தொகுதி 51 · கடிதம் 3912
இந்த நாளில் அன்பு வேண்டுகோள்!
2014-08-11
உடன்பிறப்பே,
இன்று 10-8-2014
இந்த நாளை கண்டவுடன்தான் எத்தனை எத்தனை நினைவுகள் ஸ
இதே நாளில்தான் - 72 ஆண்டுகளுக்கு முன்பு - 10.8.1942 அன்றுதான் - என்னுடைய முதல் பிள்ளை என்று அனைவராலும் பாராட்டப் படும் “முரசொலி” பிறந்த நாள். அன்றுதான் “முரசொலி” இதழ் தொடங்கப்பட்டது. அந்த முரசொலிக்குத்தான் எத்தனை எத்தனை வரலாறு!
இன்று தமிழகத்திலே உள்ள உடன்பிறப்பு களால் ஆர்வமுடன் ஆதரிக்கப்படுகின்ற “மூரசொலி” ஏடு, முதன் முதலாக திருவாரூரில் துண்டு வெளியீடாக வெளியிடப்பட்டது, தொடக் கத்தில் திங்கள்தோறும் ஆயிரக்கணக்கிலே அச்சிடப்பட்டு ஊர்தோறுமுள்ள திராவிட இயக்கக் கிளைகளுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கிளைக் கழகத்தினர் திரட்டித் தரும் நன்கொடை களினால் “முரசொலி” துண்டு அறிக்கை வெளி யிட்டு, கழகத்தை முரசொலி வளர்க்க, முரசொலியை கழகம் வளர்த்தது. என்னுடைய எழுத்துக்கலையை வளர்க்கவும் “முரசொலி” காரணமாக அமைந்தது. இன்று “முரசொலி”க்குப் பல எழுத்தாளர்கள் உண்டு, ஆனால் நான் ஆயுள்கால நிரந்தர எழுத்தாளன். “சேரன்” என்பது என் புனைபெயர். தொடக்கத்தில் இதற்குச் செயலாளர் தென்னன், பொருளாளர் டி.எஸ். கோபால் - இருவரும் இன்றைக்கு இல்லை.
10 ஆண்டுகளுக்கு முன், 5.10.1944 அன்று நான் வழங்கிய “முரசொலி” துண்டறிக்கை ஒன் றின் நகல் ஒன்றை இங்கே அப்படியே இளைஞர் களின் நினைவுக்காகத் தருகிறேன்.
முரசொலி தோற்றம்: ஈ.வெ.ரா. ஆண்டு 67
முரசு: 2 ஒலி: 7 1944 புரட்டாசி 20ஆம் நாள் எழுத்தாளன்: சேரன். செயலாளர்: தென்னன். வருணமா? மானமா? போதை தலைக்கேறிய திராவிடத் தோழன் விழித்தானின்று. வீரத்தை விற்ற படலத்தைக் கண்டு வெட்கினான் துள்ளி. அதன் எதிரொலி சுயமரியாதை இயக்கம்! புது சகாப்தம் கண்ட தமிழன்! பெரியாரின் சகாப்தம் கண்ட தமிழன்! இத்தகைய தமிழன் வாழ்வில் மறுபடியும் வலை வீச்சா? என்று கேட்கத் துவங்கிவிட்டான். பிள்ளை, முதலியார், ரெட்டியார், தேசிகர் போன்ற வால்களை ஒட்ட வைத்துக் கொள்வதே ஒய்யார் வாழ்வின் உச்சஸ்தானம் எனக் கருதிடும் ஒரு சில முற்போக்கினர் உள்ள வரையில் நால்வகை வருனத்தைக் கண்டிக்க நமக்கும் சிறிது நாக்க கூசுகிறது. முட்டாள் என்று சொல்வது எனக்குப் பொருந்தும், அதுவே எனக்கு “சர் பட்டம் எனக் கூறிடும் காட்டாள்களிடம் நமக்கு வேலையில்லைதான். ஆனாலும், இரங்கும் தன்மை இயற்கையாகவே ஏற்பட்டு விடுகிறதல்லவா? இளித்த வாயர்களை உண்டு பண்ணினால்தான் களித்திருக்க வழி ஏற்படும் எனக் கண்டுபடித்து போன வருணாசிரமப் பிணத்தை