தொகுதி 54 · கடிதம் 4025
570 கோடி சி.பி.ஐ முன்
உடன்பிறப்பே,
13-5-2016 அன்று அதாவது தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு, திருப்பூருக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கன்டெய்னர்களில் கடத்தப்பட்ட 570 கோடி ரூபாய் குறித்து, சி.பி.ஐ. விசாரித்து எவ்வளவு விரைவாக அறிக்கை கொடுக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் நீதிமன்றத்திற்கு அறிக்கை தர வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டிருக்கிறது.
இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே, சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரிக்கத் தேவையில்லை என்ற கருத்தோடு வாதிட்டதையும் நாம் அறிவோம். தமிழக அரசு விசாரித்தால முறையான விசாரணை நடந்து, உண்மைகள் கண்டறியப்பட்டு உரிய நீதி கிடைக்காது என்று சி.பி.ஐ. விசாரணை கோரினால், சி.பி.ஐ. தரப்பினர் முதல் நிலை விசாரணையைத் தொடங்கிப் பூர்வாங்க ஆதாரங்களை ஆராய்ந்து முடிவு செய்வதற்கு முன்பே, இதை விசாரிக்கத் தேவையில்லை என்று வாதாடிய காரணத்தால், அந்தப் பின்னணியில் விசாரணை இனி எத்தன்மை கொண்டதாக இருக்குமோ; மர்மங்கள் வெளிச்சத்திற்கு வருமோ, திரை போட்டு மூடப்பட்டுத் தமிழக மக்களுக்குத் தெரியாமலேயே போய் விடுமோ என்ற அய்யப்பாடு ஒரு சிலருக்கு எழத்தான் செயயும்.
எனினும் சி.பி.ஐ. விசாரணைக்கு உதவிடும் வகையில், இந்த 570 கோடி ரூபாய் கன்டெய்னர்கள் பிடிபட்டது குறித்து, சாதாரண பொதுமக்களுக்கும், நேர்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டுமென்ற ஆர்வம் உள்ளவர்களுக்கும் எழுந்துள்ள சில
தவிர்க்க முடியாத, ஆனால் அறிவுப்பூர்வமான சந்தேகங்களை, விசாரணைக்குப் பயன்படக் கூடும் என்பதால், இங்கே
குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன்.
பணம் அனுப்புவது நேர்மையான நடவடிக்கை என்றால், எந்த வங்கிக்கு (விசாகப்பட்டினம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) பணம் அனுப்பப்பட வேண்டுமோ, அந்த வங்கி அமைந்துள்ள ஆந்திர மாநில ரிசர்வ் வங்கியிலிருந்து அலலாமல, எந்த வங்கியிலிருந்து (கோவை ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா) பணம் அனுப்பப்படுவதாகச் சொலலப்பட்டதோ, அந்த வங்கி அமைந்துள்ள சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்துதான் உத்தரவு பெறப்பட வேண்டும்.
சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்து உத்தரவு பெறப்பட்ட பிறகுதான், பணம் கோவை வங்கியிலிருந்து விசாகப்பட்டினம் வங்கிக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு அனுமதிக்கப்படும். ஆனால் அவ்வாறு சென்னை ரிசர்வ் வங்கி உத்தரவு மூலமாக அனுமதி பெறப்படவில்லை. எனவே அடிப்படையிலேயே இப்படிப்பட்ட முறை பிறழ்வுகள் இருப்பதால், பூரணசந்திரராவ் என்பவர் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் இயல்பாக எழுதப்பட்ட கடிதம் அல்ல; சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிவாத்தனை நடவடிக்கையை மூடிமறைப்பதற்காகச் செயற்கையாக உருவாக்கப்பட்ட கடிதம் ஆகும்.
சில சந்தேகங்களை “ஜூனியர் விகடன்” (22-6-2016) ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதில் உள்ள வாசகங்கள் வருமாறு:-
“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2016, பல கண்கட்டி வித்தைகளைப் பொதுமக்களுக்குக் காட்டிச் சென்றுள்ளது. அவற்றில் சில வித்தைகள், விடை தெரியாத விநோதங்களாக இன்னும் நீடிக்கின்றன. கரூர் தொழிலதிபர் அன்புநாதன் வீட்டில் சிக்கிய பணம் எவவளவு? அனபுநாதனுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?”
A226 aa
“திடீரெனச் றக் 18 Sea Gegiee ஏன் நின்றன?... அதில், என்னென்ன இருந்தன? Senn: அவை எங்கே |
மாயமாக மறைந்தன?” J
“திருப்பூரில் ரூ.570 கோடிகளுடன் வந்த 3 3 ewer யாருடையவை? அந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி இதுவரை ஏன் வாய் ற 2. என்பன எல்லாம் அப்படிப்பட்ட விடை தெரியாத விநோதங்கள்.”
“ஊடகங்கள், போலீஸ், அரசு அதிகாரிகள், வங்கி விதிமுறைகள். நீதிமன்றங்கள் என அத்தனை பேரின் கண்களையும் கட்டிவிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த விநோதங்களை விசித்திர விநோதங்கள் என்று நாம் வகைப்படுத்தலாம். இவற்றில், 570 கோடி ரூபாய் விவகாரத்தைத் தி.மு.க. கொஞ்சம் சீரியஸாகக் கையில் எடுத்தது. சாச்சைகள் எழுந்தபிறகு, அவை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமானது என்று அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக உத்தரவுகள் பறந்துவந்தன. பணம் போக வேண்டிய இடத்துக்குப் போய்விட்டது. ஆனால், இதுவரை அந்தப் பணம் ஏன் வந்தது? எதற்கு வந்தது? அவை யாருக்குச் சொந்தமானது என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதில்கள் இல்லை.”
“தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன், இதற்குப் பதில் தேடி, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் அனைத்தும் அதிர்ச்சிகரமாக உள்ளன” என்று “ஜூனியர் விகடன்”, “நக்கீரன்” வினாக்களைத் தொடுத்து, சந்தேகங்களை எழுப்பியிருந்தது.
