தொகுதி 54 · கடிதம் 4048
காவிரிப் பிரச்சனை: பிரதமர் மோடி - சோனியா காந்தி தலையிட வேண்டும்
2016-10-04
உடன்பிறப்பே,
காவிரி நதிநீர்ப் பங்கீட்டு வழக்கு 2-9-2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்த விவகாரத்தைக் கர்நாடக அரசு சட்டத்திற்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கிடையே ஒரு நலல சூழல் நிலவ வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும், வறட்சியான காலங்களிலும் தண்ணார் பற்றாக்குறையான காலங்களிலும் தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணார் வழங்க வேண்டும் என்பது குறித்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு எவ்வளவு நீரை வழங்க முடியும் என்பது குறித்துக் கர்நாடக அரசு கலந்து ஆலோசித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்” என்று கூறி வழக்கை 5-9-2016க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
5-9-2016 அன்று இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், “சம்பாப்பயிர் சாகுபடிக்காக விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்திற்கு 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரைக் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும்” என்று தீர்ப்பு அளித்து விசாரணையை 16- 9-2016க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த உடனேயே கர்நாடக முதல்வர் சித்தராமையா,” தண்ணீ திறந்து விடுவதை நாங்கள் நடைமுறைப்படுத்த முடியாது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்
என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதன்படிதான் அரசு நடந்து கொள்ளும்” என்றார். 6-9-2016 அன்று கர்நாடக முதல்வர் கூட்டியிருந்த அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியதும், “உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து, கண்டிப்பாகத் தண்ண திறக்க வேண்டும்; தவறினால் நீதிமன்றக் கண்டனத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும்” என்று சட்ட நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர். அனைத்துக்கட்சிக் கூட்டம் முடிந்ததற்குப் பிறகு கர்நாடக முதல்வர் சித்தராமையா, “உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு 15 ஆயிரம் கன அடி தண்ணார் திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அனைவரும் மதிக்க வேண்டும் என்பதால், அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்குத் தண்ண திறந்து விடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கனத்த இதயத்துடன் இந்த முடிவு எடுத்துள்ளோம்” என்று அறிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி 6-9-2016 நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடி, கபினி அணையிலிருந்து 5 ஆயிரம் கன அடி என்று கர்நாடக அரசு தண்ணீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிட்டது. தமிழகத்திற்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தினந்தோறும் தண்ணீ திறந்துவிடவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் மாற்றம் செய்யவும், உத்தரவை நிறுத்தி வைக்கவும் கோரி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில், 11-9-2016 அன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனு 12-9-2016 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசின் சார்பில், “5-9- 2016 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் இதுவரையில் 86 ஆயிரம் கன அடி HM திறந்துவிட்டுள்ளோம், இதற்கு மேலும் திறந்துவிட இயலாது. எனவே அந்தத் தீர்ப்பை நிறுத்தி உத்தரவிட வேண்டும்” ட்டு வாதிடப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “போராட்டம், கலவரம் என்று கூறி நீதிமன்ற உத்தரவை மாற்றக்கோருவது எப்போதும் ஏற்கத்தக்கதல்ல. சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மாநில அரசின் கடமை. தீர்ப்பை அமல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு. கர்நாடக அரசின் மனு ஏற்கத்தக்கதல்ல. கர்நாடக அரசு, வரும் 20ம் தேதிவரை தினமும் 12 ஆயிரம் கன அடி என்ற அளவில் தமிழகத்திற்குத் தண்ணா
திறந்துவிட வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை 20- 9-2016க்கு ஒத்திவைத்தனா.
இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை யொட்டி, 19-9-2016 அன்று மத்திய நீர் ஆதாரங்கள் துறைச் செயலாளர் தலைமையில் கூடிய காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தின் முடிவில், “காவிரியிலிருந்து தமிழகத்திற்கு செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடிவீதம் கர்நாடக அரசு தண்ணார் திறந்துவிட வேண்டும்” என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவைத் தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
காவிரி நதிநீரப் பங்கீட்டுப் பிரச்சினையில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்றத் தாப்பை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைதச் சிறிதும் எண்ணிப் பாக்காமல் தொடர்ந்து மீறி வருகிறது; அதன காரணமாகப் பெரிதும் பாதிப்புக்காளாகும் தமிழக விவசாயிகளின் துனப நிலையைக் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தி வருகிறது. தற்போது உச்சநீதிமன்றத்தின உத்தரவுகளை நிறைவேற்றாமல், அனைத்துக்கட்சிக கூட்டம், அமைச்சரவைக் கூட்டம், சட்டமன்றச சிறப்புக் கூட்டம் ஆகியவற்றை நடத்தித் தீர்மானம் நிறைவேற்றி அரசியல் சட்ட நெருக்கயையும், மோதல் போக்கையும் கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது. கூட்டாட்சி முறைக்குக குந்தகம் விளைவிக்கும் இப்படிப்பட்ட அணுகுமுறையைத தவிர்த்திட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு அறிவுரை கூற வேண்டியவர்கள், நெருக்கடியை ஏற்படுத்திடும் போக்குக்கு ஆதரவளிப்பது வேதனை தருகிறது.
20-9-2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, காவிரி கண்காணிப்புக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவும் உத்தரவும் அறிக்கையாக மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக அரசின் சார்பில், “கர்நாடக மாநிலத்தின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்கே தண்ணீ போதுமானதாக இல்லை என்ற நிலையில், தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது. இதனால்
கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று எடுத்துரைக்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில், “காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரைக் கர்நாடக அரசு தர வேண்டும்” என்று வாதிடப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “நான்கு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். கடந்த 1894 முதல் உள்ள இந்தப் பிரச்சினையை இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீட்டித்துக் கொண்டிருப்பீர்கள். வரும் 27ஆம் தேதிவரை விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் கர்நாடகா தினமும் தண்ணார் திறந்துவிட வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை 27-9-2016க்௧கு ஒத்திவைத்தனர். இந்தத் தீர்ப்புக்கு கர்நாடகத்தின் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, கர்நாடக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து 20ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை அமல்படுத்த முடியாது என்றும், தமிழத்திற்கு இனிமேல் தண்ணர் திறந்துவிட முடியாது என்றும், அதனால் 20ஆம் தேதிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றுகோரி கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
27-9-2016 அன்று நடைபெற்ற விசாரணையின் முடிவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவது மத்திய - மாநில அரசுகளின் கடமை. அதற்கு மாறாக, கர்நாடக சட்டப் பேரவையைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை ஏற்க முடியாது. கூட்டாட்சித் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் நம் நாட்டில், இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளைச் சுமூகமாகத்தான் பேசித் தீர்க்க வேண்டும். இதில் மத்திய அரசின் பங்கு முக்கியம். கர்நாடக அரசின் செயல், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. இது பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதல்வர்களை மத்திய அரசு அழைத்துப் பேச வேண்டும். 28-9- 2016 முதல் 3 நாட்களுக்கு தமிழகத்திற்குத் தினமும் 6 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
நெருக்கடியையும், மோதல் போக்கையும் கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது. கூட்டாட்சி முறைக்குக் குந்தகம் விளைவிக்கும் இப்படிப்பட்ட அணுகுமுறையைத் தவிர்த்திட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு அறிவுரை கூற வேண்டியவர்கள், நெருக்கடியை ஏற்படுத்திடும் போக்குக்கு ஆதரவளிப்பது வேதனை தருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த அனந்த குமார், சதானந்த கவுடா, உமாபாரதி ஆகிய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதும், முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணாவிரதம் மேற்கொள்ளும் நிலைக்குச் சென்றிருப்பதும் கெட்ட வாய்ப்பாகும். எனவே கொதி நிலையை அடைந்துவிட்ட இந்தப் பிரச்சினையில், நிர்வாக ரீதியாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருப்பதால் பிரதமர் மோடி அவர்களும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் அரசியல் ரீதியான கடமை இருப்பதால் திருமதி சோனியாகாந்தி அம்மையாரும் நேரடியாகத் தலையிட்டு, பிரச்சினை திசை திரும்பிப் போய்விடாமல், தீவுகாணும் நோக்கில், விளைவுகளை விளக்கி, கர்நாடக அரசை நல்வழிப்படுத்திட உடனடியாக முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்! அன்புள்ள, மு.க. 4-10-2016
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 54 PDF ↗