உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 43
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 43 · 43 / 104

உன்

விழி மட்டும் ரகசியமாய் ஓர் உடன்பாட்டுக்கு வருதல் கண்டு;

இதயம்,

பொழிகின்ற இன்ப மழைச் சுகத்தை நான் என்னென்று

சொல்வேன்!

வழிகின்ற தேனருவிப் பக்கம் போவோம் வா ! வீணாய்க் கழிகின்றதே பொழுது என; நம் வரவுக்காகக் காத்திருக்கும் மலர் மெத்தையினைப் பார்! கோத்திருக்கும் முத்தாரப் பல்வரிசைப் பேழையின் மூடியினைப் புன்சிரிப்புத் திறவுகோலால் திறந்துவிட்டு ஊடியது போதுமென என் தோளில் ஊஞ்சல் ஆடிடுக! வாடியதோ என் வண்ணத் தமிழ்க்கிளியின் நெஞ்சம்? தேடியதோ? தேடிப்பின்னர் திகைத்ததோ? ஒருவேளைத் திரும்ப வருவேனோ, மாட்டேனோ என்று இரும்படிக்கும் உலைவீழ்ந்த புழுவாகத் துடித்ததோ?"

இவ்வாறு பிரிந்திருந்த காதலனின் வரவு பார்த்து - மனம் வருந்தி வீழ்ந்த பெண்மான் ஒன்று அவன்

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

வந்தபின்னும் ஊடலுற்றுச் சினந்தபோது, அவளைத் தன் வசமாக்க வாரியிறைத்திட்டான் வர்ணனைப் பூமாரி! அவளோ; இன்னும் ஏனவன் பேசிக்கொண்டு நிற்கின்றான் இழுத்தணைத்துப் பசும்புல் தரையில் படுக்கவைத்து கன்னம் சிவக்க, கனியுதடு மெல்ல வீங்க - முன்போல் கணக்கென்ன நூறு? முன்னூறு நானூறு முத்தங்கள் கொடுத்திட்டால் கசக்குதென்று கழுத்தைப் பிடித்துத் தள்ளியா விடுவேன்? கட்டியணைக்கவே அவன் கரம் தாவாதோ தன்மீதென்று, தணலைப் போல் கொதிக்கின்ற காதல்தனை தன் நெஞ்சுக்குள் அடைத்து வைத்துத் தத்தளித்தாள்!

'அன்றென்னை அமளியிற் கிடத்தி அன்றிலடி நாமிருவர் அரைநொடியும் பிரிவதில்லை! ஆணையடி அன்பே என்று விரிவுரைகள் ஆற்றினீரே - என்ன பயன்? விடிந்தால் ஒரு திங்கள் முடிந்துவிடும் -இவள் மடிந்தால் மடியட்டுமென்றுதானே கவலையற்று மறுநாளே வருவதாய்ச் சொன்ன சொல்லை மறந்து போனீர்! மறப்பது ஆடவர்க்கு இயற்கையெனக் கூறிவிடும்! நானும்; உயிர் துறப்பதும் மகளிர்க்கு எளிதேயென்று காட்டுகின்றேன்.'' இவ்விதம் சொற்களுக்குச் சோக இசை சேர்த்து - அந்தச் சொர்ணத்தின் வார்ப்படம் சுளையிதழ்கள் மூடுமுன்பே, ஓடிவந்து கட்டிக் கொண்டான்!

நான்

தேடிநின்ற தெள்ளமுதே!" என அவளும் ஒட்டிக் கொண்டாள்! வானூர்ந்த நிலவழகி; முகில் கொண்டு முகம் மறைத்தாள் வெட்கத்தாலே! மானொன்று நாணமுற்று புதர் மறைவில் ஒதுங்கிற்றாங்கே! கிள்ளைகளும், புறாக்களும் இணை இணையாய்க் கிளைகளில் இருந்தெழுந்து ''சிறிதேனும் இந்தப் பிள்ளைகட்கு வெட்கமிலையோ! இத்தனைபேர் நம் மத்தியிலே வெள்ளை மலர்ப் படுக்கையிலே காம விளையாட்டா? சீச்சீ!'' எனக்கூறிப் பறந்தனவே! ஊடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு -இன்பக் கூடல் முடித்து எழுந்தபோது - "இனியொருமுறை 'வாடல்' என்பது வாழ்க்கையில் வாராதே'' என்று ஆடல் தீர்ந்து தோகை மூடிய மயில் கேட்டாள்!