விசாகப்பட்டினம் கரன்சி நிர்வாகக் கிளையின் மேலாளா எனச் சொல்லப்படும் பூரணசந்திரராவ் என்பவர், 28-3-2016 அன்று கோவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாகிளைக்கு எழுதியதாகச சொல்லப்படும் கடிதத்தில், பணம் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதே கடிதத்தில் பணம் அனுப்புவதற்கான ஆணையை ஆந்திர மாநில ரிசர்வ் வங்கியிலிருந்து பெற்றுத் தருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பணம் அனுப்புவது நேர்மையான நடவடிக்கை என்றால், எந்த வங்கிக்கு (விசாகப்பட்டினம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா)
பணம் அனுப்பப்பட வேண்டுமோ, அந்த வங்கி அமைந்துள்ள ஆந்திர மாநில ரிசர்வ் வங்கியிலிருந்து அலலாமல, எந்த வங்கியிலிருந்து (கோவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) பணம் அனுப்பப்படுவதாகச் சொல்லப்பட்டதோ, அந்த வங்கி அமைந்துள்ள சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்துதான உத்தரவு
பெறப்பட வேண்டும்.
சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்து உத்தரவு பெறப்பட்ட பிறகுதான், பணம் கோவை வங்கியிலிருந்து விசாகப்பட்டினம் வங்கிக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு அனுமதிக்கப்படும். ஆனால் அவ்வாறு சென்னை ரிசர்வ் வங்கி உத்தரவு மூலமாக அனுமதி பெறப்படவில்லை. எனவே அடிப்படையிலேயே இப்படிப்பட்ட முறை பிறழ்வுகள் இருப்பதால், பூரண சந்திர ராவ் என்பவர் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் இயல்பாக எழுதப்பட்ட கடிதம் அல்ல; சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிவாத்தனை நடவடிக்கையை மூடி மறைப்பதற்காகச் செயற்கையாக உருவாக்கப்பட்ட கடிதம் ஆகும்.
பூரணசந்திரராவ் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தில், குறிப்பிட்டிருந்தபடி ஆந்திர மாநில ரிசர்வ் வங்கியிலிருந்து அனுமதிக் கடிதம் பெறப்பட்டதா அல்லது சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்து அனுமதிக் கடிதம் பெறப்பட்டதா என்பதற்கான விளக்கம் எதுவம் இல்லை.
6-5-2016 நாளிடப்பட்டு, உதவிப் பொது மேலாளரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் கடிதத்தில் “சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்து தேவையான அனுமதியையும், உரிய அதிகாரியின் உத்தரவையும் பெற்றிருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்ட அதிகாரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அந்தக் கடிதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி நடையும், விசாகப்பட்டினம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா AMM பயன்படுத்தியிருக்கும் மொழி நடையும் ஒரே மாதிரியாக இருப்பதால், இரண்டு கடிதங்களும், ஒருவராலேயே தயாரிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற யூகத்திற்கு இடம் அளிக்கிறது.
விசாகப்பட்டினம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவைச் சேர்ந்த பூரணசந்திரராவ், தான் பணியாற்றிவரும் ஆந்திர மாநிலத்திற்கு
வெளியே, தமிழ்நாட்டிலுள்ள கோவையிலிருந்து பணம் அனுப்பும்படி எப்படிக் கேட்டிருக்க முடியும்?
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் சுற்றறிக்கையின்படி பணப் பரிவர்த்தனை என்பது, மிக அருகில் எந்த வங்கி இருக்கிறதோ அந்த வங்கியிலிருந்து தான் நடைபெற்றிருக்க மவண்டும். ஆனால் ஆந்திர மாநிலப் பதிவெண்களோடு மூன்று கன்டெய்னா லாரிகள் பிடிபட்டதை முறைப்படுத்துவதற்காக; மத்திய அமைச்சர் ஒருவரின் தலையீட்டின்பேரில் ஆந்திர மாநில வங்கியிலிருந்து தமிழ்நாடு மாநில வங்கிக்குப் பணம் கேட்டு எழுதப்பட்ட தாகக் கடிதம் ஒன்று ஜோடிக்கப்பட்டுள்ளது என்றே வங்கி நடைமுறைகளை அறிந்தோர் கருதுகின்றனர்.
பூரணசந்திரராவோ அலலது கோயம்பத்தூர் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா அலுவலரோ, பணப் பரிவர்த்தனைக்குச் சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்து பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்களா? அந்தக் கோரிக்கையின்படி சென்னை ரிசர்வ் வங்கி பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள ஆட்களை அனுப்பியதா?
மிகப் பெரிய அளவான 570 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனைக்கு ஒரு வங்கியின் கிளை மேலாளரான பூரணசந்திர ராவ், ஆந்திர மாநிலக் காவல் துறையிடம் பணப் பரிவா த்தனைக்குப் பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்ள முடியுமா? அதற்கான அதிகாரம் அவருக்கு உண்டா? சென்னை ரிசர்வ் வங்கியிடமிருந்து பாதுகாப்பு கேட்கப்படாதது ஏன்?
பூரணசந்திரராவ், பணப் பரிவர்த்தனைக்கு, பாதுகாப்பு வழங்கிடக் கேட்டு, கோரிக்கை அனுப்பியிருந்தால், எந்தத் தேதியில் யாருக்கு அந்தக் கோரிக்கையை அனுப்பினாரா?
மூன்று கன்டெய்னர் லாரிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட பணம் அவ்வளவும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளா? ஐநூறு ரூபாய் நோட்டுகளா? அல்லது நூறு ரூபாய் நோட்டுகளா? ஐம்பது ரூபாய் நோட்டுகளா? ஒவ்வொரு வகை நோட்டுகளிலும் எத்தனை கட்டுகள் இருந்தன? இருந்த பணம் புத்தம்புதிய கரன்சிகளா? அல்லது பழைய நோட்டுகளா?
