உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 54

தொகுதி 54 · கடிதம் 4046

சூளுரை மேற்கொள்ள முப்பெரும் விழா துணைபுரியட்டும்

2016-09-16

உடன்பிறப்பே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சியங்களை உயிரென மதித்து, அவற்றை முன்னெடுத்துச் செலவதிலும், கழகத்தை வளர்த்தெடுப்பதிலும் முனைப்பு காட்டி, என் கடன கழகப் பணி செய்து கிடப்பதே என்று, கழகத்தையே தமது வாழ்க்கையாக மாற்றிக்கொண்டு உழைத்திடும் உத்தமாகளை, உடன்பிறப்புகளை, சிந்தனைச் செல்வங்களை, செயல்வீரா்களைப் போற்றிப் பாராட்டுவதிலும், ஆண்டுதோறும் விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பதிலும், திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியத் திருநாட்டிலேயே முன்னணி வகிக்கும் மாபெரும் இயக்கம் என்பதை எவரும் ஏற்றுக்கொள்வார்.

அந்த வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சா£பில முப்பெரும் விழா விருதுகள் வழங்கும் விழா - தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நிதியளிப்பு விழா - முரசொலி அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கும் விழா - மற்றும் சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நற்சான்று, பணமுடிப்பு, பதக்கம் வழங்கும் விழா ஆகியவை இணைந்து இந்த ஆண்டு சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில், கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. எப்போதும் போல இந்த ஆண்டும் விருதுகள், பணமுடிப்புகள், பரிசுகளை நான் வழங்கிடவள்ளேன். கழகப் பொருளாளர் தளபதி தம்பி மு.க.ஸ்டாவின், முதன்மைச் செயலாளர் தம்பி துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள், தம்பிகள் வி.பி.துரைசாமி, ஐ. பெரியசாமி, திருமதி சுப்புலட்சுமி ஜெகத்சன் ஆகியோ வாழ்த்துரை வழங்குகிறார்கள். சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி ஜெ. அன்பழகன், எம்.எல்.ஏ., வரவேற்புரையாற்றுகிறார்.

தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் 1995ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை 508 மாணவர்களுக்கு ரொக்கப் பரிசாக வழங்கப்பட்ட தொகை ரூ. 34 இலட்சத்து 48 ஆயிரம்.

2005ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு செப்டம்பாவரை என் பெயரால் அமைந்துள்ள (கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை?) சார்பில் 3,442 பேருக்குக் கலவி மற்றும் மருத்துவ நிதியாக வழங்கப்பட்ட தொகை நானகு கோடியே எட்டு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்.

தி.மு. கழக அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்று வரும் வெற்றிச்செல்வி அன்பழகன் கண் மருத்துவமனையில் 1988ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை இலவசக் கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை பெற்றவர்கள் 1 இலட்சத்து 19 ஆயிரத்து 546 பேர். இதில் கேட்ராக்ட் மற்றும் ஐ.ஓ.எல். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் 3,631 பேர்.

இந்த ஆண்டு நடைபெறும் முப்பெரும் விழா - பகுத்தறிவுப் பகலவன தந்தை பெரியார் அவர்களின் 138வது பிறந்த நாள் - பேரறிஞர் அண்ணா அவர்களின் 108வது பிறந்த நாள் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் 68வது பிறந்த நாள் - இந்த மூனறு நாள்களையும் இணைத்துத்தான் முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் நாம் கொண்டாடி வருகிறோம்.

தி.மு. கழகத்தின் சார்பில் எடுக்கப்படும் இந்த முப்பெரும் விழா, 1985ஆம் ஆண்டு முதல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஓராண்டு கூடத் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தொடக்கத்தில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது ஆகிய மூன்று விருதுகள் மட்டுமே கழகத்திறகாக உழைத்தவர்களுக்கு, பாடுபட்டவர்களுக்கு, பணியாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. 2000ஆம் ஆண்டு முதல் பாவேந்தர் விருதும் சேர்த்துக் கொள்ளப்பட்டு, ஆண்டுதோறும் நான்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2015ஆம் ஆண்டுவரை 109 பேருக்கு இந்த விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. 1994ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை [6 கழக

முன்னோடிகளுக்குப் பொற்கிழியாக வழங்கப்பட்ட தொகை ரூ. 24,00,000 (ரூபாய் 24 இலட்சம்).

