இன்பத்துப்பால் · கற்பியல் · நிறையழிதல்
குறள் 1254
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்மறையிறந்து மன்று படும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்மறையிறந்து மன்று படும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.