உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
திரைக்கதை & வசனம்

திரும்பிப்பார்!

காட்சி 7 · 7 / 93

குமுதா: சின்னம்மா!

பூமாலை: குமுதா! இந்த அவமானத்துக்கு என்ன செய்வது... அய்யோ...(என்று அலறுகிறாள்)

★

[பாமாவின் கண்ணிலிருந்து நீர் வழிகிறது. வழிந்த நீர் கையில் விழுகிறது. கையில் விழுந்த நீர் அருவியாக மாறுகிறது. அருவி ஆறாகப் போகிறது.]

★

[படகொன்று போய்க் கொண்டிருக்கிறது. படகில் பரந்தாமனும், வேறு ஒரு பெண்ணும் பாடிக் கொண்டு போகிறார்கள்.]

★

(பூமாலை மனவேதனையுடன் வீட்டுக்குள் நுழைகிறாள். பரந்தாமன் உட்கார்ந்திருக்கிறான்.)

பூமாலை : எங்கே வந்தாய்

(அவன் வைத்துள்ள 'வாழு' என்ற கையெழுத்துப் பிரதியில் 'வாழு' என்பதற்குக் கீழே ஆசிரியர் 'துறவி' என்று எழுதுகிறான்.)

பூமாலை: உன்னைத்தான் கேட்கிறேன், எங்கே வந்தாய்...

பரந்தாமன்: என் வீட்டுக்கு நான் வந்தேன்.

பூமாலை: உன் வீட்டில் நீயே இரு-நான் போய்விடுகிறேன்.

பரந்தாமன் : யாரும் போகவேண்டாம். நானே போகிறேன். செத்தே போகிறேன். அப்போதுதான் நீ நிம்மதியாயிருப்பாய்.

முதல் பதிப்பு: 1953