உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 18
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 18 · 18 / 33

சாம்ராஜ்ய சட்டப்படி மன்னர் நடந்தார். ஆதாரமில்லாமல் அவனை என்ன செய்யமுடியும்? இமயா முட்டாள். சதி செய்ததை ஒப்புக்கொண்டான் விபீஷணனும் காட்டிக் கொடுத்தான். துரோகம் வெற்றியடைந்தது.

தெரிந்திருந்தும், விபீஷணனை மேல் பதவிக்கு உயர்த்துவது கூடவே கூடாது. அது மாமா செய்த மாபெரும் தவறு.

அப்பா போக்கே அலாதி! வெறுத்ததெல்லாம் அவருக்குப் பால்! விபீஷணன் விஷப்பேச்சில் விழுந்துவிட்டார். அதையே நீதி என நம்பியும்விட்டார்,

விபீஷணனை விட்டுவைத்தால்......

விட்டுவைத்தால், முல்லைக்காட்டையே எரிக்க விட்டுவைத்ததாக அர்த்தம்! கோழிப் பண்ணைக்குக் குள்ளநரியைக் காவலுக்கு விட்டுவைத்ததாக அர்த்தம். இன்பபுரிச் சிம்மாசனத்தில், அவனை ஏற்ற விட்டுவைத்ததாக அர்த்தம்.

மீண்டும் அவனைப் பிடிப்பதென்றால்,......?

அந்தக் கடிதங்களில் இருக்கிறது அவன் வாழ்வு அவைகளை நாம் கைப்பற்றாவிட்டால், இன்பபுரியின் அழிவை அனுமதித்தவர்களாவோம்.

அப்படியானால்?

நாளை பயணம், அதற்கு ஆயத்தம் செய்யுங்கள்,

(வீரர்கள் செல்ல)

நாம் இருவர் சென்றால் போதுமல்லவா?

நீ வேண்டியதில்லை. நான் மட்டும் போகிறேன்.

நான் வருவதால், உங்களுக்கு இடையூறு இல்லையே?

இருக்கிறது.

விபீஷணன் விஷயமாகத்தானே பயணம்......?

இன்னும் ஏதாவது இருக்கும்.

ரகசியமாக்கும்......?

தேவையில்லாத கேள்வி

வழியில் வருகிற துணையை, வேண்டாமென்று தடுப்பது......?

தடுப்பது சுயநலம். தடுத்தும் கேளாது?

என் சுயநலம். இளவரசே! நீங்கள் தனியாகச் சென்றால், எனக்கு நிம்மதி இருக்காது.

நல்ல கதை.

கதையல்ல, வாழ்வெல்லாம் உங்களுக்குத் தொண்டாற்ற நான் காணும் கனவு.

கனவு கனவாகவே இருக்கட்டும்.

என்னைப் புறக்கணிக்கிறீர்கள்.

உன்னையல்ல, உன் எண்ணத்தை.

என் எண்ணம்! அது ஆலகாலமா?

அமிர்தமாயிருக்கலாம். ஆனால் என் கருத்தோடு கலக்க வழியில்லை.

அநியாயமாக. ஒரு பெண்ணின் மனக்கோட்டைகளை மண்ணுக்குகிறீர்கள்.

அநியாயமாக, ஒரு பெண்ணின் மனக்கோட்டைகளை மண்ணுக்கமாட்டேன்.

அப்படியானால்?

நினைப்பை அகற்றிவிடு.

ஏமாற்றந்தான் எனக்கு வெகுமானமா?

புத்தன் ஒரு பெண்ணை ஏமாற்றமாட்டான்.

ஒரு வேலைக்காரிபோல உங்களோடு வரக்கூட உரிமையில்லையா?

வருவது அவசியமில்லை.

இளவரசே! விபீஷணனிடமிருந்து நான் கடிதங்களை அபகரித்துவரும்போது சொன்னீர்களே.

என்ன சொன்னேன்?

குமரிக்குத் தகுந்த பரிசு தரவேண்டுமென்று!

ஆமாம்.

அந்தப் பரிசு இப்போது வேண்டும்.

அப்படியென்றால்......என்ன பரிசு?

நான் உங்களோடு வர அனுமதி.

நல்ல சங்கடம். உம்....., ஆகட்டும் புறப்படு.

(புன்னகையோடு) மிக்க நன்றி.