வழிகாட்டும் நெறிமுறைகளபடி, கன்டெய்னர்களில உள்ள பணம் அனைத்தும் சீலிடப்பட்டுள்ளதா? முறைப்படி
இரும்புப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததா? இரும்புப் பெட்டி ஒவ்வொன்றும் எடையிடப்பட்டு, அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டனவா? பணக் கட்டுகள் இரும்புப் பெட்டி அலலது மரப் பெட்டிக்குள் அடுக்கப்பட்டு, “இரும்பு டேப்பு” களைக் கொண்டு சுற்றிக் கட்டப்பட்டு, சீல் வைக்கப்பட்டிருந்ததா?
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பிரதிநிதி அல்லது வங்கியின் பிரதிநிதி முன்னிலையில் பணம் பாலிதீன் பைகளுக்குள் நிரப்பப்பட்டு, அதிலே கையெழுத்திடப்பட்டிருந்ததா?
பணப் பரிவர்த்தனை சம்பந்தமாக, தொடக்க நிலை சரிபார்ப்பு
சான்றிதழ் முறைப்படி ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டதா?
மூனறு கன்டெய்னர் லாரிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட பணம் அவ்வளவும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளா? ஐநூறு ரூபாய் நோட்டு களா? அல்லது நூறு ரூபாய் நோட்டுகளா? ஐம்பது ரூபாய் நோட்டுகளா? ஒவ்வொரு வகை நோட்டுகளிலும் எத்தனை கட்டுகள் இருந்தன? இருந்த பணம் புத்தம்புதிய கரன்சிகளா? அலலது பழைய நோட்டுகளா?
வழிகாட்டும் நெறிமுறைகள்படி, கன்டெய் ஊர்களில் உள்ள பணம் அனைத்தும் சீலிடப்பட்டுள்ளதா? முறைப்படி இரும்புப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததா? இரும்புப் பெட்டி ஒவ்வொன்றும் எடையிடப்பட்டு, அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டனவா? பணக் கட்டுகள் இரும்புப் பெட்டி அல்லது மரப் பெட்டிக்குள் அடுக்கப்பட்டு, “இரும்பு டேப்பு”களைக் கொண்டு சுற்றிக் கட்டப்பட்டு, சீல் வைக்கப்பட்டிருந்ததா?
வழிகாட்டும் நெறிமுறை கள்படி ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா பிரதிநிதி ஒருவர் முன்னிலையில் 500 ரூபாய் நோட்டுகள் அல்லது 1000 ரூபாய் நோட்டுகள் என்றால் ஒரு நாளைக்கு மூன்று இலட்சம் நோட்டுகள் மட்டுமே எண்ண வேண்டும். ஆனால் மூனறு கன்டெய்னர் லாரிகளில் இருந்த 570 கோடி ரூபாய் என்பது மூன்று இலட்சம் நோட்டுகளைவிட எண்ணிக்கையில் அதிகமாக இருந்திருக்க வேண்டும். 570 கோடி ரூபாயும் ஒரே நாளில்
எண்ணப்பட்டு கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டதா? எந்தத் தேதியில் எண்ணப்பட்டது?
பணம் அடைக்கப்பட்ட பெட்டிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எண் வழங்கப்பட்டதா? பெட்டியில் இருக்கும் பணத்தின் வகைப்பாடு பதிவு செய்யப்பட்டு முழு விவரமும் பெட்டிக்குள் வைக்கப்பட்டதா?
எண் வழங்கப்பட்ட பெட்டிகள், பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டிருந்த பணத்தின் மதிப்பு ஆகியவை பெட்டிவாரியாக இணைப்புகளில் குறிக்கப்பட்டிருந்ததா?
இந்த விவரங்கள் அனைத்தும் நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்படடதா?
ரிசர்வ் வங்கி நெறிமுறைகள்படி இவ்வளவு அதிகமான தொகை ரெயில்வே மூலமாகத்தான் கொண்டு செல்லப்பட வேண்டுமென்று இருக்கும்போது, என்ன காரணத்தால் கன்டெய்னரில் எடுத்துச் செலலப்பட்டது?
570 கோடி ரூபாய் என்ற மிகப் பெரிய தொகை எடுத்துச் செல்லப்பட்டபோது, காவல் துறை அதிகாரிகள் எத்தனை Gur பாதுகாப்புக்காக உடன் சென்றார்கள்?
கோவை ஸ்டேட் பாங்க்கில் இருந்து எத்தனை மணிக்கு கன்டெய்னர்கள் புறப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளதா?
ரூபாய் நோட்டுகளை “பேக்கிங்” செய்ய எவ்வகையான உபகரணப் பொருள்கள் பயனபடுத்தப்படடன?
பணம் அனுப்பப்படுவதற்கு முன் அதிகாரிகளால் முதற்கட்ட சரிபார்ப்பு நடத்தப்பட்டதா? அப்படியென்றால் எந்தெந்த அதிகாரிகள் அதிலே பங்கேற்றாரகள்?
பணம் அனுப்புவது குறித்து, ஏதாவது “மெமோரண்டம்” தயாரித்துக் கையெழுத்திடப்பட்டதா? அவவாறு கையெழுத்திடப்பட்டு அனுப்பப்பட்ட மெமோரண்டத்தில கோவை ஸ்டேட் வங்கியின் உதவிப் பொதுமேலாளர் கையெழுத்திட்டுள்ளாரா?
13-5-2016 அன்று கன்டெய்னர்கள் பிடிக்கப்பட்ட போது, அவற்றுடன் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி ஒருவர் உடன்
வந்தாரா? ஏன் பிடிபட்ட நபர்கள் லுங்கியுடன் இருந்தார்கள்? அப்படியென்றால் அவர்கள் காவல் துறையைச் சோந்தவாகள் இல்லையா?
ரிசர்வ் வங்கியினால் சொல்லப்பட்ட விதிகளின்படி, இந்த அளவுக்கு ரூபாய் கொண்டு செல்லப்படும்போது, அத்துடன் எடுத்துச் செல்லப்பட வேண்டிய இணைப்புக்குறிப்புகள் முறைப்படி பூரத்தி செய்யப்பட்டிருந்ததா?
விசாகப்பட்டினம் ஸ்டேட் வங்கியின் பிரதிநிதி சி. பூரண சந்திரராவ், ரிசர்வ் வங்கியை அணுகி இவ்வளவு தொகை எடுத்துச் செல்லப் போவதாகத் தெரிவித்தாரா?
