இன்பத்துப்பால் · கற்பியல் · பசப்புறு பருவரல்
குறள் 1183
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறாநோயும் பசலையும் தந்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறாநோயும் பசலையும் தந்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்றுவிட்டார்.