தொகுதி 53 · கடிதம் 3969
“கொட்டைப்பாக்குக்கு விலை கூறும்” விசுவநாதன் பதில்!
2015-07-14
உடன்பிறப்பே,
“கருணாநிதி புகாருக்கு நத்தம் விஸ்வநாதன் பதில்” என்ற தலைப்பில் ஓர் அறிக்கை ஒரு சில நாளேடுகளில் வெளிவந்துள்ளது. 9-7-2015 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில், “மின் வாரியத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மெகா ஊழல் நடந்திருப்பதாக அந்த மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு அலுவலர், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறாரே, உயர்நீதிமன்றமும் “நோட்டீஸ்”' அனுப்பியிருக்கிறதே, அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் மக்கள் மன்றத்தின் முன் விளக்கம் அளிக்க முன் வருவதுதான் முறை” என்று குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கருத்தினை நான் மட்டும் தெரிவிக்கவில்லை; தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்களும், இதுபற்றி முதலமைச்சர் உடனடியாகப் பதிலளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், மின்வாரிய மெகா ஊழல் பிரச்சினை குறித்து, மின்துறை அமைச்சர் அளித்துள்ள பதிலில், இந்த மனு விசாரிப்பதற்கு ஏற்ற மனுதானா என்று கண்டறிய முதல் கட்ட விசாரணையில் மட்டுமே அந்த மனுவை உயர்நீதி மன்றம் வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதற்கு நான் பதிலளிப்பதைவிட “டைம்ஸ் ஆப் இந்தியா”, ஆங்கில நாளேடு 8-7-2015 அன்று இந்தச் செய்தியை வெளியிட்ட போது, அதற்குத் தலைப்பே, “Power Purchase deals under HC Scanner - Seeks details of damning CAG Report after Petitionalleges Rs.1 lakh Crore Scam”
(உயர்நீதிமன்ற ஆய்வில் மின் கொள்முதல் விவகாரங்கள் - ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தணிக்கை அதிகாரியின் அறிக்கை விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன) என்ப தாகும். முதல் கட்ட விசாரணை ஆயினும், பிரச்சினையின் கடுமை கருதியும், வழக்கில் பூர்வாங்க உண்மை இருப்பதாலுமே, சென்னை
உயர்நீதிமன்றம், தொடர்புள்ள ஆவணங்களை நீதிமன்ற ஆய்வுக்குக் கேட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை முதல் கட்ட விசாரணையிலேயேதான் வைத்திருக்கிறதா என்பதற்கும் அந்த நாளேடு விளக்கம் அளித்துள்ளது. அதாவது, “The spectre of an alleged loss of Rs. One lakh crore by the State, due to delayed power projects and purchase of power from private players at exorbitant rates, returned to haunt the Government with the Madras High Court seeking details of a damning Comptroller and Auditor General report on the issue. What was the nature of comments of the CAG? To what extent the explanation was not accepted? What is the view taken by the committee on public undertaking? Firing a volley of such questions at the Government, the first bench comprising Chief Justice Sanjay Kishan Kaul and Justice T.S. Sivagnanam on Tuesday said all relevant materials should be produced before the Court for perusal by August 10” என்று நீதிபதிகள் கூர்மையான கேள்விக்கணைகளைத் தொடுத்திடுவதற்கான அவசியத்தை உணர்ந்திருக்கும்போது, அமைச்சர் அதனை முதல்கட்ட விசாரணைதான் என்று அலட்சியமாகக் கூறியிருக்கிறார்.
உயர்நீதிமன்றத்தில் மின்வாரியத்தில் தவறுகள் நடைபெறுகின்றன என்று வழக்குத் தாக்கல் செய்த மின்வாரிய முன்னாள் அலுவலர் சி. செல்வராஜ் பற்றியும் அமைச்சர், வாரியத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டவர் என்றும், தண்டிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் தண்டனையை எதிர்த்து, செல்வராஜ் செய்த மேல்முறையீட்டில், அவர் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டு, பழைய ஊதியமும் வழங்கப்பட்டது என்று மின்வாரியப் பொறியாளர் சங்கத் தலைவர்
திரு.காந்தி தொலைக்காட்சியில் தெரிவித்திருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் கடுமையான கேள்விகளுக்கு முதலமைச்சர் மக்கள் மன்றத்திற்கு முன்னால் விளக்கம் அளிக்க வேண்டுமென்று நான் கேட்டால், அதை, ஏதோ வியாபார நோக்கிலே அறிக்கை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் திரித்துக் கூறியிருக் கிறார். இந்த மின் உற்பத்தி, மின் கொள்முதல் பிரச்சினைகளில், விபரீ தமான வியாபார நோக்கிலே செயல்பட்டுக்
கொண்டிருப்பவர் யார் யார் என்பதெல்லாம் காலம் வரும்போது
இ SONOS டப பட ட ப ப ப ப
மக்கள் மன்றத்தில் விவரமாக வெளிவந்து வேடம் கலையத்தான் போகிறது!
