தொகுதி 50 · கடிதம் 3829
இங்கிலாந்து பிரதமரும்; நமது இந்தியப் பிரதமரும்!
2013-11-20
உடன்பிறப்பே,
உலகத் தமிழர்களும், கனடா, பிரிட்டன், மொரீஷியஸ், ட்ரினிடாட் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியதற்குப் பிறகு, “காமன்வெல்த்” மாநாடு இலங்கையில் நடைபெற்று முடிந்துவிட்டது. அந்த மாநாட்டின் ஒரே சிறப்பு, அந்த மாநாட்டினை நடத்திய இலங்கை அதிபருக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலை; இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் அவர்களுக்குக் கிடைத்த சர்வதேச கவனம். ஈழத் தமிழர்கள் - இலங்கையிலே வாழ்வோர் மற்றும் உலகமெங்கும் வாழ்வோர், ஏன் தமிழ்நாட்டில் வாழும் அத்தனை தமிழர்களின் நெஞ்சங்களிலும், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் இடம் பெற்றுவிட்டார். இந்தப் புகழும், பெருமையும் நம்முடைய இந்தியப் பிரதமருக்கும் கிடைத்திருக்கும். எப்போது தெரியுமா? இலங்கை யில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில், நமது வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான குழுவும், ஈழத் தமிழர்களுக்கு இலங்கை இழைத்திருக்கும் கொடுமைகளையும், மனித உரிமை மீறல்கள் - போர்க் குற்றங்கள் - இனப்படுகொலை ஆகியவற்றையும் கண்டிக்கும் வகையில் இந்தியா அந்த மாநாட்டில் கலந்துகொள்ளாது; இந்தியாவிலிருந்து பிரதமர் அல்ல, ஒரு “துரும்பு” கூட அந்த மாநாட்டில் கலந்துகொள்ளாது என்று அறிவித்திருக்குமானால், தமிழகமே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கும். தமிழர்கள் ஒருமனதாக அதைப் பாராட்டி மகிழ்ந் திருப்பார்கள்; பிரதமரும் சர்வதேச கவனத்தை ஈர்த்திருப்பார்!
அதுமாத்திரமல்ல; இலங்கை அதிபருக்குத் தலையையும், தமிழர்களுக்கு வாலையும் காட்டி ஏமாற்ற நினைத்ததைப் போல, இரண்டுங் கெட்டான் நிலையில், இந்தியப் பிரதமர் இலங்கைக்குச் செல்லாமல், அதேநேரத்தில் மத்திய அமைச்சரை மட்டும் அனுப்ப முன்வந்த சூழலில், அந்தச் செய்தியையாவது
பிரதமர் ஓர் அறிக்கையாக இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக அங்கே நடத்திய வன்கொடுமைகளைக் கண்டிக்கின்ற வகையில்தான் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தாலோ - அல்லது இலங்கைக்குச் சென்ற மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், இங்கிலாந்து பிரதமர் செய்ததைப்போல, ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று, தொடர்ந்து துன்ப துயரங்களை மட்டுமே அனுபவித்துவரும் தமிழர்களுக் கெல்லாம் இந்தியா சார்பில் ஆறுதல் தெரிவித்து, நெஞ்சைக் கலக்கும் அவர்களின் நிலைமைகளை; இலங்கை அதிபரைச் சந்தித்து எடுத்துக்கூறி, ஈழத் தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் இன்னமும் செய்துவரும் கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில் விசாரணைக் குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும், தவறினால் ஐ.நா. மன்றத்திலும், மனித உரிமைகள் ஆணையத்திலும் இந்தியா முறையிட்டுத் தீர்மானம் கொண்டு வருவோம் என்று சொல்லியிருந்தாலே, இன்றைக்கு கேமரூன் அவர்களுக்குக் கிடைத்துள்ள அத்தனைப் பெருமைகளும் இந்திய அரசுக்குக் கிடைத்திருக்கும். உலகத் தமிழ்ச் சமுதாயம் நமக்காக இந்திய அரசு துணைபுரிய முன்வந்திருக்கிறது என்றெண்ணி நன்றி செலுத்தியிருக்கும்.
