உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 41
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 41 · 41 / 104

அவ்வீரன் அதியமான் ஒரு நாட் காலை அடவியிற் சென்று அலைந்து திரிந்து

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

விலங்குகள் மீது வேல்களைப் பொழிந்து வேட்டையை நிகழ்த்தி விரைந்து திரும்பினான் வழியில் மலையிடைப் பிளவொன்று கண்டு விழியினைச் செலுத்தி வியப்பாய் நோக்கினான் தனிமையிலே நெல்லி மரமொன்றுயர்ந்து தன் கிளையினில் சிறு இலைகளுக்கிடையே கனியொன்றே யொன்றைத் தாங்கி நின்றது. இனிப்பாக இருக்குமென்றும் அதனையுண்டால் இறப்பேதும் அணுகாதென்றும் இஃதுண்மையென்றும் தலைப்பாகைத் துறவியொருவர் புதுமையாகப் புகன்றவுடன் இமைப் போதும் தயங்காமல் அக்கனியைப் பறித்துக் கொண்டான் தனைக் காக்க மன்னவனும் அக்கனியை உண்பான் என்று, தகடூர் வீரரெல்லாம் எண்ணிக் கொண்டு தடந்தோள் உயர்ந்திடவே தலைவன் பின் நடைபோட்டார்.

மாளிகைக்கு வந்தவுடன் நெடுமானஞ்சி மாணிக்கத் தமிழ்பாடும் அவ்வையை அழைக்கலுற்றான். ''மன்னவனே ஏன் அழைத்தாய் எனத் தெரியும்; மாற்றானாம் தொண்டைமானிடம் எனைத் தூதாக அனுப்பத்தானே?'' என்று கேட்ட அவ்வை அம்மை சென்று வரத் தயார்தான் என்றாள் - தூதில் வென்று வருவதற்கு முன்னே - இதைத் தின்று சுவைத்திடுக என வேண்டி, நெல்லிக்கனியை நீட்டினான் வேந்தன்-நிலவில் அல்லி மலர்வது போல் முகமலர்ந்தாள் அவ்வை!

சுவையான கனிதான் என்று சுவைத்துப் பார்த்து; அரசு அவைக் கவியான அவ்வை சொன்னாள். அருமையாய்க் கிடைத்திட்ட இக்கனியுண்டால் ஆயுள் நீளுமென்று அடவியில் துறவி சொன்னார் அடியேனின் உயிர் அதிக நாள் இருந்தென்ன பயன்? அவ்வையின் ஆயுள் வளர்ந்தால் தமிழ் வளரும் தகடூரின் பெயர் உள்ளளவும் நான் வாழ்வேன் தமிழ் உள்ளளவும் வாழ்க அவ்வையே'' என்றான். உண்மையை முன்கூட்டி உரைத்திட்டால் உண்ணாமல் மறுத்திடுவாள் அவ்வையென்று தான் வாழக் கருதாமல் தமிழ்த்தாய் வாழத் தகடூரான் தந்தகனி நெல்லிக்கனி; அதியமான் தமிழ் ஆர்வம் போற்றி அவ்வை தந்த நன்றிக்கனி; இந்த செய்யுட்கனி!

'வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார் களம்படக் கடந்த கழல் தொடி தடக்கை ஆர்கலி நறவின், அதியர் கோமான் போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி! பால் புரை பிறை நுதல் பொலிந்தசென்னி நீலமணி மிடற்று ஒருவன்போல மன்னுக பெரும நீயே! தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட சிறுயிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே''

(புறநானூறு -பாடல் 87, 91-அவ்வையார்)

பொருள் விளக்கம் :

தெவ்விர் = பகைவீர். பொருநன் = வீரன். வைகல் = ஒரு நாள். வலித்த = செய்யப்பட்ட. வலம்படுவாய் வாள் = வெற்றி தரத் தவறாத வாள். ஒன்னார் = பகைவர். ஆர்கலிநறவு = ஆரவாரம் செய்கின்ற மது.

நீலமலை நீரினும் குளிர்ந்த நெஞ்சம்!

பத்துப் பத்தாகப் பாவாணர்கள் வடித்த பாடல்களின் தொகுப்பாம் 'பதிற்றுப் பத்து'' எனும் பழமுதிர் சோலையில், காலமெனும் கள்வன் புகுந்து கைவரிசை காட்டியதால் இரு பத்துக்கள் குறைந்து; எட்டு பத்துக்களே மிஞ்சியதாம்! அந்த எண்பது பாடல்கள் இயம்புவதென்னவாம்? உண்பதும் உறங்குவதுமே வாழ்க்கையல்ல; புண்படும் போர் முனை போந்து, வெற்றி அல்லது வீர மரணமெனப் புகழ்பட நிற்பதே வாழ்க்கையாகும்! இல்லார்க்கும் - தமிழில் வல்ல நல்லார்க்கும்; இல்லையெனாது எடுத்துச் செல்வீர் என, ஈவதே வாழ்க்கையாகும்!