மயக்கமென்று கூறித் தண்ணி தெளித்துக் கண்ணார் பெருக்குகிறார்கள். அந்தக் காட்சிதான் அக்டோபர் 8, 9, 1௦ தேதிகளில் சிதம்பரத்தில் காட்டப்படப் போகிறது. பிணத்திற்கு மணக்கோலமிட்டு, மக்களிடம் காசு பறிக்கும் இந்த முயற்சிக்குத் தில்லையில் குழி வெட்டப்படும். அழுக்கைப் போக்கிக் கொள்ள அனைவரும் திரண்டு செல்வீர்! பகைவரைக் குறை கூறிப் பல்லவி பாடிட மட்டும் நேரமில்லை இப்பொழுது! விடுதலை விருத்தமுடன் விரைந்து செல்வீர் தில்லைக்கு! பரணி பலபாடிப் பாங்குடன் வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில் சொரணை சிறிதுமில்லாச் சுயநலத்துச் சோதரர்கள் சிலர் கூடி வருணத்தை நிலைநாட்ட வகையின்றிக் கரணங்கள் போட்டாலும்
மரணத்தின் உச்சியிலே மானங்காக்க
மறத்தமிழா போராடு
வருணாசிரமம் வீழ்க!
இப்படித் துவங்கிய “முரசொலி தான் இன்று விடுதலைப் படை வீரர் ஏந்துகின்ற கருவிகளில் ஒன்றாக இருக்கிறது.
“முரசொலி” இதழின் பொன் விழா, 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் நாளன்று சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் திருமண மண்டபத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமையில் நடைபெற்றது, தம்பி முரசொலி மாறன் வரவேற்புரை ஆற்றிட, நான் முரசொலி பொன் விழா மலரினை வெளியிட்டு உரை யாற்றினேன். நான் முரசொலியைத் தொடங்கிய போது எனக்கு உறுதுணையாக இருந்த என் நண்பன் திருவாரூர் தென்னன், அப்போது முரசொலியை அச்சிட்டுக் கொடுத்த திருவாரூர் கருணாநிதி அச்சக உரிமையாளர் கருணை எம்.ஜமால், முரசொலியின் தொடக்கக்கால நிர்வாகி யாகப் பணியாற்றிய சி.டி.எம். என்று அழைக்கப் படும் சி.டி. மூர்த்தி, முரசொலி சொர்ணம், மேலாளர் பெரியண்ணன் ஆகியோருக்கு என் கையால் பொன்னாடை போர்த்தினேன்.
முரசொலியைத் தொடர்ந்து நடத்துவதற்காக ஒரு அறக்கட்டளை நிறுவுவதென்று அன்றைய தினம் காலையில் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை பொதுச் செயலாளர் பேராசிரியர் பேசும் போது அறிவித்தார். அந்த விழாவிற்கு வி.பி. சிங் அவர்கள் தன் கைப்பட ஆங்கிலத்தில் வாழ்த்து எழுதி, அதிலே தமிழில் வி.பி. சிங் என்று கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார்.
பொன்விழா மலரையொட்டி நான் எழுதிய கவிதையில்,
“அஞ்சுக அன்னையிடம் உயிர்ப்பால் அருந்தி,
அய்யாவின் கொள்கையின்பால், உவப்பால் தவழ்ந்து
அண்ணாவின் பேரன்பால் ஆளாகி வளர்ந்து,
இளமைத் துடிப்பால் இந்திப் போர்ப்படை கூட்டி
இலட்சிய முனைப்பால் முரசொலிக்க வந்தவன் நான்
ஆதியான் வள்ளுவன் வழி முப்பால் தந்தவனே!