விசாகப்பட்டினம் ஸ்டேட் வங்கியின் பிரதிநிதி பூரணசந்திர ராவ் எதற்காக இவ்வளவு பெரிய தொகையைக் கோவையிலிருந்து மாற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டார்? இந்த நடவடிக்கையினால் பிடிபட்ட கன்டெய்னர் லாரிகள் ஆந்திரா பதிவெண்கள் கொண்டவை என்பதற்காகவோ என்னவோ?
இந்தப் பரிவாத்தனையில் சென்னைரிசாவ் வங்கி எவ்விதமான மாறுதல் ஆணையையும் பிறப்பிக்கவில்லை என்னும்போது எந்த அதிகாரத்தின்கீழ் இவ்வளவு தொகை மாற்றப்பட்டது?
கோவை ஸ்டேட் வங்கியிலிருந்து பணப் பரிவர்த்தனை நடைபெறுவதற்கு முன்பு அதாவது 12-5-2016 அன்று இந்த வங்கியில் எவ்வளவு தொகை இருப்பில் இருந்தது? தொகைக்கான வழிமுறைகளும், 570 கோடி ரூபாய்க்கான விளக்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா?
விசாகப்பட்டினம் மற்றும் கோவை ஸ்டேட் வங்கிகளில் மார்ச் மாதம் 1ஆம் தேதியிலிருந்து மே மாதம் 14ஆம் தேதிவரை ஒவ்வொரு நாளும் எவ்வளவு ரூபாய் வந்தது, எவ்வளவு ரூபாய் வெளியே சென்றது என்பதற்கான விவரங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அவை முறையாகச் சரி பார்க்கப்பட்டதா?
கோவை ஸ்டேட் வங்கி யிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படும் தொகைகளைச் சுட்டிக் காட்டும் பதிவேடு சரிபார்க்கப்பட்டு, பதிவான தகவல்கள் அனைத்தும் உண்மை யானவைதானா எனபது வங்கி அதிகாரிகளால் ஒப்பிட்டுப் பாரக்கப்பட்டிருக்க வேண்டும். கோவை ஸ்டேட் வங்கியின்
உள் நுழைவுப் பதிவேடு, கருவூலப் பதிவேடு, பண நகாவுப் பதிவேடு ஆகியவை, வங்கி அலுவலர்கள் கூறியுள்ளவற்றைச் சரி பார்ப்பதற்காக, ஆய்வு செய்யப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் நெறிமுறைப்படி இந்த அளவுக்குப் பணம் பரிவர்த்தனை செய்யும்போது, இரும்புப் பெட்டிகளுக்குள் வைக்காமல் எடுத்துச்செல்லப்பட்டது ஏன்?
பொதுவாகப் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறைப்படி வெள்ளிக்கிழமைகளில் இதுபோன்ற பணப் பரிவர்த்தனைகள் செய்யப்படக் கூடாது என்றிருக்கும்போது, 570 கோடி ரூபாய் பணம் எடுத்துச்செல்ல ஸ்டேட் வங்கியின் அதிகாரி வெள்ளிக்கிழமையான 13-5-2016 அன்று அனுமதி கொடுத்தார் என்பது எப்படி?
13-5-2016 என்பது உண்மையில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைக்கு முந்தைய நாள்.
இரண்டாவது சனிக்கிழமை வங்கிக்கு விடுமுறை. கோவைக்கும் விசாகப்பட்டினத்திற்கும் இடையிலே உள்ள தூரம் 1260 கி.மீ. பயண நேரம் குறைந்தது 1 நாள். இவ்வாறிருக்க கன்டெய்னர் எப்படி இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, பணி நேரத்திற்குள் விசாகப்பட்டினத்தைச் சென்றடைய முடியும்? அடுத்த நாள் இரண்டாவது சனிக்கிழமை என்கிறபோது, அங்கே வங்கி திறந்திருக்காத நிலையில் எவ்வாறு பணத்தைக் கொண்டு போய் ஒப்படைக்க முடியும்?
கோவையிலிருந்து விசாகப்பட்டினம் செல்ல வேண்டு மானால, அந்த மூன்று லாரிகளும் சம்பந்தம் இலலாமல் எதற்காகத் திருப்பூர் மாவட்டத்தில், செங்கப்பள்ளியில் உள்ள பெரமநல்லூர்-குன்னத்தூர் சாலைக்குச் சென்றன? அந்த வழி விசாகப்பட்டினம் செல்லக்கூடிய வழி இல்லையே? ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளின்படி, மாநிலங்களுக்கிடையே பணப் பரிவர்த்தனை நடைபெறும்போது தேசிய நெடுஞ்சாலைகள் வழியாகத்தானே செல்ல வேண்டும்.
மேலும், திருப்பூர், கோவையிலிருந்து விசாகப்பட்டினம் செல்லும் வழியிலே இல்லை. எனவே இப்படித் தவறான வழியைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
கோவையிலிருந்து விசாகப்பட்டினம்தான் செல்ல வேண்டுமென்றால், தேசிய நெடுஞ் சாலை 45இன் வழியாக ஏன் இந்த கன்டெய்னர் லாரிகள் போகவில்லை?
கடந்த மே 13-ம் தேதி நடு இரவில், தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது, மூன்று “இன்னோவா?” கார்கள் பின்தொடர்ந்து வர, 3 கன்டெய்னா லாரிகளில் கோடிக்கணக்கான பணம் சென்றது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமான பணம் என்றால், தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் இடை மறித்து நிறுத்தச் சொன்னபோது, அந்த லாரிகளை ஏன் அவர்கள் நிறுத்தவிலலை?
தேர்தல் ஆணைய அதிகாரிகள் திரு. விஜயகுமா தலைமையில் இந்த லாரிகளை நள்ளிரவு 12.45 மணி அளவில் நிறுத்துமாறு குறுக்கிட்டுத் தடுத்தபோது, அதனைப் புறக்கணித்து கேட்காமல் இந்த லாரிகள் சென்றது ஏன்? எதற்காக அந்தப் பயணம் என்பதற்கான நோக்கத்தை விளக்கும் உண்மையான ஆவணங்களை உடனடியாக ஏன் தாக்கல் செய்யவில்லை?
