உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 28 · 28 / 61

என்னம்மா வேண்டும்?

முத்தன் இங்கில்ல?

முத்தனா? அவன் மிகவும் நல்லவனாயிற்றே. அவனை ஏன் நீ தேடுகிறாய்—நீ அவனைக் காதலிக்கிறாயா?

போக்கிரி மனிதா! கேட்டதற்கு மட்டும் பதில் சொல்.

அவன் தென்றல் மாளிகையில் இருக்கிறான். அவனுக்கென்ன, போர்வீரன். அவனுக்குத் தகுந்தவள் தான் நீ......

மூடிக்கொள் உன் அழகான வாயை! அப்பனே!

மகளே!

முத்தன் தவறி இங்கு வந்தால், ஒரு பெண் தேடிக்கொண்டு தென்றல் மாளிகைக்குப் போயிருப்பதாகச் சொல்!

இது உத்திரவா? வேண்டுகோளா?

இரண்டுந்தான்—சரியான முட்டாள்!

[போகிறாள்]

என்ன என்ன? ... ஏ, சிட்டுக் குருவி—இப்போது என்ன பேசினாய்?

தமிழ் பேசினேன்...... ஏ, தலைவலி! போய் வருகிறேன்.

சுமதி வேகமாக அதைவிட்டுப் போகிறாள். அவள் போவதையே அஞ்சலோடி பார்த்துக் கொண்டு நிற்கிறான்.

★

[தென்றல் மாளிகை.

பல்லக்கு போன்ற குதிரை வண்டிகள் புறப்படுவதற்குத் தயாராக இருக்கின்றன. குதிரை வீரர்கள் தத்தம் புரவிகளில் ஏறி ஆயத்தமாகிறார்கள். படையில் சேர்க்கப்பட்ட ஆட்கள் வண்டிகளில் ஏற்றப்படுகிறார்கள். தளபதி செல்வதற்கான அலங்காரமான வண்டியும் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கிறது. பாளையக்காரர் பலதேவரும், திருசங்கும், சுகதேவும், தளபதிக்கு முன்னே நின்றுகொண்டு வழியனுப்பத் தயாராயிருக்கிறார்கள்.

வெற்றிவேலன் ஒரு வீரனிடம்,

“எங்கே அந்த முத்தன்? அவனையும் கொண்டுவந்து வண்டியில் தள்ளுங்கள்”

உடனே வீரர்கள் உள்ளே ஓடுகிறார்கள். வேதாளம், தளபதியின் காதில் ரகசியமாகச் சொல்லுகிறான்,

“அவன் ஊர் தாண்டும் வரையில் நடக்க வைத்தே கொண்டுபோனால்—அவளைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும்”

ஆமாம்! அந்தக் கழுதையை விலங்கிட்டு இழுத்துச் செல்லுங்கள். ஊர் தாண்டும் வரையில் அவன் நடந்தே வரட்டும்.

உள்ளேசென்ற வீரர்கள், முத்தன் பூட்டப்பட்டிருக்கும் அறையைத் திறக்கிறார்கள்.