உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 30
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 30 · 30 / 104

(புறநானூறு : பாடல் : 378)

\* “வழிபடுவோரை வல்லறி தீயே! பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே; நீமெய் கண்ட தீமை காணின் ஒப்பநாடி அத்தக ஒறுத்தி வந்து, அடிபொருந்தி, முந்தைநிற்பின், தண்டமும் தணிதி, பண்டையிற் பெரிதே; அமிழ்து அட்டு ஆனாக் கமழ்குய் அடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப! ... ... ... ... ... ... ... ... ... ... ... ...”

*

(புறநானூறு : பாடல் 10)

குறிப்பு : இரண்டு பாடல்களும் “ஊன்பொழிப் பசுங்குடையார்” எனும் புலவரால் பாடப் பெற்றவையாகும்.

பொருள் விளக்கம் :

(பாடல் 378)

மிடல் = வலிமை. இலம்பாடு = வறுமை. இரும்பேர் = உறவினர். செறிமரபின = அணியத்தகுந்தவற்றை. தொடக்குநர் = அணிந்தனர். அரைக்கமை = இடைக்கு உரியவற்றை. மிடற்று = கழுத்தில். மதர்அணி = அழகியநகை. இழை = அணி. அறாஅ அருநகை = நீங்காத அரிய மகிழ்ச்சி.

(பாடல் 10)

வல் அறிதி = விரைவில் அறிவாய். ஒப்பநாடி = அறநெறிக்கேற்ப ஆய்ந்து. அத்தக ஒறுத்தி = அதற்கேற்ற தண்டனை தந்து. மலைத்தல் = மயங்கி மாறுபடல். மள்ளர் = வீரர்.

*

வண்டு வந்தது ஏனடி?

பழத்துக்குள் சிறையிருக்கும் விதையைப்போல் பருவப்பாவையினை வீட்டுக்குள் பாதுகாத்தாள் அன்னை; அந்தக்

கிழத்துக்குக் காதுகுத்தி; மெல்ல, அருகிருக்கும் குளத்துக்குச் செல்வதாகக் குமரிப்பெண் கூறிவிட்டு,

அடக்கத்தின் உருப்போல நடந்து காட்டி; அன்னை முகம் மறைந்தவுடன்

அங்குள்ள மலையருவி தேங்குகின்ற குளம் தேடி ஓடிடுவாள்!

களத்துக்கு வருகின்ற கேடயத்தை முத்தமிடக் காத்திருக்கும் வீரன் கை வாள் போலக்

காளையவன் காத்திருப்பான் கண்மணியின் வரவு நோக்கி! தோளைத் தழுவுகின்ற மாலையாக அவளும் தொத்திக் கொள்வாள்!

“களவொழுக்கம் தீதாகும்; அன்னைக்கும் அலர்தூற்றும் ஊரார்க்கும்;

காதில் பட்டவுடன் கடும் எதிர்ப்பு மூண்டுவிடும் - அதனாலே

அளவோடு இருக்கட்டு”மென்று அவள்தோழி அடிக்கடி குறுக்கிட்டு

ஆயிரம் முறை தடுத்திட்டாள்; அவள் அதனைக் கேட்டால்தானே!

அன்றொருநாள் அருவிக்குளம் போவதாக அன்னைகாதில் பூ சுற்றிவிட்டு

குன்றோரம் முகிலிரண்டு ஒன்றானதுபோல் ஆகிவிட்டார் அவளும், அவனும்!

“பொறிகிளர் ஆகம் புல்லத் தோள் சேர்பு” எனப் புலவர் வழுதியார் எழுத்தில் பொறித்தது போல;

அழகிய மார்புகள் இரண்டும் அழுந்தத் தழுவி மகிழ்ந்து பழச்சுவை முத்தம் பத்து, நூறு, ஆயிரமெனப் பகிர்ந்து கொண்டனர்!

Illustration

Full-page colour illustration. No source-visible literary text or printed page number is visible on this scan.

அடுத்தநாள் காலை அடுக்களிப்பக்கம் அன்னையிருந்தனள் எடுத்தும் கொடுத்தும் இட்டபணிகளைச் செய்ய மகளும் சென்றனள்!