வங்கியில் ஒவ்வொரு நாள் மாலையிலும் இருப்புள்ள பணம் எண்ணப்பட்டு மூடப்பட்டு சீலிடப்படும்; மறுநாள் காலையில் அலுவலக நேரத்தில் மட்டும்தான் மீண்டும் திறக்கப்படும். ஆனால் 570 கோடி ரூபாயை விடுமுறை நாளில் விசாகப்பட்டினம் சென்றடைகிற வகையில், உடனடியாக திறக்கப்படாத நிலையில், அனுப்பப்பட்டதன் காரணம் எனன?
இரண்டாவது சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாட்கள் என்கிற நிலையில் இவ்வளவு பெரிய தொகை அனுப்புவது என்பது வங்கிகளின் நெறிமுறைகளுக்கும் வழக்கத்திற்கும் மாறானது. எனவே அதிகாரிகள் கூறுகின்ற தகவல்கள் நம்புவதற்கு ஏற்றவையாக இல்லை.
திருப்பூர் வருமான வரித்துறை துணை இயக்குநர் 15-5-2016 அன்று தலைமை தேதர்தல் அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். யாருடைய அறிவுரைப்படி - எந்த அடிப்படையில் அந்தக் கடிதம் எழுதப்பட்டது? அந்தக் கடிதம்
வருமான வரித் துறையின் விதிமுறைகள்படி எழுதப்பட்டதா? “வாரண்ட்” அனுப்புவதற்கான பூர்வாங்க ஆதாரம் என்ன? “வாரண்ட்” அனுப்பப்பட்ட பிறகு, சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கை என்ன?
1-5-2016 முதல் 19-5-2016 வரையில், கணியூ, விஜயமங்கலம், வைகுந்தன், பாளயம், வாணியப் பாடி, பள்ளிகொண்டா, வெங்கடாசலம், போளைபள்ளி, காஜா, பொட்டிப்பாடு, களப்பாறு ஆகிய 12 இடங்களில் உள்ள டோல- கேட் வழியாகச் சென்ற கன்டெய்னர் லாரிகளின் குறிப்புகளை
“சி.சி.டி.வி.” பதிவுகளை எடுத்துச் சோதித்துப் பார்க்கவேண்டும். டோல்-கேட்களில் இவ்வாறு பரிசோதித்து, எத்தனை
கன்டெய்னர்கள் சென்றனவோ, அவைகள் எல்லாம் எங்கே சென்றன, எவையெவை ஆஆந்திராவுக்குச் சென்றன என்பதையெல்லாம் பரிசோதிக்க வேண்டும்.
வாரண்டை அனுப்பி அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, விசாரணை ஏதுமின்றி வருமானவரித் துறை யாருடைய தாண்டுதலின் பேரில் எவ்வாறு ஸ்டேட் வங்கியிடம் இந்தப் பணத்தை ஒப்படைத்தது?
தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பணம் கைப்பற்றப்பட்டிருக்கும்போது, புகாரைப் பதிவு செய்யாமலேயே வருமான வரித்துறை சட்டங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணையம் எவ்வாறு செயல்பட்டது? மாநிலத் தேர்தல் ஆணையர் காவல் துறையிடம் ஒரு புகார் மனுவினைத் தாக்கல் செய்யக்கூட முன்வராதது ஏன்?
தேர்தல் விதிமுறைகள் நடைமுறையிலே இருக்கும்போதே புகாரைப் பதிவு செய்யாமல், தேர்தல் ஆணையம் பிரச்சினையைக் கைகழுவும் வகையில் உள்நோக்கத்துடன் இவ்வாறு நடந்து
கொண்டதற்குக் காரணம் என்ன?
ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகள் இவ்வளவு பெரிய தொகையை இரவு நேரத்தில் எடுத்துச் செல்லக்கூடாது என்று விதித்திருக்கின்றபோது, இந்தப் பணப் பரிவர்த்தனை இரவில் நடக்கக் காரணம் என்ன? எடுத்துச் சென்றது உண்மையில் 510 கோடி ரூபாய் என்றால், ஏன் மூன்று கன்டெய்னர் லாரிகள் தேவைப்பட்டன?
பணத்தை ஏற்றிச்சென்ற லாரிகளின் உரிமையாளர்கள் பற்றியும், அந்த லாரிகளின் பதிவுகள் பற்றியும் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.
பணப் பரிமாற்றத்திற்காக லாரிகளை ஏற்பாடு செய்தது யார்? இந்த லாரிகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கு முன்பு, அந்த லாரிகளின் பின்னணி பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா?
ஸ்டேட் வங்கியே இந்தப் பணத்திற்கான உரிமை கோருவதற்கு முன்பே, மத்திய அமைச்சரே முதலில் முன்வந்து, அது ஸ்டேட் வங்கியின் பணம் என்று எதனால் அறிவித்தார்?
கன்டெய்னர்களுடன் பயணம் செய்த வங்கி அதிகாரிகள் WITT? அவர்கள் ஏன் தங்களுடைய உயர் அதிகாரிகளுக்கு உடனே தெரிவிக்கவில்லை?
கைப்பற்றப்பட்ட பணம் வெறும் அட்டைப் பெட்டிகளில், பிளாஸ்டிக் பேப்பாகளைக் கொண்டு அடுக்கப்பட்டிருந்தது. கரன்சி நோட்டுகளில் ஆக்சிஸ் வங்கியின் சீல் போடப்பட்டிருக்கையில், அதனை ஸ்டேட் வங்கியின் பணம் என்று எவ்வாறு கூற இயலும்?
பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்தச் சந்தேகங்கள் குறித்தெல்லாம் சி.பி.ஐ., முறையான விசாரணை நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் உண்மைகளை உலகத்திற்கு அறிவிக்க வேண்டும்.
இதுவரை விவரிக்கப்பட்டவையோடு, 570 கோடி ரூபாய் பணப் பரிவாத்தனை விவகாரம் குறித்து மேலும் பல்வேறு தரப்பினரும் எழுப்பியுள்ள அய்யப்பாடுகளையும், வினாக்களையும் பின்வருமாறு தொகுத்திருக்கிறேன்.