இந்திய அரசின் செயல்பாட்டினைக் கண்டித்து, நேற்றையதினம் அண்ணா அறிவாலயத்தில் கூடிய “டெசோ” கூட்டத்தில் நிறைவேற்றிய முதல் தீர்மானத்தில், “ஈழத் தமிழர் பிரச்சினையிலே நெருக்கமான தொடர்பு இல்லாத இங்கிலாந்து நாட்டின் பிரதமரே, இந்த அளவிற்கு கருத்துக்களை வெளியிட்டிருக்கும்போது, ஈழத் தமிழர்களுக்காக உண்மையிலேயே குரல்கொடுத்து உதவிக்கு வந்திருக்க வேண்டிய உரிமையும், கடமையும், பொறுப்பும் உள்ள சகோதர நாடான இந்தியா, தமிழர்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளைப் புறக்கணித்து, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் அவர்களை அந்த மாநாட்டில் கலந்துகொள்ளச் செய்ததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது” என்று ஒரு பத்தியில் குறிப்பிட்டிருப்பதோடு, இரண்டாவது தீர்மானத்தில் “பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்களையும், உலகத் தமிழர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு, இனியாவது
மத்திய அரசு, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்,
போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை குறித்து, சர்வ தேச
விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இந்திய
நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றும்
திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிற து.
இந்தியாவின் செயல்பாடுகள் பற்றி உள்நாட்டு -
வெளிநாட்டுப் பத்திரிகைகள் என்ன எழுதியிருக்கின்றன
தெரியுமா? இதோ உதாரணத்திற்கு ஒன்றிரண்டு!
The New York Times, in an editorial appearing in the Thursday
edition, accused
Sri Lanka of committing “serious human rights violations” and
of failing “to provide accountability for war-time abuses.” Under
the Rajapaksa Government, the paper said, journalists have been
systematically threatened, harassed, killed or forced into exile in what
amounts to a war on the press, adding, that Colombo did everything it
could to sabotage a free and fair outcome (in the Northern elections),
including publishing a fake edition of the local newspaper Uthayan.
The editorial urged the leaders attending the Commonwealth Heads of
Government Meeting to insist that Colombo show meaningful progress
in addressing human rights abuses abiding by international standards
and to restore constitutional protection for freedom of expression”
●
The Hindu - Editorial - “Manmohan Singh’s decision not to
attend the summit has brought no political or diplomatic advantage. By
comparison, British Prime Minister David Cameron showed far more
nous. He silenced political opposition to his participation by using
the occasion to publicly criticise Sri Lanka’s rights record, issuing
an ultimatum to President Rajapaksa to institute by March a credible
inquiry into allegations of rights violations. How useful such ultimatums
are as a diplomatic strategy is questionable going by the Sri Lankan
leader’s defiant stance, but the British Prime Minister achieved his
stated aim of “focus(ing) the eyes of the world on Sri Lanka”. He also
did what the Indian Prime Minister should have done - visited Jaffna,
connecting with the Tamil people and their problems first-hand. New
Delhi will face its next Sri Lanka test in March 2014 at the U.N. Human
Rights Council, but its timing right before the elections means it may
blunder through again”
●
இதோ; ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், ஒருவரின் குரல் :
“Lee Rhiannon, a Greens Party Senator from New South Wales, during a
debate in the Australian Parliament following her return from Sri
Lanka on the eve of the Commonwealth Meeting, said that the situation
in the North East under Mahinda Rajapakse regime is dire, that the Sri
Lanka army’s involvement in civilian life is pervasive and Australia is
turning a blind eye to credible allegations of continuing torture, rape
and crimes against humanity reported by respected Rights groups and
by several video documentaries from Channel-4. Rhiannon pointed
out the increasingly voiced broad consensus from several countries for
an international investigations into the war-crimes by the Rajapakse
regime, and praised the CHOGM boycott of several Prime Ministers in
spotlighting the Sri Lanka’s continuing dismal rights record and lack
of accountability for war-crimes. She added a Catholic father who has
documented the details of more than 2000 people disappeared after
being arrested alive had told her that crimes that have been committed
and those that continue to be perpetrated amount to genecide against
the Tamils.”
