சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்
காட்சி 38 · 38 / 38
[கண்ணகி—ஆவேசக் குரலும், புயல் நடையும்!]
பரவட்டும்...தீ பரவட்டும்! என் மனம் எரிவது போல் மதுரை எரியட்டும்! என் நெஞ்சிலே மூண்ட நெருப்பே! அழித்து விடு மதுரையை! என் கணவனைப் பலி கொண்ட மதுரை அழியட்டும்! அழியட்டும்!! கோவலரைக் கொன்றபோது வாய்மூடிக் கிடந்த கூடல் நகரத்தாரே! இப்போது கூவுங்கள்! அழிவைக் கண்டு அலறுங்கள்! கதறுங்கள்! அலறுங்கள்! காற்றே வீசு! கனலே கிளம்பு....! அழிவே புறப்படு! பழிக்குப் பழி வாங்கு! பழிக்குப் பழி! பழிக்குப் பழி!
[நெருப்பிடையே கண்ணகி பெருஞ்சிரிப்பு]
[மதுரை தீயிலே மறைகிறது]
[நீதி தவறிய பாண்டிய மண்டலம் அழிவதை மக்களே விரும்பினர்கள்]
வாளேந்தி, தமிழகத்தில் புகழேந்தி வாழும் வேங்கைப் புலிகளே! வந்து விட்டது உங்களுக்கு எல்லாம் அழைப்பு! மீண்டும் ஒருமுறை நம் வீரத்தை நில நாட்ட நல்லதோர் வாய்ப்பு! இமயத்திலே பொறித்திருக்கும் நம் சின்னங்களைப் பழித்தார்களாம், சிறுமதி கொண்டோர் சிலர் - புலியைக் கேலி செய்தான் போர்முனை காணப்புல்லன் - வில்லை இகழ்ந்தான் வீரத்தை விலை கேட்கும் வீணன். கயலைப் பழித்தான் களம்புகு கதைகளைக் கேட்டறியாக் கசடன்.
உத்திரமும் - விசித்திரமும் - சிவேதமும் - பைரவமும்; விழிக்காதீர்கள்! மனிதர்களின் பெயர்கள்தான் இவைகள் - இந்த மண்டுக மன்னர்களுக்குத் தலைவர்களாம் கனகனும் விசயனும்! கங்கைக்கரை வாழ் காவலர்கள் காவிரிக் கரைக்கு அறைகூவல் விடுத்தார்களாம்! தோழர்களே! புத்தி புகட்டுவோம் அவர்களுக்குப், புறப்படுங்கள்!
சோழனுக்கும் பாண்டியனுக்கும் இல்லாத ஆத்திரம் தங்களுக்கு மட்டும் ஏன் மன்னவா?
[சேரன் செங்குட்டுவனுக்கும் கனக விஜயருக்கும் நடைபெற்ற போரில், செங்குட்டுவன் வெற்றி பெறுகிறான்.]
வில்லவா! வெற்றி முழங்கும் இந்த இடத்திற்குப் பெயர் என்ன?
குயிலாலுவம்.
குயிலாலுவம், குறித்துக்கொள்! இந்தப் பாறைகள் அனைத்தும் பைந்தமிழ் வீரம் தீட்டிய ஏடுகள். வெற்றி மட்டும் போதாது வில்லவா, அந்த வீணர்களை விடக்கூடாது!
காஷாய உடையிலே ரிஷிகளைப் போல் எங்கே ஓடி விட்டார்களாம் கனக விஜயர்கள்.
இது புதுமையல்ல, அவர்களுக்கு உரியதான ஒரே பழக்கம் அதுதான்.
[கனக விஜயர்கள் முனிவர் உடையில் கைது செய்யப்பட்டுக் கொண்டுவரப்படுகிறார்கள்.]
யார் இவர்கள்?
கனக விஜயர்!
கனக விஜயர்! கனக விஜயர்! ஆகா வீராதி வீரர்களே, நன்றாக இருக்கிறது போர்த்திறமை! முதுகு காட்டுவது - முக்காடு போடுவது—மறைந்திருந்து தாக்குவது—மகானாய் மாறுவது! அமைதியான முனிவர் வேடத்தில் இருக்கிறீர்களே; இதற்குப் பதில் சொல்லுங்கள்! புராணத்திலே தேவாசுர யுத்தம் எவ்வளவு நாள் நடந்தது?
பதினெட்டு ஆண்டுகள்.
ராம ராவணப் போர்?
பதினெட்டு மாதங்கள்.
பாரதப் போர்?
பதினெட்டு நாட்கள்.
வீரர்களே! நினைவிருக்கட்டும், சேரன் செங்குட்டுவன் வட நாட்டிலே நடத்தியபோர் பதினெட்டே நாழிகையில் முடிந்துவிட்டது!
மன்னவா, மண்டியிடுகிறோம். மன்னித்து விடுங்கள்.
மன்னிப்பதா? நான் மன்னிப்பதா? தமிழ்நாட்டு மண்ணில் வந்து மண்டியிடுங்கள். அது உங்களை மன்னிக்கட்டும்.
மன்னவா, தமிழகம் திரும்ப வேண்டாமா? புறப்பட்டு முப்பத்திரண்டு திங்கள் ஆகின்றனவே.
புறப்படுவோம் - வில்லவா ; அதற்குள் கண்ணகிக்குச் சிலை நாட்ட இங்குக் கல் எடுக்க வேண்டுமல்லவா?
ஆமாம்.
அந்தக் கல்லைச் சுமப்பதற்குச் சரியான எருதுகள் கிடைத்து விட்டன. கனக—விஜயா, தமிழரின் வீரத்தின் மீது வீசினாய் ஒரு சொல்; இப்போது தூக்கு கல்!
சேரன் செங்குட்டுவன் வாழ்க!
* * *
[⟦later library stamp obscures leading letters⟧ங்குட்டுவன், இலங்கைக் கயவாகு முதலிய மன்னர்களும், ⟦later library stamp obscures leading letters⟧ங்கோவடிகள், சாத்தனார் முதலிய புலவர்களும் நிற்கிறார்கள்.
மாதவி, துறவுக் கோலத்தில், கண்களில் நீர்வழிய, குழந்தை மணிமேகலையைக் கொண்டுவந்து சிலையின் காலடியில் வைக்கிறாள்.]