இந்த ஆண்டு தந்த பெரியார் விருது, பேராசிரி யர் அ. அய்யாசாமி அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா விருது, திருமதி விஜயா தாயன்பன் அவர்களுக்கும், பாவேந்தர் விருது, திண்டுக்கல் லியோனி அவர்களுக்கும், கலைஞர் விருது, தூத்துக்குடி என்.பெரியசாமி அவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

பெரியார் விருது பெறும் பேராசிரியர் அய்யாசாமி “தி ரைசிங் சன்” ஆங்கில இதழில் தொடர்ந்து கட்டுரை எழுதி வருகிறார். கழக வரலாற்றைப் பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள சிறு நூல் ஒன்று தலைமைக் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. மாணவப் பருவத்திலிருந்து திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு, திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற அனைத்து மாநாடுகளிலும் கலந்துகொண்டவர்.

அண்ணா விருது பெறும் திருமதி விஜயா தாயன்பனின் கலை நிகழ்ச்சிகள் நடக்காத நகரங்கள் தமிழகத்தில் இல்லை எனும் அளவுக்குப் பிரச்சாரம் செய்தவர். மாநில, மாவட்ட மாநாடுகளில் அவரு டைய இசை ஒலித்திருக்கிறது. தற்போது தி.மு. கழகத்தின் மகளிர் அணிப் புரவலராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

பாவேந்தர் பெயரால் உள்ள விருதினைப் பெறும் திண்டுக்கல் லியோனி அதற்குப் பெரிதும் பொருத்தமானவர். பட்டிமன்றத்தின் வாயிலாகக் கழகக் கருத்துக்களை மக்களிடையே பரப்பி வருகிறவா. தேர்தல் நேரத்தில் கழக வேட்பாளர்களுக்காகத் தீவிரப் பிரச்சாரம்

மேற்கொண்டு பாடுபட்டவர்.

என் பெயரால் உள்ள கலைஞர் விருதினைப் பெறும் தூத்துக்குடி என். பெரியசாமி மாவட்டக் கழகச் செயலாளராக 1987ஆம் ஆண்டு முதல் சிறப்பாகப் பணியாற்றி வருபவர். கழகத்தில் முழு நேரமும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றுபவர்.

இந்த ஆண்டு விருது பெறும் இந்த நான்கு பேரையும் மனமாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

இதுவரை இந்த விருதுகள் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற பட்டியலைப் பாரத்தால், 1985இல் பெரியார் விருது திரு.

மன்னை ப.நாராயணசாமி - அண்ணா விருது பேராசிரியர் - கலைஞர் விருது கவியரசு பொன்னிவளவன் ஆகியோருக்கும்; 1986இல் பெரியார் விருது திரு. அன்பில் தர்மலிங்கம் - அண்ணா விருது திரு. சி.வி.எம். அண்ணாமலை - கலைஞர் விருது திரு. சாதிக் பாட்சா ஆகியோருக்கும்; 1987இல் பெரியார் விருது திரு. நீலநாராயணன் - அண்ணா விருது நாஞ்சிலார் - கலைஞர் விருது திருமதி. பொற்செல்வி இளமுருகு ஆகியோருக்கும்; 1988இல் பெரியார் விருது திரு. இளம்பரிதி - அண்ணா விருது டாக்டர் பத்மநாபன் - கலைஞர் விருது கவியரசு முடியரசன் ஆகியோருக்கும்; 1989இல் பெரியார் விருது காரைக்குடி இராமசுப்பையா - அண்ணா விருது புலவர் க.கோவிந்தன் - கலைஞர் விருது இசைமுரசு நாகூர் அனிபா ஆகியோருக்கும்; 1990இல் பெரியார் விருது கவிஞர் குடியரசு - அண்ணா விருது திரு. எஸ்.எஸ். தென்னரசு - கலைஞர் விருது திருமதி எஸ்.பி. சற்குணம் ஆகியோருக்கும்;

முரசொலி அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் 1997ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு ரொக்கப் பரிசாக 1 கோடியே, 4 இலட்சத்து 45 ஆயிரத்து

000 ரூபாயும், கலலூரி மாணவர்களுக்கு ரொக்கப் பரிசாக 1 கோடியே 3 இலட்சத்து ஓராயிரத்து 250 ரூபாயும் மொத்தம் 11,199 மாணவர்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக 2 கோடியே 7 இலட்சத்து 46 ஆயிரத்து 750 ரூபாய் வழங்கப்பட்டுள்ளன.

சிறந்த ஆட்டோ ஓட்டுநர் விருது என்று எடுத்துக் கொண்டால், 1999ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை 300 சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பதககத்துடன் பரிசுத் தொகையாக ரூ. 22 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் தரப்பட்டுள்ளது. முரசொலி அறக்கட்டளை சா£ாபில் இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்த தொகை 2 கோடியே 70 இலட்சத்து 39 ஆயிரத்து 750 ரூபாய்.