*
The New Indian Express - Editorial - “Rajapaksa needs to
remember that nobody trusts his Government when it says there were
no violations and the end of the war has brought peace and tranquility
to Sri Lanka.
*
“நழுவியது வாய்ப்பு” என்ற தலைப்பிலே “தினமணி” -
“இலங்கையில் நடந்த இனப்படு கொலையையும், விடுதலைப்
புலிகளுக்கு எதிராக நடந்த போரின் போது அரங்கேற்றப்பட்ட
மனித உரிமை மீறலையும் கண்டித்து, அதற்காக காமன் வெல்த்
மாநாட்டைப் புறக்கணிப்பதாக வெளிப்படையாகவே அறிவித்தனர்
கனடா, மொரிஷியஸ் பிரதமர்கள். இந்தியப் பிரதமர் அப்படி அறிக்கை எதுவுமே வெளியிடாமல், தனக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சரைப் பங்கேற்க அனுப்பி வைத்து, தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தலையையும், இலங்கை அரசுக்கு வாலையும் காட்டி நழுவியிருக்கிறார். ஒன்று, புறக்கணித்த ஏனைய இரண்டு பிரதமர்களையும் போல, துணிவுடன் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறலுக்குக் கண்டனம் தெரிவித்து, சர்வதேச விசாரணை கோரியிருக்க வேண்டும். அல்லது, உள்நாட்டு எதிர்ப்பையும் மீறி, இலங்கைக்குச் சென்றிருக்க வேண்டும். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனைப் போல, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திரிகோணமலை பகுதிகளுக்குச் சென்று, அங்கேயுள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, கொழும்பில் நடந்த காமன்வெலத் மாநாட்டிலும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் நேரிலும் பிரச்சினைகளை எழுப்பி, அதை விவாதப் பொருளாக்கி இருக்க வேண்டும்” என்றெல்லாம் எழுதிய “தினமணி” தலையங்கத்தை முடிக்கும் போது, “அதிபர் ராஜபக்ஷேக்கு ஒரு ஆலோசனை - இலங்கைக்கு என்று தனியாக ஒரு வெளிவிவகார அமைச்சர் தேவையில்லை, அந்த வேலையை சல்மான் குர்ஷித் திறம்படச் செய்கிறார்” என்று கூறியுள்ளது.
இலங்கையின் நட்பு நாடு என்பதால், ஏராளமான உதவிகளை இலங்கைக்குச் செய்து வரும் சீனாவேகூட, “பல்வேறு நாடுகளில் உள்ள பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மாறுபட்டதாக இருக்கிறது; இலங்கை மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கியின்காங் நிருபர்களிடம் கூறியிருக்கிறார். ஆனால் இலங்கை சென்ற நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் வாயைத் திறந்தாரா?
ராஜபக்ஷே அரசின் நடவடிக்கைகளைப் பற்றியும், காமன்வெல்த் மாநாடு பற்றியும், இந்தியாவின் அணுகுமுறை
பற்றியும் பலரும் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்திருக்கிறேன்.
