான் தவறு செய்வார்கள்
மனோ : விஜயா! நீ வாழ வேண்டியவள். அதுமட்டுமல்ல என் பாதுகாப்பில் இருக்கிறாய்... இதுபோன்ற விபரீத செயல்களை என்னால் அனுமதிக்க முடியாது.
விஜ : உயிர் உங்கள் அடிமையல்ல. அது ஆண்டவன் தந்தது.
மனோ : அதைப்பற்றிய விளக்கம் நாளை விசாரணை மண்டபத்தில்.