அணுப்பொழுதும் அப்பால் சொன்றிடாமல் - எனை
அரவணைத்துக் காக்கின்ற தமிழே உன் சார்பில்
போர்க்கள முரசின் பொன்விழா மலரை
ஆர்த்தெழும் உடன்பிறப்பாளர் அனைவருக்கும்
நெஞ்சில் என்றும் பூத்திருக்கும் தாய், தந்தை பெரியார், அண்ணா - மற்றும்
வாழ்த்துகின்ற ஆன்றோர் சான்றோர்க்கும்,
காணிக்கை ஆக்குகின்றேன்”
- என்று குறிப்பிட்டிருந்தேன்,
கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் அந்தப் பொன் விழாவுக்கு எழுதிய வாழ்த்துரை பில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் கேடய மாகத் திகழ்ந்து வரும் முரசொலி, தமிழ்ப் பயிர் வளர்க்கும் பண்ணையின் ஏராகவும் விளங்கு கின்றது. எத்தனையோ அரசின் தடைகள், வழக்குகள், எதிர்பாராத இழப்புகள் இத்தனையும் தாங்கிக் கொண்டு, வேலாழ் முகத்த களிறு என வீறு நடைபோட்டு வருவது முரசொலி, அதன் பொன்விழாவில் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு நின் பயணம் தொடர்க என்று வாழ்த்துகிறேன். இனமும் மொழியும் இழந்த மானம் மீட்டுத், தமிழர் தலை நிமிர்ந்து வாழும் வழிகாணச் செய்திடும் நாள் காண நீ வாழ்க என்று வாழ்த்துகிறேன். வாழ்த்தி விட்டு முரசொலியைப் புரட்டுகிறேன், கலைஞர் மு.க. வின் திருமுகத்தின் மறு தோற்ற மாகவே காட்சி அளிப்பதைக் காண்கிறேன், வாழ்த்துகிறேன் மறுபடியும் - எந்நாளும் வாழ்க வென்றே” என்று குறிப்பிட்டதையும் இந்த நேரத் தில் நினைவு கூர்கிறேன்.
இப்படியெல்லாம் வளர்ந்த “முரசொலி”க்குத்தான் இன்று வயது 72 ஆகிறது. என்னுடைய வயதோ 90 முடிந்து, 91 நடக்கிறது. 11.3.1984 அன்றுதான் நான் எழுதும்போது, “தள்ளாடும் - தத்தி நடக்கும் - தணலை மிதிக்கும் - விழும்! எழும்! ஆனாலும் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மண்டியிட வைத்ததில்லை; முன்வைத்த காலைப் பின்வைக்க நினைத்தது மில்லை! முரசொலி நான் பெற்ற முதல் பிள்ளை! ஆம்; அந்த முதற்பிள்ளைதான்
தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியனைப் போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்க “சென்று வா மகனே! செருமுனை நோக்கி!” என அனுப்பி வைக்கப்பட்ட “அன்புப் பிள்ளை!” என்றெல்லாம் குறிப் பிட்டிருந்தேன்.
இன்றையதினம் “முரசொலியின் பிறந்த நாளைப் பெருமைப்படுத்தும் வகையில் தம்பி கவிச்சுடர் கவிதைப்பித்தன் எழுதிய கவிதையில்,
“முரசொலிநம் உணர்வுக்குப் பெருவிருந்து!
முரசொலிநம் அறிவுக்குத் தமிழ்மருந்து!
முரசொலிநம் படைக்கருவி! தமிழினத்தின்
முகவரி நம் அடையாளம்! ஆக்கம் ஊக்கம்!
முரசொலிநம் உடலியக்கும் குருதி நாளம்
முரசொலியே அச்சாணி கழகத் தேர்க்கு!
முரசொலிநம் உயிர் என்பேன்! தயக்கம் இல்லை!
முரசொலிஇல்லாமல் நம் இயக்கம் இல்லை!”
என்று முரசொலியைப் பற்றி கழக உணர்வுகளைச் சாறு பிழந்து வழங்கியிருக்கிறார்.
