சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 1 · 1 / 104
# சங்கத் தமிழ் கலைஞர் மு.கருணாநிதி
காட்சிப் பதிவு
மலர்கள் மற்றும் ஓலைச்சுவடிக் கட்டுகள் இடம்பெறும் வண்ண அட்டை.
# சங்கத் தமிழ் கலைஞர் மு.கருணாநிதி ராக்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸ் (பி)லிட சென்னை-83
பிந்தைய நூலக ஒட்டு
பேராசிரியர் முனைவர் **இரா. இளவரசு** நூலக நூல்கள்
நூற்கொடை: பேராசிரியர் **இரா. வேலம்மாள்** **பேராசிரியர் இளவரசு நினைவு அறக்கட்டளை**
இந்த ஒட்டு மூல நூலின் தொடர்ச்சியான அச்சு உரையிலிருந்து தனியான பிந்தைய நூலக/உரிமைச் சான்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கத் தமிழ் கலைஞர் மு. கருணாநிதி
வெளியீட்டாளர்
ராக்போர்ட் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட். 33, 10வது நிழற்சாலை, அசோக்நகர், சென்னை 600 083. தமிழ்நாடு - இந்தியா
# சங்கத் தமிழ் கலைஞர் மு.கருணாநிதி ராக் ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸ் (பி)லிட்., சென்னை-83
நூல் அளவை
| | | |---|---| | தலைப்பு | : சங்கத் தமிழ். | | ஆசிரியர் | : கலைஞர் மு. கருணாநிதி. | | பொருள் | : இலக்கியம் (சங்கத் தமிழுக்கு, எளிய நடையில் விளக்கக் கவிதை வரிகள்) | | வெளியீட்டகம் | : ராக்போர்ட் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட். - சென்னை - 600 083. | | வெளியீடு | : 4. | | பதிப்பு | : ஒன்று. | | தாள் | : மாப் லித்தோ. | | அளவு | : 14 x 21½ சி.எம். | | படிகள் | : 3,000. | | காலம் | : ஆகஸ்ட் 1987. | | விலை | : ரூ.
125/- (ரூபாய் நூற்று இருபத்தி ஐந்து) | | எழுத்து | : 18 புள்ளி. | | ஓவியங்கள் | : கோபுலு - ஜெயராஜ் - மாருதி <br>உமாபதி - மருது. | | தலைப்புகள் | : ஓவியக் கவிஞர் அமுதோன். | | ஒளி அச்சுக் கோர்வை | : காந்தளகம் - சென்னை-2. | | அச்சிட்டோர் | : சீனிவாஸ் பைன் ஆர்ட்ஸ் - சிவகாசி. |
முன்னுரை
காட்சிப் பதிவு
`முன்னுரை` என்ற தலைப்பின் கீழ் முழுப் பக்க கையெழுத்துக் கடிதம் உள்ளது.
கீ. இராமலிங்கனார் மடல்!
நாள் : 19-10-1985.
கனிந்த அன்புமிக்க கலைஞர் பெருமானார் அவர்கள் தித்திக்கும் திருமுன்னுக்கு,
26.7.85 நாளிட்ட தங்கள் தேன் என இனிக்கும் திருமடலுக்கு இன்றே விடை வரைகின்றேன். பெற்றதுமே பெருமிதத்தோடு படித்துப் பெருங்களிப்படைந்தேன். நன்றிகூர்ந்தேன். தங்கள் அன்பின் கட்டளையை நிறைவேற்றுவதையே முதற் கடமையாகக் கொண்டேன்.
சங்கத் தமிழ் என்னும் கலைநலமும் கவிநலமும் ஒருங்கே பொருந்திய நூலுக்கு ஒரு கட்டுரை வடிவிலே ஓர் அணிந்துரை வரைவதிலே முயன்று நின்று முடித்தேன். அதற்கே பேராசிரியர் திரு. முருகேசனார் உதவி உடனிருந்து உறுதுணை புரிந்தது. என் உள்ளத்திற்கு உகந்த வகையிலே அது அமையாது போயினும், தங்கள் கட்டளையை ஒருவாறு நிறைவேற்றினேன் என்பது எனக்கு மனநிறைவு அளிக்கின்றது.
தள்ளாமையின் விளைவான தடுமாற்றத்தினால் கால் தவறிக் கீழே விழுந்து விட்டேன். இடப்புறச்சப்பை அடிபட்டு அசைக்க முடியாதபடி வலியும் ஏற்பட்டிருக்கிறது. படுக்கையில் இருக்கிறேன். உண்பதும் கழிப்பதும் கூட படுக்கையிலேயே நிகழ வேண்டியிருக்கின்றன.
நண்பர் பேராசிரியர் முருகேசனார் காண வந்தார். அவர் அன்பினை நாடி இதனை வரைய முடிந்தது. நேரில் வரவும், கலந்து உரையாடவும் வாய்ப்பிழந்த நிலையில் உள்ளேன். அணிந்துரையைத் தாங்களே செப்பனிட்டு அச்சுக்கு அனுப்பக் கோருகிறேன்.
தங்கள் கருத்தறிந்து மேலும் செய்ய வேண்டுவன இருப்பின் செய்து முடிக்க ஆயத்தமாய் உள்ளேன்.
அடியேனையும் ஒரு பொருளாகக் கருதி அணிந்துரை வரையப் பணித்த தங்கள் அன்பின் மாண்பு மாப்பெரிது. அதனைப் போற்றிப் பரவுகின்றேன்.
இங்ஙனம் தங்கள் கீ. இரா.
அணிந்துரை
