உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இன்பத்துப்பால் · கற்பியல் · புலவி நுணுக்கம்

குறள் 1316

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

“உன்னை நினைத்தேன்” என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்; “அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?” எனக்கேட்டு “ஏன் மறந்தீர்?” என்று அவள் ஊடல் கொண்டாள்.

மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010