துணையாக வந்து கொஞ்சி, தோளில் தொத்திய கிளியுடனே இணைபிரியாக் காதலுடன் இல்லறம் போற்றுவதே வாழ்க்கையாகும்! இவ்வாறு செந்தமிழர் திருநாட்டுப் பெருமை சொல்லி, சேரர், சோழர், பாண்டியர் - அவரனைய தீரார் மிகு தமிழ்க் குலத்தார்தம் செப்பரிய வீரம் பாடும் இலக்கியங்கள்; ஒப்பற்ற நம் மண்ணின் சொத்து - அவற்றிலோர் ஒளியுமிழும் முத்துத்தான் பதிற்றுப் பத்து!

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

சேர மன்னர் திறம் போற்றும் வீர வரலாற்றுப் பேழையிது! தொலைவிலிருந்து நுகர்ந்தாலும் தூய தமிழ் மணக்கும் தாழையிது! இதில், ஒன்பதாம் பத்தென்னும் மலர்க் கொத்து; ஓங்கு புகழ்ப் "பெருங்குன்றூர்க் கிழார்'' எனும் ஒலி முரசக் கவியரசர் கட்டியது - அதன் உயர்மணத்தில், உயிர்த்தமிழின் உணர்வைக் காண்போம்! "குட்டுவன் இரும்பொறை'' யென்பானுக்கும் - அவன் கோப்பெருந்தேவி 'அந்துவஞ் செள்ளை'' க்கும் மட்டில்லாப் புகழ் விளக்கொன்று மகனாகப் பிறந்த தம்மா!

"இளஞ்சேரல் இரும்பொறை''எனப் பெயர் இட்டு அழைத்தனர்! இன்ப மகிழ்வில் திளைத்தனர்! அவனோ ; வலிமையினைத் தோளில் ஏந்தி வாய்மையினை நெஞ்சில் ஏந்தி வஞ்சி மூதூர்க் கொடியினைக் கையில் ஏந்தி வஞ்சினங்கள் பலவற்றை நிறைவேற்றி முடித்தான்! 'விச்சிக்கோன்' என்பானின் மலைநாட்டை வீழ்த்திப் பின் விற்கொடியின் நிழல் நின்று பழையன்மாறனையும் சோழனையும் போர்க்களத்தில் புலிப் போத்தாய் சிங்க ஏறாய் தோற்கடித்தான்! புயல் காற்றாய்ச் சீறுகின்றான் சேரன்; பூப்பந்தாய் எதிரிகளின் தலைகளையே; இரு கரங் கொண்டு விளையாடும் அவன் நெஞ்ச உரங் கண்டு பெருங் குன்றூரார் பெரிதும் வியந்து பாசறை யொன்றில் அவனைச் சந்தித்தார்!

மாசறு பொன்னாம் அவன் மனையாள் மன்னன் பிரிவால் மனமிக நொந்து இன்னலுறும் செய்தியினைச் சொன்னார்! "இருவாட்சியும் செண்பகமும் சூடி - முகத்தில் திருஆட்சி புரிகின்ற ஆய மகளிர் முன்னே தருநிழலின்றித் தவிக்கின்ற மான்போல் - உன் பருவமயில் படுகின்ற துயரால்; மேனியில் படர்கின்ற பசலை நிறம் மறைத்து சுடர்கின்ற பொன்னொளி போல் திகழும் - அவள்

அடர்புருவ நெற்றியினைப் பற்றி இடர்தீர்ப்பாய் மன்னவனே'' என்றார்! 'போர் முனை விட்டகன்று சேரமாதேவியினை மார்புறத் தழுவிமகிழ; நின் தேர் இன்றே புறப்படுதற்குப் புரவிகளைப் பூட்டிடுக' என்றார்! 'நகை முகத்தழகியாம் நின்துணையை நாடி நீ நகர்வதாலே - இங்குள்ள பகை முகத்தில் எல்லாம் எல்லையில்லாப் பரவசத்தைக் காணலாமே! இளஞ்சேரல் இரும்பொறையின் கள முரசின் ஓசையின்றி சில நாட்களேனும் - தம் செவிப்பறைகள் ஓய்வு பெறுமே எனச் செப்பிடுவர் - அதனாலே நீ வஞ்சி மூதூர் சென்று, உன் வஞ்சியினைக் கண்டுவர - ஒருசேர ஒப்பிடுவர்!'' எனச் சொன்னார்!