உலகத் தமிழ்ச் சமூகத்தின் ஒன்றுபட்ட பாராட்டினைப் பெறுகின்ற அளவிற்கு, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், மாநாட்டின் முதல் நாளன்றே, அதாவது 15-11-2013 அன்றே யாழ்ப்பாணத்தில் உருக்குலைந்த பகுதிகளுக்கெல்லாம் சென்று அங்கே பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களையெல்லாம் நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளையெல்லாம் கேட்டிருக்கிறார். அதற்குப் பிறகுதான் அவர் கொழும்பு திரும்பி, அன்றிரவே அதிபர் மகிந்த ராஜபக்ஷேயைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். 1948ல் பிரிட்டனிடமிருந்து இலங்கை விடுதலை பெற்ற பிறகு, யாழ்ப்பாணம் சென்ற முதல் வெளிநாட்டுப் பிரதமரே டேவிட் கேமரூன்தான். 16-11-2013 அன்று டேவிட் கேமரூன் அவர்கள் அளித்த பேட்டியில், “இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்துத் தனியாக இலங்கைக்குள் வெளிப்படைத் தன்மை வாய்ந்த விசாரணை நடத்த மார்ச் மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; கெடு தவறினால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை அணுகி, சுயேச்சையான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். போரின் போது தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம் என வரவழைத்து, பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு முகாம்களில் என்ன நடந்தது என்பதை அறிய சர்வதேச விசாரணை அவசியம்” என்று சொல்லியிருக்கிறார். மேலும் அவர், “யாழ்ப்பாணத்துக்குச் சில சர்வதேச அமைப்புகளுடன் நான் சென்றதற்குக் காரணம், அங்கு நடந்த மனதை உறையவைக்கும் சம்பவங்களை வெளிச்சம் போட்டு உலகுக்குக் காட்டுவதற்காகத்தான். காமன்வெல்த் குடும்பத்தின் உறுப்பினர் என்ற முறையில் இதைச் செய்தேன்” என்றும் தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டன் பிரதமர் செய்ததைத்தான் இந்தியாவும், இந்தியப் பிரதமரும் செய்ய வேண்டுமென்று தமிழ்ச் சமுதாயம் எதிர்பார்த்தது. ஆனால் பிரிட்டன் பிரதமர் தமிழ்ச் சமுதாயத்தின் மீது காட்டுகின்ற அக்கறையையும், பரிதாபத்தையும், இந்தியா காட்டுகிறதா? பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளாதது பற்றி கருத்துத் தெரிவிக்கும் போது, அவர் உண்மையிலே தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கிணங்க அதிலே கலந்து கொள்ளவில்லை
என்றால், இலங்கைப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அதற்கான காரணத்தை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கலாம் அல்லவா? ஈழத் தமிழர்களுக்கு இன்னின்ன கொடுமைகள் நடைபெற்றிருக்கின்றன, அதற்காக ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், உண்மை உலகத்திற்குத் தெரிய வேண்டும் என்று அந்தக் கடிதத்திலே தெரிவித்திருக்கலாம் அல்லவா? தமிழர்களின் கோரிக்கைகளை யெல்லாம் புறக்கணித்துவிட்டு, பிரதமருக்குப் பதிலாக அந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்குச் சென்றாரே, அவர் அங்கே செய்தது என்ன? இங்கிலாந்துப் பிரதமர் மாநாட்டின் முதல் நாள் அன்றே யாழ்ப்பாணத்திற்கு ஓடோடிச் சென்று, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையெல்லாம் பார்த்து ஆறுதல் வழங்கினாரே; அதைப் போலச் செய்தாரா? விசாரணை நடத்தப்பட வேண்டு மென்று அவரைப் போல பேட்டி அளித்தாரா? காமன்வெல்த் மாநாட்டிலே இலங்கையிலே நடைபெற்ற கொடுமைகளைப் பற்றியெல்லாம் கர்ஜித்தாரா? பிரதமர் ஏன் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று காரணங்களை அடுக்கினாரா? எதுவுமே செய்யவில்லை; சல்மானுக்கென்ன; மாண்டு மடிந்தது நமது தமிழ்
இன மக்கள் தானே? அன்புள்ள, மு.க. 20-11-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