பொருட்பால் · அமைச்சியல் · வினைசெயல்வகை
குறள் 676
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்படுபயனும் பார்த்துச் செயல்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்படுபயனும் பார்த்துச் செயல்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுவதற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.