பொருட்பால் · நட்பியல் · பேதைமை
குறள் 840
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.