கடந்த மே 13-ம் தேதி நடு இரவில், தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது, மூன்று “இன்னோவா” கார்கள் பின் தொடர்ந்து வர, 3 கன்டெய்னர் லாரிகளில் கோடிக்கணக்கான பணம் சென்றது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமான பணம் என்றால், தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் இடை மறித்து நிறுத்தச் சொன்னபோது, அந்த லாரிகளை ஏன் அவர்கள் நிறுத்தவில்லை?
பெரமணல்லூர்-குன்னத்தூர் சாலையில் பிடிபட்ட அந்த லாரிகள், மூன்று நாட்களாகத் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தன. பிடிபட்டு, 18 மணி நேரம்வரை அந்தப் பணத்துக்கு யாரும் உரிமை கோரவில்லை.
தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள், பணம் யாருடையது? எங்கிருந்து வருகிறது என்று கேட்டபோது, யாரும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் பணம் என்று அப்போது சொல்லவில்லை.
“பணத்துக்குச் சொந்தமானவர்களுக்குத் தகவல் சொல்லுங்கள்” என்று தேர்தல் அதிகாரிகள் அவர்களிடம் வலியுறுத்திய போது, அவர்கள் அதைச் செய்யவில்லை. மாறாக, இன்னோவா காரில் வந்தவர்கள், “நாங்கள் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள்'' என்று பதில் சொல்லியுள்் ளனர்.
ஆனால், அவர்களிடம் அடையாள அட்டைகள் இல்லை. மேலும், அவர்கள் சீருடையிலும் இலலை; லுங்கி அணிந்திருந்தனர்.
மூன்று கன்டெய்னர் லாரிகளின் பதிவு எண்கள், AP 13% 8650; AP 13% 5203 மற்றும் AP 13% 5204. இவற்றில் AP 13% 5204 என்ற பதிவு எண், லாரிக்கான பதிவு எண்ணே கிடையாது. இந்த எண் ஆந்திராவைச் சேர்ந்த, ஜாபா அஹ்மத்கான் என்பவருடைய காரின் பதிவு எண். வங்கியின் பணம் இத்தனை கோடிகளை அனுப்பும்போது, அந்த வாகனங்கள் முறையானவைதானா என்பதை வங்கிகள் சோதித்துப்பார்க்க வேண்டாமா?
கன்டெய்னர் லாரிகளின் ஆர்.சி. புத்தகங்களில் உரிமையாளர் பெயர் வேறுவேறாக இருக்கிறது. ஆனால், உரிமையாளரின் போட்டோவில் ஒரே நபர் இருக்கிறார். இது எப்படிச் சாத்தியம்? இவற்றில் இருந்து அந்த லாரிகள் சட்டவிரோதமான காரியங்களுக்குப் பயன்படுபவை என்பது தெரிகிறது. வங்கி இதுபற்றி இன்னும் வாய் திறக்காதது ஏன்?
கன்டெய்னர்கள் பிடிபட்டு, 18 மணி நேரம் கழித்து, வருமான வரித் துறையிடம் இருந்து ஒரு கடிதம் (கடித எண். 13451 / Ele-X/2016-1) தேர்தல் ஆணையத்துக்கு வருகிறது. அதில், வருமான வரித் துறையின் வாரண்டைச் செயல்படுத்த, அந்த மூன்று லாரிகளில் உள்ள பணத்தை, ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியாவின் கோவைக் கிளைக்கு அனுப்பக் கோரப்பட்டது.
ரயில்கள் மூலம், உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்போடுதான் அனுப்ப வேண்டும் என்பது Meme வங்கியின் விதிமுறை. அதை ஏன் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பின்பற்றவில்லை?
மேற்சொன்ன கடிதத்தை வருமானவரித் துறை எழுதியவுடன், இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் எழுதி, அந்தப் பணத்தைக் கோவை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கருவூலத்துக்கு அனுப்பச் சொல்லி உள்ளது. அந்தக் கடித எண் - 76 /EEPS/GE-2016/TN. அதன்பிறகு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் எண்- 1345 1/Ele-X/2016-2. இதன்பிறகு உடனடியாக மூன்று கன்டெய்னர்களும் இடம்மாற்றப்படுகின்றன.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியான பிறகும்கூட, இதுபற்றி ரிசர்வ் வங்கி எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் தேர்தல் ஆணையம் ஏன் இவ்வளவு அவசரமாகச் செயல்பட வேண்டும்?
கன்டெய்னர்களில் சீல் வைக்கப்பட்ட நிலையில் இருந்த பெட்டிகள் 195. அந்தப் பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த சீல், ஆக்ஸிஸ் வங்கியினுடையது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உரிமை கோரும் பணப்பெட்டிகளில் ஆக்ஸிஸ் வங்கியின் சீல் எப்படி இருக்க முடியும்?
இந்த விவகாரம் ஊடகங்களில் வந்த பிறகு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா விசாகப்பட்டினம், ஸ்ரீபுரம் சந்திப்பு மேலாளர், கோவை மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், பணத்தை இடம்மாற்ற, ரிசர்வ் வங்கியின் அனுமதியைக் கோரவும் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, ஸ்ரீபுரம் சந்திப்பு, விசாகப்பட்டினம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளை மேலாளரும், ரிசர்வ் வங்கிக்குக் கடிதம் எழுதி, 570 கோடி ரூபாய் பணத்தை இடம்மாற்ற அனுமதி கேட்டுள்ளார்.
பணம் முறையாகக் கொண்டு செல்லப்படுகிறது என்றால், கொண்டு செல்வதற்கு முன்பே அனுமதி கேட்டிருக்க வேண்டும் அல்லவா? அதைச் செய்யாமல், பணத்தை அனுப்பிவிட்டு அது சிக்கலில் மாட்டிக்கொண்டு ஊடகங்கள் மூலமாக
நசட
வெளியானததற்குப் பிறகு, ஏன அனுமதி கேட்க வேண்டும்? அப்படியானால், எதை மறைக்க ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமல் அதன் முன் அனுமதியின்றிப் பணம் அனுப்பப்பட்டது?
