உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 6
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 6 · 6 / 47

பேரன் பிறக்க வேண்டும்.

அதற்கு நான் பொறுப்பல்ல - பேத்தி கூட பிறக்கலாம்.

(அமைச்சர் அறையை விட்டு சிரித்தபடி போகிறார்)

(வெற்றிலை, பாக்கு, பத்திரிகை முதலியன விற்கும் கடை. அதன் எதிரே கூட்டமாக நின்று சிலர் சாமான் வாங்குகிறார்கள். ஒருவன் மக்கள் தொண்டன் பத்திரிகையை வாங்கிப் பிரிக்கிறான். பிரித்தவன் ஆச்சரியமுடன்)

அடடே! ஒரு செய்தி பார்த்தீர்களா?

என்ன? என்ன?....

(படிக்கிறான்) குருநாதர் மடாலயத்துக்கு முன்பு குழப்பம் செய்ய முயற்சி - குதிரைப் படைகள் கலக்கக்காரர்களை விரட்டியடித்தன. புதுமைப்பித்தன் என்னும் பெயருடைய ஒரு ஆள் மடாலயத்து பூஜைக்காகச் செல்லும் மக்களை வழிமறித்துக் குருநாதரும் நம்மைப்போல ஒரு மனிதர்தானே? அவர் காலில் எதற்காக விழுந்து காணிக்கை செலுத்த வேண்டும்? என்று தெய்வ நிந்தனையாகப் பேசியதின் விளைவாகச் சிறு குழப்பம் ஏற்பட்டது. அவனது பிரசங்கத்தைக் கேட்பதற்காக மடாலயத்துக்குச் சென்ற மக்கள் தேங்கி நின்றுவிட்டார்கள்.

அவர்களையெல்லாம் அவன் தூண்டிவிட்டு குருநாதரை அவதூறாகப் பேசினான். அதனால் அரசாங்கக் குதிரைப் படைகள் அனுப்பப்பட்டு நிலைமை சமாளிக்கப்பட்டது.

இவன் யாருடா புது ஆளு? பெரிய ஆசாமிதான் போல இருக்கு! பொன்னழகனை விட இவன் தீவிரவாதியோ?

என்னடா பெரிய தீவிரவாதி? குருநாதரைப் போய் அவதூறாகப் பேசி, தெய்வ நிந்தனை செய்வதா தீவிரவாதிக்கு அழகு? நாஸ்திகப் பயல்!

(அப்போது கருப்பு ரோஜா கடையில் வந்து ஏதோ சாமான் வாங்குவது போல நின்று கொண்டு அந்த உரையாடலைக் கவனிக்கிறான். அவன் அவர்கள் பேச்சில் குறுக்கிட்டு)

யாரது? புதுமைப்பித்தன் குழப்பம் செய்தானா?

ஆமாம், இதோ பார்! (பத்திரிகையைக் கொடுத்தல்)

(படித்துவிட்டு) அடப்பாவி; நான் கண்ணால நேர பார்த்தது - அச்சு எழுத்திலே அடியோடு மாறி வருகிறதே!

ஓகோ; நீ குழப்பத்தை நேரில் பார்த்தாயா?

குழப்பமா?

பிறகு என்ன நடந்தது?

புதுமைப்பித்தன் பிரசங்கம் நடந்தது.

குழப்பம் நடந்ததாகப் போட்டிருக்கிறதே?

பிரசங்கத்துக்கு இந்தப் பத்திரிகையாசிரியரின் மொழிபெயர்ப்பு குழப்பம் என்பது?

மடாலயத்துக்குச் செல்லும் மக்களை வழிமறித்து உண்மைதானே?

நூற்றுக்கு நூறு பொய் - மடாலயத்துக்குச் சிறிது தூரத்தில் கூட்டம் நடந்தது உண்மை. மடாலயத்துக்குச் செல்ல வேண்டிய மக்கள் கூட்டம் கேட்க நின்று விட்டது உண்மை. காணிக்கை செலுத்துவோர் வரவில்லையே என்று குருநாதர் காத்துக் கிடந்தது உண்மை...

குழப்பம் ஏற்பட்டு குதிரைப்படை வந்து மட்டும் பொய்யாக்கும்?