'ஆங்குநீ அரசியுடன் இருக்கும் நேரம்தான் ஈங்குள்ள பகையரசர்க்குத் தூங்கும் நேரம் என்பதாலே - அருள்கூர்ந்து தூங்கவிடு அவர்களைச் சற்று!" என்றுரைத்தார். சேரனும், புலவர் உரை கேட்டுச் செருமுனையில் சிதறியோடும் எதிரிகட்குச் சிறிதளவு ஓய்வு தரச் சிரமசைத்தான்! ஆவிதனை இவன்பால் விடுத்துக் காவியுகு நீருடனே கலங்குகின்ற தேவியின் தாபம் தீர்க்கப் புறப்பட்டான்! மாவீரர் அனைவருமே அவன் ஆணை கேட்டுத் தாவியோடித் தழுவிக் கொண்டார் தங்கள் தங்கம் நிகர் காதலியர் தளிருடலை!

'தமிழ்ப் புலவர் வாழ்க" என்று அனைவருமே இமிழ்கடல் அலையென முழங்கலுற்றார்! சேரமா தேவியுடன் ஒன்றிப்போய் -"இரவு நேரமா அதற்குள்ளே கழிந்த"தென்று வீரமா மன்னன் இளஞ்சேரல் வியந்தெழுந்து ஆரம் புரளும் அழகி மார்பில் ஆயிரம் முத்தங்கள் பதித்தபோது - அவளும்

பாயிரம் பாடி வாழ்த்துகின்றாள் புலவரையே! அவரால் தானே அவனும் வந்தான் அதனால் அவர்க்கே வாழ்த்து என்றாள்! ஆளன் முகத்தில் முகம் பதித்து - அவன் தோளை விரலால் மீட்டியசைத்து ''அன்பே ஒரு வரம் வேண்டு' மென்றாள். "என்பு தோல் கிழித்து எதிரியை விரட்டும் களத்திற்கினி மேல் போகாமல் காரிகை உன்னருகே இருத்தல் வேண்டுமெனும் அந்த வரம் தவிர - கண்ணே; நீ - எந்த வரம் கேட்டாலும் தருவேன்" என்றான்! ''இந்த ஒரு நாள் என்னுயிர் பிழைக்க நீவிர் வந்தது எதனால் என்பதை நினைத்தேன் பெருங்குன்றூர்க் கிழார் இல்லையேல் - இன்று அருந்தேனாய் இனித்த இன்பம் கிட்டாதன்றோ?

அதனாலே அவர் மகிழ அட்டியின்றி அள்ளி வழங்கிடுக அவர்க்குப் பரிசை!'' என்றாள். ''இன்பமே! இதோ உனக்கோர் பரிசெ'ன்று - அவள் இதழோடு இதழ் பதித்து; விடுவித்துக்கொண்டு அத்தாணி மண்டபத்திலமர்ந்து அழைத்து வரச் சொன்னான் புலவர் கிழாரை! வந்தவுடன் அவரை வணங்கி நின்று வழங்குகின்றேன் பரிசிலாகப் பெற்றுக் கொள்க; முப்பத்து ஈராயிரம் பொற்காசென்று முறுவலுடன் மொழிந்திட்டான் - உடன் பொழிந்திட்டான்! அவர் அறிந்து கொடுத்தது இப்பரிசென்றால்

அவர்

அறியாமலே கொடுத்தது பல ஊரும் மனைகளுமாம்! அதுகண்ட புலவர்; ''வெட்டுண்ட உடல்கள் வீழ்ந்தும் சாய்ந்தும் கொட்டிய குருதியால் போர்க்களம் முழுதும் புலால் நாற்றமெடுக்க; பொல்லாப் பகையை நொறுக்கும் கையில் வெற்றி வேல் கொண்டு - விரைந்து செலுத்தும் கொடித்தேர் மீதமர்ந்து கொடும்பகை தீர்க்க மட்டும் படித்தான் சேரன் என்றிருந்தேன் - இல்லை! இல்லை! படையெடுத்துப் பகைப்புலத்தின்மீது செல்லும் ஆர்வம் போலே

கொடை கொடுத்துப் புலவர்தமை அரவணைக்கும் ஆர்வமுள்ளான்! ஓடக்கோலுக்கும் எட்டாத ஆழமிகு நீரினிலே ஓடிக் குதித்தாடும் மகளிர் தம் காதணிகள் கழன்று வீழ்ந்து கைதவறிப் போனாலும் - மேலிருந்து காண்போர்க்குத் தெளிவாகத் தெரியு மளவு சந்தன மரங்கள்தமைச் சுமந்து கொண்டு சலசல வெனப் பாய்ந்து வரும் நீலமலைவானியாற்று தெள்ளிய நீரை விடக் கோலமிகு சேரனது குளிர்ந்த உள்ளம்; இனிது என்பேன்!'' என்று பாடி ஏற்றிப் புகழ்ந்தார் - சேரனும் சென்று வருகின்றேன் மீண்டும் செருக்களமென்று விடைபெற்றுக் கிளம்பி விட்டான்!

