உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 4
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 4 · 4 / 47

(மக்கள் மன்றம் - அதே இரவு - அல்லியும் தொண்டர்களும் கவிஞரும் இருக்கிறார்கள்)

“பேரன்பு கொண்டவரே, பெரியோரே, என் பெற்ற தாய்மாரே, நல் இளஞ்சிங்கங்காள்!”

என்று தொடரும் பாரதிதாசன் பாட்டைப் பாடுகிறார்.

அருமையான கவிதை - கவிஞரே!... பாம்புக் கூட்டம் போராடும் பாழ் நிலத்தைப் புதுக்கியவர் யார்? எழுச்சி நிறைந்த கேள்வி - இந்த கேள்வி மணிமகுடபுரியின் மக்கள் இதயத்திலே கிளம்புமானால் - “யார்?”, “யார்?” என்ற கேள்விக்குறி - அங்கிங்கெனாதபடி எங்கும் தோன்றி விடுமானால் - ஒரே நாளில் மணிமகுடம் மக்கள் மகுடமாகி விடும்!

அல்லி! கவிஞரின் நெஞ்சிலே பிறந்த கவிதைக் குழந்தை உன்னைப் போன்ற வீரப் பெண்மணிகளால் தாலாட்டி வளர்க்கப்பட வேண்டும்!

தாலாட்டுவதா? ஐயோ.. எழுச்சி மயமான கவிதைக் குழந்தைகளை நான் தாலாட்டி தூங்க வைக்க மாட்டேன். மக்கள் இதயமெனும் தாழ்வாரத்திலே தவழ விடுவேன். வேல் கைக் கொடுத்து “வென்று வா” என அனுப்புவேன் - கவிஞரே - இப்படி உணர்ச்சிக் காவியங்களை, ஏழைகளை வாழவிக்கும் உரிமைப் பாடல்களை, கோழையையும் கொள்கை வீரனாக்கும் கவிதை வரிகளை... எழுதி எழுதி குவியுங்கள்! குனிந்து கிடக்கும் விடுதலை உணர்ச்சி, கொடியேந்திக் கிளம்பட்டும்!

கூனன் நிமிரட்டும்! குருடன் கண் பெறட்டும் - ஊமை பேசட்டும் - உரிமை வெல்லட்டும்! ஊரும், உலகமும் வாழட்டும்!

(அப்போது பொன்னழகன், புதுமைப்பித்தன், கருப்பு ரோஜா மூவரும் வருகிறார்கள்)

அல்லி - இவரைத் தெரியுமா உனக்கு? இவர் பெயர் புதுமைப் பித்தன்.

வணக்கம்.

வணக்கம்.

தற்செயலாக சந்தித்தேன். ஆனால் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகிற்று! இவர் - புரட்சிக் கருத்துக்கள் கொண்டவர் - ஆட்சிப் பீடம் மக்கள் கைக்கு மாற வேண்டும் என்பதிலே என் கொள்கையும், மக்கள் மனவளம் பெற வேண்டும்; அப்போதுதான் அவர்கள் ஆட்சி புரியத் தகுதியுள்ளவர்கள் என்பதிலே உன் கொள்கையும் கொண்டவர்.

சுருக்கமாகச் சொல்லுங்களேன் - மொத்தமாக என் கொள்கை கொண்டவர்.

மன்னிக்க வேண்டும் - தலைவர் என்னை அறிமுகப்படுத்த தவறி விட்டார் - இல்லை; மறந்து விட்டார் - நான்தான் கருப்பு ரோஜா! கிட்டத்தட்ட உங்கள் கொள்கையுடையவன் - என்னையும் இங்கே அங்கத்தினராக...

நான்தான் முன்பே சொன்னேனே! நீ அங்கத்தினராக - இன்னும் ஆறு மாதம் செல்லும் - அதுவரை நீ வேண்டுமானால் இங்கே இருக்கலாம் - அல்லி! புதுமைப் பித்தரை நமது மன்றத்தின் அங்கத்தினராக ஆக்குவதில் எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை...

பிறகென்ன? மன்றத்தின் சட்ட திட்டங்களைக் கூறிவிட்டீர்கள் அல்லவா?

எல்லாம் முடிந்து விட்டது. கையெழுத்துப் போட வேண்டியதுதான்... பாக்கி...

(அல்லி ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அதில் கையெழுத்துப் போட நீட்டுகிறாள், புதுமைப்பித்தன், பேனாவைக் கையில் வாங்குகிறான்.

தயவு செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டு...

என்ன உறுதிமொழி?

மணிமகுடபுரியின் மக்கள் நலத்திற்காகவும் அவர்கள் விடுதலைக்காகவும் பாடுபடுவேன்.

மணிமகுடபுரியின் மக்கள் நலத்திற்காகவும் அவர்கள் விடுதலைக்காகவும் பாடுபடுவேன்.

மக்களுக்காக செய்ய வேண்டிய எந்தப் பணிகளையும், மக்கள் மன்றத்தின் கட்டளைப்படி செய்வேன்.

மக்களுக்காக செய்ய வேண்டிய எந்தப் பணிகளையும், மக்கள் மன்றத்தின் கட்டளைப்படி செய்வேன்.

நாட்டு விடுதலைக்காக, உயிரைத் தரவும் தயங்க மாட்டேன்.

நாட்டு விடுதலைக்காக, உயிரைத் தரவும் தயங்க மாட்டேன்.

உம் - கையெழுத்துப் போடுங்கள்.

உம் - கையெழுத்துப் போடுங்கள்.

(சிரித்தபடி) இல்லை - கையெழுத்துப் போடுங்கள் என்கிறேன்.

மன்னிக்கவும் (என்று கூறியபடி கையெழுத்திடுகிறான்)

(அமைச்சர் வீடு! அவரது மகள் கலாராணியின் அறை. கலாராணி தூங்கிக் கொண்டிருக்கிறாள். கதிரவனின் ஒளி, பலகணி வழியே அவள் படுக்கையில் பாய்கிறது. அவளது தோழி வஞ்சி, காலை உணவுகளை எடுத்துக் கொண்டு, அறைக்குள் பிரவேசிக்கிறாள், கலாராணி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து...)

கலாராணி - கலாராணி! சரிதான் - சந்திரனை அணைத்துக் கொண்டு தூங்கிய உனக்கு கதிரவனின் கரம் பட்டும் எழுந்திருக்க மனம் வரவில்லை போலும்!

(சோம்பல் முறித்து எழுந்தபடி) என்னடி. இது? சந்திரனை அணைப்பதாவது; கதிரவனின் கரம் படுவதாவது?