அ.தி.மு.க. ஆட்சியினர் எப்படிப்பட்ட மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு ஒரு உதாரணம் கூற வேண்டுமேயானால், ஜெயலலிதா 8-7-2015 அன்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த நான்காண்டுகளில் தொடங்கப்பட்ட புதிய திட்டங்களின் மூலமும், கொள்முதல் ஒப்பந்தங்கள் காரணமாகவும் மொத்தம் 5346.5 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறப்பட்டுள்ளது” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் 11-7- 2015 அன்று மின்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீண்ட கால அடிப்படையில் ஒப்பந்தம், நடுத்தரக் கால அடிப்படையில் ஒப்பந்தம் மூலம் மொத்தம் 5346.5 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று சொல்லியிருக்கிறார். முதலமைச்சர், 5346.5 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது என்கிறார். ஆனால் அமைச்சர், 5346.5 மெகாவாட் மின்சாரம் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்கிறார். ஏன் இந்த வேறுபாடான அறிக்கைகள்? இதில் யார் சொல்வது உண்மை?
2011லிருந்து 2015ஆம் ஆண்டு வரை எந்தெந்தத் திட்டங்களிலிருந்து இந்த 5346.5 மெகாவாட் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் மின்துறை அமைச்சர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில் அந்தத் திட்டங்கள் எல்லாம் யார், யாருடைய ஆட்சிக் காலத்தில், எப்போது, தொடங்கப்பட்டன என்ற விவரங்களையும் நான் விரிவாகக் கூறுகிறேன். 1. பவானி கட்டளை கதவணை 1! - இந்தத் திட்டம் 1996-91இல் தி.மு.கழக ஆட்சியில் 99.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 30 மெகாவாட்.
2. பெரியார் வைகை நீர்மின் உற்பத்தித் திட்டம் - இந்தத் திட்டம் 2004-2005இல் அ.தி.மு.க. ஆட்சியில் 14.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
தொடங்கப்பட்டது. 2.5 மெகாவாட்.
3. சிம்மாதிரி நிலை - 11 (அலகு 1) - இந்தத் திட்டம், மத்திய அரசுக்குச் சொந்தமானது. 500 மெகாவாட்.
4. பெரியார் நீர் மின்திட்டம் (அலகு lll) - இந்தத்
திட்டம், 2003-2004இல் அ.தி.மு.க. ஆட்சியில் 18.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப் பட்டது. 4 மெகாவாட்.
5. சிம்மாதிரி நிலை - 11 (அலகு 2) - இந்தத் திட்டம், மத்திய அரசுக்குச் சொந்தமானது 500 மெகாவாட்.
6. வல்லூர் (அலகு 1) - இந்தத் திட்டம் 2001ஆம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியில் 8,444 கோடி ரூபாய் மதிப்பீட்டில் என்.டி.பி.சி.யும், தமிழக மின்வாரியமும் இணைந்து தொடங்கப்பட்டது. 500 மெகாவாட்.
7. பெரியார் நீர் மின் திட்டம் (அலகு 1) - இந்தத் திட்டம் 2004-2005இல் 18.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப் பட்டது. 4 மெகாவாட்.
8 பவானி கட்டளை கதவணை - 111 - இந்தத் திட்டம், 1996-1997இல் தி.மு.க. ஆட்சியில் 99.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 30 மெகாவாட்.
9. வல்லூர் (அலகு 1) - இந்தத் திட்டம், 2007இல் தி.மு.க. ஆட்சியில், 8,444 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 500 மெகாவாட்.
10. மேட்டூர் அனல் மின் திட்டம் நிலை - 111 - இந்தத் திட்டம், 2008இல் தி.மு.க. ஆட்சியில் 3,550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 600 மெகாவாட்.
11 வடசென்னை அனல் மின் நிலையம் (நிலை Il ) (அலகு 2) - இந்தத் திட்டம் 2008இல் தி.மு.க. ஆட்சியில் 3,095 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 600 மெகா வாட்.
