உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
காகிதப்பூ/காட்சி 18
நாடகங்கள்

காகிதப்பூ

காட்சி 18 · 18 / 23

மரக:— உட்காருங்க...

கண்:— பரவாயில்லை...

மரக:— ஏதாவது சாப்பிடுறீங்களா?...

கண்:— வேண்டாம்...

மரக:— அப்பா வாரவரையிலும் சும்மா இருக்கிறதை ஏதாவது படிச்சுகிட்டு இருங்களேன்...

கண்:— பரவாயில்லை...

(மரகதம், “நண்பர்கள் கேட்பதற்கு” என்ற நூலைக் கொண்டு வந்து தருகிறாள்...)

கண்:— என்ன புத்தகம்?... “நண்பர்கள் கேட்பதற்கு” எழுதியவர் அண்ணாதுரை... ஆ!... இந்தப் புத்தகமா?...

(உதறியெறிந்து—துள்ளிக்குதிக்கிறான்...)

மரக:— ஏன்?... ஏன்?... தேள்கீள் இருந்துதா? புத்தகத்திலா?... கொட்டிட்டுதா? மருந்து போடவா?...

கண்:— இந்தத் தி.மு.க. குறும்பு மாத்திரம் போகாதே!... தேளுமில்லை ஒண்ணுமில்லை...

மரக:— அப்புறம் ஏன் புத்தகத்தைக் கீழே போட்டீங்க... துள்ளிக்குதிச்சீங்க?

கண்:— நான் தி.மு.க. புத்தகங்களைப் படிக்கிறதே இல்லை...

மரக:— சரி... திருக்குறள் படிச்சிருக்கீங்களா?... திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்?...

கண்:— ஏன் அவர் என்ன டி.எம்.கே. லீடரா?... திருக்குறள் நிறைய படிச்சிருக்கேன்... ஏன் அதைக்கேக்கிறே?

மரக:— “எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு” என்ற குறளைப் படிச்சிருக்கீங்களா?

கண்:— படிச்சிருக்கேன்...

மரக:— அதற்கு என்ன அர்த்தம்...

கண்:— எந்தக் கருத்தை யார், யார் சொல்லக் கேட்டாலும் அந்தக் கருத்தினுடைய உண்மையைப் பகுத்து அறிவதுதான் அறிவு!...

மரக:— அப்படியிருக்கும்போது அண்ணா சொன்னா கேட்கமாட்டேன்... அவர் எழுதினா படிக்கமாட்டேன்... அப்படின்னு முரட்டுத்தனமா பேசுவது வள்ளுவர் குறளுக்கே முரணான வாதமல்லவா?

கண்:— சரி... அதிலே என்னதான் எழுதியிருக்கு; சொல்லு பார்க்கலாம்...

மரக:— சொல்லுகிறேன்...

(புத்தகத்தை எடுத்து—கம்பீரமாக)

தி.மு.க. உழைப்பின் உருவம்! தி.மு.க. பல தியாகிகளின் குருதிகொட்டப்பட்டுக் கட்டப்பட்ட பாசறை! தி.மு.க. காங்கிரஸ் தேச்சாதிகாரத்தை எதிர்த்திடும் போர்முகாம். தி.மு.க. முப்பத்து நாலு லட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்ற கட்சி. தி.மு.க. தமிழகச் சட்டமன்றத்தில் தனிப் பெரும் எதிர்க்கட்சி. தி.ம.க. நாள் கவறுமல் மக்கள் தொடர்பு கொன்—ஜனநாயக அமைப்பு. தி. மு.க. வரும் தேர்தலில் ஆளுங்கட்சியாக வளரக்கூடியது என அறிவாளர் கூறிடும் நிலைபெற்றுள்ள அறமன்றம்.

தி.மு.க. அழிக்கப்பட்டுவிட்டால், மக்களாட்சி முறைக்கே பேரிடி ஏற்பட்டு விடும். தி.மு.க. தொடர்ந்து பணியாற்றினால் மட்டுமே மொழிகாத்திட, வளம்பெற்றிட, புதுவாழ்வு கண்டிட முடியும்... இதெல்லாம் கூறுகிறது இந்த எழுச்சி ஏடு...

கண்:— உங்களைப் பத்தியே சொல்லியிருக்கா! எங்களைப் பற்றி ஒண்ணும் இல்லியா?...

மரக:— உங்களைப் பற்றி நிறைய இருக்கு... இதோ... படியுங்கள்—

(புத்தகத்தை அவன் கையில் தந்து... ஏட்டைப் புரட்டிக்காட்டி)

“காங்கிரசாட்சி எதேச்சாதிகாரப் போக்கில் நடந்துகொள்கிறது... எப்படி நடந்து கொண்டாலும் தட்டிக்கேட்பவர் இல்லை என்ற துணிவு பெற்று விட்டிருக்கிறது... நீங்களே படிங்க...

(அவன் மேலே தொடர்ந்து படிக்கிறான்)

(படித்தல்)

கண்:— காங்கிரசாட்சி பொதுவாக மக்களுக்குப் பயன்படும் படியாக அமைக்கப்பட்டுள்ள சமுதாய நலத்திட்ட வசதிகளை, கட்சி விளம்பரத்திற்கே பயன்படுத்திக்கொள்கிறது—காங்கிரசாட்சி, விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக உள்ள கடன், மானியம், ஏர், எருது, உரம் போன்ற வசதிகளை காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே சுலபமாகப் பெறக் கூடிய விதமான நடைமுறையைப் புகுத்திவிட்டிருக்கிறது...