உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பொருட்பால் · நட்பியல் · நட்பு

குறள் 790

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இனையர் இவரெமக் கின்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நண்பர்கள் ஒருவருக்கொருவர் “இவர் எமக்கு இத்தன்மையுடையவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்” என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.

மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010