12. பெரியார் நீர் மின் திட்டம் (அலகு 4) - இந்தத் திட்டம் 2004-2005இல் அ.தி.மு.க. ஆட்சி யில் 18.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 4 மெகாவாட்.
13. பவானி கட்டளை கதவணை Ill - இந்தத் திட்டம் 2004-2005இல் அ.தி.மு.க. ஆட்சியில் 49.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 10 மெகாவாட்.
14. பெரியார் - வைகை நீர் மின் திட்டம் - III - இந்தத் திட்டம் 2003-2004இல் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2.5 மெகாவாட்.
15. வட சென்னை (நிலை 11) (அலகு 2) - இந்தத் திட்டம், 2008இல் தி.மு.க. ஆட்சியில் 2718 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 600 மெகாவாட்.
16. கூடங்குளம் அலகு 1 - இந்தத் திட்டம் மத்திய அணு மின் கழகத்தால் தொடங்கப்பட்டது. 1000 மெகாவாட்.
17. வல்லூர் (அலகு 3) - இந்தத் திட்டம் 2007இல் தி.மு. கழக ஆட்சியில் 8444 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 500 மெகாவாட்.
18. நெய்வேலி அனல் மின் நிலையம் - விரிவாக்கம் 2 - (அலகு 2) - இந்தத் திட்டம் மத்திய அரசுக்குச் சொந்தமானது. 250 மெகாவாட்.
19. தூத்துக்குடி அனல் மின் நிலையம் - அலகு 1 - இந்தத் திட்டம் 2007இல் தி.மு.க. ஆட்சியில் 4910 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 500 மெகாவாட்.
COLO FEM ப்பிட்டுள்ள இந்த 19 திட்டங்களையும்
எடுத்துக் கொண்டால். 3,860 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான
பட்டங்கள். 22915 கோ பாய் மதிப்பீட்டில் கனவே
நடைபெற்ற தி.மு.கழக ஆட்சியிலும் - வெறும் 27 மெகாவாட்
மின்சார உற்பத்திக்கான திட்டங்கள் மட்டுமே 134.47 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் ஏற்கனவே நடைபெற்ற அ.தி.மு.க. அ ட்சியிலும் - 2250 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான திட்டங்கள் _மத்திய அரசின் மூலமாகவும் தொடங்கப்பட்ட திட்டங்களாகும். மத்திய அரசின் திட்டங்களின் மூலமாக தமிழகத்திற்குக் கிடைத்தது
1 459.50 மெகாவாட்.
தமிழக முதலமைச்சரும், மின் துறை அமைச்சரும் திரும்பத் திரும்ப தாங்கள் ஏதோ 5,346.50 மெகாவாட் மின்சாரத்தைத் தங்கள் ஆட்சிக் காலத்திலே திட்டமிட்டு - நிதி ஒதுக்கீடு செய்து - டெண்டர் கோரி - பின்னர் பணிகளை நிறைவு செய்து மின் உற்பத்தி செய்திருப்பதைப்போல, திரும்பத் திரும்ப மக்களிடம் கூறி ஏமாற்றி வருகிறார்களே, இதிலே உண்மை ஏதாவது இருக்கிறதா?
இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, முதலமைச்சரும், மின்துறை அமைச்சரும் “கடந்த நான்காண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட புதிய மின் உற்பத்தியின் மூலம் 5346.5 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறப்பட்டுள்ளது'' என்று தம் நெஞ்சறிந்த பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் யாரை ஏமாற்ற இந்த நாடகம்?
2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அறிவித்த ஏராளமான மின் திட்டங்களிலிருந்து ஏதாவது ஒரு மெகாவாட் மின்சாரமாவது கிடைத்திருக்கிறதா? அவற்றின் கதி என்ன? அதற்கு ஏன் அமைச்சர் பதில் அளிக்கவில்லை?
மீட்டர்கள் வாங்குவதிலே முறைகேடுகள் நடை பெற்றுள்ளன என்ற செல்வராஜின் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லாமல், அமைச்சர் தனது அறிக்கையில், வாரியத்தின் வருவாய் மாதம் ஒன்றுக்கு 20 சதவிகிதம் அளவு அதிகரித்துள்ளது என்று பதில் அளித்திருக்கிறார். புதிய மீட்டர் வாங்கும்போது முறைகேடு நடந்ததா? இல்லையா? குற்றச்சாட்டுக்கு நேரடியாக அமைச்சர் பதில் கூறாததில் இருந்தே, மீட்டர் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பது ஊர்ஜிதம் ஆகிறதா அல்லவா? மேலும் புதிய மீட்டர் வைக்கப்பட்டதால், வாரியத்தின் வருவாய் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று அமைச்சரே பதில் கூறியதிலிருந்து மின் நுகர்வோர் தலையில் மாதந்தோறும்
20 சதவிகித அளவுக்கு அதிகத் தொகையைச் சுமத்தி வசூலித்திருக்கிறார்கள் என்பதுதானே உண்மை!