முரசொலியின் இந்த 72 ஆண்டு காலவளர்ச்சியில் இடையிடையே தொய்மைகள் உண்டு. அவ அதன் தலை தொங்கியதில்லை. நிமிர்ந்து நில் நான் முரசு கொட்டியதற்கு - கொட்டுவதற்கு பெரும் துணையாய் இருந்து வரும் முரசொலிக்கு இன்று 72வது பிறந்த நாள். இந்த வளர்ச்சிக்கு இதையே போர்வாளாகவும், கேடயமாகவும் ஏந்திக் கொண்டு கழகத்தை நடத்துகின்ற என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே காரணம். அவர்களுக்கெல்லாம் இந்த நேரத்தில் நன்றி செலுத்துகிறேன்.
இந்த 72 ஆண்டுகளில் எத்தனையோ அரசியல் நிகழ்ச்சிகள் - குடும்ப நிகழ்ச்சிகள் - கழக நிகழ்ச்சிகள், எத்தனையோ அரசியல் திருப்பங்கள் - கனிவு ஒரு காலகட்டம் - கசப்பு ஒரு காலகட்டம் - இந்தத் தட்பவெட்ப மாறுதல் கள் எல்லாம் முரசொலிக்கு
அத்துப்படி. இந்த முரசொலி - கல்லிலும் முள்ளிலும் பயணம் செய்த முரசொலி - என்றென்றும் களத்தில் நிற்கும் முரசொலி - காட்டாறுகள் கடந்து வந்த முரசொலி - கடும் விலங்குக் கூட்டத்தை வென்று வந்த முரசொலி என்பதற்கு ஒரேயொரு நிகழ்வினை ஞாபகப்படுத்துகிறேன்,
1991ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்தி யாவின் இளம் தலைவர் ராஜீவ் காந்தி தி.மு. கழகத்திற்கு எதிரணியில் போட்டியிட்ட காரணத் தினால், ராஜீவ் காந்தியின் மறைவினால் வேதனைக்காளான அந்தக் கட்சியின் தொண்டர்களைத் தூண்டிவிட்டு அதி.மு.க. வினரும், சமூக விரோதிகளும் அந்த நெருக்கடியான நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழகத்தினர் வீடுகளி லும், அலுவலகங்களிலும் புகுந்து கலாம் விளைவித்தனர். முரசொலி அலுவலகத்தில் பெரும் பாலான பகுதிகள் அத்தகைய சக்திகளால் கொளுத்தப்பட்டன. நீண்டகாலமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த “முரசொலி” பழைய கோப்பு கள் எல்லாம் தீயில் கருகிச் சாம்பலாயின. அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் கொளுத்தப்பட்டன. அப்போது முரசொலி அலுவலகத்தைக் கவனித்துக் கொண் டிருந்த தம்பி கலாநிதி மாறன், செய்தியைக் கேள்விப்பட்டு, என் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு; எரிந்து கொண்டிருந்த முரசொலி அலுவலகத்தைக் காணச் சென்ற போது, அவரால் உள்ளேயே நுழைய முடியவில்லை என்பதோடு, அவர் சென்ற ஸ்கூட்டரும், அவர் கண் முன்னாலேயே கொளுத்தப்பட்டது. முரசொலி இதழைத் தொடர்ந்து அச்சிட்டு வழங்க முடியாத அளவுக்கு அங்கேயிருந்த இயந்திரங் கள் நாசமாக்கப்பட்டன. இப்படி “முடிந்து விட்டது கதை”, என்று மாற்றார்களால கருதப்பட்ட “முரசொலி தான் இன்றைக்குத் தொடர்கதையாக தனது தூய தொண்டினை தொடர்ந்து ஆற்றி வருகிறது. 72வது அகவையில் அடியெடுத்து வைக்கும் என்னுடைய முதல் பிள்ளை “முரசொலி”க்கு கழக உடன்பிறப்புகள் என்றும் போல் தொடர்ந்து ஆதரவினைக் குவித்திட வேண்டுமென்பதுதான் இந்த நாளில் நான் விடுக்கும் அன்பு வேண்டுகோளாகும். அன்புள்ள, மு.க. 11-08-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 51 PDF ↗