பொருட்பால் · அமைச்சியல் · மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் 698
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்றஒளியோ டொழுகப் படும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்றஒளியோ டொழுகப் படும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர்தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்துகொள்ள வேண்டும்.