அதுவும் உண்மைதான்! ஆனால் செய்தியில் தான் சிறு மாறுதல், குழப்பம் ஏற்பட்டு குதிரைப்படை வரவில்லை. குதிரைப்படை வந்த பிறகே குழப்பம் ஏற்பட்டது!

மடாலயத்துக்கு முன்பு என்பதா கூட்டம் போட வேண்டும்!

புண் இருக்குமிடத்தில்தானே மருந்து போட வேண்டும்.

என்னமோ எனக்கு உன் பேச்சில் நம்பிக்கையில்லை, பத்திரிகையிலே பொய் போடுவானா?

போய்யா! உன்னைப் போல ஆளை நம்பித்தானே அவன் பத்திரிகையே நடத்துகிறான்! அச்சிலே வருவது அவ்வளவும் உண்மை என்கிற ஆஷாடபூதிகள் அதிகமாகிவிட்டதால்தான்... அல்லித் தண்டுலே அனுமார் புகுந்தார் - ஆதிசேஷன் அகிலத்தைச் சுமக்கிறான் - ஆட்டுக் குட்டிப் பாட்டுப் பாடுது - அணிப்பிள்ளை பாலம் கட்டுது - நேற்றுப் பிறந்த குழந்தை கேட்ட வரம் கொடுக்குது - என்றெல்லாம் கயிறு திரித்து விட்டார்கள் - போய்யா.... போ!

(என்று கூறிவிட்டு கருப்பு ரோஜா அதைவிட்டுப் போகிறான். பத்திரிகை படிப்பவன் (செய்தியைக் கண்டு) அடேடே! சீமான்கள் சபை இன்னைக்கு கூடப் போகுதாமே; வாங்கய்யா நாமும் போகலாம்)

(சீமான்கள் சபை கூடுகிறது. சீமான்களும் அமைச்சர் குணசீலரும் இருக்கிறார்கள். தனி அழைப்பின் பேரில் குருநாதரும், ‘மக்கள் தொண்டன்’ ஆசிரியர் அரிஹரநாதரும் அமர்ந்திருக்கிறார்கள். சபையை விட்டு சிறிது தூரத்தில் பொது மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். அங்கே - பொன்னழகன், புதுமைப் பித்தன், அல்லி முதலியோர் இருக்கிறார்கள்)

பெருமைக்குரிய சீமான்களே!... மணிமகுடபுரியின் பிரதிநிதித்துவம் வாய்ந்த இந்த சபை, இன்றைய தினம் செய்ய வேண்டிய தீர்மானங்களிலே மிக முக்கியமானது தேவாலயம் ஒன்று நிர்மாணிப்பதைப் பொறுத்த விஷயமாகும். மணிமகுடபுரியில் உலகம் கண்டு வியக்கக் கூடிய அளவுக்கு ஒரு அதிசயம் இருப்பது நமக்கெல்லாம் பெருமையாகும். அத்தகைய சிரஞ்சீவித்தன்மை வாய்ந்த அதிசயம் நாம் புதிதாகக் கட்ட இருக்கிற தேவாலயமாயிருக்கட்டும். நாம் நினைக்கிற அளவுக்கு பிரம்மாண்டமான முறையிலே ஆலயம் கட்ட - தலைநகரிலே இடவசதி இல்லை.

அதைப் பொறுத்து - தலைநகரின் ஒரு பகுதியான கொடிக்கால் நகரை காலி செய்து விட்டு அங்கே கோயிலைக் கட்டலாம் என்று ஒரு யோசனையும் இருக்கிறது. இந்த யோசனை ஏழை பங்காளரான நமது குருநாதரின் யோசனையாகும் - கொடிக்கால் நகரில் கோயில் எழுப்புவது சம்பந்தமாக அனைவரும் தங்கள் யோசனைகளைக் கூறி தெய்வீகம் பொருந்திய இந்தத் தீர்மானத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டுகிறேன். இதுபற்றி நல்ல யோசனைகள் கூறுவதற்கு பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

(அமைச்சர் அமருகிறார்)

ஆண்டவனுக்கு ஆலயம் கட்ட யார் ஆட்சேபிக்கப் போகிறார்கள் - தாராளமாகச் செய்யலாம்.