தொகுதி 43 · கடிதம் 3467
36 ஆண்டுகளுக்கு முன் அன்றைய முதல்வர் கலைஞர் நீதியரசர் மகராஜனுக்கு எழுதிய கடிதம்!
1974-11-02
3467. 36 ஆண்டுகளுக்கு முன் அன்றைய
முதல்வர் கலைஞர் நீதியரசர் மகராஜனுக்கு
எழுதிய கடிதம்!
36 ஆண்டுகளுக்கு முன்பு - தமிழக முதலமைச்சர் கலைஞர்
அவர்கள் - அப்போதும் முதல் அமைச்சராக இருந்தபோது - உயர்நீதி
மன்ற நீதிபதியாக இருந்த நீதியரசர் மகராஜன் அவர்கள் தான்
எழுதிய ஒரு புத்தகத்தினை - கலைஞர் அவர்களுக்கு அனுப்பி,
அந்த நூல் பற்றிய கருத்தினைத் தெரிவிக்க வேண்டுமென்று
கேட்டுக் கொண்டதற்கிணங்க -
கலைஞர் அவர்கள் அந்தப் புத்தகத்தைப் படித்து விட்டு
2-11-1974 அன்று தன் கைப்படவே ஒன்பது பக்கங்கள் அந்த
நூலினைப் பற்றி விமர்சனம் செய்து எழுதியதுதான் இங்கே
இணைக்கப்பட்டுள்ளது.
36 ஆண்டுகளுக்கு முன்பு -
முத்து முத்தான எழுத்துக்களில் -
முதலமைச்சர் பதவியிலே இருந்த நிலையில் “டிக்டேட்”
செய்யலாம் - உதவியாளர்களைக் கொண்டு விமர்சனக் கட்டுரை
ஒன்று எழுதி தட்டச்சு செய்து அதிலே கையெழுத்திட்டு
அனுப்பலாம் - நூலினைப் புரட்டிப் பார்க்காமலே வேறு சிலர்
தற்போது மற்றவர்கள் எழுதிய அறிக்கையைப் படிக்காமலே கூட
கையெழுத்திட்டு அனுப்புகிறார்களே, அவ்வாறு செய்திருக்கலாம்
- அப்படியெல்லாம் செய்யாமல் - நூல் முழுவதையும் படித்து
விட்டு, அதைப்பற்றி பக்கம் பக்கமாக தன் கையெழுத்தில்
எழுதியதற்கு ஒரு உதாரணமாக -
மறைந்த நீதியரசர் திரு.மகராஜனின் திருப்புதல்வர்
டாக்டர் சந்திரசேகர் என்பார் பாதுகாத்து வைத்திருந்த அந்தக்
கடிதத்தின் நகலை - தற்போது முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும்
டாக்டர் திரு.கிருஷ்ணசாமி அவர்கள் மூலமாக கொடுத்து
அனுப்பியிருப்பதை நம்முடைய வாசகர்களும் படித்திட
வேண்டும் என்பதற்காக அந்தக் கடிதத்தை இங்கே அப்படியே
வெளியிட்டுள்ளோம்.
(ஆசிரியர் - முரசொலி)
[கலைஞர் 2-11-1974 அன்று நீதியரசர் மகராஜனுக்கு கைப்பட எழுதிய கடிதத்தின் ஒளிப்பட நகல் தொடங்குகிறது. கையெழுத்து மூலவடிவிலேயே அச்சிடப்பட்டுள்ளது.]
[கலைஞர் 2-11-1974 அன்று நீதியரசர் மகராஜனுக்கு கைப்பட எழுதிய கடிதத்தின் ஒளிப்பட நகல் — அச்சுப் பக்கம் 300-இல் தொடர்ச்சி.]
[கலைஞர் 2-11-1974 அன்று நீதியரசர் மகராஜனுக்கு கைப்பட எழுதிய கடிதத்தின் ஒளிப்பட நகல் — அச்சுப் பக்கம் 301-இல் தொடர்ச்சி.]
[கலைஞர் கைப்பட எழுதிய கடிதத்தின் இறுதி ஒளிப்பட நகல். கீழ்பகுதியில் கையொப்பமும் `2/11/1974` என்ற கையெழுத்துத் தேதியும் காணப்படுகின்றன.]
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022) · பக்கங்கள் 299–303.
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 43 PDF ↗