அவன் படைமுரசின் ஒலிகேட்டுப் பகைவர்களோ மீண்டும் பதைக்கலுற்றார்!

\*

\* "உறலுறு குருதிச் செருக்களம் புலவக் கொன்றமர்க் கடந்த வெந்திறல் தடக்கை வென்வேற் பொறையன் என்றலின் வெருவர வெப்புடை ஆடூஉச் செத்தனென் மன்யான்; நல்லிசை நிலைஇய நனந்தலை உலகத்து இல்லோர் புன்கண் தீர நல்கும் நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் பாடுநர் புரவலன் ஆடுடை அண்ணல் கழைநிலை பெறாக் குட்டத் தாயினும் புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும் சாந்துவரு வானி நீரினும் தீந்தன் சாயலன் மன்ற தானே!'' (வெந்திறல் தடக்கை)

\*

(''பதிற்றுப் பத்து '' ஒன்பதாம் பத்து பாடியவர் : பெருங்குன்றூர்க் கிழார்)

பொருள் விளக்கம் :

உறல் உறு = நிலத்திலே ஊறுகிற அளவுக்கு. புலவ = புலால் நாற்றம் நாற். வென்வேல் = வெற்றிவேல். பொறையன் = சேரன். வெப்புடை ஆடூஉ = கொடுமை நிறைந்த ஆண்மகன். செத்தனென்மன் = முன்பு கருதியிருந்தது இப்போது இல்லை என்று ஆயிற்று. கழை = ஓடக்கோல். குட்டம் = ஆழம். சாந்துவரு வானி நீர் = சந்தன மரங்கள் மிதந்து வரும் வானியாற்று நீர். தீந்தண் சாயலன் = தெளிந்த குளிர்ந்த மென்மையுடையவன். குறிப்பு: வானியாறு ''பவானி''யாறு எனவும் அறியப்படுகிறது.

\*

தலை கேட்டான்

தம்பி!

கரும்பெடுத்துத் தமிழ் பிழிந்து - மலரில் சுரும்பெடுத்து வருகின்ற தேன் கலந்து அரும்பெடுத்துச் சிரிக்கின்ற மகளிர் கூட்டம், 'எறும்பெடுத்துச் செல்கின்ற உணவு கூட எம்மன்னன் குமண வள்ளல் தந்த"தென்று எழுச்சி நடை போடுகின்ற கொங்குநாடு. தமிழ் பாடும் புலவரெல்லாம், குமணன் புகழ்பாடி வந்திடுவார் இமிழ் கடலின் அலைபோலச் சொல் முழங்கும். அமிழ்தமெனும் தமிழ்மொழியின் பண் முழங்கும். கமழ்கின்ற கவிதை மலர்த் தோட்டம் - அன்பு தவழ்கின்ற நெஞ்சத்தின் கூட்டம்.

முத்திரைத் தமிழால் கவிதை யாத்திடும் புலவர் - பெருஞ் சித்திரனார் என்றொருவர் - பேரறிஞர் பத்தரை மாற்றுத் தங்கம்போல் பத்தினி - புத்திரச் செல்வம் - புலவரையீன்ற வயிறு - அவர் இத்தரையில் கண்ட சுகம் வறுமையே என்று மெத்த இளைத்திட்டார் - நித்த நித்தம் பட்டினியால்! பூப்போல வாடி வதங்கிடுவாள் துணைவி; புழுப்போலச் சுருண்டு படுத்திடுவாள் அன்னை; பூனைபோலப் பானை உருட்டிடுவான் பசியாலே பிள்ளை; கைபிசைந்து நின்றிருந்த கவிஞருக்குக் கொடையாலே கை சிவந்த குமண வள்ளல் நினைவுவரக், கிளம்பிவிட்டார்!

''பாரிக்கும் காரிக்கும் பின்னர் கொடை வழங்க யாரிருப்பார் என நினைத்த நினைப்பறுத்து, வாரிக்கொள் நான் வழங்குகின்ற செல்வத்தை! மாரிக்குப் பெயர்தான் குமணனென்று மார்தட்டும்