பொருட்பால் · அரசியல் · ஒற்றாடல்
குறள் 588
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்ஒற்றினால் ஒற்றிக் கொளல்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.