1991இல் பெரியார் விருது டாக்டர் சத்திய வாணிழுத்து - அண்ணா விருதுதிரு. மீ.சு. இளமுருகு பொற்செல்வி - கலைஞர் விருது திரு. நன்னிலம் நடராசன் ஆகியோருக்கும்; 1992இல் பெரியார் விருது திரு. நெல்லை ஆ. திராவிடமணி - அண்ணா

சென்னிமலை லட்சுமியம்மாள் ஆகியோருக்கும்; 1995இல் பெரியார் விருது பத்தமடை ந. பரமசிவம் - அண்ணா விருது புதுக்கோட்டை அ. பெரியண்ணன் - கலைஞர் விருது திண்டுக்கல் எம்.ஏ. நூர்ஜகான் பேகம் ஆகியோருக்கும்; 1996இல் பெரியார் விருது விருத்தாசலம் எம். செல்வராசன் - அண்ணாவிருது சொ. காவேரிமணியம் - கலைஞர் விருது போலீஸ் வெ. கண்ணன் ஆகியோருக்கும்; 1997 இல் பெரியார் விருது பேராசிரியர் மா. நன்னன் - அண்ணா விருது பெங்களூர் கி. சோழன் - கலைஞர்

விருது புலவர் ஆடலரசு ஆகியோருக்கும்; 1998இல் பெரியார் விருது பூவாலூர் பி. சின்னத்துரை

காஞ்சனா கமலநாதன் - பாவேந்தர் பாரதிதாசன் விருது பாவலா இறையரசன் - கலைஞர் விருது கயல் தினகரன் ஆகியோருக்கும்;

2002இல் பெரியார் விருது கரூர் வை. இரத்தின வேலு - அண்ணா விருது பெங்களூர் மா. மன்னர் - பாவேந்தர் பாரதிதாசன் விருது தஞ்சை கூத்தரசன் - கலைஞர் விருது கோவை மு. இராசம்மாள் ஆகியோருக்கும்; 2003இல் பெரியா விருது

நாமக்கல் மு. பழனிவேல் - அண்ணா விருது அருப்புக்கோட்டை ப.பெ.ந. நல்லதம்பி - பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிச்சுடர் கவிதைப்பித்தன் - கலைஞர் விருது நடிகர் சந்திரசேகர் ஆகியோருக்கும்; 2004இல் பெரியார் விருது விருதுநகர் கே.பி.எஸ். பாண்டியன் - அண்ணா விருது குமாரபாளையம் ஜே.கே.கே. சுந்தரம் - பாவேந்தர் பாரதிதாசன் விருது அந்தமான் மருதவாணன் - கலைஞர் விருது தஞ்சை சுல்தான் ஆகியோருக்கும்; 2005இல் பெரியார் விருது திருத்துறைப்பூண்டி டி.எஸ். கலயாணசுந்தரம் - அண்ணா விருது புதுவை ஆர்.வி. ஜானகிராமன் - பாவேந்தர் பாரதிதாசன் விருது முனைவர் மு.பி. பாலசுப்பிரமணியம் - கலைஞர் விருது கங்கைகொண்டான் ஆ. கருப்பையா ஆகியோருக்கும்;

2006இல் பெரியார் விருது அறந்தாங்கி இராசன் - அண்ணாவிருது நத்தம் வெ. இராசசேகரன் - பாவேந்தர் பாரதிதாசன் விருது திருமதி. காரல் மார்க்ஸ் - கலைஞர் விருது மும்பை தா.மு. பொற்கோ ஆகியோருக்கும்; 2007இல் பெரியார் விருது மண்டபம் மிசா எஸ். மாரிமுத்து - அண்ணா விருது ஆந்திர மாநிலம் கே.ஏ.முனுசாமி - பாவேந்தர் பாரதிதாசன் விருது நாமக்கல் ப.க. தமிழழகன் - கலைஞர் விருது குடந்தை இரா. துரை ஆகியோருக்கும்; அண்ணா நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டுச் சிறப்பு விருது பெறுவோராக 2008இல் பெரியார் விருது கலைஞர் - அண்ணா விருது ஆர்க்காடு நா.வீராசாமி - கலைஞர் விருது தளபதி மு.க.ஸ்டாலின் - பாவேந்தர் பாரதிதாசன் விருது துரைமுருகன் ஆகியோருக்கும்; அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு விருது பெறுவோராக 2009இல் அண்ணா விருது கலைஞர் - பெரியார் விருது மானமிகு கி. வீரமணி - கலைஞர் விருது தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் -பாவேந்தர் பாரதிதாசன் விருது வா.செ. குழந்தைசாமி ஆகியோருக்கும்;