ரிசர்வ் வங்கி ஆளுனர் திரு. ரகுராம் ராஜன் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி, இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி விசாரணை ஏதும் நடக்கிறதா?
அப்படி அனுமதிக் கடிதம் எழுதிய பிறகும், இதுவரை ரிசர்வ் வங்கி அதற்கு அனுமதி கொடுத்து எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அப்படியானால், அது சட்டவிரோதமான பணம் என்பது ஊர்ஜிதமாகிறது அல்லவா?
ரிசர்வ் வங்கி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை; ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியைப் பெறவில்லை; முறையான ஆவணங்கள் இலலை; பணம் கொண்டு செல்லப்பட்ட லாரிகளும் கன்டெயனர்களும் முறையான பதிவு பெற்றவை இல்லை; பணத்துக்கும் அவற்றை ஏற்றிவந்த லாரிகளுக்கும் முறையான ஆவணங்கள் இல்லை. இவ்வளவு சர்ச்சைகள் உள்ள பணத்துக்கு வங்கி அதிகாரிகள் உரிமை கோருகிறார்கள் என்றால், அவர்களின் நோமையைச் சந்தேகிக்க வேண்டி உள்ளது. அத்துடன், இந்தச் சாச்சைகள் இந்தப்பணம் ஹவாலா மோசடி பணம் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
இது தொடர்பாகப் பிரதமர்வரை புகார் கொடுக்கப்பட்டு, நாட்டின் உயர்ந்த விசாரணை அமைப்பான சி.பி.ஐ. விசாரிக்கும் நிலையில்கூட, அந்த விசாரணைக்கு வங்கி அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். எனவே, இதில் ஹவாலா மோசடி மட்டுமலல; ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீ மும் இது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகிறது.
இந்த வழக்கில் மனுதாரர் டி.கே.எஸ். இளங்கோவன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், “இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தலையிட்டு அவர்கள் விசாரணையைத் தொடங்கினர். அவர்கள் வாரண்ட் பிறப்பித்து விசாரணையைத் தொடங்கிய நிலையில், தேர்தல் ஆணையம் தலையிட்டுப் பணத்தைப் பத்திரமாக அனுப்பிவைத்துள்ளது. ஒரு குற்றம் நடந்தது ஊாஜிதமானால்தான், வருமானவரித் துறை அதிகாரிகள் வாரண்ட் பிறப்பித்துச் சோதனை நடத்துவார்கள். ஆக, அவர்கள்
சோதனையைத் தொடங்கியதில் இருந்தே இதில் குற்றம் நடந்துள்ளது ஊாஜிதமாகி விட்டது. பிறகு, இதில் ஏன் தேர்தல் ஆணையம் தேவையின்றித் தலையிட வேண்டும்? இதுவா தேர்தல் ஆணையத்தின் வேலை?” என்று கேள்வி எழுப்பினார்.
பிரதமாவரை புகார் கொடுக்கப்பட்டு, நாட்டின் உயர்ந்த விசாரணை அமைப்பான சி.பி.ஐ. விசாரிக்கும் நிலையில்கூட, அந்த விசாரணைக்கு வங்கி அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். எனவே, இதில் ஹவாலா மோசடி மட்டுமல்ல, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் இது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகிறது.
அதைக் கவனமாகக் குறித்துக்கொண்ட மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்க சி.பி.ஐ.-க்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
கன்டெய்னர் லாரிகள் பிடிபட்டவுடன், தேர்தல் அதிகாரிகள் லாரியிலே இருந்த வங்கி அதிகாரி எனச் சொல்லிக்கொண்ட ரெட்டி என்பவரிடம் விசாரித்தபோது, அவர் தன்னிடமிருந்த ஒரு பேப்பரைக் காட்டியிருக்கிறார். அதைப் பார்த்துவிட்டு அதிகாரிகள், “இந்த ஒரு பேப்பா மட்டும் இவ்வளவு பணத்துக்கான கணக்கைக் காட்டவில்லையே? அது மட்டுமில்ல: உங்கள் லாரியில் இருக்கிற பதிவு எண் ஏ.பி. 13 எச் 8650 என்று இருக்கு. ஆனால் பேப்பரிலே அப்படி இல்லையே? தேதி கூட 13-5-16 என்று தானே இருக்கணும், ஆனால் 13-6-16 என்று இருக்கே?” என்று கேட்ட போது சரியான பதில் இல்லை.
வாக்குப் பதிவு நாளன்று, மத்திய முன்னாள் நிதியமைச் சா, திரு. ப. சிதம்பரத்திடம் இந்த கன்டெய்னர்கள் பற்றிச் செய்தியாளர்கள் கேட்டபோது, “ஒரே நேரத்தில் 500 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிப் பணத்தைக் கொண்டு செல்ல சாத்தியமில்லை” என்று அவரே பதிலளித்திருக்கிறார்.
“சீல்” வைக்கப்படாத கன்டெய்னர்கள். சாதாரண பூட்டுகள், யூனிபாரம் போடாத போலீஸ் இவைகள் எல்லாம் சந்தேகத்தைத்தான் அதிகப்படுத்துகின்றன.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத் தலைவர் திரு. கிருஷ்ணன் கூறும்போது, “அந்தப் பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பணம் என்றால், அந்த லாரிகள் திருப்பூரில் பிடிபட்டவுடன், பக்கத்தில் கோவையிலிருந்து வங்கி அதிகாரிகள் ஓடிவந்திருப்பார்கள். அடுத்த சில மணி நேரத்தில் அந்தப் பணம் எங்களது பணம்தான் என்று நிரூபித்திருப்பாகள். ஆனால் கன்டெய்னர்களில் இருந்த பணம் தங்களுடையது என்று அறிவிப்பதற்கே 18 மணி நேரம் எடுத்துக்கொண்டார்கள் என்றால், இவ்வளவு நீண்ட இடைவெளியில் ஏதோ நடந்திருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் சமீர் கோஷ், “தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக ஆளுங்கட்சி பண வினியோகத்தில் ஈடுபடுகிறது எனக் குற்றச்சாட்டுகள் எழும் நேரத்தில் மூன்று கன்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பணம் பிடிபடுகிறது என்றால், அது மிக மிக சீரியசான விஷயம். அந்தப் பணம் எங்களுடையது என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 18 மணி நேரம் கழித்து அறிவிக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்தக் காலகட்டத்தில் 18 மணி நேர தாமதம் ஏன்? அவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால், அதை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மண்டல அதிகாரிகளே உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கலாமே? ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி அந்தப் பணம் வழியில் கொள்ளைபோனால் ஏற்படும் இழப்பீட்டைத் தடுக்க இன்ஷூர் செய்திருக்கவேண்டும். அந்தப் பணத்தை இன்ஷூரன்ஸ் செய்யும் நிறுவனம், அந்தப் பணத்திற்கு உரிய பாதுகாப்பை அளிக்கத் தமிழகப் போலீசாரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதையெல்லாம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் செய்தார்களா என்பதற்கு எந்தப் பதிலுமில்லை” என்று கூறியிருக்கிறார்.