அவன், அவளைப் பார்த்து;

\* “உயிரே! ஒன்று கேள்! உன்னையும் என்னையும் உலகில் பிரிக்கின்ற சக்தி எதுவுமில்லை! உனைப்பெற்ற தாய் யார் என்றோ எனையீன்ற தாய் யார் என்றே உன் தந்தைக்கும் என் தந்தைக்கும் உறவுமுறை என்னவென்றோ இருவர் நாம் எவ்வழியில் வந்தோர் என்றோ அறிந்திட விரும்பாமலே அறிமுகமானோம்! எங்கிருந்தோ வந்தாள் என உன்னை நானும், எங்கிருந்தோ வந்தான் என என்னை நீயும் ஏற்றுக்கொண்டோம்! இதயத்தில்; ஏற்றிக்கொண்டோம் ! இனியவளே! செம்மண் நிலத்தில் மழை பொழிந்தால் - அந்த நிலத்தொடு கலந்த நீரில் சிவப்பு வண்ணத்தைப் பிரிக்க முடியாதன்றோ!

அஃதேபோல் நமது நெஞ்சங்கள் இரண்டும் இணைந்துவிட்டன! எனவே பிரிவு எனும் நினைப்பை இக்கணமே அகற்றிவிடு!”

இந்தக் குறுந்தொகைப் பாடலை இளங்குமரன் எளிமையாக்கிச் சொன்னவுடன் மங்கைநல்லாள், மீண்டும் நிலமானாள் - அவன் மழையானான்!

\*

"யாயும் ஞாயும் யாரா கியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்! செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே''

\*

(குறுந்தொகை : பாடல் :40 பாடியவர் : செம்புலப் பெயனீரார்)

பொருள் விளக்கம் :

யாய் = தாய். ஞாய் =தாய். எந்தையும் நுந்தையும் =என் தந்தையும், உன் தந்தையும். செம்புலம் = செம்மண் நிலம். பெயல்நீர்=மழை.

\*

ஆட்சியும்

மாட்சியும்!

நெடுங்கிள்ளி யென்கின்ற உறையூர்ச் சோழன் - தன் பெரும்படைக்குக் களத்தீனி வேண்டுமென்று கூறி, பூம்புகார்ச் சோழன் நலங்கிள்ளிதனை எதிர்த்துப் போர்முரசு கொட்டுக என்றான்; புலியெனச் சீறி!

\*

"இருக்கின்ற ஆட்சிஎல்லை போதாதென்று; தருக்கு மிகக் கொண்டு படையெடுத்து வந்து இருமருங்கும் தமிழர்களின் இரத்தம் கொட்ட எதற்காக இப்படியோர் நாடு பிடிக்கும் ஆசை? என்னிடமே நேரில் வந்து, தலைவணங்கித் தாழ்ந்து இந்நாட்டைப் பரிசிலாக வேண்டிநின்றால் இன்னுயிரும் கொடுப்பேனே எடுத்துக்கொள் என்று! எளிதாக உள்ள இந்த வழிதனையே விடுத்து எலியாக முயலாக எமையெண்ணி இகழ்ந்து எதிர்நின்று போர்புரிய என்ன நெஞ்சழுத்தம்?

நெடுங்கிள்ளி உணர்வதற்கு ஒன்றுரைப்பேன்; கேளீர்!

என்

கொடுவாளின் முனையின் முன்னால் விளையாடல் நன்றல்ல சொல்வீர்!''