2010இல் பெரியார் விருது வீரபாண்டி எஸ். ஆறுமுகம் - அண்ணா விருது செ.குப்பு சாமி - பாவேந்தர் விருது திருமதி இராஜம் ஜான்- கலைஞர் விருது ஜி.எம். ஷா ஆகியோருக்கும்; 2011இல் பெரியார் விருது சுப. வீரபாண்டியன் - அண்ணா விருது ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி - பாவேந்தர் விருது திருநெல்வேலி உமா மகேஸ்வரி - கலைஞர் விருது தி.அ. முகமது சகி ஆகியோருக்கும்; 2012இல் பெரியார் விருது மும்பை பொ. அப்பாதுரை - அண்ணா

விருது அ. இரகுமான்கான் - பாவேந்தார விருது திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன் - கலைஞர் விருது ஆர்.டி. சீத்தாபதி ஆகியோருக்கும்; 2013இல் பெரியார் விருது மும்பை த.மு. ஆரிய சங்காரன் - அண்ணா விருது எல். கணேசன் - பாவேந்தர் விருது க. திருநாவுக்கரசு - கலைஞர் விருது எஸ்.ஏ.எம். உசேன் ஆகியோருக்கும்;

2014இல் பெரியார் விருது பெங்களூரு வி.டி. சண்முகம் - அண்ணா விருது திருமதி முனவர் ஜான் - பாவேந்தர் விருது புதுக்கோட்டை விஜயா - கலைஞர் விருது நடிகர் குமரிமுத்து ஆகியோருக்கும்; 2015இல் பெரியார் விருது ஆண்டிமடம் எஸ். சிவசுப்பிரமணியம் - அண்ணா விருது பெங்களூரு வி.தேவராசன் - பாவேந்தர் விருது திருமதி பவானி இராஜேந்திரன் - கலைஞர் விருது மனுஷ்யபுத்திரன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுளளது.

விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் கேடயமும், ஐம்பதாயிரம் ரூபாய் பொற்கிழியும் தலைமைக் கழகத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் எப்போதும் மாணவர்களிடம் கொண்டிருந்த அன்பைக் காட்டிடும் வகையில், முப்பெரும் விழா நிகழ்ச்சியோடு இணைத்து, தி.மு.கழக அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு நிதியளிப்பு வழங்கும் விழாவும் நடத்தப்படவுள்ளன. மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நிதியளிப்பும் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு “முரசொலி அறக்கட்டளை” சார்பில் நிதியளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

தி.மு. கழக அறக்கட்டளை சார்பில் 1995ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை 508 மாணவர்களுக்கு ரொக்கப் பரிசாக வழங்கப்பட்ட தொகை ரூ. 34 இலட்சத்து 48 ஆயிரம்.

2005ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் வரை என் பெயரால் அமைந்துள்ள (கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை) சா£பில் 3,442 பேருக்கு கல்வி மற்றும் மருத்துவ

நிதியாக வழங்கப்பட்ட தொகை நான்கு கோடியே எட்டு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்.

இலட்சியப் பயணத்தை மேற்கொண்டுள்ள நாம் எப்படிப்பட்டவராய் இருத்தல் வேண்டும் என பேரறிஞர் அண்ணா அவர்கள் 1957ஆம் ஆண்டிலேயே வரையறுத்து அறிவுறுத்தியிருக்கிறார். “தி.மு. கழகத்திற்குப் பொறுமைதான் - கவசம்! கண்ணியம் - கூர்வாள்! கட்டுப்பாடு - நலல கேடயம். எனவே, கழகத் தோழர்கள் பெற வேண்டிய முதற்பயிற்சி, உள்ள உரம். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொன்னால், அது ஏளனத்தையும், பழிச் சொல்லையும் இன்ன பிறவற்றையும் சேர்த்துத்தான்!” அண்ணா நமக்குத் தந்த அந்தக் கவசமும், வாளும், கேடயமும்தான் இதுவரை நம்மைக் காத்து வந்திருக்கின்றன; இனியும் அவைதான் நமைக் காக்கும் எனற உள்ள உறுதியோடு இலட்சியப் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்!

