உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
திரைக்கதை & வசனம்

திரும்பிப்பார்!

காட்சி 81 · 81 / 93

[கோர்ட்

[பரந்தாமன் கூண்டில் நிற்கிறான்]

பரந்தாமன் : கோர்ட்டார் அவர்களே, கூறியது அத்தனையும் புரிந்தது எனக்கு. தொழிலாளர்களைத் தூண்டிவிட்டேன், போலீசாருக்குத் தொல்லை கொடுத்தேன். என் சுயநலத்திற்காகப் பாட்டாளி சமூகத்தை பயன்படுத்திக்கொண்டேன், அராஜகம் - பலாத்காரம் இவைகளிலே அப்பாவி மக்களை ஈடுபடுத்தும் அரசியல் ஸ்டண்ட் நடத்தினேன் என்றெல்லாம் என்மீது குற்றஞ் சாட்டப்பட்டது. இதற்கெல்லாம் நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் ? ஒரே பதில்- தொழிலாளர்கள் அவர்களாகவே நடத்திய கிளர்ச்சிக்கு நான் எந்த விதத்திலும் தொடர்பு கொண்டவனல்ல.

அப்படியே இருந்தாலும் ஒருமுறை எச்சரிக்கை செய்து என்னை மன்னிக்கும்படி கோர்ட்டார் அவர்களிடம் தலைவணங்கி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

★

[கருடன் பதிப்பகம்

பரந்தாமன் : பரந்தாமனின் பாவ மன்னிப்புப் படலம்.

கருடன் : ம் பத்திரிகை காரனுங்க அப்படித்தான் எழுதுவானுங்க. அதுக்கெல்லாம் பயப்பட முடியுமா?

பரந்தாமன் : மன்னிப்புக் கேட்டதால் மானமே அழிந்துவிட்டதாமே .

கருடன் : நல்ல மானம்டா ! மன்னிப்புக் கேக்கறதாலேயே ஒரு மானம் அழிஞ்சிடும்னா அப்பேர்ப்பட்ட மானம் இருக்கவே வேண்டாமே.

பரந்தாமன்: சபாஷ்.

★

புண்யகோடி: ஏ .. பரந்தாமன் எங்கே?

குண்டுமணி: என்னய்யா ஒதற்றே.

புண்யகோடி : அந்த பரந்தாமன் எங்கேடா.

முதல் பதிப்பு: 1953