பொருட்பால் · அமைச்சியல் · வினைத்திட்பம்
குறள் 667
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி யன்னார் உடைத்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி யன்னார் உடைத்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.