ஸ்டேட் வங்கியின் செயல்பாடுகளைத் தற்போது மதுரை கனரா வங்கியில பணியாற்றும் வேறொரு அதிகாரி எள்ளி நகையாடி கூறியதைப் “புதிய தலைமுறை” இதழ் வெளியிட்டுள்ளது.
அதில், “ஒரு முறை தேனி மாவட்டத்தில் நான் பணியில் இருந்தபோது 60 கோடி ரூபாயைச் சில கிளைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதற்காக ஒரு வேனில் கொண்டு சென்றேன்.
வேனில் என்னோடு கனரா வங்கியின் இரண்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருந்தனர். வேனுக்கு முன்னால் துப்பாக்கி ஏந்திய நான்கு போலீசாரும் வேனுக்குப் பின்னால் துப்பாக்கி ஏந்திய நான்கு போலீசாரும் இருந்தனர். எனது வாகனம் போகும் “ரூட்” எனக்கும் வேனுக்கு முன்னால் சென்ற ஜீப்பில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக் டருக்கும் மட்டும்தான் தெரியும். எனது டிரைவருக்குக் கூடத் தெரியாது. 60 கோடி ரூபாய்க்கே இந்தப் புரோடாக்கால் எனறால், 570 கோடி ரூபாய்க்கு எவ்வளவு புரோடாக்கால் இருக்கும் எனபதைப் புரிந்துகொள்ளலாம். இதில் லுங்கி அணிந்த போலீசார் பாதுகாப்பு வாகனத்தில் இருந்தனர் என்பதுதான் இந்த ஓரங்க நாடகத்தின் உச்சகட்ட காமெடி” என்று கூறியிருக்கிறார். வேறு சில சந்தேகங்கள்?
ஒரு வங்கியிலிருந்து பணத்தை எவ்வளவு டிரான்ஸ்ஃபர் செய் தாலும், அதை வீடியோ ரெகார்டிங் செய்ய வேண்டுமென்று ரிசர்வ் வங்கி விதி உள்ளது. ஆனால் 570 கோடி விவகாரத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்யப்படவில்லை.
570 கோடி ரூபாயை ஒரு கன்டெய்னரில் சர்வ சாதாரணமாகக் கொண்டுபோக முடியும். ஆனால் இங்கே ஏன் மூன்று கன்டெய்னர்கள்? மூன்று கன்டெய்னர்களில் மொத்தம் 5000 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்ததாகப் பலரும் பேசிக் கொள்கிறார்களே! எந்தத் தரப்பில் இருந்தாவது இவ்வளவு பணம்தான் இருந்தது என்று அறுதியிட்டு இதுவரை சொல்லப்படவில்லையே? பணம் கொண்டு செல்லும்போது அருகில் உள்ள காவல் நிலையங்களுக்குத் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் பணம் எங்கிருந்து எங்கே போனது என்கிற எந்தத் தகவலும் யாருக்கும் சொல்லப்படவில்லை. இந்தப் பணம் உண்மையிலே வங்கிப் பணம்தானா?
இந்தப் பணம் கிளம்பிய இடம் கோவை எனகிறார்கள். ஆனால், அதற்கான ஆதாரம் இவர்களிடம் இல்லை. ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவில் சி.சி.டி.வி. கேமரா இருக்கிறது. ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவிலிருந்து கலெக்டர் அலுவலகம்வரை நான்கு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன. கோவை அவினாசி சாலையில் எல்லா சிக்னல்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன. அதில் பதிவான காட்சிகளைத் தருமாறு கேட்டாலும்
தர மறுக்கிறாரகள். இதற்கு என்ன காரணம்? கோவையிலிருந்து இந்தப் பணம் போகவில்லையா?
உடன்பிறப்பே, தமிழகச் சட்டப்பேரவைத் தோர்தலுக்குச் சற்று முன்னர் நடைபெற்ற 570 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனைப் பிரச்சினையை முடித்துவைத்துவிட்டதாகச் சிலர் எண்ணி இறுமாந்திருக்கிறாகள். உலை வாயைமூடி விடலாம்; ஊர் வாயை மூட முடியுமா? ஒவ்வொரு நாளும் இந்தப் பிரச்சினை தமிழக மக்கள் மத்தியிலும், ஊடகத்தினரிடையேயும் கனன்று கொண்டே இருக்கிறது; அவ்வப்போது ஜுவாலை வீசுகிறது. பெருகிக் கொண்டிருக்கும் நெருப்பை, பஞ்சணைக்குள் மறைத்து வைக்க முடியுமா? நாட்டு மக்கள் நாள்தோறும் எழுப்பும் கேள்விக் கணைகளை, முழுமையான உண்மையைச் சொல்லாமல் முறித்துப் போட முடியுமா? அதற்குத்தான் சி.பி.ஐ. விசாரணை; விருப்பு வெறுப்பற்ற நடுநிலை விசாரணை: குறுக்கீடற்ற விரைவான விசாரணை! அதிலே எதிர்பார்ப்பது உண்மை! உண்மை! ஊழலற்ற உண்மை!
மு.க. 17-7-2016
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 54 PDF ↗