12-9-2014 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்ட ஆணையில் 12-9-2015க்குள் சூரிய சக்தி மின் நிலையம் அமைத்து, மின் உற்பத்தியைத் துவக்குவோரிடம், மின்வாரியம் ஒரு யூனிட் மின்சாரத்தை 7.01 ரூபாய் விலையில் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆணையை 1-4-2016 வரை, அதாவது ஆறு மாத காலத்திற்கு நீட்டித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. ஏன் இந்தக் கால நீடிப்பு என்று நான் அப்போதே கேட்டேன். வெளி மாநிலங்களில் சூரிய சக்தி மின்சாரம் ஒரு யூனிட் ரூ.5.40க்குக் கிடைக்கும் போது, ரூ.7.01 என்ற அதிகமான விலை கொடுத்து வாங்க கால நீடிப்பு செய்தது ஏன்? அண்மையில் அதானி குழுமத்தோடு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூட ஒரு யூனிட் மின்சாரம் 7.01 ரூபாய்க்கு வாங்கத்தான் முடிவு செய்யப்பட்டிருப்பதாகச் செய்தி வந்தது. வெளியிலே குறைவான விலைக்குக் கிடைக்கும்போது, அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது ஏன்?
ஒழுங்குமுறை ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் ஒருவரான திரு.நாகல்சாமி, அப்போதே ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதை மீறி ஆணை பிறப்பிக்கப்பட்டதா இல்லையா? மின்சாரத்தை வாங்கவுள்ள மின்வாரியமோ, மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுக்வோரோ யாரும் கோரிக்கை விடுக்காத நிலையில், ஆணையம் தன்னிச்சை யாக இவ்வாறு கட்டண ஆணையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க என்ன காரணம்? குஜராத் அதானிக்காகத்தானா? இவ்வாறு கட்டண ஆணையை நீட்டிப்பது குறித்து மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் விவாதிக்கப்படவில்லை. அதிக விலை கொடுத்து ஒப்பந்தப்படி 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்கினால் 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறதே, அதற்கு மின் துறை அமைச்சரின் பதில் என்ன?
மத்திய அரசுதான் மின் உற்பத்தி குறைவுக்குக் காரணம் என்று ஜெயலலிதா ஒருமுறை கூறினார். ஆனால் தமிழ்நாடு மின் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் காந்தி அப்போதே விடுத்த அறிக்கையில், “மத்திய மின் நிறுவனங்களின் உற்பத்தி
பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், தமிழக அரசின் மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுகின்றனவா? இல்லையே; குறிப்பாக மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வல்லூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்து 2012 மார்ச் மாதத்தில் முழுமையாக அவை பரிசோதிக்கப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டன. ஆனால் என்ன காரணத்தினாலோ அவற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்” என்கிற அதிர்ச்சியூட்டும் தகவலைத் தந்தாரே, தமிழக அரசு ஏன் அதற்குப் பதிலளிக்க வில்லை? அதுபற்றி மின் வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, “அந்தத் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டவை. மேலும் தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவதற்காகவே, மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்ட திட்டங்களைக்கூட செயல்பாட்டுக்குக் கொண்டுவராமல் இருக்கிறார்கள்!” என்று கூறினார்கள். மின் வாரிய மெகா ஊழல் குறித்து மக்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களுக்கு மின் துறை அமைச்சர் நேரடியாகப் பதிலளிக்காமல், திசை திருப்பும் நோக்கில், உண்மைக்கு மாறானவற்றைச் சுற்றி வளைத்துச் சொல்ல முயற்சித்திருப்பதைப் பார்க்கும்போது, “பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை பத்து பைசா” என்ற பழமொழிபோல் அல்லவா இருக்கிறது, அமைச்சரின் பதில் என்றுதானே கூறத் தோன்றுகிறது! அன்புள்ள, மு.க. 14-07-2015
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 53 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 53 PDF ↗