திரும்பிப்பார்!
காட்சி 56 · 56 / 93
பாண்டியன் : குண்டுமணி எல்லாம் பிரின்ட் ஆயிட்டுதா...
குண்டுமணி: ஆயிட்டுதுங்க. இதோ மூணு காப்பி எடுத்தாந்திருக்கேன். (கொடுக்க)
குமுதா: இந்தப் புஸ்தகத்தைப் பார்த்தா பரந்தாமனுக்கு ஆத்திரம் வரும்.
பாண்டியன் : ஆத்திரம் வருவதற்கு இதை எழுதவில்லை. பரந்தாமன் போன்ற போலித் தலைவர்கள் அறிவு பெறுவதற்காக. அப்பாவி மக்களை ஏமாற்றுவதை நிறுத்துவதற்காக. குமுதா! இனியும் இந்த பூமியில் ஏமாளிகளும் இருக்கக் கூடாது ! இளிச்சவாயர்களும் இருக்கக்கூடாது.
குண்டுமணி : இளிச்சவாயர் என்றால் எப்ப பாத்தாலும் சிரிச்சிக்கிட்டே இருக்காங்களே அவங்களாங்க? (குமுதா சிரிப்பு )
பாண்டியன் : இளிச்சவாயர் என்றால் அவர்களல்ல. புரட்டுக்காரர்களின் புன்சிரிப்பிலே புத்தியை பறிகொடுத்து, எந்த இழிவு வந்தாலும் எமக்கு என்னவென்று கவலைப்படாமல், ஏன், எப்படி என்று கேட்க தைரியமில்லாமல் வாயை இறுக மூடிக்கொண்டு கிடக்கிறார்களே அவர்கள் தான் இளிச்சவாயர்கள்!
★
புண்யகோடி : ஆமா ஆமாம்! அது நானேதான் இதுகூடவா சந்தேகம் ... உம் ...இருபது வருஷத்துக்கு முன்னே நான் எப்படியிருந்தேன்னு நீ நினைச்சுப் பாக்குறே ! இருபது வருஷத்துக்கு அப்புறம் நீ எப்படியிருப்பேன்னு நான் நினைச்சுப் பாக்குறேன் ...உம் சராசரங்கள் வரும் சுழன்றே சரடுபோல் அருகாடான்னா .... உம் அதை விடு கழுதை .... (அவளிடம் போய்) அப்பொ நான் போய்ட்டு. வரட்டுமா? போய்ட்டு வரட்டுமான்னேன்... (போய் பிறகு திரும்பி ) கேக்க மறந்தேனே.இன்னைக்கு என்ன சமையல்?
இன்னைக்கு என்ன சமையல்னு கேக்கிறேன் ...
(ராதா புண்யகோடியின் தொந்தியைத் தடவிக் காட்டுகிறாள்]
புண்யகோடி: ராதா ! இனிமே இந்தத் தொந்தரவு வேண்டாம். ஆசைக்குக் கல்யாணம்பண்ணி அவஸ்தைபட வேண்டியிருக்கும் ...(பேப்பர் பென்சிலை எடுத்து) இந்தா இந்த பேப்பரை வச்சிக்க, இந்தப் பென்சில் குச்சியை வச்சிக்க. எல்லா விஷயத்துக்கும் எழுதியே காட்டிடு.
(ராதா புரியாமல் விழிக்க)
புண்யகோடி : இனிமே எல்லா விஷயத்துக்கும் எழுதியே காட்டிடு ! போய்ட்டு வரட்டுமா ராதா நான் போய்ட்டு வரட்டுமா அது கெட்டுது போ !... (போகிறான்)
★
[புண்யகோடியுட்பட பல தொழிலாளர்கள் சிற்றுண்டி அருந்தியவாறு இருக்கிறார்கள் ]