தி.மு. கழக அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றுவரும் வெற்றிச்செல்வி அன்பழகன் கண் மருத்துவமனையில் 1988ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட்வரை இலவசக் கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை பெற்றவர்கள் 1 இலட்சத்து 19 ஆயிரத்து 546 பேர். இதில் கேட்ராக்ட் மற்றும் ஐ.ஓ.எல். அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் 3,631 பேர்.

முரசொலி அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் 1997ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு ரொக்கப் பரிசாக 1 கோடியே, 4 இலட்சத்து 45 ஆயிரத்து 500 ரூபாயும், கலலூரி மாணவர்களுக்கு ரொக்கப் பரிசாக 1 கோடியே 3 இலட்சத்து ஓராயிரத்து 250 ரூபாயும் மொத்தம் 11,199 மாணவர்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக 2 கோடியே 7 இலட்சத்து 46 ஆயிரத்து 750 ரூபாய் வழங்கப்பட்டுள்ளன.

சிறந்த ஆட்டோ ஒட்டுநர் விருது என்று எடுத்துக்கொண்டால், 1999ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை 300 சிறந்த

ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பதக்கத்துடன் பரிசுத் தொகையாக ரூ. 22 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் தரப்பட்டுள்ளது. முரசொலி அறக்கட்டளை சார்பில் இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்த

தொகை 2 கோடியே 70 இலட்சத்து 39 ஆயிரத்து 750 ரூபாய்.

எனவே நாளை நடைபெறும் விழாவில் மட்டும், தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் 2 இலட்சம் ரூபாய், தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் 2 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய், முரசொலி அறக்கட்டளை சார்பில் 2 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் என்று மொத்தம் 7 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய். இது தவிர “முரசொலி அறக்கட் டளை”யின் சார்பில் பாவேந்தர் பாடல் ஒப்பித்தல் போட்டியில் மாவட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு பரிசளித்த வகையில் 23 இலட்சத்து 64 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் சேர்த்தால் இந்த ஆண்டு மட்டும் 30 இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.

உடன்பிறப்பே,

பெரியாரும் அண்ணாவும் நமது இரு கண்கள்; தி.மு. கழகம் நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட இலட்சியப் பயணம்.

கட்டித் தங்கமாய்ப் பகுத்தறிவுக் கருத்தைத்

தந்தார் பெரியா! அதனைப்

பெட்டியில் வைத்துப் பூட்டாமல்

அணிமணி செய்து,

தமிழாக்குச் சூட்டியவா அண்ணா!

கசப்பு மருந்து எனினும்;

உயிர் காக்கும் மருந்து எனச்

சுயமரியாதைச்

சூரணம் தயாரித்தவர் பெரியார் - அதனைக்

கனியிடை கலந்து, தமிழ்த் தேனில் தோயத்துப்

பிணி அகலத் தந்தவர் அண்ணா!

இலட்சியப் பயணத்தை மேற்கொண்டுள்ள நாம் எப்படிப்பட்டவராய் இருத்தல் வேண்டும் என பேரறிஞர் அண்ணா அவர்கள் 1957ஆம் ஆண்டிலேயே வரையறுத்து அறிவுறுத்தியிருக்கிறார். “தி.மு. கழகத்திற்குப் பொறுமைதான - கவசம்! கண்ணியம் - கூர்வாள்! கட்டுப்பாடு - நல்ல கேடயம். எனவே, கழகத் தோழர்கள் பெற வேண்டிய முதற்பயிற்சி, உள்ள

உரம். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொன்னால், அது ஏளனத்தையும், பழிச் சொல்லையும் இன்ன பிறவற்றையும் சேர்த்துத்தான்!” அண்ணா நமக்குத் தந்த அந்தக் கவசமும், வாளும், கேடயமும்தான் இதுவரை நம்மைக் காத்து வந்திருக்கின்றன; இனியும் அவைதான் நமைக் காக்கும் என்ற உள்ள உறுதியோடு இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்வோம்! * அண்ணா வழியில் அயராது உழைப்போம்! * ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்! மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி! என்ற ஐம்பெரும் முழக்கங்களின் பதாகைகளை ஏந்தி, தி.மு.கழகம்தான் தமிழ்நாட்டுக்குத் தொண்டன்: தி.மு.கழகம்தான் தமிழர் வீட்டுக்கு விளக்கு என்பதை நமது பண்பாலும், மேற்கொண்டுவரும் பணியாலும் நாள்தோறும் நிரூபித்துக் காட்டுவோம் எனச் சூளுரை மேற்கொள்ள இந்த முப்பெரும் விழா பயனபடட்டும்!

அன்புள்ள, மு.க. 16-9-2016

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 54 PDF ↗